Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Gradient Skin

Gradient_Skin

இந்த வலைப்பதிவில் தேடு

பிரபலமான இடுகைகள்

Breaking News

latest

2010 - ஒரு பார்வை

 2010 ஆம் வருட டைரி குறிப்பு எழுத சொல்லி சகோதரி ஆசியா உமர் அழைத்திருந்தார்கள். கல்லூரி காலத்தில் டைரி எழுத ஆரம்பித்து , கல்லூரி முடிக்கும் த...

 2010 ஆம் வருட டைரி குறிப்பு எழுத சொல்லி சகோதரி ஆசியா உமர் அழைத்திருந்தார்கள். கல்லூரி காலத்தில் டைரி எழுத ஆரம்பித்து , கல்லூரி முடிக்கும் தருவாயில் அதனால் நடந்த பல பிரச்சனைகளால் அதற்குப் பிறகு டைரி எழுதுவது இல்லை என்று முடிவு  செய்துவிட்டேன்.

சென்ற வருடம் , பதிவுலகில் நான் அதிக நேரம் செலவளித்தேன். இந்த வருடம் அதை குறைத்துக் கொள்வது என்று தீர்மானித்துள்ளேன். பதிவுலகின் மூலம் நிறைய நண்பர்கள் கிடைத்தனர். பல புதிய விஷயங்கள் கற்றுக் கொண்டேன் அவர்கள் மூலம். எனவே சென்ற வருடம் எனக்கு மீண்டும் ஒரு பள்ளிக்கூடம் போலத்தான்.

அலுவலக ரீதியில், பல புதிய ப்ராஜெக்ட்கள், அதன் மூலம் நான் கற்றுக் கொண்ட  விஷயங்கள் அதிகம். இந்தப் பணியில் நான் சேரும் பொழுது நான் ஒரு சிறிய குறிக்கோளை வைத்திருந்தேன். அது கிட்டத் தட்ட நிறைவேறும் நிலையில் உள்ளது. அந்த ஆண்டவன் அருளால் வருடத்தின் முதல் மூன்று மாதங்களுக்குள் அது நிறைவேறும் என்று எண்ணுகிறேன்.

குடும்பத்தை பொறுத்தவரை, திவ்யாவின் குறும்புகளுடனும்,விளையாட்டுகளுடனும் மகிழ்ச்சியாக போகின்றது. திங்கள் கிழமையில் இருந்து ப்ளே ஸ்கூல் செல்ல இருக்கிறாள். அவளது உலகம் இன்னும் விரியப் போகிறது. அலுவலக வேலையில் அலுத்து வீடு திரும்பும் பொழுது ,அலுப்பை போக்குவதாக, மனதிற்கு புத்துணர்ச்சி ஊட்டுவதாய் வீட்டு சூழல் இருக்க வேண்டும். கடவுள் அருளால் அத்தகைய சூழல் எனக்கு அமைந்துள்ளது. அதற்கு இறைவனுக்கு நன்றி.


சென்ற வருட புத்தகக் கண்காட்சியில் வாங்கிய புத்தகங்களில் ஒரு புத்தகம் இன்னும் முடிக்கப் படாமல் உள்ளது. அதை படித்துமுடிக்க வேண்டும். இந்த வருடம் இன்னும் சில நல்ல புத்தகங்களை வாங்கவேண்டும் .  பாரதியாரின் மனதில் உறுதி வேண்டும் பாட்டுடன் இந்த இடுகையை முடித்துக் கொள்கிறேன்.



அன்புடன் எல்கே

14 கருத்துகள்

கோலா பூரி. சொன்னது…

நீங்கள் நினைத்ததை யெல்லாம் அடைய மனதில் உறுதியுடன் தொடரவும்.புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Unknown சொன்னது…

ஒரு வருடத்துக்கே டைரியா...? இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

Geetha Sambasivam சொன்னது…

குறிக்கோள் நிறைவேற வாழ்த்துகள்.

சாந்தி மாரியப்பன் சொன்னது…

அருமையான பாரதியின் பாடலோடு இந்த வருஷத்தை துவக்கியிருக்கீங்க. குறிக்கோளும் விரைவிலேயே நிறைவேறட்டும்.

vanathy சொன்னது…

//வேலையில் அலுத்து வீடு திரும்பும் பொழுது ,அலுப்பை போக்குவதாக, மனதிற்கு புத்துணர்ச்சி ஊட்டுவதாய் வீட்டு சூழல் இருக்க வேண்டும். கடவுள் அருளால் அத்தகைய சூழல் எனக்கு அமைந்துள்ளது. அதற்கு இறைவனுக்கு நன்றி.//

என் கணவர் சொல்லும் அதே டயலாக். இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள், கார்த்திக்.

பத்மநாபன் சொன்னது…

டைரிக் குறிப்புகள் தொகுப்பை இனிய முறையில் வெளிப்படுத்தியிருந்தீர்கள்..

இவ்வருடம் நீங்கள் எதிர்பார்த்த அனைத்திலும் வெற்றிபெற நல்வாழ்த்துக்கள்

Asiya Omar சொன்னது…

நச்சென்ற அருமையான பகிர்வு,வாழ்த்துக்கள்.

venkat சொன்னது…

இதயங்கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

Menaga Sathia சொன்னது…

wish u a happy new yr!!

'பரிவை' சே.குமார் சொன்னது…

குறிக்கோள் நிறைவேற வாழ்த்துகள்.
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

geetha santhanam சொன்னது…

2011 -ம் ஆண்டும் வெற்றிகரமான ஆண்டாக அமைய வாழ்த்துக்கள். மனதில் உறுதி வேண்டும் பாடல் எனக்கும் பிடித்த பாடல்.

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) சொன்னது…

Lovely 2010 sum up... wishing you luck to all dreams come true in 2011... Have a good one...

ADHI VENKAT சொன்னது…

அருமையான பகிர்வு.

ஆமினா சொன்னது…

short and sweet டா இருந்துச்சு...

எண்ணம் ஈடேற வாழ்த்துக்கள்