ஜனவரி 11, 2011

நினைவுகள்- 2அலைபேசியை கையில் எடுத்தவள் வேகமாக அதில் எதோ ஒரு எண்ணைத் தேட ஆரம்பித்தாள்.  தேடிய எண் கிடைத்த மகிழ்ச்சியில் அந்த எண்ணுக்கு அழைக்க எதிர்முனையில் வந்த பதிவு செய்யப்பட்டத் தகவலைக் கேட்டு சற்று முன் இருந்த மகிழ்ச்சியை முற்றும் தொலைத்தவளாய் முகத்தில் ஒரு களைப்புடன் யோசிக்கத் துவங்கினாள்.

பின் மீண்டும் எதோ யோசனை தோன்ற, தன் அப்பாவின் எண்ணுக்கு கால் செய்தாள். மறுமுனையில் சிறிய இடைவெளிக்குப் பின் அவரது தந்தை லைனில் வர அவரிடம்  பேசிவிட்டு சிறிது நிம்மதியுடன் இணைப்பைத் துண்டித்துவிட்டு மீண்டும் யோசிக்கத் துவங்கினாள்.

பின் எதையோ நினைத்தவளாய் "அவனாக  இருக்கக் கூடாது " என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டாள்.

******************************************************************************************
அலுவலகத்திற்கு செல்லும் காலை நேர அவசரத்தில் இருந்த வெங்கட்டிடம் அந்த போட்டோவை நீட்டினாள் அவனது அம்மா ஜெயம்.

"அம்மா! எத்தனை முறை சொல்றது ? நீ பார்த்து உனக்கு பிடிச்சிருந்தா போதும் . நீ பேச வேண்டியதை பேசிட்டு எனக்கு சொல்லு . பல முறை சொல்லியாச்சு. " சொல்லிக் கொண்டே போன வெங்கட்டை இடைமறித்த ஜெயம் " நல்லா இருக்குடா நீ சொல்றது . கல்யாணம் பண்ணிட்டு வாழப் போறது நீ. நான் இல்லை. இப்ப நீ பார்த்தப் போதும்னு சொல்லுவா. அப்புறம் பிரச்சனைன்னு வந்தா , நீ பார்த்த பொண்ணுதான்னு சொல்லி காமிப்பீங்க. எனக்கு எதுக்கு வம்பு ? போட்டோவை உன் லேப்டாப் பேகில் வச்சிடறேன். பார்த்து நைட் வீட்டுக்குவந்து நல்ல பதிலா சொல்லு . போட்டோவுக்கு பின்னாடி அந்தப் பொண்ணோட விவரம் எழுதி இருக்கு "


அலுவலகம் வந்து வழக்கமான வேலைகளில், எக்செல் டேட்டாக்களுடன் போராடத் துவங்கியவன் இந்த போட்டோவை சுத்தமாக மறந்தான். மதிய உணவிற்குப் பின் வேறு எதையோ எடுக்க தன் லேப்டாப் பேகை எடுக்கும் பொழுது போட்டோ தட்டுப் பட , அவனுக்குள் பலவித உணர்ச்சிகள் தோன்றத் துவங்கின.

பின் பக்கம் விவரங்கள் இருப்பதை அம்மா சொன்னது நினைவிற்கு வர ,போட்டோவை திருப்பியவன் தான் நினைத்தது சரிதான் என்ற முடிவுக்கு வந்தான். அதை உறுதிபடுத்திக் கொள்ளும்வண்ணம் , தனது லேப்டாப்பில் இருந்த பழையப் படங்களை தேடத் துவங்கினான்.

அரைமணி நேரம் லேப்டாப்பை தேடி சலித்தும் அவன் தேடியது கிடைக்கவில்லை. வேறு சிந்தனைகள் எதுவும் ஓடவில்லை. சிறிது நேரம் யோசித்துப் பின் ஒரு முடிவுக்கு வந்தவனாய், தன் மேஜையில் இருந்த போனை கையில் எடுத்தான் .


அன்புடன் எல்கே

28 கருத்துகள்:

தோழி பிரஷா சொன்னது…

இத்தொடரின் அடுத்த பதிவிற்காக வெயிட்டிங் சேர்.

Balaji saravana சொன்னது…

ஆஹா! ரெண்டு பேருக்குமே எதேதோ நினைவுகளா... ரைட்டு :)

asiya omar சொன்னது…

இந்த தொடரை எதிர்பார்த்து இருந்தேன்,அடுத்த இடுகை உடனே,விறு விறுப்பாக நல்லாருக்கு.

ஆமினா சொன்னது…

கதையை சொல்லும் விதம் ரொம்பவே ரசிக்க கூடிய வகையில் இருக்கு எல்.கே!!!

அடுத்த பதிவும் சீக்கிரம்

Philosophy Prabhakaran சொன்னது…

முக்கியமான நேரத்தில் எதிர்பார்ப்புகளை எகிற வைத்துவிட்டு தொடரும் போட்டால் எப்படி...? போங்க பாஸ்...

Philosophy Prabhakaran சொன்னது…

நீங்கள் சொன்னபடி தமிழ் பத்து ஒட்டுப்பட்டையை நீக்கிவிட்டேன்...

Philosophy Prabhakaran சொன்னது…

உங்களுடையதில் எந்த ஒட்டுப்பட்டையுமே இல்லையே...

Chitra சொன்னது…

அருமை. வாழ்த்துக்கள்!

GEETHA ACHAL சொன்னது…

அப்பறம் என்ன ஆச்சு...இது தான் ...நீங்க 4 - 5 பகுதி எழுதின பிறகு படிப்பது...இப்போ ஆர்வகோரலால் கதையினை படித்து மாட்டிக்கிட்டேன்...சீக்கிரம் அடுந்த பதிவு எழுதுங்க...

S Maharajan சொன்னது…

அடுத்த பதிவிற்காக வெயிட்டிங்

Lakshmi சொன்னது…

கதையை மிகவும் சுவாரசியம் குன்றாமல் கொண்டு செல்கிரீர்கள். அடுத்தபகுதி எப்பான்னு எதிர்பார்க்கவைக்கிர எழுத்து, வாழ்த்துக்கள்.

Porkodi(பொற்கொடி) சொன்னது…

edhoooooo ninaivugal... manadhile.. sandhosha sangeethamee.. onumillinganna paatu!

அமைதிச்சாரல் சொன்னது…

தொடரட்டும் நினைவுகள்..

தனித்தனியா ஆரம்பிச்சு ஒண்ணு சேருமா.. இல்லைன்னா ஒண்ணா இருந்தது தனியா பிரிஞ்சுகிடக்குதா!!! மீ இன் த குழப்பத்தில் :-)))

அருண் பிரசாத் சொன்னது…

என்ன பாஸ்... பொசுக்கு பொசுக்குனு தொடரும் போட்டுடறீங்க..... இன்னும் கொஞ்சம் கதையை சேருங்க....

Good going

பதிவுலகில் பாபு சொன்னது…

நல்லாயிருக்குங்க.. சீக்கிரம் தொடருங்க..

எல் கே சொன்னது…

@பிரஷா
சீக்கிரம் போட்டுடறேன்

@பாலாஜி
ஆமாம் இருவருக்கும்

@ஆசியா
நன்றி சகோ

@ஆமினா
சீக்கிரம் போடறேன்

@பிரபாகரன்
ஹஹா. அதுதான் தொடர்கதை. நான் எந்த திரட்டியிலும் இணைப்பது இல்லை.

@சித்ரா
நன்றி

@கீதா
நல்லா மாட்டிகிட்டீங்களா

@மகாராஜன்
நன்றி

@லக்ஷ்மி
நன்றிமா

எல் கே சொன்னது…

@பொற்கொடி
ஓஹோ அப்படியா சரி

@சாரல்
நல்லா குழம்புங்க

@அருண்
அடுத்த முறை பெருசா போட்டுடலாம் பாஸ்

@பதிவுலகில் பாபு
நன்றி

ஸ்ரீராம். சொன்னது…

ரெண்டு பக்கமும் பரஸ்பரம் அடையாளம் தெரிஞ்சி போச்சு...அடுத்து...?

RVS சொன்னது…

ஒவ்வொரு எபிசொட் முடிவிலும் ஒருத்தர் போனை கையில் எடுக்கறாங்க... நீங்க தொடரும் கார்டு போடறீங்க... (அதுக்கு பேர் தானே தொடர் கதை... அப்படின்னு சொல்றது காதுல விழுது... ;-) ) அந்தப் பையனுக்கும் பொண்ணுக்குமான உறவை ரொம்ப மர்மமா கொண்டு போறாப்ல தெரியுது.. சரி... ஒ.கே.. ;-)

சுசி சொன்னது…

ரைட்டு.. வெயிட்டிங்.. :)

வெங்கட் நாகராஜ் சொன்னது…

”ஃபோனை எடுத்தான்” - எடுத்து என்ன சொன்னார் கதையின் நாயகன் - சீக்கிரம் சொல்லுங்க கார்த்திக்....

கோவை2தில்லி சொன்னது…

த்ரில்லிங்கா போகுது. இரண்டு பேருக்கும் ஏற்கனவே அறிமுகமாகி பிரிந்திருக்காங்கன்னு நினைக்கிறேன். அடுத்த பகுதி எப்போ?

பத்மநாபன் சொன்னது…

இவ்வளவு எதிர் பார்ப்பை கிளப்பி விட்டுட்டு ... அவளும் அவனும் வேறு யார் யாரையோ அழைத்துக் கொள்ளபோகிறார்கள்

komu சொன்னது…

காத்திருந்து படிக்கும்போதுதான்,சுவை கூடுமோ?

Priya சொன்னது…

நல்லாயிருக்கு எல்.கே. வாழ்த்துக்கள்!

அப்பாவி தங்கமணி சொன்னது…

ஆஹா... ரெண்டு பேரும் ஏற்கனவே intro ஆனவங்க போல இருக்கே... அநியாயத்துக்கு குட்டி குட்டி போஸ்ட் போடற நீ... கொஞ்சம் பெரிய போஸ்ட் ப்ளீஸ்... ஒரு சீன் கூட இல்ல... அநியாயம் இது... Very nice flow...

Jaleela Kamal சொன்னது…

ஒகே படிச்சாச்சு,

ஆமினா சொன்னது…

சுவாரசியமான , எதிர்பார்ப்பை தூண்டும் கதை நகர்வு