ஜனவரி 30, 2011

ஜகத்குரு 12-சந்த்ர ஷர்மா

"சாப விமோசனம் என்ன என்று அவரே சொன்னார். சாபத்தினாலே  பிரம்ம ராட்ஷஸ் ஆன கௌடர்  , வேத அத்யயனம் முடித்தவர்களை கேள்விக் கேட்டு பதில் பெற வேண்டும் . அவ்வாறு கேள்விக் கேட்கும் பொழுது அதிலே வியாகரணம் சம்பந்தமாகவும் கேள்விக் கேட்கப் படவேண்டும் ".

 "அப்படி யார் அந்தக் கேள்விக்கு சரியாக பதில் சொல்கிறார்களோ அப்பொழுது கௌடருக்கு சாப விமோசனம் கிடைக்கும் . மேலும்  சரியாக பதில் சொல்லும் அந்த நபருக்கு  மகா பாஷ்யம் முழுவதையும் கௌடர் சொல்லித் தரவேண்டும் . அதுமட்டுமல்லாது என்ன கேள்விக் கேட்க வேண்டுமென்றும் சொன்னார்.

"நீ கேள்வி கேட்டுப் பதில் சொல்லும் நபர்களில் எவருக்குப் “பச்” என்னும் தாதுவுக்கு நிஷ்டா ரூபம், “பக்தம்” என்று சொல்லாமல் “பக்வம்” எனச் சொல்லத் தெரிகின்றதோ அவருக்கு நீ மஹா பாஷ்யம் முழுதையும் கற்றுக் கொடு. பாத்திரம் அறிந்து வித்தையைக் கொடுத்த புண்ணியத்தினால் உன் சாபத்திற்கும் விமோசனம் ஏற்படும். ராக்ஷஸ உரு மறைந்து போய் உண்மையான உருவம் பெறுவாய். சரியாகப் பதில் சொல்கின்றவர் வரும் வரைக்கும், நீ மற்றவர்களை பிரம்ம ராக்ஷஸாக இருந்து அடித்துச் சாப்பிடத் தான் வேண்டும். சென்று வா" என்று அவரை அனுப்பி வைக்கிறார்.

அவரை வணங்கி அங்கிருந்து கிளம்பிய  கௌடர் பிரம்ம ராட்ஷஸ்  உருவெடுத்து நர்மதை நதிக் கரையில் ஒரு அரசமத்தின் மேல் அமர்ந்து கொண்டார். பின் அவ்வழியே வந்த வேத அத்யயனம் முடிதவர்களைக் கேள்வி கேட்டு பதில் சொல்லாதவர்களை அடித்து தின்னத் துவங்கினார்.

இந்நிலையில் வட திசையில் இருந்து தெற்கு நோக்கி வந்த ஒரு பிராமண இளைஞன் அந்த மரத்தின் அடியில் அமர்ந்தான். மிகுந்த  தேஜசுடன் இருந்த அவனைக் கண்ட கௌடரும் அனைவரிடமும் கேட்ட மற்றக் கேள்விகளைக் கேட்டுவிட்டு “பச்” சின் நிஷ்டா ரூபத்தையும் கேட்டார். மற்றவர்களைப் போலில்லாமல் பதற்றம் இல்லாமல் நிதானமாக பக்வம் என்ற பதிலை சொல்கிறான் அந்த இளைஞன். 

அவனின் சரியான பதிலால் பழைய உருவெடுத்த கௌடர் அவனின் பெயரை விசாரித்து அவன் பெயர் சந்திர ஷர்மா என்றுத் தெரிந்து கொண்டார். பின் அவனை தான் சொல்லுவதை  குறிபெடுத்துக் கொள்ள சொல்ல, அந்தக் காட்டில் ஓலை சுவடி இல்லாத சந்த்ர ஷர்மா , ஆலிலை எடுத்து தன் தொடையில் கீறி அந்த ரத்தத்தில் தொட்டு எழுத ஆரம்பித்தார்.

தான் கற்ற வித்தைகள் முழுவதும் அவருக்கு சொல்லித் தந்த கௌடர் பின்  வட திசை நோக்கி பிரயாணப்பட்டார். அங்கிருந்து கிளம்பிய சந்த்ர ஷர்மா அருகில் இருந்த நகரத்துக்கு சென்றார். சிறிது காலம் இல்லற வாழ்க்கையில் ஈடுபட்டு பின் துறவறம் பூண்டு "கோவிந்த பகவத் பாதர்" என்ற நாமம் கொண்டு தன்னைத் தேடி வரப் போகும் சீடருக்காய் காத்திருந்தார்.

-தொடரும்

அன்புடன் எல்கே

31 கருத்துகள்:

Porkodi (பொற்கொடி) சொன்னது…

oru namaskrama potutu vadaiyai vangikaren!

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

அருமையா இருக்குது.........

அடடா வடை போச்சே.....

வெங்கட் நாகராஜ் சொன்னது…

Nalla pakirvu. It is good on your part you are sharing this with us. Thanks.

komu சொன்னது…

நல்ல சொல்லி இருக்கிங்க.

சே.குமார் சொன்னது…

நல்லாப் போகுது.

பத்மநாபன் சொன்னது…

கோவிந்த பகவத் பாதரின் மூலக்கதையை சிறப்பாக சொல்லியுள்ளீர்கள்...பச், பக்தம் பக்வம் இவைகளுக்கு குறிப்பான சிறு விளக்கம் கிடைத்தால் இன்னமும் அவரது பெருமையை உணர்வோம்..

Lakshmi சொன்னது…

ஓ. அந்த சந்த்ர ஷர்மா தான் கோவிந்த பகவத் பாதரா.. இண்ட்ரெஸ்டிங்க். மேல
சொல்லுங்க.

கோவை2தில்லி சொன்னது…

நன்று.

Ramani சொன்னது…

நன்றாகச் சொல்லிப் போகிறீர்கள்
தொடருங்கள் தொடர்ந்து வருகிறோம்
வாழ்த்துக்கள்

RVS சொன்னது…

//oru namaskrama potutu vadaiyai vangikaren!//
அப்டி போடு!!

அட்டகாசமான நடை... சூப்பர் எல்.கே.
இன்றைக்குத்தான் ஓரிக்கையில் அமைந்திருக்கும் மஹா பெரியவாள் மணிமண்டபம் போயிட்டு வந்தேன்.. ;-) ;-) ;-)

ஜெய்லானி சொன்னது…

ஓட்டு பெட்டியையே கானோமே..!!

அமைதிச்சாரல் சொன்னது…

நல்லா போகுது.. தொடருங்கள்.

ஸ்ரீராம். சொன்னது…

தொடர்கிறேன்...

எல் கே சொன்னது…

@போர்ஸ்
வடை உனக்கே


@மனோ
பொற்கொடி அக்கா பறந்து வந்து கொத்திகிட்டு போய்ட்டாங்க

எல் கே சொன்னது…

@வெங்கட்
நன்றி

@கோமதி
நன்றிங்க

@குமார்

நன்றி


@லக்ஷ்மி
ஆமாம்

@கோவை
நன்றிங்க

@ரமணி

நன்றி பாஸ்


@ஆர்வீஎஸ்
ஆஹா அருமை அருமை . கொடுத்து வைத்தவர்

எல் கே சொன்னது…

@ஜெய்

அதை தூக்கி மாசம் ஆச்சு

@சாரல்
நன்றி

எல் கே சொன்னது…

@பத்மநாபன்

வடமொழி இலக்கணத்தில் விகுதியைப் ப்ரத்யயம் என்று சொல்லப் படுகிறது. இந்தப் ப்ரத்யயத்தில் நிஷ்டா ப்ரத்யயம் என்ற ஒன்று உண்டு. மூலச் சொல்லான பகுதியோடு இந்த நிஷ்டா ப்ரத்யயத்தைச் சேர்த்தால் வினைச் சொல்ல செய்யப் படும் பொருளாகும். புஜ் என்ற சாப்பிடும் சொல்லோடு நிஷ்டா ப்ரத்யயம் சேர்த்தால் புக்தம் என ஆகும். இதே போல் ரக்தம், ஸிக்தம் எனச் சொற்கள் மாறுபடும். ஆனால் இதிலே உள்ள ஒரு விலக்கு என்னவெனில் பச் என்னும் சமையல் செய் என்னும் அர்த்தம் வரும் வார்த்தையில் நிஷ்டா ப்ரத்யயம் சேர்த்தால் பக்தம் என வராமல் பக்வம் என்று தான் ஆகும். பக்குவம் எனத் தமிழில் சொல்லும் வார்த்தை பக்வம் என வடமொழியில் சொல்லப் படும். “பச்” என்னும் தாதுவோடு நிஷ்டா ப்ரத்யயம் சேர்ந்தால் “க்வ” என்று தான் வரும் என்பதைப் பாணினியின் வ்யாகரண சூத்திரத்தில் இதற்கெனத் தனியான ஒரு சூத்திரமே இருப்பதாய்ச் சொல்லப் படுகின்றது. “பசோ வ:” என்பதாக “க்த” வில் வரும் “த” வுக்குப் பதில் இங்கே மட்டும் “வ”.

பெயரில்லா சொன்னது…

நன்றாக இருந்தது என்ற வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது.அசத்தல்.

வித்யா சொன்னது…

நல்லாருக்கு..

சங்கரியின் செய்திகள்.. சொன்னது…

நிறைய மாற்றங்கள் எல்.கே, தங்கள் எழுத்துக்களில், நன்று. வாழ்த்துக்கள்.

பத்மநாபன் சொன்னது…

மிக்க நன்றி எல்கே ... எளிதாக விளக்கி உள்ளீர்கள் ...எனக்கு இன்னமும் திரும்ப திரும்ப படித்தால் தான் விளங்கும் . தமிழ் இலக்கணமே இன்னமும் தேற வேண்டும் ...அப்புறம் தான் வடமொழி இலக்கணம். மீண்டும் நன்றி ..

தக்குடு சொன்னது…

Good one annachi! its interesting......

ஜிஜி சொன்னது…

ரொம்ப நல்லா தொடருறீங்க.அருமையா சொல்லி இருக்கிங்க..வாழ்த்துக்கள்.

எல் கே சொன்னது…

@குறட்டை புலி
பாராட்டுக்கு நன்றி

எல் கே சொன்னது…

@வித்யா
நன்றிங்க

எல் கே சொன்னது…

@நித்திலம்
ரொம்ப சந்தோசமா இருக்குங்க

@ரசிகமணிஜி
அண்ணே, இந்த விளக்கம் என்னுடைய சொந்த சரக்கு இல்லை. அதற்கு கீதா மாமிக்குத்தான் நன்றி. நானும் விளிம்பு நிலைதான்.

எல் கே சொன்னது…

@தக்குடு
நன்றி தம்பி

@ஜிஜி
நன்றிங்க

விக்கி உலகம் சொன்னது…

சிறிது காலம் இல்லற வாழ்க்கையில் ஈடுபட்டு பின் துறவறம் பூண்டு "கோவிந்த பகவத் பாதர்" என்ற நாமம் கொண்டு தன்னைத் தேடி வரப் போகும் சீடருக்காய் காத்திருந்தார்.

---

இதுக்கு பேரு ஏன்னா?

விக்கி உலகம் சொன்னது…

இதுக்கு பேரு ஏன்னா?

எல் கே சொன்னது…

@விக்கி
நீங்கள் எதை கேட்கிறீர்கள் என்றுப் புரியவில்லை. துறவறம் பற்றி என்றால் எனது பதில், அதில் எந்தத் தவறும் இல்லையே . பிரமச்சர்யம்,கிரகஷ்தாஷ்ரமம் பின்பே துறவறம் அதில் தவறு இல்லை

விக்கி உலகம் சொன்னது…

மன்னிப்பீராக

துறவறம் என்பது அடிப்படை தேவைகளை முடித்த பின்னே செய்வதா கொஞ்சம் விளக்குங்கள் நன்றி