Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Gradient Skin

Gradient_Skin

இந்த வலைப்பதிவில் தேடு

பிரபலமான இடுகைகள்

Breaking News

latest

ஜகத்குரு 11-கௌடர்

 பலவிதமான பாடங்கள், பலவிதமான மாணவருக்கு ஒரே சமயத்தில் எடுக்கவேண்டும். யோசித்தார்  பதஞ்சலி.  மாணவர்களுக்கும் ,அவருக்கும் இடையே ஒரு திரைப் போட...

 பலவிதமான பாடங்கள், பலவிதமான மாணவருக்கு ஒரே சமயத்தில் எடுக்கவேண்டும். யோசித்தார்  பதஞ்சலி.  மாணவர்களுக்கும் ,அவருக்கும் இடையே ஒரு திரைப் போட்டார். ஆதிசேஷனாக உருமாறி திரைக்குப் பின் தன்னை மறைத்துக் கொண்டு பாடங்கள் எடுக்கத் துவங்கினார்.

பாடம் எடுக்கத் துவங்கும் முன்பு இரண்டு நிபந்தனைகளை விதித்தார். அவர் பாடம் எடுக்கும் பொழுது யாரும் வெளியே போகக் கூடாது. மீறி சென்றால் பிரம்மராட்சசனாக மாறிவிடுவீர்கள் என்று ஒரு சாபம் முன்னாடியே சொல்லி விட்டார். இரண்டாவது நிபந்தனை ,யாரும் எந்த நேரத்திலும் திரையை விளக்கிப் பார்க்கக் கூடாது.

கற்றுக் கொள்ளும் ஆர்வத்தில் அனைவரும் சம்மதித்தனர். பாடங்களும் துவங்கின. அனைவருக்கும் தனித் தனியாக வகுப்புகள் போகின்றன. இந்த சமயத்தில் கொஞ்சம் அதிகப் பிரசங்கி மாணவனுக்கு திரையை விலக்கி பார்க்க முற்பட்டான். அவ்வளவுதான் , ஆதிஷேசனின் நஞ்சு அங்கிருந்த அனைவரையும் சாம்பலானார்கள்.

பதஞ்சலிக்கு வருத்தம். தன் சொன்னா பேச்சை கேட்காமல் இப்படி ஆகிவிட்டதே என்று. அப்பொழுது ஒரு மாணவர் வருகிறார். அந்த மாணவனோட பெயர் கௌடர்.  அவனிடம் பதஞ்சலி கேட்கிறார் "எங்கே சென்றாய் ?"

"இயற்கை உபாதைக்கு "

"எங்கும் செல்லக் கூடாது என்றல்லவா சொல்லியிருந்தேன்?"

"ஆமாம். ஆனால் என்னால் முடியவில்லை அதனால்தான் சென்றேன் ."

"ஒன்று செய்வதற்கு இல்லை. சாபம் நிச்சயம் பலிக்கும். அத்தனை பாடங்களையும் உனக்கே சொல்லித் தருகிறேன். "

பதஞ்சலி ஆதிசேஷன் அவதாரமாக இருந்தாலும், மனித ரூபத்தில், இந்த உலக நியதிக்கு ஏற்ப ஆசிரியராக அனைவருக்கும் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தார். ஆனால் எதிர்பாரா விதமாய் இப்பொழுது சிக்கல். எனவே வேறுவழியின்றி தனது திவ்ய  சக்தியை  உபயோகிக்க வேண்டிய தருணம். "தனக்கு தெரிந்தவை அனைத்தும் இவனுக்குத் தெரிய வேண்டும் " என்று அனுக்ரகனம் பண்ணினார்.

இப்ப அடுத்தப் பிரச்சனை. சாபம்னு ஒண்ணு இருந்தா சாப விமோசனம்னு ஒண்ணு இருக்கு, அதையும் சாபம் கொடுத்தவர்தான்  சொல்ல வேண்டும் .

-தொடரும்
அன்புடன் எல்கே

23 கருத்துகள்

Yaathoramani.blogspot.com சொன்னது…

நான் தேடிப் படிக்கும் நல்ல பதிவுகளில்
தங்கள் பதிவும் ஒன்று தொடர்ந்து வருகிறோம் .
தொடரவும் வாழ்த்துக்களுடன்...

கோலா பூரி. சொன்னது…

இந்தபதிவு ரொம்ப பரபரப்பாக இருக்கு.அடுத்து என்ன? என்ற எதிர்பார்ப்பு.

குறையொன்றுமில்லை. சொன்னது…

kaarththi நான் உங்க ஜகத்குரு விரும்பி படிப்பேன். அவ்வளவு அழகாக எழுதரீங்க. வாழ்த்துக்கள், கார்த்தி.

சாந்தி மாரியப்பன் சொன்னது…

அருமையா எழுதறீங்க..

Vidhya Chandrasekaran சொன்னது…

நடுவுல கொஞ்சம் மிஸ் பண்ணிட்டேன். இந்த பகுதி நல்லா வந்திருக்கு.

Chitra சொன்னது…

இன்ட்லி - தமிழ்மணம் - இணைக்கவில்லையா?

'பரிவை' சே.குமார் சொன்னது…

அருமையா எழுதறீங்க...
நல்லா வந்திருக்கு.

சுசி சொன்னது…

தொடருங்க கார்த்திக். அத்தனையும் புதியதா இருக்கு.

Thenammai Lakshmanan சொன்னது…

சாப விமோசனம் என்ன.. ஆவலுடன்.. சீக்கிரம் சொல்லுங்க கார்த்திக்

எல் கே சொன்னது…

@ரமணி
நன்றி அய்யா

@கோமு
நன்றிங்க

@லக்ஷ்மி
நன்றிமா

@சாரல்
நன்றிங்க

@வித்யா
ரொம்ப மிஸ் ஆகி இருக்காது. சின்ன சின்னதாத்தான் எழுதறேன்

@சித்ரா
இணைப்பதை நிறுத்தி ரொம்ப நாள் ஆச்சு

@சுசி
நன்றிங்க.

@தேனம்மை
சீக்கிரம் அடுத்த பதிவு வரும்

வெங்கட் நாகராஜ் சொன்னது…

இந்த பகுதியில் வந்திருக்கும் விஷயம் நான் படித்ததில்லை. பகிர்வுக்கு நன்றி கார்த்திக்.

ADHI VENKAT சொன்னது…

சாப விமோசனம் என்ன? தெரிந்துக் கொள்ள ஆவல்.

பத்மநாபன் சொன்னது…

ஆதிசங்கரர் வரலாற்றில் படிக்காத புதிய செய்தியாக இருக்கிறது.. எடுத்துக்காட்டியதற்கு நன்றி...

கல்வி கற்கும் இடத்தில் ஒழுக்கம் கட்டுப்பாடு , கவனம் இவற்றை வலியுறுத்தியது சிறப்பு...

RVS சொன்னது…

எல்.கே . சத்தான விஷயங்களை முத்தாக எழுதுகிறீர்கள். வாழ்த்துக்கள்.
குருவடி சரணம். திருவடி சரணம். ;-) ;-)

thiruchchikkaaran சொன்னது…

அன்புக்குரிய திரு. கார்த்திக் அவர்களே,

இந்த தொடர் சங்கராச்சாரியாரைப் பற்றியது என்றே நினைக்கிறேன்- அதாவது ஜகத்குரு என்பது சங்கராச்சாரியாரைக் குறிப்பது தானே?

ஆதி சங்கரர் எந்த அளவுக்கு தைரியமான ஆன்மீகத்தை, பகுத்தறிவு அடிப்படையிலான ஆன்மீகத்தைக் குடுத்தாரோ, அதை எல்லாம் நீர்த்துப் போகச் செய்யும் வகையில் அதற்குப் பிறகு பயமுறுத்தும் வகையிலான கதைகளை சொல்லி வருகின்றனர்.

ஆதி சங்கரர் கடினமான தண்டனைகளை கொடுத்ததாகவோ, அல்லது சாதா தண்டனை கொடுத்ததாகவோ எங்காவது குறிப்பு இருக்கிறதா?

ஆதி சங்கரர் எங்காவது சாபம் விட்டதாக குறிப்பு இருக்கிறதா?

ஆதி சங்கரர் தன்னுடைய நூல்களில் எங்காவது இதைப் போல சாபம் - அதற்குப் பரிகாரம் என்பது பற்றி குறிப்பிட்டு இருப்பதாக உள்ளதா? இருந்தால் மேற்கோள் காட்டுங்கள், தெரிந்து கொள்கிறேன்.

அவரவர் விரும்பியதை எழுத உரிமை உண்டு. ஆனால் ஜகத் குரு என்று தலைப்பு பெயர் போட்டு, பய உணர்ச்சியை உருவாக்கும் பத்தாம் பசலிக் கதைகளை போடுவது சரியா?

ஆதி சங்கரர் செய்த வேலை எல்லாம் வீணாகப் போய் அவர் காலத்துக்கும் முன் இருந்த நிலைக்கு தள்ளி விட்டார்கள்.

இளைங்கர்களாவது சங்கராச்சாரியாரை சரியாகப் புரிதல் செய்ய வேண்டும்.

ஆதி சங்கரர் எந்த அளவுக்கு உண்மையான இந்து மதத்தை கொண்டு வந்தார் என்பதை புரிந்து கொள்ளுங்கள். அதனால் தான் வரலாற்றிலே அவரை நவீன இந்து மதத்தை ஸ்தாபித்தவர் என்று எழுதி உள்ளனர்.

எல் கே சொன்னது…

@திருச்சிக்காரன்

அன்பு நண்பரே, நான் எங்காவது ஆதி சங்கரர் சாபம் கொடுத்தார் என்று எழுதி உள்ளேனா ??

நான் எழுதுவது நடந்த ஒன்றுதான். நம்புவதும் நம்பாததும் உங்கள் இஷ்டம் நன்றி

எல் கே சொன்னது…

@வெங்கட்
இது அவரது குருவைப் பற்றிய கதை


@கோவை

நன்றிங்க

எல் கே சொன்னது…

@ஆர்வீஎஸ்
தன்யன் ஆனேன் மன்னார்குடி மைனர் அவர்களே.. நன்றி

@பத்மநாபன்

//கல்வி கற்கும் இடத்தில் ஒழுக்கம் கட்டுப்பாடு , கவனம் இவற்றை வலியுறுத்தியது சிறப்பு...//

இதை விட முக்கியம் குருவின் வார்த்தைகளை மீறாமல் இருப்பது :)


இது ஆதி சங்கரரின் குருவை பற்றியக் கதை..

thiruchchikkaaran சொன்னது…

ஆதி சங்கரர் சாபம் கொடுத்தார் என்று நீங்கள் சொல்லவில்லை, ஆனால் ஆதி சங்கரர் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லையோ, அதைத் தூக்கி மனையில் வைக்கிறீர்கள்

ஜகக்குரு என்று போட்டு எழுதினால் எல்லோரும் இதுதான் சங்கரரின் கோட்பாடும் கூட என்று எண்ணும் வாய்ப்பு உள்ளது.

ஆதி சங்கரர் இதைப் போன்ற பாம்பு, பல்லி கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை.

கட உபநிடதம் மனிதனை பற்றியே அக்கறையுடன் ஆராய்ந்து எந்த நிலையை அடைந்தால் அவன் சுதந்திரம் அடைவான் என்று விவாதிக்கிறது.


முண்டக உபநிடதத்தை அளித்த ஆங்கிரசர், தைத்திரிய உபநிடத்ததை அளித்த யாங்க்வல்ங்க்கர்... இவர்கள் எழுதியதில் இப்படி பயமுறுத்தும் கதைகளோ, பாம்பு ... எல்லாம் இருக்கிறதா..


//நான் எழுதுவது நடந்த ஒன்றுதான்.//

கூசாமல் "நான் எழுதுவது நடந்த ஒன்றுதான்" எழுதி விட்டீர்கள். எந்த ஆதாரத்தில் அல்லது அடிப்படையில் இதை நடந்த நிகழ்வு என்று சொல்கிறீர்கள்.


கலிங்கப் போருக்குப் பின் அசோகர் மனம் மாறியது போலவோ, அதி சங்கரருக்கும் மண்ட மிஷ்ரருக்கும் நடந்த விவாதம் போலவோ, மகேந்திர வர்மர் அப்பரை சமணத்திற்கு திரும்புமாறு அழுத்தம் கொடுத்தது.. இவற்றை எல்லாம் நடந்த நிகழ்வு என்று சொன்னால் அதற்க்கு அடிப்படை இருக்கிறாது என்றாவது சொல்லலாம்.


நன்றாக எண்ணிப் பாருங்கள். ஆதி சங்கரர் எந்த ஒரு இடத்திலாவது சூரியனை பாம்பு பிடிப்பதால்... என்பது போல எல்லாம் சொல்லி இருக்கிறாரா.


பிரஹதாரண்யா உபநிடதம் உட்பட எந்த உபநிடத்திலாவது இந்த ராகு, கேது... சூரியனைப் பிடிப்பது பற்றி எல்லாம் எழுதி இருக்கிறதா? அவை உண்மை அல்லாத நிலையில் இருந்து உண்மையை தேடித் போகச் சொல்லுகின்றன. இதற்க்கு மாறாக அடிப்படை இல்லாத கதைகளை "நடந்த நிகழ்வு" என்று எழுதுவது உண்மையை விட்டு மக்களை விலகிப் போக வைக்கும் செயலே .


இப்படியாகத் தான் தேவை இல்லாத புனைவுகளை எல்லாம் இந்து மதத்தின் மேல் கட்டி , அதை பார்த்து நாலு பேர் கிண்டல் செய்யும் படி வைத்து விட்டார்கள். அந்த கைங்கர்யத்தை நீங்கள் தொடர வேண்டுமா?

thiruchchikkaaran சொன்னது…

அன்புக்குரிய திரு. கார்த்திக் அவர்களே, என்னுடைய கடந்த பின்னூட்டத்தில் நான் எழுதிய சில கருத்துக்களை நான் இணைக்காமல் விட்டு விட்டோனோ என எண்ணுகிறேன். எனவே அவற்றை இங்கே மீண்டும் எழுதுகிறேன்.

நீங்கள் இப்போது சொல்லி இருக்கும் பாம்பு பாடம் எடுத்த "நடந்த நிகழ்வை" விட பாப்புலாரான "நடந்த நிகழ்வுகள் " உண்டே.

சூரிய சந்திர கிரகணங்கள் என்பது - ராகு , கேது ஆகிய பாம்புகள் சூரிய சந்திரரை விழுங்க முயற்சி செய்வதால் ஏற்படுவதா சொல்லப் படுவதைப் பற்றிய உங்கள் கருத்து என்ன? சூரிய, சந்திர எக்லிப்ஸ் சூரியனின் ஒளி மறைக்கப் படுவதால் உருவாவது, சூரியனுக்கு ஒரு பாதிப்பும் இல்லை என்கிற கோட்பாடு சரியானதா இல்லையா?

இந்த ராகு , கேது ... சூரியனை விழுங்குவது ... இந்தக் கோட்பாடுகள் காலாவாதியான நேரத்திலே நீங்கள் பாம்பு பாடம் எடுத்த கதையை ரெலீஸ் செய்கிறீர்கள்.

நீங்கள் கொஞ்சம் சிந்தித்தால் ஒன்றைப் புரிந்து கொள்வீர்கள். ஆதி சங்கரரோ, ஆங்கிரசரோ... இவர்கள் எல்லாம் தங்கள் கோட்பாடுகளை தாங்களே சரி பார்த்த பின்னர்தான் அவற்றை சொன்னார்கள். எனவே படிப்பவர்கள் முயற்சி செய்து சரி பார்த்துக் கொள்ளலாம். தானே உண்மையை அறிவது, உணர்வது மிக அவசியம், அது மட்டுமே உண்மையான அறிவை தரும், என்றும் அதுவே விடுதலையை தரும் என்றும் சொல்லி விட்டார்கள்.

எனவே இந்த பாம்பு சமாசாரம் எதுவும் அவர்கள் எழுத்தில் காணப் படவில்லை. எனவே என்றைக்கும் உறுதியான கோட்பாடாக அவை உள்ளன. "சத்யமேவ ஜெயதே" என்று முண்டக உபநிடதத்தில் எழுதினார் ஆங்கிரசர்.

அந்தக் கோட்பாட்டை யாரும் அசைக்க முடியாது. ஏனெனில் உண்மையின் தன்மை அது மாறாமல், அழியாமல் இருப்பதே. பொய்யானது மறைந்து விடும், உண்மை நிலையாக இருக்கும் .

இவற்றை எல்லாம் தயங்காமல் வெளியிடுங்கள் , உண்மைதான் வெல்லும் என்பதே சரியான இந்து மதம்! உண்மையை தேடி செல்வதுது இந்து மதத்தின் முக்கிய நோக்கம்!

கேள்வி கேக்க மறுப்புத் தெரிவிக்க, மாற்றுக் கருத்துக்களை முன் வைக்க அனுமதிக்கும் வரவேற்கும் மதம் இந்து மதமே.

எல் கே சொன்னது…

@திருச்சிக்காரன்
நண்பரே! நானாக எந்தக் கதையும் இட்டுக் கட்டி எழுதவில்லை. இது சங்கரரின் குருவான கோவிந்த பகவத் பாதரை பற்றியப் பகுதி. அவரது வாழ்வில் வந்ததை எழுதுகிறேன். மேலும், தவறான கருத்துகளை இன்றைய வாசகர்கள் எழுத்தில் கண்டுக் கொள்வார்கள். அவர்களை அவ்வளவு லேசாக எடை போடவேண்டாம்.

http://www.mazhalaigal.com/religion/history/history-001/0905gs_sankara.php

இந்த சுட்டியையும் பாருங்கள். இணையத்தில் இருந்து என்னால் இதை மட்டுமே உங்களுக்கு தர இயலும். நான் சங்கரர் பற்றி படித்த புத்தங்களிலும் இவ்வாறுதான் உள்ளது. அதை மாற்ற எனக்கு விருப்பம் இல்லை.

thiruchchikkaaran சொன்னது…

அன்புக்குரிய திரு. கார்த்திக்,

தொடர்ந்து உங்களது கருத்துக்களோடு விவாதித்து வருகிறேன், அதில் எனக்கு விருப்பம் இல்லை. ஆனாலும் இதைக் கடமையாகவே எழுத வேண்டியுள்ளது.

இன்றைய வாசகர்கள் தவறான கருத்துக்களை புரிந்து கொள்வார்கள் என்றால், அது எந்த அளவுக்கு சரி?

ஒரு அறிவியல் கோட்பாடை சொன்னால் அதற்க்கு ஆயிரம் கேள்விகள், பல சோதனைகளை செய்து நிரூபிக்க வேண்டும். ஆனால் மத அடிப்படையில் ஒரு கோட்பாட்டை சொல்லி இது ஒரு நம்பிக்கை என்றால் அவர்கள் நம்பி விடுகிறார்கள். இவ்வாறாக ஆங்கிரசர், சங்கரர் , விவேகானதர் ஆகியோரின் பகுத்தறிவு அடிப்படையிலான ஆன்மீகம் பின்னுக்கு தள்ளப் பட்டு பயமுறுத்தல் அடிப்படையிலான கோட்பாடுகள் முன் வைக்கப் படுகின்றன.

நீங்கள் ஒரு புத்தகத்தைப் படித்து எழுதுகிறீர்கள் என்றால் படிக்கும் போதே சற்று சிந்திக்க வேண்டாமா? ஆதி சங்கரருக்கு இதெல்லாம் தெரிந்து இருக்காதா, அப்படி என்றால் அவர் ஒரு இடத்திலாவது இதை பற்றி எல்லாம் ஒரு வார்த்தையாவது குறிப்பிடாமல் விட்டிருப்பாரா? அப்படி ஆதி சங்கரர் ஒரு இடத்தில் கூட இதைப் போல எல்லாம் எழுதவில்லை என்பதை வைத்தே நாம் இதெல்லாம் நடந்திருக்குமா என்று சிந்தித்துப் பார்க்கலாம் அல்லவா?


இருநூறு வருடங்களுக்கு முன்னாள் வாழ்ந்தவர்கள் ராகு , கேது..... சூரியனைப் பிடிப்பதை..... அப்படியே ஒத்துக் கொண்டு இருந்திருக்கக் கூடும். ஏனெனில் அக் காலத்தில் வான்வெளி அறிவு வளர்ச்சி அடையவில்லை. பெரிய தொலை நோக்கி கருவிகள் இல்லை. எனவே அவர்களை கிண்டல் செய்வதில் அர்த்தம் இல்லை.

ஆனால் இன்று நமக்கு பல அறிவியல் கருவிகள் உள்ளன. உண்மையில் ஆன்மீகம் என்பது மனிதன் மனம், உயிர் - உடல் இறந்த பின் அந்த உயிர் தொடர்ந்து வாழ்கிறதா என்பது பற்றி எல்லாம் ஆராய்கிறது , இது உங்களுக்கு தெரியும்.

பூமி சூரியனை சுற்றுகிறதா , எக்லிப்ஸ் எப்படி உருவாகிறது என்பதைப் பற்றிய ஆய்வுக்காக ஆன்மீகம் உருவாக்கப் படவில்லை. நம்முடைய உயிர் அதன் அமைதி , சுதந்திரம் .. . இதுதானே நமக்கு முக்கியம். நாம் இறந்த பின் உயிர் என்ற ஒன்று தனித்து இருக்குமானால், அதன் இன்னும் வாழுமானால் அதைப் பற்றிய அக்கறையே நமக்கு முக்கியமானது. உடல் இறந்த பின், அது அழிந்த பின்.. சூரியனை பூமி சுற்றினால் நமக்கு என்ன, சந்திரன் சுற்றினால் நமக்கு என்ன!


எனவே ஆன்மீகம் என்பது ஒரு அறிவியலே. அது மனிதனின் உயிரின் ,மனதின் தன்மை, முன்னேற்றத்தை ஆராயும் அறிவியல்.

அக்காலத்தில் ராகு சூரியனை விழுங்கியதாக நம்பிய மனிதர்கள் அப்பாவிகள்... ஆனால் இன்றைக்கு அறிவியல் முன்னேறிய நேரத்திலே இன்னும் அதே போலக் கதைகளை சொல்லிக் கொண்டு இருந்தால் நம்மை உலகம் அப்பாவியாக என்னாது...

ஆன்மீகம் என்பது என்ன என்று ஆதி சங்கரர், புத்தர் சரியாகப் புரிந்து கொண்டு இருந்தனர். எனவே பொழுது போக்கு கதைகளை எல்லாம் ஏற கட்டி விட்டு உண்மையான ஆன்மீகத்தைக் கையில் எடுத்தனர்.

எனவே அந்த நூலில் எழுதி இருக்கிறது, இந்த தளத்தில் எழுதி இருக்கிறது ... என்று..... அப்படியே போடுவது , அதுவும் இந்தக் காலத்தில் சரியா என்று சிந்தித்துப் பாருங்கள்.

இப்போது ராகு , கேது கதைகளின் கற்பனை தெளிவாக்கப் பட்டு விட்டதால் அதை யாரும் கையில் எடுப்பதில்லை. ஆனால் அவைகளின் புனைவு நிரூபிக்கப் படாமல் இருந்திருந்தால் நீங்கள் அதையும் கூட ஒரு கட்டுரையாக வெளியிட்டு நடந்த நிகழ்வு, புத்தகத்தில் இருக்கிறது , இந்த தளத்தில் எழுதி உள்ளனர் ...நான் அவற்றை விட விரும்பவில்லை ... என்றெல்லாம் சொல்லி, ராகு சூரியனை விழுங்கினார் ... என்று ஒரு கட்டுரை வெளியிட்டால் நாம் என்ன செய்ய முடியும்.

(Contd)

thiruchchikkaaran சொன்னது…

அன்புக்குரிய திரு. கார்த்திக்,


(Contd)


நீங்கள் ஆதி சங்கரர் பற்றி கட்டுரை எழுதுவதை வரவேற்கிறேன். கொஞ்சம் அவர் எழுத்துக்களைப் படித்து விட்டு அவர் சொல்ல வந்தது என்ன என்பதைப் பற்றி சிந்தித்து பாருங்கள், அமைதியாக தனிமையில் சிந்தித்து விட்டு பிறகு எழுத ஆரம்பியுங்கள், உங்களுக்கு அப்போது எது முக்கியம் என்பது நன்றாக தெரியும்.

இந்த வாழ்க்கை என்பது கஷ்டங்கள் நிறைந்தது, இன்பமும் துன்பமும், சூழ்நிலைகளுக்கு ஏற்ப உருவாவது.
நம் வாழ்க்கையில் கிடைக்கும் சிறு வெற்றிகளை நம்பி இந்த வாழ்க்கையில் நாம் இன்பமாக இருக்க முடியும் என்று எண்ணினால் அது பகல் கனவே. உண்மையில் நமக்கு வரக் கூடிய இன்னல்களை தடுக்கும் வலிமை இல்லாமலே நாம் இருக்கிறோம். இயற்க்கை அல்லது விதி, துன்பத்தை நமக்கு அவ்வப் போது தவணை முறையிலும், பிறகு ஒட்டு மொத்தமாக ஒரே அடியாக மரணமாகவும் வழங்கி வருகிறது.

நமது உறவினரக்கோ , நண்பர்க்கோ நோயோ மரணமோ ஏற்ப்பட்டால் அழுது
புலமபுவதை தவிர வேறு எதுவும் செய்ய முடியாத நிர்க்கதியிலே நாம் இருக்கிறோம்.

இவ்வளவு சீரியசான பிரச்சினைகளின் அந்த துயரத்தின் தாக்கத்தை நம் மனது உணர்ந்தால் அன்றி, ஆதி சங்கரர் கொடுத்த சொல்யூசனின் அருமையோ, முக்கியத்துவமோ நமக்கு புரியாது.


ஆதி சங்கரின் தத்துவத்தை உணராமல் அவரைப் பற்றிய வரலாறை படித்து எழுதுவது, ராகு கேது சூரியனை விழுங்கிய நடந்த நிகழ்வு.. அதை விட எனக்கு விருப்பமில்லை... என்று எழுதுவது போலவே அமையும்!