ஜனவரி 16, 2011

ஜகத்குரு -10 -கோவிந்த பாகவத் பாதர்


 "இவர் வெளியில் காத்திருப்பது போலவே, சிஷ்யனை எதிர்பார்த்து குருவும் காத்திருக்கிறார் உள்ளே. இருவரும் சந்திக்கிறார்கள். குருவைப் பார்த்தவுடன் மீண்டும் ஒருமுறை அவரை நமஸ்கரித்து எழுகிறார் சங்கரர்.

சங்கரரைப் பார்த்தவுடன் கோவிந்த பாகவத்பாதருக்கு அவர் யாரென்றும் எத்தகையவர் என்றும் தெரிந்துவிட்டது. இருந்தாலும் முழுவதும் தெரிந்துகொள்ள வேண்டுமல்லவா ? மெளனமாக அங்கே வீழ்ந்துக் கொண்டிருக்கும் நர்மதையைப் பார்க்கிறார் குரு. அவரது பார்வை சென்ற இடத்தைப் பார்த்தவுடன் சங்கரருக்கு தான் என்ன செய்யவேண்டும் என்பது புலனாகிறது.

தனது கமண்டலத்தை எடுத்து நீரினில் அமிழ்த்த, அவருக்குக் கட்டுப்பட்டது போல, நர்மதை அவரது கமண்டலத்தில் அடங்கியது. இதைக் கண்ட குரு புன்னகைக்க மீண்டும் சங்கரர் தனது கமண்டலத்தை கவிழ்த்த நர்மதை பழையப் படி ஓடத் துவங்குகிறது.

 சங்கரரை பார்த்து "யார் அங்கே ?" என்றுக் கம்பீரமானக் குரலில் கேட்கிறார். அதற்குப் பதிலாக சங்கரர் பத்து சுலோகங்களில் தன் இருப்பைத் தெரிவிக்கிறார்.

இதைக் கேட்டவுடன், குருவுக்குப் புரிந்துவிட்டது, தான் இவருக்கு சொல்லித் தர எதுவும் இல்லை. முறைப்படி நடக்கவேண்டும் என்பதற்காக இந்த விஷயங்கள் நடக்கிறது என்று."

"மாமா , கோவிந்த பகவத் பாதர் யாரு ? அவரைப் பற்றி சொல்லுங்களேன் "


"சரி சொல்றேன் கேளு. பதஞ்சலி முனிவர் பத்தி கேள்விப் பட்டு இருப்பாய் .

சிதம்பரத்திலே, நடராஜரின் நடனத்தைக் காணவே , ஆதி ஷேஷனாய் இருந்த அவர் பாதி மனித உடலும்,பாதி பாம்பின் உடலுமாய் பூலோகம் வந்தார். டமருகம் ஆட, சதங்கைகள் குலுங்க நடராஜர் ஆடிய ஆனந்த நடனத்தைக் கண்டுக் களித்தார்.

அந்த சமயத்தில் பதஞ்சலி முனிவருக்கு ஆணை வருகிறது பரம்பொருளிடம் இருந்து. 'இந்த டமருகத்தின்  ஓசையில் இருந்துப் பிறந்தது வியாஹரணம் என்கிற இலக்கணம். அதற்கு நீர் விரிவுரை எழுதவேண்டும். மேலும் யோகப் பயிற்சி முறைகளை இந்த பூலோக வாசிகளுக்கு கற்றுத் தரவும் கட்டளை இட்டார்.

-தொடரும்

அன்புடன் எல்கே

10 கருத்துகள்:

பத்மநாபன் சொன்னது…

ஆதி சங்கரர்..குருவை சந்திப்பது..ஸ்லோகங்கள் சொல்வதும்..அதன் பின் குரு அதை இறைவனின் திருவிளையாடல்களாக உணர்வதும் தெளிந்த நீரோடையாக வருகிறது...

பதிவில் பதஞ்சலியின் வருகை ஆச்சர்யமூட்டுகிறது....

kannanjnair சொன்னது…

மிக மிக அருமையான எழுத்து நடை ... செய்திகளை மிக நுட்பமாக விளக்கும் விதம் அருமை ...................

சே.குமார் சொன்னது…

மிக மிக அருமை.

எல் கே சொன்னது…

@பதமநாபன்
அண்ணா, காரணம் இருக்கிறது... விரைவில் தெரிந்துகொள்வீர்கள்

@குமார்
நன்றி

@கண்ணன்
முதல் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

அருமையா இருக்கு.....

ஸ்ரீராம். சொன்னது…

குரு சிஷ்யன் சந்திப்பு பரம சுகம். தொடரட்டும்...

சுசி சொன்னது…

தொடருங்க கார்த்திக்..

சின்ன வேண்டுகோள்.. எழுத்துப்பிழை கவனிங்க.. :)

komu சொன்னது…

குரு சிஷ்யர் சந்திப்பு அழகான விவரணை.தொடர்மிகவும் சுவாரஸ்யமாகப்போய்க்க்ண்டிருக்கு

வெங்கட் நாகராஜ் சொன்னது…

தொடர் அழகாய் போகிறது... தொடருங்கள்!

கோவை2தில்லி சொன்னது…

சுவாரஸ்யமாய் சொல்லிக் கொடுக்கிறீர்கள் கேட்டுக் கொண்டிருக்கிறோம்.