ஜனவரி 06, 2011

நினைவுகள் -1

வீட்டில் நுழையும் பொழுது ஒலித்த அலைபேசியை சலிப்புடன் எடுத்து அதில் வந்த எண்ணை பார்த்து அழைப்பை உயிர்ப்பித்து " சொல்லுப்பா" என்றாள் சரஸ்வதி. பன்னாட்டு மென்பொருள் நிறுவனத்தில் வேலைபார்ப்பவள். சென்னையில் தன் நண்பிகளுடன் வீடு எடுத்து தங்கி வேலைபார்த்து வருகிறாள்.

வழக்கமான நலம் விசாரிப்புகளுக்கு பிறகு "உனக்கு கூரியரில் ஒரு பையனோட போட்டோ அனுப்பி இருக்கேன்மா . பார்த்து உன் முடிவை சொல்லுமா" சொன்னவரின் குரலில் தயக்கம் தேவைக்கு அதிகமாய்.

"மறுபடியும் ஸ்டார்ட் பண்ணிடீங்களா ? நான்தான் இப்ப கல்யாணம் வேண்டாம்னு சொன்னேன்தான ?". கோபத்தில் பட்டாசாய் பொரிந்து தள்ளினாள் சரஸ்வதி .

"இல்லமா. பையன் நல்ல பையன். நல்ல வேலைல இருக்கான் . அதுதான் போட்டோ அனுப்பினேன். உனக்கு பிடிக்கலைனா விட்டுடலாம். எடுக்கும் ஒருமுறை போட்டோவை பார்த்து உன் முடிவை சொல்லு. வச்சிடறேன்" .

இவள் பதில் சொல்லும் முன் அழைப்பு துண்டிக்கப்பட்டது. அலுவலக வேலைச் சோர்வோடு ,இந்த எரிச்சலும் சேர்ந்து கொள்ள, சோர்வாய் , சோபாவில் விழுந்தாள்.

மறுநாள் மாலை, உற்சாகமாய் வீடு திரும்பியவளின் மனம் ,அந்த கூரியர் கவரை கண்டவுடன் ஒரு கணம் யோசித்தது. "பார்த்த முதல் நாளே" பாடலை முணுமுணுத்துக் கொண்டே ,கவரை கிழித்து உள்ளிருந்து போட்டோவை எடுத்தாள்.

போட்டோவை பார்த்தவளின் கண்கள் எதையோ யோசிப்பதை போல் சுருங்கத் துவங்க, சில நொடிகள் கழித்து தன் கண்ணை மூடி யோசிக்கத் துவங்கினாள்.

சிறிது நேர ஆழ்ந்த யோசனைக்கு பிறகு எதோ புலப்பட்டது போல் அவள் கண்கள் மின்னின. பரப்பரப்பாய், அந்தக் கவரை திறந்து அதற்குள் வேறு ஏதாவது உள்ளதா என்று பார்த்துப் பின் ஏமாற்றத்துடன் போட்டோவை மீண்டும் பார்க்க துவங்கினாள்.

பின் ஒரு முடிவுக்கு வந்தவளாய், தன் அலைபேசியை எடுத்தாள்.

-தொடரும்


அன்புடன் எல்கே

41 கருத்துகள்:

Gayathri சொன்னது…

ஹை கதை, சுப்பர் ...

என்ன இது சஸ்பென்ஸ்ல முடிசுடீங்க..சேகரம் பார்ட் டூ ப்ளீஸ்

வெங்கட் நாகராஜ் சொன்னது…

ஓ... தொடர்கதையா? நன்று. சஸ்பென்ஸாய் முதல் பகுதி... தொடருங்கள், தொடர்ந்து வந்துடுவோம்....

Madhavan Srinivasagopalan சொன்னது…

அட.. நீங்க கதை வேற சொல்லுவீங்களா..
அதுவும் தொடர்கதை..
எங்களுக்கு இனிமே தீபாவளிதான்.. சாரி.. பொங்கல்தான்..

:-)

அமைதிச்சாரல் சொன்னது…

நல்ல ஆரம்பம்.. தொடருங்க.

Jaleela Kamal சொன்னது…

அருமையான ஆரம்பம் பெரிய தொடர் போல

அருண் பிரசாத் சொன்னது…

ரைட்டு!

பத்மநாபன் சொன்னது…

பொற்கொடி தொடர் போட்டபிறகு ..எல்.கே தொடர் போட வில்லை என்றால் எப்படி .. சஸ்பென்ஸ் ஜோரா இருக்கு ...அடுத்த பகுதி ரூட் மாற மாட்டிங்கள்ள...

S Maharajan சொன்னது…

அருமை..
அடுத்த பதிவை எதிர்நோக்கி

கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…

ஒரு டெம்போவில் நிறுத்தியிருப்பது நன்று ..

asiya omar சொன்னது…

very interesting.

பிரபு எம் சொன்னது…

தொடருங்கள் நண்பரே...
காத்திருக்கிறோம் ஆவலுடன்

RVS சொன்னது…

பிடிக்கும்பாளா....
பிடிக்கலைம்பாளா....
பையன் யாரு...
போனு யாருக்கு பண்ணப் போறா..
யாரோட நினைவலைகள்..
போதும்ன்னு நினைக்கிறேன்.. என்ன சொல்றீங்க. எல்.கே. ;-)

Chitra சொன்னது…

nice start.....

அப்பாவி தங்கமணி சொன்னது…

அடப்பாவிங்களா... நீங்க எல்லாம் மட்டும் பத்து லைன் ஒரு பார்ட்னு போடுவீங்க...நான் பத்து பாரா போட்டாலும் why small post? னு கொஸ்டின் வரும்... இந்த அநியாயத்த கேக்க ஆளே இல்லியா?

கதை கலக்கல் தொடக்கம்.... நெக்ஸ்ட் பார்ட் ப்ளீஸ்...

komu சொன்னது…

ஆரம்பமே ஒரு எதிபார்ப்பில் தொடரும் போட்டுட்டீங்க.

Lakshmi சொன்னது…

ஆரம்பமே நல்லா இருக்கு. சுவாரசியமான இடத்தில் தொடருமா? ஓ.கே, ஓ, கே.

middleclassmadhavi சொன்னது…

தொடர் 'சிறு'கதையா? எப்போ அடுத்த பகுதி?

தக்குடு சொன்னது…

இனிமே எந்த பயலாவது ஒழுங்கா கதை எழுதும் நம்ப ATM அக்கா ப்ளாக்ல வந்து //கதை எப்போ முடியும்? ஏன் சின்னதா இருக்கு?// இந்த மாதிரி 'கெக்ரே பிக்ரே'னு கமண்ட் போடட்டும் அப்போ இருக்கு!!..:PP

ஹுஸைனம்மா சொன்னது…

நல்லாருக்கே.. சீக்கிரம் நெக்ஸ்ட்..

ஸ்ரீராம். சொன்னது…

ஏற்கெனவே அறிமுகமான ஆளா...பாடம் சொல்லிக் கொடுக்கப் போறாளா...பார்ப்போம்..தொடருங்கள்.

dheva சொன்னது…

செமயா ஆரம்பிச்சு இருக்கீங்க........குட்....

வெயிட்டிங்.......அடுத்த பாகம்.....! (ஆமாம் வோட்டுப் பட்டைய வைங்க தெரியாத நிறைய பேர் மிஸ் பண்ணுவாங்கள்ள...)

Porkodi(பொற்கொடி) சொன்னது…

hahahaha haiyo kadavule ethanai thodar kadhai padikradhu???? :D super LK, neenga 10 linela podunga, dont mind Appavi Thangamani's words! ;) eppo next part?

எல் கே சொன்னது…

@காயத்ரி

சீக்கிரம் போட்டுடலாம்


@வெங்கட்

நன்றி

எல் கே சொன்னது…

@மாதவன்
கதைங்கற பேர்ல ஏதாவது எழுதுவேன். அது நல்லா இருக்கா இல்லையானு நீங்கதான் சொல்லணும்


@சாரல்
நன்றி

@ஜலீலா

நன்றி


@அருண்
சரி

@

எல் கே சொன்னது…

@பத்மநாபன் அண்ணா

அண்ணா ? ஏன் இப்படி,போர்க்கொடி அப்பாவி தங்கமணி எல்லாம், கதை எழுதறதுல பெரிய ஆளுங்க. நான் மாடு. அவங்ககிட்ட மோத முடியுமா?

எல் கே சொன்னது…

@மகாராஜன்
நன்றி


@செந்தில்
நன்றி பாஸ்


@ஆசியா
நன்றி

@பிரபு
நன்றி

எல் கே சொன்னது…

@ஆர்வீஎஸ்

இருக்கற எல்லா வாய்ப்பையும் பட்டியல் போட்டாச்சா ?

@சித்ரா
நன்றி


@அப்பாவி

யாரு உன்ன அப்படி சொன்னா ?? சொல்லு

@கோமு

நன்றி

@லக்ஷ்மி

நன்றிங்க

@மாதவி
ஆமாம் அதுவேதான்


@தக்குடு
யாரு அப்படி சொன்னா ??


@ஹுசைனம்மா
சீக்கிரம் போடறேன்


@ஸ்ரீராம்
நன்றி

எல் கே சொன்னது…

@தேவா
நன்றி பாஸ். இல்லை பாஸ். இனி ஓட்டுப் பட்டை வைப்பதாய் இல்லை. பார்ப்போம் என்னதான் ஆகுதுன்னு

எல் கே சொன்னது…

@போர்க்கொடி
நன்றி. ஆனால் பாருங்க நான் ரொம்ப குழப்பலாம் மாட்டேன். சீக்கிரம் சுபம்தான்

Balaji saravana சொன்னது…

கரெக்டா அந்த இடத்தில தொடரும்னு போட்டுட்டீங்களே LK! :)

சென்னை பித்தன் சொன்னது…

சஸ்பென்ஸ் தாங்க முடியவில்லை!சீக்கிரம் தொடருங்க.

ஆமினா சொன்னது…

சுருக்குமா இருந்தாலும் சூவாரசியம் குறையாம இருக்கு!!!

சஸ்பென்ஸ சீக்கிரம் சொல்லிடுங்க

கோவை2தில்லி சொன்னது…

தொடர் ஆரம்பமே சஸ்பென்ஸா இருக்கு. தொடருங்கள்.

ஹேமா சொன்னது…

சரி...ஒரு சுவாரஸ்யம் ஆரம்பம்.இரத்தமில்லாத கதையா இருக்கணும்.சொல்லிட்டேன் !

கல்பனா சொன்னது…

என்ன சார் சஸ்பென்ஸ் யா முடிச்சுடிங்க,,, அடுத்த பதிவு எப்போ

எல் கே சொன்னது…

@பாலாஜி
சீக்கிரம் அடுத்த பாகம் வரும்

@பித்தன்

சார் சீக்கிரம் போட்டுடறேன்

@ஆமீனா
நன்றி

@கோவை
நன்றி

@ஹேமா
இதில் ரத்தம் வராது

@கல்பனா

சீக்கிரம்

RVS சொன்னது…

@தக்குடு
கதை படிக்க வந்த இடத்துல... மத்தவாளை கலாய்க்கரே.. டூ மச்.. தக்குடு கமெண்ட்டை பார்த்தா சப்போர்ட் பண்றா மாதிரி தெரியலையே.. உள்குத்தா இருக்கே.. ATM எப்படி சும்மா இருக்காங்கன்னு தெரியலை.. (அப்பாடி வந்த வேலை முடிஞ்சுது.. ) ;-) :P

vidhas சொன்னது…

First timehere, rombha nalla erukku, suspense a seekara sollidiungo.

எல் கே சொன்னது…

@ஆர்வீஎஸ்
சரியா சொன்னீங்க.

@விதாஸ்
முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க

தோழி பிரஷா சொன்னது…

நல்ல ஆரம்பம்.. தொடருங்கள் .. வாழ்த்துக்கள்

ஆமினா சொன்னது…

மீண்டும் முதலில் இருந்து ஆரம்பிக்கிறேன்.

முன்பே படித்தாலும் சளிப்பை ஏற்படுத்தாத நடை