டிசம்பர் 01, 2011

இன்னுமொரு அப்பாவி ரங்கமணி

ஒரு சில வாரங்களுக்கு முன்னாடி தக்குடுகிட்ட இருந்து ஒரு மெயில் வந்துச்சு. டிசம்பர் ஒண்ணு சென்னையில் எனக்கு கல்யாணம். கண்டிப்பா வந்திருங்க பாஸ் அப்படின்னு சொல்லி இருந்தான். ஆஹா இன்னொரு விக்கெட்டும் காலி என்று மனதுக்குள் நினைத்தேன்

நேற்று மாலை திருமண வரவேற்புக்கு போனேன். வேறு சில வேலைகளும் இருந்துச்சு அதனால் அதை முடித்துவிட்டு அப்படியே மண்டபத்துக்கு போலாம்னு ஐடியா. இதுக்கு நடுவில் பாலாஜி நானும் சென்னையில்தான் இருக்கேன். கல்யாணத்துக்கு வரேன்னு சொன்னான்.

மண்டபத்துக்கு போனப்ப ஆறு மணி இருக்கும். தெரிந்த முகம் ஒண்ணு கூட கண்ணில் படலை. சரி எப்படியும் மாப்பிள்ளை வெளில வருவான் பார்த்துக்கலாம்னு இருந்தேன். அப்பத்தான் கோவிலுக்கு போயிட்டு வருங்கால மனைவி சகிதமா தக்குடு வந்தான்.
ஒரு நிமிஷம் அவனோட டிரெஸ்ஸை பார்த்து டென்சன் ஆகிட்டேன். தோஹாவில் போட்ட கோட்டை(பேஸ்புக்கில் அவன் போட்டோ பார்த்த நல்லவங்க நாலு பேருக்கு இது தெரியும்)  இன்னும் கலட்டமாட்டேனு அடம்பிடிச்சு அதையே போட்டுகிட்டு இருந்தான்.
அவன் இருந்த நிலைமையில் அவனா வந்து நம்மக்கிட்ட பேசுவான்னு எதிர் பாக்கறது தப்புன்னு , நானே போய் கை கொடுத்தேன். நல்லவேளை அறிமுகப்படுத்திக்க வேண்டிய அவசியமில்லாமல் யாருன்னு தெரிஞ்சிகிட்டான். அதன் பின் அவன் அம்மாவிடம் அறிமுகப்படுத்தினான். பதிவர் என்று சொன்னவுடன் அவங்க முகத்தில் அந்த ஒரு  சந்தோசம்.

எவ்ளோ நேரம்  தனியா உக்காந்திருப்பது என்று யோசித்துகிட்டு இருந்தப்ப பாலாஜி போன் பண்ணி நான் வந்துகிட்டே இருக்கேன்னு சொன்னான். சரி அப்படியே நம்ம ஆர்விஎஸ்க்கு போன் பண்ணலாமேன்னு பண்ணா , அவர் குடும்ப சகிதமாக அவரோட ரதத்தில் வரதா சொன்னார்.

பாலாஜி வந்த கொஞ்ச நேரத்தில் திராச(TRC) சாரும் வந்தார்.தக்குடு எப்படியும் அறிமுகப்படுத்தமாட்டான்னு தெரியும் அதனால அவர் தக்குடுவோட மாமனாரிடம் எங்களை அறிமுகப்படுத்தினார். தக்குடுவுக்கு அண்ணா மாதிரிதான் இருக்கார் அவர்.

இந்த நேரத்தில்தான் ஒரு அழைப்பு வந்தது. புது நம்பரா இருந்தது . எடுக்கலாம வேண்டாமான்னு யோசிச்சி எடுத்தா ,கனடாவில இருந்து நம்ம அப்பாவி தங்கமணி. ஒரு மாதிரி தூக்கக் கலக்கத்தில் இருந்த மாதிரி இருந்தது. ஒரு வேளை எழுந்தவுடன் போன் பண்ணிட்டாங்கலோன்னு கேட்டா இல்லை இப்பதான் ஆபிஸ் வந்தேன்னு சொன்னாங்க. அப்ப சரியாதான் இருக்கு . நம்ம அப்பாவி ஆபிசில் எப்ப வேலை பார்த்திருக்காங்க ??
அவங்கக்கிட்ட பேசிட்டு இருக்கப்பவே , ஆர்வீஎஸ் எங்களை கண்டுக்காம உள்ள போயிட்டு அங்க இருந்து எங்களை கூப்பிட்டார்.
ஆர்வீஎஸ் வரது தெரிஞ்சோ என்னமோ , அவ்ளோ நேரம் நடந்த பஜனை முடிந்து ஒரு மாமி தனியா பாட ஆரம்பித்தார். ஆர்வீஎஸ்க்கும் அவங்களுக்கும் எதோ பகைன்னு நினைச்சேன். அப்புறம் யோசிச்சு பார்த்தா, நம்ம தக்குடுதான் அவனோட பதிவுல கல்லிடைகுறிச்சி மாமிகளை கணக்கில்லாமல் கிண்டலடிச்சி இருக்கானே . அதுல பாத்திக்கப்பட்ட எதோ ஒரு மாமியோ இருக்குமோன்னு ஒரு சந்தேகம் இப்ப வரைக்கும் இருக்கு.

கொஞ்ச நேரம், உக்காந்து பேசிட்டு, இன்றைக்கு “இல்லறத்தில்” நுழையப்போகும் தக்குடு ப்ரம்மாச்சாரிய இருக்கறப்ப ஒரு வார்த்தை பேசிடலாம் அப்படின்னு மேடையேறி அவனிடம் ரெண்டு வார்த்தை பேசிட்டு, பையனை கண் கலங்காம பார்த்துக் கொள்ளசொல்லி அவன் தாலிக் கட்டப் போகும் அந்தப் பெண்ணிடம் சொல்லிவிட்டு கீழே இறங்கினோம்.
அதிசயமா தக்குடு கோட் போடாம, ஷெர்வானி போட்டிருந்தான். கோட் இல்லாமல் தக்குடுவை பார்ப்பது அரிது. இதை மிஸ் பண்ணாம போட்டோ எடுக்கலாமேன்னு பார்த்தா இப்படி ஒரு போஸ் தரான்.

அதன்பிறகு டின்னரை சாப்பிட்டு கிளம்பும் பொழுது தக்குடு ஒரு வார்த்தை சொன்னான். அதனாலதான் இந்த போஸ்ட். “போட்டோ போடறது ,கமென்ட் அடிக்கறது” இதெல்லாம் பண்ணக் கூடாதுன்னு சொன்னான். மற்றவர்கள் சொல்லி நாம என்னைக்குக் கேட்டிருக்கோம்  அதான் இந்த போஸ்ட் .

திருமண வாழ்வு இனிமையாக அமைய வாழ்த்துகள்
அன்புடன் எல்கே

நவம்பர் 21, 2011

மாலை மாற்று(மீள் பதிவு)


நம் முன்னோர்களிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ளத் தவறிய விஷயங்கள் பல உள்ளன. அதில் ஒன்றுதான் "மாலை மாற்று ". 


ஆங்கிலத்தில் "பாலிண்ட்ரோம்" என்று ஒன்று உள்ளது. தமிழிலும் வார்த்தைகள் உண்டு. அதே போல் பாடல்களும் பல உண்டு. அந்த வகையில் திருஞான சம்பந்தர் ஒருப் பதிகம் எழுதி உள்ளார். "திருமாலை மாற்றுப் பதிகம்" என்ற அப்பதிகமும் அதன் உரையும் கீழே உள்ளது. 

மாலை மாற்று என்றால் என்ன?

"ஒரு செய்யுள் முதல், ஈறு உரைக்கினும், அ·தாய் வருவதை மாலை மாற்றென மொழி"

 ஒரு செய்யுளின் கடைசி எழுத்தை முதலாக வைத்துக் கொண்டு பின்னாலிருந்து திருப்பி எழுத்துக் கூட்டிவாசித்துக் கொண்டு முதல் எழுத்துக்கு வரவேண்டும்.  அது முன்னிலிருந்து வாசிக்கும் அதே வாசகமாக அமையவேண்டும்.

பாடல் எண் : 1

யாமாமாநீ யாமாமா யாழீகாமா காணாகா
காணாகாமா காழீயா மாமாயாநீ மாமாயா.

பொழிப்புரை :

ஆன்மாக்களாகிய நாங்கள் கடவுளென்றால் அது பொருந்துமா? நீயே ஒப்பில்லாத கடவுளென்றால் அது முற்றிலும் தகும். பேரியாழ் என்னும் வீணையை வாசிப்பவனே! யாவரும் விரும்பத்தக்க கட்டழகனே! பகைப்பொருள்களும் சிவனைச் சாரின் பகை தீர்ந்து நட்பாகும் என்ற உண்மையினை யாவரும் காணுமாறு பாம்புகளை உடையவனே. கை, கால் முதலிய அவயவங்கள் காணா வண்ணம் காமனை அருவமாகச் செய்தவனே. சீகாழி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுபவனே. இலக்குமியின் கணவனான திருமாலாகவும் வருபவனே! மாயை முதலிய மலங்களிலிருந்து எம்மை விடுவிப்பாயாக!.

பாடல் எண் : 2

யாகாயாழீ காயாகா தாயாராரா தாயாயா
யாயாதாரா ராயாதா காயாகாழீ யாகாயா.

பொழிப்புரை :

வேள்வி வடிவினனே. யாழ் வாசிப்பவனே. அடியார்கட்கு அருள வரும்பொழுது உருவத்திருமேனி கொள்பவனே. சங்கார கருத்தாவே. அனைத்துயிர்க்கும் தாயானவனே. ஆத்திப்பூ மாலை அணிந்துள்ளவனே. தாருகாவனத்து முனிபத்தினிகளாகிய மகளிர் கூட்டத்தை வேட்கையுறும்படி செய்தவனே. சீகாழி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுபவனே. துன்பங்கள் எவற்றினின்றும் எம்மைக் காப்பாயாக.

பாடல் எண் : 3

தாவாமூவா தாசாகா ழீநாதாநீ யாமாமா
மாமாயாநீ தாநாழீ காசாதாவா மூவாதா.

பொழிப்புரை :

அழியாத மூப்பிலாத தசகாரியத்தால் அடையும் பொருளாக உள்ளவனே. சீகாழி என்னும் திருத்தலத்து முதல்வனே. எல்லோரும் அஞ்சி நீங்குகின்ற சுடுகாட்டில் நள்ளிரவில் நடனமாடும் நாதனே. மாண்புமிக்கவனே. ஐராவணம் என்னும் யானையின் மேல் ஏறி வருபவனே. கொடையில் கடல் போன்றவனே. சாவினின்றும் எங்களைக் காத்தருள்வாயாக. ஒளியுடைய மாணிக்கம் போன்றவனே. வேண்டும் வரங்களைத் தந்தருள்வாயாக. எங்கள்முன் எழுந்தருள் வாயாக. முன்னைப் பழம்பொருளே. காற்று முதலான ஐம்பூதங்களின் வடிவானவனே!

பாடல் எண் : 4

நீவாவாயா காயாழீ காவாவானோ வாராமே
மேராவானோ வாவாகா ழீயாகாயா வாவாநீ.

பொழிப்புரை :

என்றும் மாறுதலில்லாத மெய்ப்பொருளானவனே. தாங்கிய வீணையை உடையவனே. கொடிய பிறவித் துன்பம் எங்களை அடையாவண்ணம் வந்து காத்தருள்வாயாக. விண்ணிலுள்ள தேவர்கள் துன்பம் அடையாதவாறு மேருமலையை வில்லாக ஏந்தி முப்புரங்களை அழித்தவனே. சீகாழி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருள்பவனே, ஆகாய சொரூபியே! நீ விரைந்து வருவாயாக! அருள் புரிவாயாக.

பாடல் எண் : 5

யாகாலாமே யாகாழீ யாமேதாவீ தாயாவீ
வீயாதாவீ தாமேயா ழீகாயாமே லாகாயா.

பொழிப்புரை :

யாவற்றுக்கும் கால கர்த்தாவாக விளங்குபவனே. எப்பொருளிலும் எள்ளில் எண்ணெய் போன்று உள்ளும், புறம்பும் ஒத்து நிறைந்திருப்பவனே! சீகாழி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருள்பவனே! அறிவில் மேம்பாடு உடையவனே! அனைத் துயிர்கட்கும் தாயாகவும், உயிராகவும் உள்ளவனே! என்றும் அழிவில்லாதவனே! இன்குரல் எழுப்பும் கின்னரம் முதலிய பறவைகள் தன்னருகின் வந்து விழும்படி வீணைவாசிப்பவனே. யாங்கள் மேற்கொண்டு ஆவனவற்றிற்கு ஆராயாதவாறு எங்களைக் காத்தருள் வாயாக!.

பாடல் எண் : 6

மேலேபோகா மேதேழீ காலாலேகா லானாயே
யேனாலாகா லேலாகா ழீதேமேகா போலேமே.

பொழிப்புரை :

மார்க்கண்டேயரின் உயிரைக் கவர வந்த காலனைக் கடுங்குரலால் கண்டித்தவரே. உம் திருவடியால் அவனை உதைத்து அக்காலனுக்குக் காலன் ஆகியவரே. பொருந்திய சனகர் முதலிய நால்வர்க்கும் சிவகுருவாகிக் கல்லால மரத்தின் கீழ் உபதேசித்து மெய்யுணர்வு பெறச் செய்தவரே. சீகாழி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் பரம்பொருளே. மேகத்தை வாகனமாகக் கொண்டருளியவரே. அடியேங்கள் உம் திருக்கூட்டத்தில் ஒருவர் போல் ஆவோம்.

பாடல் எண் : 7

நீயாமாநீ யேயாமா தாவேழீகா நீதானே
நேதாநீகா ழீவேதா மாயாயேநீ மாயாநீ.

பொழிப்புரை :

உன்னைவிட்டு நீங்குதலில்லாத உமாதேவியை உடையவனே! ஒப்பற்ற தாயானவனே! ஏழிசை வடிவானவனே! நீயே வலிய எழுந்தருளி எங்களைக் காத்தருள்வாயாக! பேரன்பு வாய்ந்த நெஞ்சத்தை இடமாக உடையவனே. சீகாழி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும், வேதங்களை அருளிச்செய்து வேதங்களின் உட் பொருளாக விளங்குபவனே. எங்களைக் கொல்லவரும் துன்பங்களை நீ கொன்று அருள்செய்யாயோ

பாடல் எண் : 8

நேணவராவிழ யாசைழியே வேகதளேரிய ளாயுழிகா
காழியுளாயரி ளேதகவே யேழிசையாழவி ராவணனே.

பொழிப்புரை :

இறைவரின் திருவடிகளில் பேரன்பு செலுத்தும் அடியவராம் பசுக்கள் தன்வயமற்றுக் கிடக்க, கட்டிய ஆசை என்று சொல்லப்படும் பெருங்கயிற்றைத் தண்ணளியால் அவிழ்த்தருள்பவரே. மிக வேகமாக ஓடும் மானின் தோலை அணிந்துள்ள பேரழகு வாய்ந்தவரே. பொறுக்கலாகாத் தீவினைத் துன்பங்கள் தாக்க வரும்போது காத்தருள்வீராக! மன்னித்தற்கரிய குற்றங்கள் எங்களின் சிறுமைத் தன்மையால் செய்தனவாகலின் அவற்றைப் பெரியவாகக் கொள்ளாது சிறியவாகக் கொண்டு பொறுத்தருள்வீராக! ஏழிசைவல்ல இராவணன் செருக்கினால் செய்த பெரும்பிழையைத் தேவரீர் மன்னித்து அருளினீர் அல்லவா? (அடியேம் சிறுமையால் செய்த பிழையையும் மன்னித்தருளும் என்பது குறிப்பு).


பாடல் எண் : 9

காலேமேலே காணீகா ழீகாலேமா லேமேபூ
பூமேலேமா லேகாழீ காணீகாலே மேலேகா.

பொழிப்புரை :

காற்றாகி எங்கும் கலந்தருள்பவனே. மறைப் பாற்றலின் வழி எவ்வுயிர்க்கும் மயக்கம் செய்து பின் அருள் புரிபவனே. பூக்களில் சிறந்த தாமரைப்பூவில் வீற்றிருக்கும் பிரமனும், திருமாலும், முறையே திருமுடியையும், திருவடியையும் காணுதலை ஒழித்த வைரத் தன்மையுடையவனே! சீகாழி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுபவனே. எங்களைக் கடைக்கணித்தருள்வாயாக. உன் திருவடியைத் தந்தருளுவாயாக!.

பாடல் எண் : 10

வேரியுமேணவ காழியொயே யேனைநிணேமட ளோகரதே
தேரகளோடம ணேநினையே யேயொழிகாவண மேயுரிவே.

பொழிப்புரை :

நறுமணமும், தெய்விக மணமும், பெருமையும், புதுமையும் கலந்து விளங்கும் சீகாழி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருள்பவனே! துன்பங்களை நீக்கி அருள்பவனே. பேரருள் உடையவனே. அதனை அள்ளிக்கொள்ளல் அகத்தவத்தாராகிய சிவயோகிகளின் செய்கையே . புத்தர், சமணர்களின் மொழிகளை எண்ணுதலையும், நண்ணுதலையும் ஒழித்தருள்வாயாக! இப்புறச் சமயத்தார் பன்னெறிகளில் புகாமல் காத்தருளும் திறம் நின் திருவடிக்கே உரியதாகும்.

பாடல் எண் : 11

நேரகழாமித யாசழிதா யேனனியேனனி ளாயுழிகா
காழியுளானின யேனினயே தாழிசயாதமி ழாகரனே.

பொழிப்புரை :

நேர்மையை அகழ்ந்து எறிவதாகிய, நெஞ்சத்தில் நிலைத்து எவரையும் துன்புறுத்தும் காமம், வெகுளி, மயக்கம் என்னும் முக்குற்றங்களையும் அழித்தருள வல்லவனே. உலகுக்கெல்லாம் தாயாம் தன்மையை ஏற்றருளத் தக்கவன், ஒப்பில்லாத நீ ஒருவனே. நன்மை புரிந்தருளுவதில் உயர்ந்தவனே! நாங்கள் தளர்ந்த இடத்து எங்களைக் காத்தருள்வாயாக! என்று நற்றமிழுக்கு உறைவிடமாகவுள்ள திருஞானசம்பந்தப் பெருமான் சிவபெருமானைப் போற்றி அருளிய, பாடுவோர்களையும், கேட்போர்களையும் உள்ளம் குழையச் செய்யும் இத்திருப்பதிகத்தை ஓதவல்லவர்கட்கு எந்தக் குறைவும் உண்டாகாது.

இந்தப் பாடல்களையும் விளக்கங்களையும் கீழ்க்கண்ட தளங்களில் இருந்து எடுத்தேன்.

அவர்களுக்கு என் நன்றி
அன்புடன் எல்கே

அக்டோபர் 22, 2011

இடைத் தேர்தல் , ஊழல் வழக்குகள்

ண்டுமொரு இடைத் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இந்த முறை தேர்தலில் வெற்றிப் பெற்றவர் பணியாற்றத் துவங்கும் முன்னே விபத்தில் மரணமடைய  இந்த இடைத் தேர்தல் . இந்த மாதரித் தருணங்களில் தேர்தல் அவசியமா என்பது யோசிக்க வேண்டிய ஒரு விஷயமாகும். தேர்தல் நடந்து வெகு நாளாகத நிலையில் முன்பிருந்த கட்சிக்கே அந்தத் தொகுதியை விட்டுக் கொடுக்கலாம் . இதன் மூலம் தேவையற்ற செலவுகள் தவிர்க்கப் படும். இதை தேர்தல் கமிஷன் கவனத்தில் கொண்டால் நல்லது.

கூடங்குளம் விஷயத்தில் முடிவெடுக்காமல் தள்ளிப் போட்டுக் கொண்டே போவது நல்லதல்ல. தெலுங்கானா பிரச்சனை போன்று பெரிய அளவில் பிரச்சனை நடந்தால்தான் நடவடிக்கை எடுப்பார்களோ  என்னமோ ? பல பிரச்சனைகளில் மத்திய அரசு முடிவெடுக்காமல் தள்ளிப் போட்டுக்கொண்டே செல்கிறது.
 
தொடர்ந்துப் படிக்க http://tinyurl.com/5rsnv2r

அன்புடன் எல்கே

செப்டம்பர் 19, 2011

புத்தக பரிமாற்றம்

உங்களிடம் நீங்கள் படித்துமுடித்த பல புத்தகங்கள் இருக்கலாம். இடம் போதாக் காரணத்தாலோ வேறு காரணத்தாலோ அதை நீங்கள் விற்க விரும்பலாம். அதே போல் சிலர் குறிப்பிட புத்தங்களை தேடிக் கொண்டிருக்கலாம். அவர்களுக்கு உங்களிடம் இருக்கும் புத்தகம் தேவைப்படலாம்.

உங்களிடம் இருக்கும் / உங்களுக்குத் தேவையான புத்தகங்களைப் பற்றிய அறிவிப்பை இந்தப் பகுதியில் நீங்கள் வெளியிடுங்கள்.

அந்தப் புத்தகம் தேவைப்படுவோர் அல்லது வைத்திருப்போர் உங்களை தொடர்புக் கொள்வார்கள். இது கிட்டத்  தட்ட ஒரு லெண்டிங் லைப்ரரி போன்றுதான். அதீதம் தகவல் பரிமாற்றத்திற்கு ஒரு களம் தருகிறது. மேற்கொண்டு எப்படி புத்தகத்தை வாங்கிக் கொள்வது திருப்பிக் கொடுப்பது இதையெல்லாம் புத்தகம் தருபவரும் / பெற்றுக் கொள்பவரும் முடிவு செய்துக் கொள்ள வேண்டும்.

இந்த அறிவிப்பை உங்கள் தளங்களில் பகிர்ந்துக் கொள்ளலாமே. சைட் பார் விட்ஜெட்டாகப் போட்டு வைக்கலாம் .

அதீதம் உங்கள் அறிவிப்பை மட்டுமே வெளியிடுகிறது. புத்தக பரிமாற்றத்திற்கு எந்த வகையிலும் அதீதம் பொறுப்பேற்காது. 

சுட்டி  :
http://tinyurl.com/6l8obsp 

செப்டம்பர் 09, 2011

குண்டுவெடிப்பும் மற்றவையும்

இந்திய மக்களுக்கு குண்டுவெடிப்புகள் சாதாரண நிகழ்வாய் மாறிக் கொண்டுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு நடந்த மும்பை வெடிகுண்டுகள் பற்றிய விசாரணை எந்த அளவில் இருக்கிறது என்று தெரியாத நிலையில் இப்ப்பொழுது டில்லி ஹைகோர்ட் வாசலில் குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. வழக்கமான கண்டனங்களும் , இதை உறுதியுடன் எதிர்கொள்ளவேண்டும் என்ற வேண்டுகோள்களும் வாசிக்கப்பட்டு விட்டன. இன்னும் சிலநாட்கள் பஸ்,ரயிலில் செல்வோர் அனைவரும் சோதிக்கப்படுவார்கள் . அதன்பின் மீண்டும் ஒரு முக்கியப் பண்டிகையோ இல்லை ஒரு குண்டுவெடிப்போ நிகழாத வரை ரயில்வே ஸ்டேஷன்களில் சோதனை செய்வதற்கென்று நிறுத்தப்பட்டிருக்கும் போலீசார் அருகில் இருக்கும் நாற்காலிகளில் ஓய்வெடுத்துக் கொண்டிருப்பர். அங்கிருக்கும் மிஷின்கள் வேலை செய்கிறதா என்றுக் கூடத் தெரியாது. அப்படிப்பட்ட நிலையில்தான் அவை இருக்கின்றன.

மீண்டும் நான்கு மாதம் கழித்து மீண்டும் ஒரு குண்டுவெடிப்பு நிகழும்.இப்ப முதலில் இருந்து படிச்சு பாருங்க மறுபடியும்.

உக்கடத்தில் புதைந்த வீடுகள்

உக்கடத்தில் தமிழ்நாடு குடிசை மாற்றுவாரியத்தால் கட்டப்பட்ட வீடுகள் பூமிக்குள் புதையத் துவங்கியுள்ளன. மொத்தம் 2904 வீடுகள் 21 ப்ளாக்களாக கட்ட திட்டமிடப்பட்டது. அதில் இது வரை மூன்று ப்ளாக் இதுபோல் மண்ணில் புதையத் துவங்கியுள்ளது அதிர்ச்சியைத் தருவதாக உள்ளது.

அங்கு வீடுகட்ட துவங்கும் முன் ,அங்குள்ள மண் எத்தகையது என்று முறையாக பரிசோதிக்கப்பட்டதா என்றுத் தெரியவில்லை.கல்லூரியில் இருப்பவர்களை வைத்துப் பரிசோதிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது . அந்த ஆய்வு எந்த அளவு நம்பிக்கையானது என்றுத் தெரியவில்லை. 15 செ மீ அளவிற்கு வீடுகள் பூமியில் இறங்கியுள்ளன. அங்கு யாரும் வசிக்கததால் உயிரிழப்பு நிகழவில்லை.

இப்பொழுது அண்ணா பல்கலைகழக பேராசிரியர் தலைமையில் ஒரு கமிட்டி அமைத்து அங்குள்ள அணைத்து வீடுகளும் பரிசோதிக்கப்படும் என்று சொல்லியுள்ளனர். இனியாவது பொதுமக்கள் உயிரோடு விளையாடுவதை அரசாங்க அதிகாரிகள் நிறுத்திக் கொள்வார்களா ??

சட்டசபை

தினமும் சட்டசபை கூடுவதும் தி மு க வினர் வெளிநடப்பு செய்வதும் வாடிக்கையான ஒன்றாக மாறிவிட்டது. சபாநாயகர் இரண்டுக் கட்சியினரையும் சமமாக நடத்தவேண்டும். ஆளும் கட்சியினருக்கு மட்டுமே வாய்ப்புகள் அளிக்கக்கூடாது. அதேபோல் திமுகவினரும் சிறு சிறு விஷயங்களுக்கும் வெளிநடப்பு செய்வதைக் குறைத்துக் கொள்ளவேண்டும்.

அதீதத்தில்

பாஞ்சாலி சபதம்: பகுதி 1: பாடல்- 2

அன்புடன் எல்கே

ஆகஸ்ட் 27, 2011

பள்ளித் தேர்வு முறையில் மாற்றம்

தேர்வு முறையில் மாற்றம்

நேற்று சட்டசபையில் வரும் கல்வியாண்டில் இருந்து பள்ளித் தேர்வு முறையில் மாற்றங்கள் வரும் என்ற அறிவிப்பு வந்துள்ளது. கல்லூரிகளில் இருக்கும் பருவ முறையை பள்ளிகளுக்கும் கொண்டு வந்துள்ளனர். கல்லூரியில் இரண்டு பருவங்கள் இருக்கும் அதற்கு பதில் இங்கு மூன்றாக வைத்துள்ளனர். முதல் பருவத்தில் படித்து தேர்வு எழுதியதை மீண்டும் படிக்கத் தேவையில்லை. இதற்கு வசதியாக மூன்று பருவங்களுக்கும் தனித் தனி புத்தகங்கள் வழங்கப்படும் என்று சொல்லியுள்ளனர்.

அதேபோல் வகுப்பறைகளில் கணிணி வழியாகக் கற்பிக்கவும் வழிவகை செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.

இந்த இரண்டும் நல்ல திட்டங்கள். இதன் மூலம் மாணவர்களின் புத்தக சுமைக் குறையும் . மேலும் கற்பதும் ஒரு இனிமையான அனுபவமாக மாறும் என்று நம்புவோம்.


தொடர்ந்துப் படிக்க http://tinyurl.com/3mcr8de


 

ஆகஸ்ட் 21, 2011

ஹாப்பி பர்த்டே கிருஷ்ணா

 வலைபூவுக்கென்று பதிவெழுதி ரொம்ப நாள் ஆச்சு. இன்னிக்கு நம்ம கிருஷ்ணருக்கு பிறந்தநாள். எனக்குப்(திவ்யாவுக்குப்)  பிடிச்ச  சில கிருஷ்ணன் பாட்டுகளை போடறேன்.

அனைவருக்கும் கோகுலாஷ்டமி வாழ்த்துகள்.

கடைசியாக....அன்புடன் எல்கே

ஆகஸ்ட் 20, 2011

விடைத் தெரியாக் கேள்விகள்

சென்ற ஆட்சியில் தலைமை செயலகத்துக்காகக் கட்டப்பட்ட கட்டிடத்தை பல் துறை உயர் சிறப்பு மருத்துவமனையாக மாற்றப்போவதாக நேற்று சட்டசபையில் முதல்வர் அறிவித்துள்ளார். நல்ல விஷயம்தான் . பல கோடி மக்கள் வரிப்பணம் கொண்டு கட்டப்பட்ட கட்டிடத்தை வீணடிக்காமல் எதாவது ஒரு வகையில் பயன்படுத்தப்போகின்றார்கள் . மக்களுக்கு உபயோகம் ஆகும் வகையில் அந்தக் கட்டிடம் இருக்கும் என்ற வகையில் மகிழ்ச்சியே. மேலும் அங்கு தலைமை செயலகம் வந்தபொழுது, அருகில் இருக்கும் ரிச்சி ஸ்ட்ரீட் கடைக்காரர்கள் பாதுகாப்புக் காரணங்களால் தங்களை அங்கிருந்து அகற்றிவிடுவார்களோ என்று அஞ்சினர். இப்பொழுது அது நடக்காது. அந்த வகையிலும் மகிழ்ச்சியே.

ஆனால் , சிலக் கேள்விகள் மனதில் எழுவதைத் தவிர்க்க இயலவில்லை .

அந்தக் கட்டிடம் கட்டியதில் ஊழல் என்று சொன்னார்கள். அது சம்பந்தமான விசாரணை நிலுவையில் இருக்கும் பொழுது எதற்கு இந்த முடிவு ?

மருத்துவமனையாக மாற்றவேண்டும் என்றால் அதற்கு இன்னும் பல மாற்றங்களை செய்யவேண்டி இருக்கும். ஏற்கனவே நிதிப் பற்றாக்குறையில் இருக்கும் அரசு இதற்கு நிதிக்கு எங்கே செல்லப்போகிறது ?

ஏற்கனவே கட்டப்பட்டக் கட்டிடத்தை மாற்றியமைத்தல் மிகக் கடினம். புதியக் கட்டிடத்தை கட்டுவதை விட இருக்கும் கட்டிடத்தை மாற்றியமைத்தல் சிரமங்கள் அதிகம். அதற்கு இன்னும் எத்தனை மாதங்கள் ஆகும் ?

இப்படி பலக் கேள்விகள் அனைவரின் மனதிலும் எழுந்துள்ளன. இதற்கு முதல்வர் விடை சொல்வாரா ?

அன்னா ஹசாரே

ஏற்கனவே அன்னா ஹசாரே முன்னுக்குப் பின் முரணாக பேசுகிறார் என்று சொல்லியிருந்தேன். நேற்று மீண்டும் அதை நிரூபித்துள்ளார். பதினைந்து நாட்கள் உண்ணாவிரதம் இருப்போம் என்று ஒத்துக்கொண்டு சிறையில் இருந்து வெளியே வந்த அன்னா ஹசாரே இப்பொழுது லோக்பால் மசோதா நிறைவேறும் வரை உண்ணாவிரதம் என்று சொல்லியுள்ளார். இப்படி முன்னுக்குப் பின் முரணாக பேசுபவரை நம்பி பலர் அவர் பின் செல்கின்றனர். அவர்கள் நிலைமை ???

தனிமனிதராகப் பார்த்தால் அன்னா ஹசாரே மிக நல்லமனிதர்தான். ஆனால் அவரைச் சுற்றி இருக்கும் கோமான்கள் அவரை குழப்பித் தவறானாப் பாதையில் அழைத்து செல்கின்றனரோ என்ற சந்தேகம் எழுவதைத் தவிர்க்க இயலவில்லை.

அதீதத்தில் படிக்க http://tinyurl.com/3tybeob
 

ஆகஸ்ட் 18, 2011

என்ன கொடுமை இது ?

எம் பி ஏ

அகில இந்திய தொழில் நுட்ப கவுன்சில் நேற்று ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி இனி எம் பி ஏ படிப்பிற்கு நாடு முழுவதும் ஒரே நுழைவுத் தேர்வு நடத்தப்படும் . இப்பொழுது நடைமுறையில் இருக்கும் தனித் தனி நுழைவுத் தேர்வுகளை ரத்து செய்து ஒரே நுழைவுத் தேர்வாக மாற்ற இது வழிவகுக்கும்.

ஆனால் இது பொருளாதார ரீதியாகப் பின்தங்கியிருக்கும் மாணவர்களுக்கு மேலும் பாதிப்பை உண்டுபண்ணும். தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகளுக்கு தனியாக கோச்சிங் செல்வது என்பது அவர்களால் இயலாத காரியம். அவர்களும் எளிதாக எஞ்சினியரிங் படிக்க வேண்டும் என்பதற்காகத்தான் தமிழகத்தில் நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டது.


தொடர்ந்துப் படிக்க http://tinyurl.com/3s2kzca
 

ஆகஸ்ட் 16, 2011

முதல்வருக்கு இது அழகல்ல

நேற்றைய சுதந்திர தின விழாவில்  கொடியேற்றி விட்டு முதல்வர் பேசியது ஒரு மாநிலத்தின் முதல்வருக்கு பெருமை சேர்க்கக் கூடியவகையில் இல்லை. அதுவும் அனைவருக்கும் சுதந்திரதின வாழ்த்துகளை சொல்லிவிட்டு அவர் பேச்சைத் துவங்கிய விதமே சரியாக அமையவில்லை. அவர் கூறியது


64 ஆண்டுகளுக்கு முன்னர் சுதந்திரம் பெற்றதைக் கொண்டாடும் நேரத்தில், கடந்த அணித்து ஆண்டுகளாக அடிமைப்படுத்தி இருந்த விலங்கு இப்பொழுது தகர்த்து எறியப்பட்டுள்ளதையும் மக்கள் உவகையுடன் கொண்டாடி வருகின்றனர்

இது தவறான ஒரு செய்கையாகும். நாட்டின் சுதந்திர தினத்தை கொண்டாடும் நேரத்தில் அது சம்பந்தமான பேச்சுகளும், மாநில முன்னேற்றத்துக்கு எடுக்கப்போகும் நடவடிக்கைகளை பற்றி மட்டுமே பேசியிருக்கவேண்டும்.

தொடர்ந்துப் படிக்க
http://tinyurl.com/3pattcy
 

ஆகஸ்ட் 12, 2011

நாட்டு நடப்பு - சுடச் சுட

மெல்ல எழும் எதிர்ப்புகுரல், முன்னெடுக்கும் தமிழக முதலமைச்சர்

இலங்கை அரசு இறுதிக்கட்டப் போரின் பொழுது தமிழர்களின் மீது நடத்திய கோரத் தாண்டவத்தில் நடைபெற்ற மனித உரிமை மீறல் மற்றும் போர்குற்றங்களுக்காக இலங்கையின் மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்று கடந்த ஜூன் மாதன் தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.


இந்நிலையில் பி பி சிக்கு பேட்டி அளித்த கோத்தபாய ராஜபக்ஷே "அரசியல் ஆதாயம்" பெறவே அத்தகைய தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக சொல்லியிருந்தார். நேற்று சட்டசபையில் இது குறித்து பேசிய முதல்வர் ஜெயலலிதா கோத்தபாயவின் பேச்சுக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தார்.

மேலும் அவர் பேசுகையில்...

தொடர்ந்துப் படிக்க http://tinyurl.com/42d46mqஆகஸ்ட் 09, 2011

மூன்றாவது-டெஸ்ட்-போட்டி-முன்னோட்டம்

நாளை இந்திய இங்கிலாந்து அணிகளுக்கு இடையே மூன்றாவது டெஸ்ட் போட்டி பிர்மிங்காமில் துவங்குகிறது. இந்தப் போட்டியில் இங்கிலாந்து வெற்றிப்பெற்றால் டெஸ்ட் தரவரிசையில் முதல் இடத்தைப் பிடிக்கும். அதேப் போல் தோனி ,அவரது தலைமையில் முதல் டெஸ்ட் தொடர் தோல்வியை சந்திப்பார். இப்படி பல வகையிலும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இந்தப் போட்டி உள்ளது

தொடர்ந்துப் படிக்க http://tinyurl.com/3jjnoba  அதீதத்தில் உங்கள் படைப்புகள் இடம் பெற 

அதீததிற்கான படைப்புகளை (சிறுகதை/கவிதை/கட்டுரை / புத்தக அறிமுகம்/விமர்சனம் ) அனுப்பும் பொழுது கீழ்க்கண்ட விஷயங்களை கவனத்தில் கொள்ளுங்கள்.

இதுவரை வேறு எந்தத் தளத்திலும் வராத படைப்பாக இருக்கவேண்டும்.

படைப்புகளின் காப்புரிமை படைப்பாளிகளுக்கே.

அதீதம் இதழுக்கான படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி articlesatheetham@gmail.com.

அன்புடன் எல்கே

ஆகஸ்ட் 07, 2011

கிரிக்கெட் ரவுண்ட் அப்


இங்கிலாந்துக்கு எதிரான ஒருதினப் போட்டிகளுக்கான இந்திய அணி நேற்றுத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் ராகுல் திராவிட் அணிக்கு மீண்டும் அழைக்கப்பட்டுள்ளார். எதற்காக அவரை இப்பொழுது அணியினால் சேர்த்துள்ளனர் என்றுப் புரியவில்லை. ஒரு காலத்தில் டெஸ்ட் போட்டிகளுக்கு மட்டுமே ஏற்றவாறு இருந்த திராவிட் ஒருதினப் போட்டிகளுக்கு ஏற்றவாறு தன்னை மாற்றிக் கொண்டாலும், இப்பொழுது இருக்கும் பவர் ப்ளே நேரங்களுக்கு ஏற்றவாறு ஆட இயலுமா அவரால் என்றுத் தெரியவில்லை. அதேப்போல் பீல்டிங் அவரால் ரைனா கோஹ்லி போன்றோருக்கு ஈடு கொடுக்க இயலாது. மைதானத்தில் சுறுசுறுப்பாக பந்தைத் தடுப்பாரா என்றும் தெரியவில்லை. அடுத்த உலகக் கோப்பைக்கு அணியை தயார் செய்யாமல் இந்தத் தொடரை மட்டுமே மனதில் வைத்து தொலைநோக்குப் பார்வை இல்லாத அணித் தேர்வு. 


தொடர்ந்துப் படிக்க http://tinyurl.com/௩ஒக்க௨௫ந்
அன்புடன் எல்கே

ஆகஸ்ட் 01, 2011

மைக்கேல் வாகனும் தோனியின் தவறான முடிவும்

இந்தப் போட்டியில் பல சர்ச்சைகள் எழுந்துள்ளன. இரண்டாம் நாள் ஆட்டத்தில் லக்ஷ்மனுக்கு நாட் அவுட்  கொடுத்தது பல முன்னால் இங்கிலாந்து வீரர்களை எரிச்சல் அடைய செய்துள்ளது . ஹாட் ஸ்பாட் பால் பேட்டில் பட்ட மாதிரி காட்டவில்லை. ஆனால் சிறிது சப்தம் மட்டும் வந்தது. பந்து பேட்டில் பட்டதா இல்லையா என்ற சந்தேகம் தொழில்நுட்ப உதவியாலும் தீர்க்க இயலாததால் அவுட் இல்லை என்று அம்பையர்கள் முடிவு செய்தனர்.


ஆனால் இங்கிலாந்து அணியின் முன்னால் கேப்டன் மைக்கேல் வாகன் லக்ஷ்மன் பேட்டில் வாசிலைன் தடவி இருந்தார் அதனால் அது ஹாட் ஸ்பாட்டில் தெரியவில்லை என்று ட்விட்டரில் எழுதி ஒருப் புயலைக் கிளப்பி உள்ளார் .பொதுவாக இளம் இந்திய வீரர்களைத் தவிர்த்து , திராவிட்,லக்ஷ்மன்,சச்சின் போன்றோர் அமபையர் அவுட் கொடுத்தால் அது தவறாக இருந்தாலும் முகம் கோணாது களத்தில் இருந்து வெளியேறி விடுவார்கள்

தொடர்ந்துப் படிக்க http://tinyurl.com/3ns49t5

 

ஜூலை 31, 2011

தோனியால் தடுமாறிய இந்தியா ..

 இந்தியாவின் வலுவான மிடில் ஆர்டருக்கும் வலுவிழந்த டெயில் என்டர்களுக்கும் இடையில் இருக்கும் பாலம் தோனி. எனவே பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான இங்கிலாந்து ஆடுகளங்களில் அவரது ஆட்டம் மிக்க முக்கியமானது. சிறிது நேரம் களத்தில் இருந்தால் அதன்பின் ஆட்டத்தின் போக்கை மாற்றக் கூடிய திறன் படைத்தவர் தோனி. சமீபக் காலங்களில் அவரது ஆட்டம் சொல்லும்படியாக இல்லாவிடினும் அவர் களத்தில் இருந்தால் எதிரணியினருக்கு சிறிது பயம் இருந்துக் கொண்டேதான் இருக்கும். முதல் டெஸ்டில் கீப்பிங் மற்றும் பேட்டிங்கில் சொதப்பிய தோனி நேற்றும் தனது சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

மறுமுனையில் சதமடித்த திராவிட் இருக்கையில் ஆட வந்த உடனேயே அடித்து ஆடவேண்டிய அவசியம் இல்லை. அதேப்போல் அப்பொழுதுதான் புது பந்து எடுக்கப்பட்டு இருந்தது.

தொடர்ந்துப் படிக்க http://tinyurl.com/௩மொக்க்ம௬
 
அன்புடன் எல்கே

ஜூலை 30, 2011

மாற்றம் கொடுத்த ஸ்ரீஷாந்த்

சமீப பத்தாண்டுகளாய் உலகில் உள்ள பெரும்பான்மையான பிட்ச்கள் அதன் வேகத்தை இழந்து வருகின்றன. குறிப்பாய் சொல்லவேண்டுமென்றால் , மேற்கிந்திய தீவுகளில் உள்ள பிட்ச்கள் அதன் அணியைப் போன்றே தங்கள் தரத்தையும் இழந்து விட்டன. ஒரு காலத்தில் அந்த பிட்ச்களில் விளையாட வெளிநாட்டு அணியினர் பயப்படுவர். இதை எதற்கு சொல்கிறேன் என்றால், பிட்ச்கள் வேகமும் ச்விங்கும் இழந்ததால் , ரன் குவிப்பது எளிதாகிவிட்டது. இதனால் நல்ல பாதுகாப்பு ஆட்டம் ஆடக்கூடிய பேட்ஸ்மேனை காண்பது அரிதாகிவிட்டது. இந்தியாவில் திராவிட், தென்னாப்ரிக்காவில் கல்லிஸ் இதன்பிறகு அடுத்த பேட்ஸ்மேன் யார் வரப்போகிறார்கள் இவர்களைப் போல ??

தொடர்ந்துப் படிக்க http://tinyurl.com/3hl8hpa 

ஜூலை 29, 2011

எழுச்சிப் பெறுமா இந்திய அணி?

முதல் டெஸ்ட்டில் இந்தியா படுதோல்வி அடைந்துள்ள நிலையில் இரண்டாவது டெஸ்ட்டில் எப்படி விளையாடுவார்கள்.முதல் டெஸ்ட்டில் பெற்ற அடியில் இருந்து மீண்டு வருவார்களா என்ற கேள்வி இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மனதில் இப்பொழுது இருக்கும் மிக முக்கியக் கேள்வி ஆகும். 

சமீபக் கால இந்திய அணியின் ஆட்டங்களைப் பார்த்தால் , வெளிநாடுகளில் விளையாடும்பொழுது பெரும்பாலும் முதல் டெஸ்ட்டில் சொதப்புவதும் இரண்டாவது டெஸ்ட்டில் சிறப்பாக விளையாடுவதும் இந்திய அணியின் வழக்கமான ஸ்டைல் ஆகிவிட்டது. எனவே நான் இங்கிலாந்து அணியின் கோச் அல்லது கேப்டனாக இருந்தால் இன்று மிகக் கவலைக் கொள்வேன். கடந்த வருட இறுதியில் தென்னாப்ரிக்கவிற்கு எதிரான தொடரிலும் இதே போன்று முதல் டெஸ்ட்டில் மிக மோசமாக விளையாடிவிட்டு இரண்டாவது டெஸ்ட்டில் சிறப்பான ஆட்டத்தை கொடுத்தனர். அது மீண்டும் தொடரும் என்று எதிர்பார்ப்போம்.தொடர்ந்துப் படிக்க http://tinyurl.com/3rqqph9
 

ஜூலை 28, 2011

மூன்றெழுத்து (தொடர் பதிவு )

 இந்தத் தொடருக்கு என்னை அழைத்த நண்பர் சேட்டைக்காரனுக்கு என் நன்றிகள்

1) நீங்கள் விரும்பும் மூன்று விஷயங்கள்?
    பேருந்துகளில் நீண்ட பயணம்
    அதிகாலை தனிமையில் பாட்டுக் கேட்பது
    பேசிக் கொண்டே இருப்பது 
2) நீங்கள் விரும்பாத மூன்று விஷயங்கள்?  
   
சமீபத்திய தமிழ் சினிமா பாட்டுகள்
இரைச்சல்கள்       
அடுத்தவரைப் பற்றிய அவதூறுகள்

3) பயப்படும் மூன்று விஷயங்கள்?
  அதிக உயரம்
  சில சமயங்களில் எதிர்காலம்
என் பதிவை படிச்சிட்டு யாரவது எதிர் பதிவு எழுதுவாங்கலோன்னு
4) உங்களுக்குப் புரியாத மூன்று விஷயங்கள்?
 
இலக்கியம் என்று சிலர் எழுதுவது 
எவ்வளவு முயற்சி செஞ்சும் புரியாமல் போனது காலேஜில் பிசிக்ஸ்
சில சமயங்களில் சில நபர்களின் பேச்சு
5) உங்கள் மேஜையில் உள்ள மூன்று பொருட்கள்?
*  லேண்ட்லைன் போன்
*   ஸ்பீக்கர்
*  முத்தொள்ளாயிரம்
6) உங்களைச் சிரிக்க வைக்கும் மூன்று விஷயங்கள் அல்லது மனிதர்கள்?
* எனது குழந்தையின் சேட்டைகள்.
* சிலரது கூகிள் பஸ்கள்
* இணையத்தில் நடைபெறும் சில விவாதங்கள் .
7) தாங்கள் தற்போது செய்து கொண்டு இருக்கும் மூன்று காரியங்கள்?
* ஜெயமோகனின் "பத்ம வியூகம்" படித்துக் கொண்டிருக்கிறேன் .
* ரிவர்ஸ் லாஜிஸ்டிக்ஸ் படிப்பது . 
* அதீததிற்காக அடுத்த மேட்ச் பற்றிய ப்ரிவியு .
8) வாழ் நாள் முடிவதற்குள் செய்ய நினைக்கும் மூன்று காரியங்கள்?
* சொந்தமாக ஒரு வீடு.
* ஒரு அறக்கட்டளை அமைப்பது .
* ஒரு புத்தகம் எழுதுவது .
9) உங்களால் செய்து முடிக்கக் கூடிய மூன்று விஷயங்கள்?
    எல்லாமே செஞ்சு முடிக்க முடியும் (நம்பிக்கைதானே வாழ்க்கை )
10) கேட்க விரும்பாத மூன்று விஷயங்கள்?

அடுத்தவர்களை பற்றி புறம் பேசுவது
பொய்கள்
இந்த வருஷம் அப்ரைசல் இல்லை என்று என் மேனேஜர் சொல்லுவது

11) கற்றுக் கொள்ள விரும்பும் மூன்று விஷயங்கள்?
  மிருதங்கம்
  பிரெஞ்சு
  வெப் டிசைனிங்
12) பிடித்த மூன்று உணவு வகைகள் ?
    சைவ உணவு அனைத்துமே பிடிக்கும்
  

13) அடிக்கடி முணுமுணுக்கும் மூன்று பாடல்கள்?

* குறை ஒன்றுமில்லை மறைமூர்த்திக் கண்ணா ...
* உனக்கென்ன மேலே நின்றாய் ஓ நந்தலாலா...
* நாதவிநோதங்களும் (சலங்கை ஒலி)
 
14) பிடித்த மூன்று படங்கள்?
   பொதுவா அப்படி சொல்றது கஷ்டம். எல்லா ரஜினி படமும்


15) இது இல்லாம வாழ முடியாதுனு சொல்லும்படியான மூணு விஷயம்?
   அப்படி எதுவும் இல்லை. எதுவுமே நிரந்தரம் இல்லை. சோ எது இல்லாமையும் வாழ முடியும்
16) இதை எழுத அழைக்கப்போகும் மூன்று நபர்? 

அன்புடன் எல்கே

ஜூலை 26, 2011

முதல் டெஸ்ட் தோல்வி அடுத்து என்ன....??

ஓரளவு எதிர்பார்த்தவாறே முதல் டெஸ்ட்டில் இந்தியா படுதோல்வியை சந்தித்துவிட்டது. நேற்றைய ஆட்டத்தைப் பற்றி சொல்லப் பெரிதாக எதுவும் இல்லை. லக்ஷ்மனும் ரைனாவும் தோல்வியைத் தவிர்க்கப் போராடினார்கள். மற்ற யாரும் குறிப்பிட்டு சொல்லும் அளவிற்கு ஆடவில்லை. இந்திய அணியின் தோல்விக்குக் காரணங்களைப் பார்ப்போம்

முதல் கோணல்

டாஸ் ஜெயித்து பந்துவீச்சுக்கு சாதகமான சூழ்நிலையில் முதல் இரண்டுமணி நேரம் ஜகீர்கானைத் தவிர்த்து மற்ற இரண்டு பேரும் சரியாக பந்துவீசாதது மிகப் பெரிய பின்னடைவு. உணவு இடைவேளைக்கு முன்பு இரண்டு அல்லது மூன்று விக்கெட்கள் வீழ்ந்திருந்தால் இங்கிலாந்திற்கு அது ஒரு பின்னடைவாக இருந்திருக்கும்.  ஜகீர் காயம் அடைந்தது அடுத்தப் பிரச்சனையாக அமைந்தது.

தொடர்ந்துப் படிக்க http://tinyurl.com/3hzkcpq


 

ஜூலை 25, 2011

தோல்வியைத் தவிர்க்குமா இந்தியா ??

இந்தியா இன்று முழுவதும் போராடினால் மட்டுமே போட்டியை டிரா செய்ய முடியும். இன்னும் ஒன்பது விக்கெட்களே கைவசம் உள்ள நிலையில் , அதிலும் கம்பீர் இடது கை முட்டியில் அடிபட்டு எப்பொழுது களம் இறங்குவார் என்றுத் தெரியாத நிலையில் , சச்சின் அவரது வழக்கமான இடத்தில் விளையாட முடியாத நேரத்தில் இந்தியா இந்த போட்டியை டிரா செய்யுமா ? இந்திய வீரர்கள் கிட்டதட்ட நூறு ஓவர்கள் சமாளிக்க வேண்டும் . ஆனால் இப்பொழுது இருக்கும் இந்திய அணி நெருக்கடி வரும்பொழுதெல்லாம் சமாளித்து ஆடி இருக்கிறது.

தொடர்ந்துப் படிக்க
http://tinyurl.com/4xlyvck 

ஜூலை 24, 2011

இந்தியப் பெருஞ்சுவர்

 பதினைந்து வருடங்களுக்கு முன்பு லார்ட்ஸில் தனது முதல் டெஸ்ட் போட்டியில் தனது சதத்தை ஐந்து ரன்களில் தவறவிட்ட அவர் , நேற்று லார்ட்ஸ் மைதானத்தில் தனது முதல் சதத்தை பூர்த்தி செய்தார். சமீப காலமாக ,குறிப்பாக உலகக்கோப்பை ஜெயித்ததில் இருந்து , டெஸ்ட் அணியில் இருந்து லக்ஷ்மண், திராவிட் ஆகியோர் ஓய்வுப் பெறவேண்டும் என்றக் குரல் மீடியாக்களிலும் ,ரசிகர்களிடமும் அதிகரிக்கத் துவங்கியுள்ளது. அவர்கள் சொல்லும் காரணம் திராவிட்  அடித்து ஆடுவதில்லை. மிக மெதுவாக ஆடுகிறார். அவரால் இந்தியா ஆட்டத்தை வெல்ல முடியாமல் போகிறது . வயதாகிவிட்டது எனவே இளைஞர்களுக்கு வழி விடவேண்டும் போன்றக் குரல்கள் மிக அதிகமாகிவிட்டது. அதுவும் முதல் இன்னிங்க்சில் அவர் ஒரு கேட்சைத் தவறவிட்டவுடன் இன்னும் அதிகமாகிவிட்டது.

தொடர்ந்துப் படிக்க.....

அன்புடன் எல்கே

ஜூலை 22, 2011

அதீதத்தில் நான்பதிவெழுதுவதில் இருந்து கொஞ்ச நாள் விடுமுறை சொல்லி இருந்தேன். அதே சமயத்தில் அதீதம் இதழில் இருந்து "இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் போட்டிகளில் " ஒவ்வொரு நாள் ஆட்டத்தை பற்றியும் எழுதித் தரமுடியுமா என்றுக் கேட்டார்கள்.

இணைய இதழில் எனக்கு பிடித்த கிரிக்கெட் பற்றி எழுதக் கேட்டதால் மறுக்கத் தோணவில்லை. எனவே இன்றிலிருந்து இந்தத் தொடர் முடியும் வரை ஒவ்வொரு நாள் ஆட்டத்தைப் பற்றியும் அடுத்த நாள் காலை என்னுடைய கருத்துகள் அங்கு வரும். நேற்றைய ஆட்டத்தைப் பற்றிப் படிக்க கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்

 http://tinyurl.com/3bnt8vgஜூலை 10, 2011

வியாபாரம் 13


மிக நிதானமாக யோசித்து யோசித்து நடப்பவன் போல வந்துக் கொண்டிருந்தான். பாலத்தின் அடியில் இரவு தந்த இருளின் மறைவில் சில போலீசார்  தயாராக இருந்தனர்.

அதே நேரத்தில் அவனை இறக்கி விட்டு பறந்த காரை , கலெக்டர் ஆபிஸ் ரவுண்டானாவில் போலீசார் மடக்கி இருந்தனர். அங்கும் இருட்டுதான் அவர்களுக்கு உதவி செய்தது.

பாலத்தை நெருங்கும் வரை வேகமாய் நடந்தவன், அதனருகே வந்தவுடன் தன் நடையில் வேகத்தைக் கூட்டினான். வாகனங்களை தடுக்கும் வகையில் போடப்பட்டிருந்த தடுப்புகளின் வழியே நுழைந்து வெளியேற முயன்றவனை
அவனை சுற்றி சூழ்ந்த போலீசார் கைது செய்தனர்.


அரை மணி நேரம் கழித்து, கமிஷனர் அறையில் , சேலம் மாநகர கமிஷனர் முன்பு சேகர், ஜெய்யுடன் அமர்ந்திருந்தார்.

"ஆறு மாசம் முன்னாடி ரமேஷ் செட்டியார்கிட்ட  கடன் கேட்டு இருக்கான் .இன்னும் ஒரு கார் வாங்கி  ட்ராவல்ஸ்ல விட்டா கொஞ்சம் காசு பார்க்கலாம்னு  ஆசை . யார்யாருக்கோ கொடுத்து உதவி பண்ணி இருந்த செட்டியார் , என்ன நினைச்சாரோ தெரியலை, கொஞ்ச நாள் கழிச்சு பார்க்கலாம்னு சொல்லித் தட்டிக் கழிச்சிட்டே இருந்திருக்கார்.

அந்த நேரத்தில்தான் இந்த ரெண்டு பேரும் ரமேஷுக்கு பழக்கமாகி இருக்காங்க. அவங்கதான் கடத்தற ஐடியாவை அவனுக்குக் கொடுத்து இருக்காங்க. எல்லாம் சரியாதான் பண்ணாங்க. ஆனால் செல்போன்தான் இவங்க சிக்கினதுக்கு முக்கியக் காரணம்.

இதுல ஜெய் பிடிச்ச ரமேஷோட ப்ரெண்டும் முக்கியக் காரணம். அவன் மாட்டியதில்தான் அவங்க கார் பத்தி விஷயம் தெரிஞ்சு அதுக்கேத்த மாதிரி ப்ளான் பண்ண முடிஞ்சது.


"வெல் . குட் வொர்க்  சேகர் "  என்ற கமிஷனரின் பாராட்டுக்கு புன்னகையுடன் தலையசைத்து எழுந்து சல்யுட் அடித்து விட்டு வெளியேறினான் சேகர்.

அடுத்த நாள் காலை பேப்பர்களில் " கடத்தல்காரர்கள்  கைது " என்றத் தலைப்பு செய்தியுடன் சேகரின் போட்டோவும் வெளியாகி இருந்தது.

- வியாபாரம் முடிந்தது 

பி . கு. அதிகம் இடைவெளி விட்டு எழுதியதால் கொஞ்சம் சுவாரசியம் குறைந்துவிட்டதோ என்று எண்ணுகிறேன். வியாபாரம் முடிச்ச கையோட கடையைக் கொஞ்ச நாள் சாத்தலாம்னு முடிவு பண்ணிட்டேன். எனவே ஒரு தற்காலிக விடுமுறை எழுதுவதில் இருந்து மட்டுமே .(நிம்மதின்னு அ(ட)ப்பாவி தங்கமணி  பெருமூச்சு விடறது தெரியறது இங்கே )
அன்புடன் எல்கே


ஜூலை 06, 2011

வியாபாரம் 12


சிறிதுநேரம் முயற்சி செய்துபார்த்தும் அவன் எண் கிடைக்கவில்லை. என்ன செய்வது என்ற யோசித்துவிட்டு சேலம் வழியாக சுற்றி செல்வதுதான் ஒரே வழி என்று முடிவு செய்தனர். முடிவு செய்தவண்ணம் திரும்பவும் வந்தவழியே செல்ல ஆரம்பித்தனர். முதலில் எதிர்பட்ட செக்போஸ்ட்டில் எந்தவிதப் பிரச்னையும் இல்லாதக் காரணத்தால் சேலம் நகரை நோக்கி வேகமாக சென்றுக் கொண்டிருந்தனர்.

அதே நேரத்தில் அங்கே சேகர் ராஜுவிடம்

"சொல்லுங்க எத்தனை மணிக்கு உங்க கார் காணாம போச்சு ? '

"ஒரு ரெண்டு மணி இருக்கும் சார் "

"காரை எங்க நிறுத்தி இருந்தீங்க ?"

"வழக்கமா நிறுத்தற  இடத்தில்தான் சார். எங்க சந்துக்குள்ள கார் வராது. மெயின் ரோட்ல நிறுத்தி இருந்தேன் ."

"கார் லாக் பண்ணி இருந்தீங்களா ??"

"பண்ண மாதிரி நியாபகம் இருக்கு சார் "

"இதுக்கு முன்னாடி அந்த ஏரியாவில் கார் காணாம போயிருக்கா ?"

"இல்லை சார்."


"ம்ம். வண்டி நம்பர் என்ன சொன்னீங்க ? "

அவன் சொன்ன வண்டி எண்ணை நோட் செய்த சேகர் , கண்ட்ரோல் ரூமை தொடர்புக் கொண்டார் .குறிப்பிட்ட எண் காரை மடக்க சொல்லி செக்போச்ட்களுக்குத் தகவல் கொடுக்க சொன்னார்.

"ரமேஷை எத்தனை வருசமாத் தெரியும் ?"

"சின்ன வயசில் இருந்தேத் தெரியும் " என்று சொல்லிய ராஜு, ஜெயிடம் ஏற்கனவே சொன்னதைத் திரும்ப சொல்லத் துவங்கினான்.

"சோ, ரொம்ப நாள் பழக்கம்  . அவன் ஒருத்தரைக் கடத்த காரைக் கொடுத்து இருக்க . கரெக்ட் ?"

"கடத்தலா ? நான் காரைக் கொடுத்தானா ?"

"ரொம்ப நடிக்காத . ஒழுங்கா உண்மையை ஒத்துக்க. உன் பிரெண்ட் ரமேஷ் எல்லாத்தையும் சொல்லிட்டான் . இனி நடிச்சு பிரயோஜனம் இல்லை . ஒழுங்கா உண்மையை சொன்னா உனக்கு அதிகம் பிரச்சனை இல்லை. கேசை வேற மாதிரி கொண்டு போய்டறேன். இல்லை இன்னமும் கார் காணாம போச்சுன்னு சொல்லிட்டு இருந்தா என்ன பண்றதுன்னு எனக்குத் தெரியும் ?"


ரமேஷ் எல்லாவற்றையும் சொல்லிவிட்டான் என்றுத் தெரிந்தவுடன் ,ராஜுவிற்கு இனித் தான் நடித்துப் பிரயோஜனம் இல்லை என்று விளங்கிவிட்டது.

"கார் நான்தான் கொடுத்தேன். ஆனால் அது கடத்தரதுக்குன்னு சத்தியமா எனக்குத் தெரியாது சார் ."

"குட். ஜெய்  ஒரு ஸ்டேட்மென்ட் எழுதி வாங்கிடுங்க . அந்த ரமேஷோட மொபைல் எங்க."

"இதோ இங்க இருக்கு சார் ."

அந்த போனை கையில் வாங்கி சிறிது நேரம் யோசித்த சேகர் பின் ராஜுவிடம் "நீ காரைக் கொண்டு போய் கொடுத்தவங்க மொபைல் நம்பர் இருக்கா ?"

"இருக்கு சார் "

"சரி ஒரு வேலை பண்ணு . அவர்களுக்கு போன் பண்ணி எங்க இருக்காங்கன்னு கேளு . யார் கேட்க சொன்னான்னு கேட்ட , ரமேஷ்தான் கேட்க சொன்னார். அவருக்கு சின்ன விபத்துன்னு ஒரு பொய் சொல்லு ."

"ஓ ஓகே சார்."

ராஜுவிடம் அவனோட மொபைல் போனைக் கொடுத்தார் ஜெய் .

ரமேஷின் நண்பர்களின் எண்ணை அதில் தேடி எடுத்து அழைத்தான். சில ரிங் சென்றப் பிறகு

"ஹலோ "

"சார் நாந்தான் ராஜு பேசறேன்."

"என்ன விஷயம் ? அதான் கார் ரெண்டு நாளில் தரேன்னு சொன்னோம் தானே ?"

"அதில்லை சார். ரமேஷுக்கு  ஆக்சிடென்ட். ஆஸ்பத்திரில சேர்த்து இருக்காங்க ."

 "எந்த ஆஸ்பத்திரி ?"

இங்கு என்ன பதில் சொல்வது என்று ராஜுவிற்கு தெரியவில்லை .

சிறிது யோசித்துவிட்டு   "எனக்குத் தெரியலை சார். இப்பதான் அவங்க அம்மா சொல்லிட்டு போச்சு. கேட்டுட்டு போன் பண்றேன். " என்று சொல்லிவிட்டு லைனை கட் செய்தான்.

'எந்த ஆஸ்பத்திரி சார் சொல்றது ?"

"ஜெய் இந்த டைம்ல எந்த ரோட் ப்ரீயா இருக்கும் ?"

"ஏன் சார் ?"

" இவங்களை அங்க வர சொல்லிடலாம். ட்ராபிக் இல்லாத ஏரியாவா இருந்தா வசதியா இருக்கும் ."

"சென்ட்ரல் இறக்கம் பிரீயாதான் இருக்கும் "

"அப்ப கவர்ன்மென்ட் ஆஸ்பத்திரிக்கு வரவெச்சிடலாம்."

"ராஜு, முதல்ல அவங்க எங்க இருக்காங்கனு கேளு. அப்புறம் கவர்ன்மென்ட் ஆஸ்பத்திரிக்கு உடனடியா வர சொல்லு

மறுபடியும் அவர்களை அழைத்த ராஜு "சார் எங்க இருக்கீங்க இப்ப ?"

"இப்ப அம்மாபேட்டை வழியா வந்துகிட்டு இருக்கோம் ."

"சரி அப்ப நேர கவர்ன்மென்ட் ஆஸ்பத்திரிக்கு வந்திருங்க சார். கொஞ்சம் சீரியஸ்னு சொல்றாங்க "

"ம்ம். சரி ஒரு அரைமணி நேரத்துல அங்க இருப்பேன் ."

அழைப்பைத் துண்டித்தவன், காரை ஓட்டிக் கொண்டிருப்பவனைப் பார்த்து "என்ன பண்ணலாம் ? ரமேஷ் இப்ப ஹாஸ்பிட்டல்ல இருக்கான் . அவனைப் போய் பார்ப்போமா இல்லை ...?

"ரெண்டு பேரும் போறது ரிஸ்க். நான் கொஞ்சம் தூரம் முன்னாடி வண்டியை நிறுத்திடறேன். நீ மட்டும் தனியா போய் பார்த்துவிட்டு வா. இவரை வண்டில வெச்சிகிட்டு அங்க போறது ரொம்ப ரிஸ்க். நீ இறங்கினவுடனே நான் வண்டியை மூவ் பண்ணிடுவேன். உள்ள போயிட்டு வந்தவுடனே போன் பண்ணு ,வந்து பிக் பண்ணிக்கறேன். "

"ம்ம் அதுவும் சரிதான் ...."

அவர்கள் காரை அங்கிருந்து கிளப்பினர்.

அதே சமயத்தில் , சேகர் அங்கு அவர்களை மடக்க தேவையானவற்றை செய்துக் கொண்டிருந்தார்.  அவர்கள் ஆஸ்பத்திரியை அடைய இரண்டு வழிகளே இருந்ததால் ,அந்த வழிகளில் போலிசை மப்டியில் நிறுத்தினார். ஆஸ்பத்திரிக்கு முன்பு இருந்த பாலத்தின் அடியில் இருந்த இருட்டு அவர்களுக்கு சாதகமாக இருந்தது . அங்கு இரண்டு பக்கமும் தடுப்புகளை அமைத்து தற்காலிக செக் போஸ்ட் ஒன்றை ரெடி செய்தார்.  

நேரம் கடந்து கொண்டிருக்க , சரியாக இருபது நிமிடம் கழித்து , டவுன் ரயில்வே ஸ்டேஷன் ரோட்டில் இருந்து வேகமாக வந்தக் கார் ஒன்று திடீரென கோகுல்நாதா பள்ளி எதிரே இருண்டிருந்த ரயில்வே ட்ரேக் அருகே நின்றது. அதிலிருந்து ஒரு மனிதன் இறங்கியவுடன் , மீண்டும் வேகமாகக் கிளம்பியக் கார் , நேராக வராமல், கலெக்டர் அலுவலகம் நோக்கி சென்றது. இதை எதிர்பாராததால் சிறிது திகைத்த சேகர் , ராஜுவை நோக்க, அவன் அது தன் கார்தான் என்று உறுதி சொன்னான். 

 தன் வாக்கி டாக்கி மூலம் அந்தக் காரின் விவரங்களை கலெக்டர் அலுவலகம் அருகே இருந்த காவலர்களுக்கு சொல்லி அந்தக் காரை நிறுத்த சொன்ன சேகர், நடந்து வரும் அந்த மனிதனைப் பிடிக்க தயாரானார். 

மிக நிதானமாக நடந்து வந்துக் கொண்டிருந்தவன், சுற்றிலும் பலமுறைப் பார்த்துக் கொண்டே வந்தான். பாலத்தின் அருகே வந்தவன் , சிறிது தயங்கி பின் தொடர்ந்து நடக்க ஆரம்பித்தான். 

பி.கு . அலுவலக ஆணியின் காரணமாக தொடர்ந்து எழுத முடியலை. அடுத்த பகுதியில் முடிச்சிடறேன். 

-தொடரும்

அன்புடன் எல்கே

ஜூன் 27, 2011

பதிவுலகை விழுங்கும் கூகிள் பஸ்

வர வர நெறைய சீனியர் பதிவர்கள் பதிவு எழுதறதை குறைத்து விட்டார்கள் அல்லது எழுதுவதையே நிறுத்தி விட்டார்கள். ஆனால் காணாமல் போகவில்லை. இணையத்தில்தான் இருக்காங்க . இன்னும் எழுதறாங்க ஆனால் பதிவில் அல்ல ? அப்புறம் எங்க ? கூகிள் பஸ்ஸில். 

அதென்னயா கூகிள் பஸ் ? இன்னொரு சோசியல் நெட்வொர்கிங் தளம் என்று சொல்லலாம். இது எல்லோரயும் இழுத்த முக்கியக் காரணம், இதுக்காக தனி விண்டோ ஓபன் பண்ண வேண்டாம் . ஜிமெயிலில் இருந்து கொண்டே பஸ்ஸில் சுத்தலாம். பதிவு ரொம்பப் பெருசா இல்லை சின்னதா என்று எந்தக் கவலையும் வேண்டாம். ஒரே வரில கூட ஏதாவது சொல்லிவிட்டு நிறுத்திக்கலாம் . அதுக்கு உங்கள் நண்பர்கள் பின்னூட்டம் இடலாம். இப்ப பல பிரச்சனைகளில் சூடான விவாதக் களம் கூகிள் பஸ்தான். 

ஒரு சிலர் கூட மட்டும் ஏதாவது விவாதிக்கனுமா ? அதுக்கும் வழி இருக்கு. ப்ரைவேட் பஸ் விட்டுடலாம். அப்புறம் கமென்ட் வேண்டாமா ? அந்த விவாதத்துக்கு  மட்டும் பின்னூட்டத்தை க்ளோஸ் பண்ணி வெச்சிடலாம். யார் யார் உங்களை பாலோ பண்ணலாம் என்பது வரை உங்கள் கண்ட்ரோலில் இருக்கும் . அதனால இப்ப பாதி பதிவர்கள் அங்கதான் இருக்கோம் ,அடியேன் உட்பட. 

ஆனால், அதுவும் ஒரு நேரம் விழுங்கி என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை. அங்கப் போனப்புறம் பதிவெழுதறது குறைஞ்சு போச்சு . அதே சமயத்தில் பலரின் புதிய நட்புகள் கிடைத்திருக்கிறது. ஆனால் முகநூல்/ஆர்குட்டை  விட இதில் ஆபத்து குறைவு . சில சமயங்களில் பஸ் ஓடும் ரூட்கள் ஆபத்தா இருந்தாலும், பல நாட்கள் ரூட் எல்லாம் ஜாலியாதான் இருக்கும் .

 இதில் இன்னொரு முக்கிய விஷயம் , பதிவுக்கு பின்னூட்டம் வரும் வேகத்தை விட இங்கு வரும் வேகம் அதிகம். உலகக் கோப்பையின் போது ,நேரடி வர்ணனை ஓடிக் கொண்டிருந்தது பஸ்ஸில். 

ஆனாலும் இதெல்லாம் ஒரு சங்கிலிப்  போன்றதோ என எண்ணுகிறேன். முதலில் ஆர்குட் அப்புறம் முக நூல் வந்தது அப்புறம் ட்விட்டர் இப்ப பஸ் அடுத்து ?? கொஞ்ச நாளில் இதில் மக்களின் ஆர்வம் குறையலாம்.பார்ப்போம் என்ன நடக்குதுன்னு.

பி.கு வியாபாரம் இன்னும் ஒரே ஒரு பதிவில் முடிந்துவிடும். அதுக்கப்புறம் ஒரு விடுமுறை எழுதுவதற்கு .....
அன்புடன் எல்கே

ஜூன் 26, 2011

திவ்யாவின் கதை

திவ்யாவை பற்றி எழுதி ரொம்ப நாள் ஆச்சு. கீழ திவ்யா சொன்ன கதையை அப்லோட் செய்த லிங்க் கொடுத்து இருக்கேன். மொபைலில் ரெகார்ட் செய்ததால் உங்கள் ஸ்பீக்கர் சவுண்ட் அதிகம் வைத்துக் கேட்கவும் . கதை அவுட்லைன் மட்டும்தான் எனக்கு புரிஞ்சது. இவ அவளோட பிரெண்ட் வீட்டுக்கு போயிட்டு வராலாம். அவ்ளோதான். உங்களுக்கு புரிஞ்சதை மத்தத சொல்லுங்க 


கேட்டுட்டு சொல்லுங்க 

அன்புடன் எல்கே

ஜூன் 22, 2011

ஏர்டெல்லும் நானும்

கால் சென்டரில் வேலை செய்யும் நான் , இன்னொரு கால் சென்டரைக் குறை சொல்லி ஒரு பதிவு எழுதுவேன்னு இதுவரைக்கும் நினைத்துக் கூடப் பார்த்தது இல்லை. ஒரு சில கால் சென்டரில் பீட்பேக் கேட்பாங்க அப்பக் கூட நல்லபடியாதான் சொல்லுவேன். கஸ்டமர் கேரில் கஷ்டமர்களால் ஏற்ப்படும் பிரச்சனை நல்லா தெரியும் அதே போல் இந்த பீட்பேக் மூலம் அங்க வேலை செய்யறவன் வேலை பாதிக்கப்படக்கூடாது அப்படின்னு எப்பவும் பாசிடிவ் பீட்பெக்க்தான் தருவேன். ஆனால் நேற்று நெகடிவ் பீட்பேக் கொடுக்க வேண்டிய  நிலை ஏற்பட்டது, .

வீட்டில் ஏர்டெல் கனெக்க்ஷன் வைத்துள்ளேன். வீட்டில் இணையம் வேண்டாம் என்று முடிவெடுத்து கேன்சல் செய்வதற்கு பத்து நாட்களுக்கு முன்னால் அவர்களோட டோல் ப்ரீ எண்ணுக்கு கால் செய்தேன். அன்னிக்கே எரிச்சல் உண்டு பண்ணாங்க.

எனக்கு கனெக்க்ஷன் வேண்டாம் என்றுதானே கூப்பிடறேன். அந்த கோரிக்கையை எடுத்துக்கிட்டு என்ன செய்யணுமோ அதைப் பண்ணனும். அதைவிட்டுட்டு இந்த லைனை வேற யாருக்காவது மாத்தித் தரட்டுமா என்று கேட்டால் கோபம் வருமா வராதா ? இது என்ன பரிசுப் பொருளா பிரெண்டுக்கோ இல்லை அக்கா தம்பிக்கோ கொடுக்கறதுக்கு ? அவங்களுக்கு வேண்டுமென்றால் அவங்களே அப்ளை பண்ணி வாங்கிக்கப் போறாங்க . ஒருவழியா இதெல்லாம் வேண்டாம் , மொத்தமா ரத்து பண்ணுங்கன்னு சொன்னப்புறம், என்னோட பேரு, முகவரி, பிறந்த தேதி, ஈ மெயில் எல்லாம் வாங்கிட்டு ஒரு புகார் எண்ணை கொடுத்தாங்க. ஒருவாரத்தில் லைன் கட் ஆகிடும் என்று சொன்னார்கள்.

ஒரு வாரம் இல்லை பத்து நாள் ஆச்சி கட் ஆகலை. இது வேலைக்கு ஆகாதுன்னு ,நேற்று மாலை ஒரு ஏழரை மணிக்கு கஸ்டமர் கேருக்கு கால் பண்ணேன். மறுபடியும் முதல்ல இருந்து எல்லா விவரத்தையும் சொன்னேன் . ஒரு நிமிஷம் லைன்ல இருங்க ,செக் பண்ணிட்டு வரேன்னு போனவன்தான் வரவே இல்லை லைன் கட் பண்ணிட்டான். சரின்னு மறுபடியும் பேசினேன். அப்பவும் கோபப் படலை . அவனும் ஹோல்டில் போட்டு லைனை கட் பண்ணான்.

அப்பதான் கொஞ்சம் டென்ஷன் ஆக ஆரம்பித்தேன். மூணாவது முறை போன் பண்ணப்ப பாவம் அந்தப் பையன் அவன் பண்ணாத தப்புக்கு என்கிட்ட நல்லா வாங்கிக் கட்டினான். ஒரு வழியா அவனோட மேனஜர்கிட்ட பேசினேன். அங்கதான் திருப்பமே ...நான் போன் பண்ணி லைன கட் பண்ண சொன்னப்ப அவங்க அதுக்கு உண்டான கோரிக்கையை எடுதுக்கலையாம். அதுக்கு நான் தவறான விவரங்களை தந்ததுக் காரணமாம் .  என் பிறந்த தேதி, முகவரி தப்பா சொன்னேனான். என்னக் கொடுமை இது ??

அப்புறம் ஒரு வழியா , மறுபடியும் அந்தக் கோரிக்கையை எடுத்துகிட்டு இருக்காங்க . இந்தப் பதிவை டைப் செய்யறப்ப அவங்கக்கிட்ட இருந்து போனும் வந்தது . பார்ப்போம் என்ன பண்றாங்கன்னு .ஜூன் 19, 2011

தந்தையர் தின வாழ்த்துக்கள்நான் விழிக்கும் முன்
நீ
சென்றிருப்பாய் வேலைக்கு.

நீ திரும்பும் முன்
நான் உறக்கத்தில் ...

விடுமுறை நாள் அன்றே
நமது விளையாட்டு ...

நீ கல்லாதது எனைப்
பயில வைத்தாய் ..
இவ்வுலகை எனக்குப்
புரிய வைத்தாய். ..

சிறு வயதில் ஆசானாய்
வாலிப வயதில்
 தோழனாய்...

அந்நேரத்தில் புரியவில்லை
உனது வார்த்தைகள்- இன்றோ
எனது  தாரக மந்திரம்..

அனைத்து தந்தைகளுக்கும் தந்தையர் தின வாழ்த்துக்கள்

அன்புடன் எல்கே

ஜூன் 14, 2011

வியாபாரம் 11


பழைய வியாபாரங்களைக் காண


இந்த வழியை அவர்கள் தேர்ந்தெடுக்கக் காரணமே அந்த வழியில் எங்கும் சோதனைச் சாவடி இருக்காது என்பதுதான். ஆனால் அவர்கள் எண்ணத்திற்கு மாறாக, அவர்கள் அப்பாதையில் திரும்பிய உடனேயே அங்கிருந்து சிறிது தூரத்தில் ஒரு சோதனை சாவடி இருப்பது தெரிந்தது.  அதைக் கண்டவுடன் , வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தவன்  காரின் வேகத்தைக் குறைத்து
என்ன செய்யலாம் என்று , பின்னால் இருந்தவனிடம் கேட்டான்.

ஒரு நிமிட யோசனைக்குப் பிறகு  "இது நம்ம அப்பா. உடல் நிலை சரி இல்லை. அதான் தூங்கரார்னு சொல்லிடலாம். உன்கிட்ட லைசென்ஸ் இருக்கா ?"

"ம். இருக்கு. என்னிக்காவது உபயோகம் ஆகும்னு தெரியும் . "

"சரி நார்மல் ஸ்பீட்ல போ . ரொம்ப ஸ்லோ பண்ணாத அதேமாதிரி ரொம்ப பாஸ்ட்டாவும் போகாத ."

"சரி அதை நான் பார்த்துக்கறேன். உளராம பேசு அங்க ."

"லைட் போட்டு பார்த்தா என்ன பண்றது ?"

"பேசிக்கலாம். அவ்ளோ டீப்பா போகமாட்டாங்கன்னு நினைக்கிறேன் . பார்த்துப்போம் ."

அதன்பின் படப்படக்கும் இதயத்துடன் காரை செலுத்தினான் அவன். சோதனைச் சாவடியை நெருங்கவும் அங்கிருந்த போலீசார் , கைகாட்டி வண்டியை நிறுத்தவும் சரியாக இருந்தது .

 *********************************************************************************************************
கீழே விழுந்த ரமேஷ் சுதாரித்து எழுவதற்கும், சேகர் அங்கே வரவும் சரியாக இருந்தது. எழுந்தவேகத்தில் அங்கிருந்து ஓட முயன்ற ரமேஷை சேகர் பிடித்துவிட்டார். அவரிடம் இருந்து தப்பி செல்ல முயன்று திமிறினான். ஆனால் அதற்குள் ரமேஷ் கீழே விழுந்ததைக் கண்ட ஜெயாவும் அங்கே வந்துவிட அவனால் தப்ப இயலவில்லை.

அங்கிருந்து ரமேஷை பைக்கில் கமிஷனர் அலுவலகம் அழைத்து செல்வது என்பது அவன் தப்பிக்க வழி வகுக்கும் என்றெண்ணிய சேகர் , ஜெயாவை கண்ட்ரோல் ரூமுக்கு தகவல் கொடுத்து ஜீப்பை வரவழிக்க சொல்லிவிட்டு, ரமேஷை அருகில் இருந்த போலிஸ் அவுட் போஸ்ட்டிற்கு அழைத்து சென்றான்.
 

ரமேஷை சேகர் இழுத்து செல்வதைப் பார்த்த விஜி தான் கடைக்கு வெளியே நிற்பதையும் மறந்து அழ ஆரம்பித்தாள். சேகரைத் தொடர்ந்து போக ஆரம்பித்த விஜியை ஜெயா தடுத்து நிறுத்தினாள்.

"எதுக்கு அவங்க பின்னாடி போற ?"

"இல்லை ..."

"தேவை இல்லாமல் இந்த கேஸ்ல நீ மாட்டிக்காத. இப்ப வரைக்கும் இந்த கேஸ்ல உன் பங்கு எதுவும் இல்லை. நீயா உள்ளார தலையை விட்டு வம்புல மாட்டிக்காத. உன் நல்லதுக்குத்தான் சொல்றேன். முதல்ல போய் லீவ் சொல்லிட்டு வீட்டுக்கு கிளம்பிப் போ . தேவைப்பட்ட நாங்க உன்னை கூப்பிடறோம்."

"சரி..."

 *********************************************************************************************************
தன் காரில் யாரோ ஒருப் பெரியவரை இருவர் அழைத்து செல்வதைப் பார்த்த ராஜூ, ரமேஷுக்கு போன் செய்தும் அவன் எண் கிடைக்காததால் என்ன செய்வது என்று யோசித்தான். பின் காவல் நிலையத்தில் சென்று கார் தொலைந்துவிட்டது என்று புகார் தரலாம் என்றெண்ணி காவல் நிலையம் சென்று புகார் கொடுத்துவிட்டு வீட்டுக்குத் திரும்பினான்.


அவன் வீட்டின் வாசலிலேயே ஒருவர் பைக்கில் காத்திருந்தார் .

"யார் வேணும் சார் உங்களுக்கு ?"

"நீங்கதானே ராஜு ?"

"ஆமாம். நீங்க?"

"நான் ஜெய். ஒரு கேஸ் விசயமா உங்களைப் பார்க்க வந்தேன்."

இதைக் கேட்டவுடன் ராஜுவின் மனதில் பயம் தோன்ற ஆரம்பித்துவிட்டது. அப்போதைக்கு அதை வெளிக்காட்டாமல்

"நான் பாட்டுக்கு என் வேலை உண்டு நான் உண்டுன்னு இருக்கேன். என்கிட்டே போய் கேஸ் அது இதுன்னு சொல்றீங்க ."

"அதை நாங்க முடிவு பண்றோம் ராஜு. ரமேஷ் உங்க பிரெண்ட்தான ?"

"ஆமாம் சார்."

"நல்ல க்ளோஸ் பிரெண்டா ?"

"ஆமாம் சார். சின்ன வயசில் இருந்து ஒரே ஏரியாதான். அதுவுமில்லாமல் ரெண்டு பேரும் ஒட்டுக்காதான் கார் ஓட்டக் கத்துக்கிட்டோம். ரெண்டு பேரும் இதே லைன்லதான் இருக்கோம். ஏன் சார் இப்ப அவனைப் பத்திக் கேக்கறீங்க ?"

"அதை அப்புறம் சொல்றேன். உன் கார் எங்க ?"

அவர் வார்த்தைகளில் மரியாதைக் குறைந்துவிட்டதைக் கண்ட ராஜு, அவருக்கு தன் மேல் சந்தேகம் வந்துவிட்டதோ என்று எண்ணினான்.

"கொஞ்ச நேரத்துக்கு முன்னாடிதான் சார் , யாரோ அடிச்சிட்டு போய்ட்டாங்க. இப்பதான் ஸ்டேஷன்ல புகார் கொடுத்துட்டு வரேன்."

"அப்படியா ? சரி என் கூட வா. கொஞ்சம் விசாரிக்க வேண்டி இருக்கு ."

"சார் அதான் நீங்கக் கேட்டதுக்கு எல்லாம் பதில் சொல்லிட்டேன்ல. அப்புறம் எதுக்கு கூப்பிடறீங்க ?"

"இன்னும் விசாரிக்க வேண்டி இருக்கு, நீயா வரியா ..?"


அதற்கு மேல் முரண்டுப் பிடிக்காமல் அவருடன் வர ராஜு ஒத்துக்கொண்டான். அங்கிருந்துக் கிளம்பும் முன் , சேகருக்கு போன் செய்ய அலைபேசியை ஜெய் எடுத்த அதே நேரத்தில் , சேகர் அவனுக்கு கால் செய்தான்.

"ஜெய் ! எங்க இருக்கீங்க ? உடனே கமிஷனர் ஆபிஸ்க்கு வாங்க "

"கிளம்பிட்டேன் சார். இன்னொரு விஷயம் ரமேஷோட பிரெண்ட் ராஜுவை கூட்டிட்டு வரேன். எனக்கு அவன் மேல கொஞ்சம் சந்தேகமா இருக்கு .:

"ஓகே குட் . ரமேஷும் மாட்டிக்கிட்டான்."

"சீக்கிரம் கிளம்பி வாங்க."

"எஸ் சார்."


 *********************************************************************************************************

போலீசார் சைகைக்கு இணங்கி வண்டி நின்றவுடன், அங்கிருந்த போலீசாரில் ஒருவர் வேகமாக வந்தார். அவர் வருவதைப் பார்த்து கொஞ்சம் பயத்துடனேயே காரில் இருவரும் இருந்தனர்.

காரை நெருங்கி வந்தவர் "எங்க போறீங்க ?"

"ஏற்காடுதான் சார் போயிட்டு இருக்கோம் ."

"உள்ள யார் யார் இருக்காங்க ?"

"நான், எங்க அப்பா, அண்ணன் சார் ."

"இந்த வழில இன்னிக்கு போக முடியாது. பாறை விழுந்து பாதை அடைச்சிருக்கு. இப்படியே திரும்பி போய் அஸ்தம்பட்டி வழியா போங்க."

"இன்னிக்கு கிளியர் ஆகாதா சார் ?"

"கஷ்டம். வெளிச்சம் வேற இல்லை. சுத்திக்கிட்டுதான் போகணும். வேற வழியில்லை. "

"சரி சார் "

எதிர்பாராத்  திருப்பமாய் இப்படி ஒரு சிக்கல் வர வேறு வழியில்லாமல் காரைத் திருப்பினார்கள். சோதனை சாவடியில் இருந்து சிறிது தூரம் சென்றப்பின்  வண்டியை நிறுத்தி என்ன செய்யலாம் என்று யோசிக்கத் துவங்கினார்கள். சிறிது யோசனைக்குப் பிறகு ரமேஷிற்கு போன் செய்துப் பேசலாம் என்று முடிவு செய்து அவன் எண்ணை அழைத்தார்கள் .

பி கு : கொஞ்சம் தாமதமாய் அப்டேட் செய்வதற்கு மன்னிக்கவும். இந்த வாரத்தில் கதையை முடிச்சிடறேன் .- வியாபாரம் தொடரும்ஜூன் 13, 2011

ராஜகுமாரி

அன்னை சுமந்தாள்
உன்னை  வயிற்றில் -மனதால்
நான் சுமந்தேன் ..

இவ்வுலகில் நீ வந்த
பின்னும் மாதம் ஒரு
முறையே என்றாகியது
உன் தரிசனம் ...

"ப்பா" உன் முதல்
உச்சரிப்பில் எனை
மறந்தேன்...

மாலையில் உன்
விளையாட்டில் அன்றைய
வேதனை மறந்தேன்...

வீட்டின் ராஜகுமாரியாய்
வலம் வருகிறாய் -உன் சொல்லே
எனக்கு வேதம் ...


உன்னுடன் இருக்கும்
நிமிடங்களே எனக்கு
சொர்க்கம்....


பி . கு : இன்று திவ்யாவின் பிறந்தநாள் 


அன்புடன் எல்கே

ஜூன் 06, 2011

என்னில் பாதி....என்னில் பாதியாய்
வாழ்வின்
மீதியாய் கலந்தாய்

என் வெற்றியில் நீ

மகிழ்ந்தாய் - தோல்வியில்
உற்சாகமூட்டினாய்.


கண்ணசைவில் சித்திரங்கள்
படைத்தாய் -  வாழ்வை
வசந்த கால சோலையாக்கினாய்...என் சுகமே உன்
விருப்பம் என்றாக்கிக்
கொண்டாய்..

கோபங்களையும் சிரிப்பால்
புன்னைகை ஆக்கினாய்..

உன் பாதியாய் அல்ல
முழுதுமாய் நானானாய் ...

என்ன பரிசு தர நான் - எனை
முழுதும் அளித்தாலும் அது தகுமோ ??

பி .கு : இன்று எனது பாதி சௌம்யாவின் பிறந்தநாள். 


அன்புடன் எல்கே

ஜூன் 05, 2011

வியாபாரம் 10அவள் மனதை பயம் கவ்வியிருந்ததை அவள் முகம் படம் போட்டுக் காட்டியது. நெற்றியில் ஆங்காங்கே தோன்றிய வியர்வை முத்துக்கள் அதற்கு சாட்சியம் கூறியது. அந்த கடையின் வெளியே நடைப்பாதையில் கடைக்கு எதிரே இருந்த இரும்பு தடுப்புக் கம்பிகளைப் பற்றி இருந்த அவளதுக் கரங்கள் நடுங்கிக் கொண்டிருந்தது.

அவன் எப்பொழுது வருவான், வந்தால் அவனை எச்சரிப்பதா இல்லை வேண்டாமா என்று ஒரு போராட்டமும் அவள் மனதினுள் நடந்துக் கொண்டிருந்தது. சில நிமிட யோசனைக்குப் பிறகு , அவன் வரும்பொழுதே கண்ணால் சைகை செய்யலாம் என்று முடிவு செய்தாள். 

அவள் அப்படி முடிவு செய்யவும், அந்த தாழ்வாரத்தின் மறுபுறம் அவன் வரவும் சரியாக இருந்தது. ஆனால் நாம் நினைப்பது எல்லாம் நடந்துவிடுகிறதா என்ன ? நாம் நினைப்பது மட்டுமே நடந்தால் வாழ்வு நன்றாகத்தான் இருக்கும். 

ரமேஷ் நடந்து வரவும், சேகர் ஜூஸ் கடையில் இருந்து வெளியே வந்து போன் பேசிக் கொண்டே நடப்பவனைப் போல் ரமேஷை நோக்கி நடக்க ஆரம்பித்தான். 


**********************************************************************************
கிட்டத் தட்ட அதே நேரத்தில் ராஜு, ரமேஷின் நண்பர்கள் தங்கியிருந்த வீட்டை அடைந்து, ரமேஷ் கொடுத்த எண்ணுக்கு கால் செய்தான். 


"கார் ரெடி ."


"இவ்ளோ சீக்கிரமா ? ரமேஷ் எங்க ?"


"அவர் வேற ஒரு இடத்துக்கு போயிருக்கார். என்னை கொண்டுவந்து காரைக் கொடுக்க சொன்னார் ."


"சரி . எங்க இருக்கீங்க ?"


 "நீங்க இருக்கற வீட்டுக்கு எதிர்ல இருக்கறேன். "


"அப்படியே வண்டிய கொண்டுவந்து வீட்டுக்கு முன்னாடி விட்டுடுங்க. சாவியை ஜன்னல் வழியா உள்ள தூக்கி போட்டுடுங்க. "


"உங்களை உடனே இந்த இடல்தில் இருந்து கிளம்ப சொல்லி ரமேஷ் சொன்னார் ."


"எதவாது காரணம் சொன்னாரா அதுக்கு ?"
"அதெல்லாம் எதுவும் சொல்லலை. சீக்கிரம் கிளம்பசொல்லி சொன்னார். ஏற்காடுல ஏரிக்கு பக்கத்தில் உங்களை அவரோட நண்பர் மீட் பண்ணுவார்னு சொன்னார் "


"சரி ஓகே. வண்டியை கொண்டு வந்து நிறுத்திட்டு சாவியை தூக்கி உள்ள போடு "


மறுமுனையில் இருந்த குரல் சொல்லியவாறே வண்டியை நிறுத்திவிட்டு , சாவியையும் தூக்கி உள்ளே போட்டுவிட்டு அங்கிருந்து செல்லத் துவங்கினான். மனதிற்குள் நம் காரை இவர்களுக்குத் தருவதால் நமக்கு ஏதாவது பிரச்சனை வருமோ என்று எண்ணமும் ஓடிக் கொண்டிருந்தது. ரமேஷ் அவனிடம், அவனோட நண்பர்கள் ஊரில் இருந்து வந்திருப்பதாகவும், ஏற்காடு போக கார் வேண்டும் என்றும் , டிரைவர் வேண்டாம், கார் மட்டும் கொடுத்தால் போதும் என்று சொல்லியிருந்தான். அதனால் வண்டியை விட்டுவிட்டு எதிரே இருந்த டீக்கடைக்கு சென்று டீ ஆர்டர் செய்துவிட்டு அங்கிருந்த பேப்பரை புரட்டத் துவங்கினான். 


"சார்! டீ எடுத்துக்கோங்க என்ற மாஸ்டரின் குரல் கேட்டு டீ கிளாசை வாங்கிக் கொண்டு திரும்பியவனின் கண்ணில் எதிர் வீட்டில் இருந்து வெளியே வந்தவர்கள் பட்டனர். ஒரு பெரியவரை தூக்கி வந்து உள்ளே வைத்து கதவை சார்த்தி வண்டியைக் கிளப்பிக் கொண்டு சென்றனர்.


கண்டிப்பா இது எதோ பிரச்சனையான விவகாரம்தான் என்று நினைத்தவன் , தன் செல்லை எடுத்து ரமேஷை அழைத்தான். அவன் பல நிமிடங்கள் முயற்சி செய்தும் அவனது லைன் கிடைக்கவே இல்லை.


அவன் செய்வதறியாது முழித்தான். அவனை காரில் இருந்தவர்கள் சட்டைப் பண்ணியதாகவே தெரியவில்லை. அவன் தங்களைப் பார்ப்பதையே கண்டுக் கொள்ளாமல் வண்டியை வெகு வேகமாக சேலம் டவுன் ஏரியாவை நோக்கி செலுத்தினார்கள். ஏற்கனவே ரமேஷ் சொன்னவாறு அயோத்தியாப்பட்டினம் செல்லும் சாலையில் அந்த மாருதி ஆம்னி பறந்தது.


செக் போஸ்ட் அருகே வந்தவுடன் அவர்களுக்கு கொஞ்சம் நடுக்கம் இருக்கத்தான் செய்தது. ஆனால் அந்த என்றதில் அங்கு எந்த வாகனத்தையும் சோதனை செய்யாதது அவர்களுக்கு நிம்மதியாய் இருந்தது.


அந்த சோதனை சாவடியைக் கடந்து வேறு எங்கும் நிற்காமல் ஏற்காட்டு மலைப்பாதைக்கு வண்டியை விரட்டினர். அந்த மலைப்பாதையில் நுழைந்து சில மீட்டர்களிலேயே அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.


**********************************************************************************


ரமேஷ் , எதிரே நடந்து வரும் சேகரைப் பார்த்து ஒரு கணம் திகைத்தாலும் உடனே சுதாரித்துக் கொண்டு அங்கிருத்து வெளியேற வேறு வழி இருக்கிறதா என்றுப் பார்த்தான். அவனுக்கு இருந்த ஒரே வழி, அவனது வலப்புறம் இருந்த தடுப்பைத் தாண்டி குதிப்பதுதான். ஆனால் அதுவே அவன் மாட்டிக் கொள்ளவும் வசதியான வழியாக அவனுக்குப் பட்டது.


சேகர் கடந்து செல்லும் வரை வேறு ஏதாவது கடையினுள் நுழைய வேண்டியதுதான் என்று எண்ணியவாறே இடது பக்கம் இருந்த புத்தகக் கடைக்குள் நுழைய முயன்றான். ஆனால் அதே நேரம் அவன் பின் பக்கம் இருந்து வந்த ஒரு நபர் அவன் மேல் மோத, தன் நிலைத் தடுமாறிக் கீழே விழுந்தான்.

அன்புடன் எல்கே

மே 30, 2011

வியாபாரம் 9

போனையும் தன்னையும் மாற்றி மாற்றி பயந்த முகத்துடன் பார்த்துக் கொண்டிருந்த ராஜியைப் பார்த்த சேகர் "போனை எடுத்து பேசு " என்று காவல் துறைக்கே உண்டான அதிகாரத் தொனியில் சொன்னான்.
சேகரின் கட்டளையை ஏற்பதைத் தவிர வேறு வழி இல்லாததால் அழைப்பை ஏற்று போனை காதில் வைத்தவள் நடுங்கும் குரலுடன் "ஹலோ" என்றால் ,
மறுமுனையில் "உங்களுக்குப் பிடித்த பாடலை உங்கள் போனிற்கு டவுன்லோட் செய்ய ..." என்றுப் பதிவு செய்யப் பட்டக் குரலை கேட்டவுடன் அவளையும் அறியாமல் நிம்மதிப் பெருமூச்சு வந்தது.
"ஏர்டெல் கால் சார் " என்று ஒருவித சலிப்புடன் சேகரிடம் சொன்னாள்.
போன் அட்டென்ட் பண்ணும் பொழுது அவளிடம் இருந்த பயத்தையும் இப்பொழுது கொஞ்சம் பயம் நீங்கிய விதத்தையும் கவனித்த சேகர் " சரி சொல்லுங்க. அந்த ரமேஷை எவ்வளவு நாளா தெரியும் உங்களுக்கு "
"ஒரு வருஷத்துக்கு மேல தெரியும் சார் "
"எப்படி பழக்கம் ?"
"முன்ன செவ்வாய் பேட்டையில் கடையில் வேலை செஞ்சுகிட்டப்ப பழக்கம் சார். "
"உங்களுக்கும் அவருக்கு என்ன உறவு?"
இதற்கு ராஜியிடம் இருந்து பதில் வராமல் போனதால்
"நீங்க எதுக்கு உங்க அப்பா பேர்ல அவருக்கு சிம் கார்ட் வாங்கி தந்தீங்க ? உங்க அப்பா பேர்ல அவருக்கு சிம் வாங்கி தர அளவுக்கு என்ன உறவு ?" கேள்வியை சிறிது மாற்றிக் கேட்டான் .
இதற்கும் பதில் வராமல் போனதால் அவன் ஜெயாவைப் பார்த்தான்.அவன் பார்வையின் பொருளைப் புரிந்து கொண்ட ஜெயா 
"இங்கப் பாருமா, இங்கயே ஒழுங்கா பதில் சொல்லிடு. நீ பண்ணி இருக்கறதை ஒரு பையன் பண்ணியிருந்தா இந்நேரம் ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு போய்தான் விசாரிச்சிருப்போம்.இப்ப நீ பேசாம இப்படியே இருந்தா ஸ்டேஷனுக்கு கூட்டிகிட்டு போய் விசாரிக்க வேண்டி இருக்கும்."
ஜெயா அவளிடம் பேசிக் கொண்டிருந்த நேரத்தில், சேகர் ராஜியின் செல்போனில் அதுவரை வந்திருந்த அழைப்புகளைப் பார்த்துக் கொண்டிருந்தார். அதில் அவர் எதிர்பார்த்த ஒரு எண் இருந்தது . பின் அந்த மொபைலில் அவன் போட்டோ ஏதாவது இருக்குமா  என்று பார்த்துக் கொண்டிருந்தவரின் கண்களில் ஒரு போட்டோ சிக்கியது. 
அதில் இருந்தது அன்றுக் காலை அவர் விசாரித்த அதே ஆள். 
"இந்த போட்டோவில் இருக்கறதுதான் ரமேஷா ?"
"ஆமாம் சார் "
"ஜெயா நீங்க கேட்டுகிட்டு இருந்த உடனே வரேன் "   என்று சொல்லிவிட்டு இரண்டு போன்களையும் எடுத்துக் கொண்டு கடையை விட்டு வெளியே வந்தான். சில நிமிடங்கள் யோசித்தவன் பின் கடைசியாக வந்த அழைப்புகளின் எண்களை பார்த்தான். ஒரே எண்ணில் இருந்து  வந்திருந்த இரண்டு மிஸ் கால்களைப் பார்த்துவிட்டு அந்த எண்ணுக்கு தனது போனில் இருந்து கால் செய்தான்.
மறுமுனையில் குரல்  கேட்டவுடன் "இது எந்த ஏரியா ? " என்று அவன் கேட்டதற்கு பதில் நக்கலாய் வந்தது .
"போலிஸ் டிபார்ட்மென்ட்ல  இருந்து கால் பண்றோம்" என்று சொன்னவுடன் மறுமுனையில் பணிவு உடனடியாய் தென்பட்டது. அவன் கேட்ட கேள்விகளுக்கு பதிலும் கிடைத்தது.
அவன் பேசிவிட்டு உள்ளே வரவும் , ஜெயா விஜியிடம் பேசி முடிக்கவும் சரியாக இருந்தது.
"என்ன ஏதாவது பேசினாளா ?"
"பேசினாள் சார். இந்தப் பொண்ணு அவனை விரும்பி  இருக்கு. அவன் கார்டு வேணும்னு சொன்னதால அவங்க அப்பா பேர்ல வாங்கித் தந்திருக்கு. மத்தபடி இந்தப் பொண்ணுக்கு வேற எந்த விஷயமும் தெரியலை சார் ."
அவள் சொல்லி முடிக்கவும் மீண்டும் விஜியின் போன் ஒளிரத் துவங்கியது.
"அனேகமா அவன்தான் பண்றான்னு நினைக்கிறேன் . போனை அட்டென்ட் பண்ணுங்க. அவனை பாக்கணும்னு சொல்லி இங்க வர சொல்லுங்க. நாங்க இங்க இருக்கறது அவனுக்குத் தெரியாதக் கூடாது.
அவர் சொன்னதற்கு பதில் சொல்லாமல் வெறும் தலையாட்டலின் மூலம் சம்மதத்தை சொன்ன விஜி , அழைப்பை உயிர்ப்பித்தாள்.
"ஏன்  காலை அட்டென்ட்  பண்ணலை  ? எதுக்கு கட் பண்ண ?"
சில கணம் என்ன சொல்வது என்று திகைத்த விஜி பின் நடுங்கும் குரலுடன் "இல்லை. கடையில கூட்டம் இருந்தது. அதான் எடுக்க முடியலை. இப்ப எங்க இருக்க ?"
"அங்கதான் இருக்கேன் ."
"இங்கயா ?" கேட்ட விஜியின் குரலில் சிறிது படப்படப்பு கூடி இருந்தது.
"ஆமாம் . வலசையூர் போற பஸ் இருக்கற இடத்தில இருக்கேன். இங்க வர முடியுமா?"
"இல்லை. இப்ப அங்க வந்தா மேனேஜர் சத்தம் போடுவார். நீ கடைகிட்ட இருக்கற ஜூஸ் கடைகிட்ட வா. நான் அங்க இருக்கேன்" 
"சரி" என்று ரமேஷ் சொல்லியவுடன் அழைப்பு கட் ஆனது.
"குட் . ஒழுங்கா பேசி இருக்க. இப்ப வெளில போய் அவனுக்காக வெய்ட் பண்ணு. "
"ஜெயா நீங்க இந்த பொண்ணு நிக்கற இதத்தை விட்டு கொஞ்ச தூரம் தள்ளி நின்னு என்ன நடக்குதுன்னு பாருங்க. நான் இங்க இருக்கேன். என்னை  அவன் பார்த்திருக்கன். அதனால நான் அங்க இருந்தா அவன் தப்பிச்சிடுவான்."
அவன் சொல்லியவாறே இருவரும் கடையில் இருந்து வெளியே சென்று காத்திருந்தனர். விஜி கண்ணில் படுமாறு ஒரு மேஜையை செலெக்ட் பண்ணி அங்கே அமர்ந்தான் சேகர். விஜி படப்படக்கும் இதயமும் , பயந்த முகமுமாய் வெளியே நின்றுக் கொண்டிருந்தாள். 
வியாபாரம் தொடரும்  

மே 29, 2011

வியாபாரம் 8


ரமேஷ் அங்கிருந்து கிளம்பியவுடன் சிறிது யோசனையில் ஆழ்ந்த சேகர், பின் தன் செல்போனில் இருந்து யாரையோ அழைத்தான் .

"ஆமாம் ஜெய் . நேரா அங்க போய் அவர்கிட்ட கேட்டுப் பாரு . இருந்தா வாங்கிக்கோ. இல்லைனாலும் பிரச்சனை இல்லை. அட்ரஸ் இருக்கும் எப்படியும் அந்த ஏரியால போய் விசாரிச்சு பாரு. எவ்வளவு நேரத்தில் அப்டேட் பண்ற ?"

"ஒரு ரெண்டு மணி நேரத்துல நானே உங்க லைனுக்கு வரேன் சார். "

"அப்படியே அந்த கிருஷ்ணன் வீடு இருக்கற அதே ரோட் எண்ட்ல ஒரு கடை இருக்கும். அந்தக் கடை ஓனர் கிட்டயும் விசாரிக்கணும். "

"ஓகே சார் . பண்ணிடறேன். "

ஜெய் ,சேகரின் நம்பிக்கைக்குரிய சப் இன்ஸ்பெக்டர். ஜெய்யிடம் பேசிவிட்டு , மீண்டும் மற்றொரு எண்ணுக்கு அழைத்தார். 

"ஜெயா! உடனே கிளம்பி பழைய பஸ் ஸ்ட்டேன்ட்ல இருக்கற கார்பரேஷன் காம்ப்ளெக்ஸ் தெரியும்தானே ? அங்க வந்திருங்க. ஒரு பொண்ணை விசாரிக்கணும்."

"ஓகே சார். "
"முக்கியமான விஷயம். யூனிபார்ம்ல வர வேண்டாம். நார்மல் ட்ரெஸ்ல வாங்க."

"ஓகே சார். அரைமணி நேரத்துல வந்துடறேன் சார்."

தானும் இப்ப கிளம்பினா சரியா இருக்கும் என்று எண்ணியவன், காரை கமிஷனர் ஆபிசுக்கு எடுத்து செல்ல சொல்லிவிட்டு அவனும் பழைய பேருந்து நிலையத்தை நோக்கி வண்டியை செலுத்தினான். 

அதே நேரம் அங்கு விஜி, ஒருவாறு தன்னை சமாளித்துக் கொண்டு முகத்தை அலம்பிவிட்டு கடையில் வியாபாரத்தை கவனித்துக் கொண்டிருந்தாள்.  ஜெயா அங்கு வந்து சேர்வதுக்கு முன்பே அங்கே வந்த சேகர் , கடைக்கு எதிர்புறம் நின்று கொண்டு கடையை ஆராய்ந்து கொண்டிருந்தான். 

அவன் அங்கு வந்து சிறிது நேரத்திலேயே அவனது அலைபேசி சிணுங்கியது. ஜெயாவின் நம்பரில் இருந்து போன் . அழைப்பை உயிர்ப்பித்து அவளை அந்தக் கடை அடையாளம் சொல்லி அங்கே வர சொன்னான் . 


"ஜெயா ! இந்தக் கடையில் வேலை செய்யற பொண்ணுதான் அந்த டிரைவருக்கு கார்ட் வாங்கி தந்திருக்கு. அந்த டிரைவர்தான் குற்றவாளியான்னு நமக்கு உறுதியாத்  தெரியாது. அதனால கடையில் வெச்சி விசாரிக்க வேண்டாம். அந்த பொண்ணுகிட்ட போய் பேசி வெளில கூட்டிகிட்டு வாங்க. நான் பக்கத்தில் இருக்கற ஜூஸ் ஷாப்ல இருக்கறேன். எப்படி பேசணும்னு தெரியும்தான?"

"அதை நான் பார்த்துக்கறேன் சார். அஞ்சு நிமிசத்தில் ஜூஸ் ஷாப்ல மீட் பண்றேன்" சொல்லிவிட்டு அந்த ம்யூசிக் ஷாப்பினுள் நுழைந்தாள் ஜெயா. 


கடைக்கு வந்த வாடிக்கையாளர் என்றே அவளை நினைத்த அவளை "வாங்க மேடம்! என்ன சிடி வேண்டும் உங்களுக்கு ?" என்று கடை மேற்பார்வையாளர் போல்  இருந்தவர் கேட்டார். 

"இல்லை . எனக்கு சி டி எதுவும் வேண்டாம். இங்க விஜின்னு ஒரு பொண்ணு வேலை செய்யுத்துள்ள , அந்த பொண்ணோட அக்கா நான். இந்தப் பக்கம் வந்தேன். அதான் பார்த்துட்டு போலாம்னு .."

"நீங்க விஜியோட அக்காவா ? இருங்க விஜிய கூப்பிடறேன்."
"விஜி விஜி இங்க வாம்மா. உன் அக்கா வந்திருக்காங்க பாரு ".


கடையின் மறு புறத்தில் ஒரு வாடிக்கையாளருக்கு எதையோ எடுத்துக் காட்டிக்கொண்டிருந்த விஜி திகைப்படைந்தாள். தனக்கு யாரும் அக்கா இல்லியே என்று யோசித்துக் கொண்டே "இதோ ஒரு நிமிஷம் , வரேன் சார்" என்று குரல் கொடுத்தாள்.

அவள் குரல் கொடுக்கவும் ஜெயா அந்த இடத்திற்கு வரவும் சரியாக இருந்தது. 

அவள் இருந்த கவுண்டரை நெருங்கிய ஜெயா மெல்லியக் குரலில் "போலிஸ் டிபார்ட்மென்ட்ல இருந்து வரேன். கொஞ்சம் என் கூட வா. உன் கிட்ட விசாரிக்க வேண்டி இருக்கு. அக்காகூட ஜூஸ் கடை வரைக்கும் போயிட்டு வரேன்னு சொல்லிட்டு வா. மறக்காம உன் செல் போனையும் எடுத்துக்கிட்டு வா ."

நடப்பவற்றை கண்டு குழப்பமடைந்த விஜி என்ன பதில் சொல்வது என்றுப் புரியாமல் பேயறைந்த முகத்துடன் தலையை மட்டும் ஆட்டி வைத்தாள்.

மீண்டும் கடையின் முன்பக்கம் வந்த ஜெயா , கடை சூபர்வைசரிடம் "சார் ! பக்கத்தில் இருக்கற ஜூஸ் கடை வரை கூட்டிகிட்டு போயிட்டு வரேன் சார். "

"ரொம்ப லேட் பண்ணிடாதீங்க. சீக்கிரம் அனுப்பிடுங்க. கஸ்டமர் வர நேரம் இது "

"இல்லை சார். ரொம்ப லேட் ஆகாது சார். ஒரு பத்து பதினைஞ்சு நிமிஷத்தில் அனுப்பிடறேன் சார். "

"சரி சரி "

விஜியை அழைத்துக் கொண்டு கடையில் இருந்து வெளியே வந்த சமயம், விஜியின் கையில் இருந்த அலைபேசியின் திரை ஒளிரத் துவங்கியது  . கடையில் இருந்ததால் சைலெண்டில் போட்டு வைத்திருந்ததால் அழைப்போசை வரவில்லை. 

பக்கத்தில் ஜெயா இருந்ததாலும், திரையில் வந்த என்னும் புதியதாய் இருந்ததாலும் அந்த அழைப்பை ஏற்கலாமா வேண்டாமா என்று ஒரு கணம்  யோசித்துப்  பின் ஜெயா தன்னை கவனிக்கிறாளா என்று ஓர கண்ணால் பார்த்தாள். ஜெயா இவளைப் பார்த்த மாதிரி தோன்றவில்லை அவளுக்கு. அவள் தன்னை கவனிக்கவில்லை என்றுத் தெரிந்தவுடன் அந்த அழைப்பைத் துண்டித்தாள். ஆனால் அலைபேசி ஒளிரத் துவங்கியதுமே விஜி என்ன செய்யப் போகிறாள் என்று யோசித்துக் கொண்டிருந்த ஜெயா இவள் அழைப்பைத் துண்டித்ததை கவனித்து விட்டாள். ஆனால் அதை கவனியாது போல் ஆவலுடன் ஜூஸ் கடையினில் நுழைந்தாள்.கடையினில் நுழைந்து சேகர் இருந்த மேஜைக்கு சென்று அங்கிருந்த நாற்ககலியில் அமரவும் மீண்டும் அலைபேசி ஒளிரத் துவங்கியது. இந்த முறை சேகரும் கவனித்துவிட்டான். என்ன செய்வது என்றுப் புரியாமல் குழப்பமும் பயமும் கலந்த முகத்துடன் போனையும் சேகரின் முகத்தையும் மாறி மாறி  பார்த்துக் கொண்டிருந்தாள்
 
-வியாபாரம் தொடரும் 


அன்புடன் எல்கே

மே 16, 2011

வியாபாரம் 7

பழைய வியாபாரங்களைப் பார்க்க

மொபைலில் தெரிந்த எண் புதிதாய் இருந்ததால் எடுப்பதா வேண்டாமா என்றக் குழப்பத்தில் ஒரு கணம் யோசித்தாலும், பின் அழைப்பை உயிர்ப்பித்தாள்.

அழைப்பு இணைக்கப்பட்டவுடனேயே மறுமுனையில்  இருந்து
"விஜி ! நான்தான் பேசறேன் !"

தனக்கு பழக்கமான குரல் என்றவுடன் , மீண்டும் ஒருமுறை அது எந்த எண் என்றுப் பார்த்தாள். எதோ ஒரு தொலைபேசி எண் என்றுத் தெரிந்தவுடன் "என்ன லேன்ட்லைனில் இருந்து பண்ற ? மொபைல் என்னாச்சு எதுக்கு ஆப் பண்ணி வெச்சிருக்க ?"

"இல்லை ஒரு சின்ன பிரச்சனை . அதான் ஆப் பண்ணி வெச்சிருக்கேன் ."

"அது உனக்கு சின்ன பிரச்சனையா ? அந்த கார்டை வெச்சு என்ன பண்ண ? என்னை தேதி வீடு வரைக்கும் போலிஸ் வந்திருச்சி . கார்டை வெச்சிருக்கியா இல்லை என்ன பண்ண ?"

"போலிஸ் வந்துச்சா ? என்ன கேட்டாங்க ?"

"நீ என்ன பண்ண அதை முதல்ல சொல்லு ."

"அதை போன்ல சொல்ல முடியாது . நேர்ல வந்து சொல்றேன். போலிஸ் என்ன கேட்டாங்க அதை சொல்லு."

"நீ தப்பு பண்ணியா ? இல்லாட்டி அதை எதுக்கு திருப்பி திருப்பி கேட்கற ? இன்னும் என் கிட்ட எதுவும் கேட்கலை. வீட்டுக்கு போயிருக்காங்க. அனேகமா இங்க வருவாங்கான்னு நினைக்கிறேன்."

"சரி போலிஸ் கேட்டா, நீதான் வாங்கினே, ஆனா தொலைஞ்சு போச்சுன்னு சொல்லி சமாளி"

"ஆமாம் . அப்படியே நான் சொன்னா சரின்னு கேட்டுகிட்டு போய்டுவாங்க  பாரு . சொல்றதை சரியா சொல்லணும் . நீ என்ன பண்ணுவியோ எனக்குத் தெரியாது. உடனே கிளம்பி இங்க வா. நேர்ல பேசியாகணும் உன்கிட்ட."

"நிலைமை புரியாம விளையாடறியே நீ."

"என் நிலைமையை பாரு. உனக்கு கார்ட் வாங்கி தந்தது மட்டும்தான் நான். ஆனால் இப்ப பிரச்சனை எனக்குதான். அதை கொஞ்சம் கூட புரிஞ்சிக்க மாட்டேங்கறியே நீ ."

இத்தனை நேரம் பொங்கி வந்துக்கொண்டிருந்த அழுகையை கட்டுபடுத்தி பேசிக்கொண்டிருந்த விஜி அதற்கு மேல் கட்டுப்படுத்த முடியாமல் அழத் துவங்கினாள்.

பெண்களின் கடைசி ஆயுதம் பிரயோகிக்கப் பட அதற்கு மேல் எந்த காரணமும் சொல்ல இயலாத ரமேஷ் , "சரி சரி அழாத. கொஞ்ச நேரத்தில வரேன். அங்க வந்துட்டு மறுபடியும் கூப்பிடறேன் " என்று சொன்னான் .

"ஏமாத்த மாட்டியே ? சீக்கிரம் வா " என்று கண்ணில் வழிந்த கண்ணீரை துடைத்த வண்ணம் கூறி அழைப்பை துண்டித்தாள் விஜி.


அழைப்பு துண்டிக்கப்பட்டவுடன் குழப்பத்தில் ஆழ்ந்தான் ரமேஷ். இப்பொழுது அவளை சென்றுப் பார்ப்பதா இல்லை இருக்கும் ஆபத்தை சமாளிப்பதா என்று யோசிக்கத் துவங்கினான். சிறிது நேர சிந்தனைக்குப் பிறகு , எப்படியும் அவளை பார்த்தாக வேண்டும் . போலிஸ் அவள் மூலம் நம்மை அணுகும் முன் இங்கிருந்து இடத்தையும் மாற்றியாக வேண்டும் . முதலில் காரை விட்டு வந்த  இடத்திற்கு சென்று அங்கிருக்கும் நிலையை ஆராய முடிவு செய்தான். பின் அடுத்து என்ன செய்வது என்ற முடிவுக்கு வருவோம் என்றெண்ணி நண்பனிடம் கடன் வாங்கி வந்திருந்த பைக்கை கிளப்பினான்.


காரை விட்ட இடத்திற்கு அருகில் வந்தவன் , அதன் எதிரே இருந்த டீக்கடையில் போலிஸ் இருப்பதை பார்த்துவிட்டு அங்கே நுழையாமல் அதன் அருகில் இருந்த ஒரு பொட்டிக்கடையில் சிகரெட் வாங்கிக் கொண்டு அதை பற்ற வைத்துக் கொண்டு டீக் கடையில் நடப்பவற்றை பார்க்க ஆரம்பித்தான்.

அங்கிருந்தவர்களை விசாரித்துக் கொண்டிருந்த சேகர் அக்கம்பக்கத்தில் இருப்பவர்களையும் நோட்டம் விடுவதை பார்த்த ரமேஷ் மெதுவாக அங்கிருந்து கிளம்ப முயற்சித்தான்.

அவன் அங்கு வந்து நின்றது முதலே அவனை பார்த்துவிட்ட சேகர் , அவன் நழுவ முயன்றவுடனேயே துரத்திப் பிடித்தார்.


"சார் விடுங்க சார். எதுக்கு சார் என்னைப் பிடிக்கறீங்க ?"

"எதுக்கு இங்கிருந்து இவ்வளவு அவசரமா போகப் பார்த்த ?"

"எனக்கும் இதுக்கும் என்ன சார் சம்பந்தம்? போற வழில தம் அடிக்க நின்னேன். முடிச்சிட்டேன் . கிளம்பறேன். இங்க என்னப் பிரச்சனைன்னு கூட எனக்குத் தெரியாது. நான் எதுக்கு பயப் படனும்"

உள்ளுக்குள் பயமிருந்தாலும், வெளியே அதைக் காட்டாமல் மிகத் தெளிவாக உரத்து பேசினான்.

"உன் பேரு என்ன ?"

"ரமேஷ் "

"வண்டி யாருது ?"

"என் பிரெண்டோட வண்டி சார்."

"வண்டி ஆர் சி இருக்கா?"

"இருக்கு சார்."

 பெட்ரோல் டேங் மேலிருந்த கவரில் இருந்து ஆர்சி யை எடுத்துக் கொடுத்தான்

அதைப் பார்த்த சேகர் ,"சரி உன் பிரெண்ட கூட்டிகிட்டு வந்து வண்டியை ஸ்டேஷன்ல இருந்து எடுத்துக்க . இப்ப நீ கிளம்பு ."

"ஏன் சார் ? இப்ப என்ன பிரச்சனை ? எதுக்கு வண்டியை தரமாட்டேங்கறீங்க ?"

"வண்டி உன் பிரெண்டோட வண்டிதான?"

"ஆமாம்"

"அப்புறம் என்ன பிரச்சனை? அவனை கூட்டிகிட்டு வா . வண்டியை எடுத்துகிட்டு போலாம். "

இனி அவரிடம் பேசி பிரயோஜனம் இல்லை என்று முடிவெடுத்த ரமேஷ் "சரி சார். அவனைக் கூட்டிகிட்டு வந்து வண்டியை எடுத்துக்கறேன்" என்று சொல்லி கிளம்ப எத்தனித்தான்.

"ரமேஷ் , ஒரு நிமிஷம் " என்று அவனை நிற்க சொன்ன சேகர் அங்கிருந்த கான்ஸ்டபிளை அழைத்தான்.

" இவரோட அட்ரஸ் அப்புறம் லைசென்சை வாங்கி வெச்சுகோங்க. அவர் பிரெண்டை கூட்டிகிட்டு வந்தப்புறம் விசாரிச்சிட்டு வண்டியை குடுங்க "

ஒரு வழியாய் அங்கிருந்து கிளம்பிய ரமேஷ் , உடனடியாய் விஜியை பார்க்க போவதா வேண்டாமா என்று யோசித்தான். தான் அங்கே செல்லும்பொழுது இந்த சேகர் அங்கு வந்தால் தான் வசமாக மாட்டிக் கொள்வோம் என்று நினைத்தான். எனவே இப்பொழுது தங்கி இருக்கும் இடத்தில் இருந்து எப்படி வெளியேறுவது என்ற வழியை முதலில் பார்ப்போம் என்று முடிவெடுத்தவனாய் தனக்கு தெரிந்த இன்னொரு நண்பனுக்கு அழைக்கத் துவங்கினான் . தன் நண்பனை அழைத்து காருக்கு ஏற்பாடு பண்ணியவன் மாலையில் வந்து காரை எடுத்துக் கொள்வதாகக் கூறினான்.

தாற்காலிகமாக அவர்கள் தங்கியிருந்த இடத்திற்கு வந்த ரமேஷின் முகத்தில் தெரிந்த சோர்வை கண்ட சங்கர்

"என்னாச்சு ரமேஷ் ? எதாவது பிரச்சனையா ?"

"பிரச்சனையா ? நீ வேற . தப்பி வரதுக்குள்ள ஒரு வழி ஆகிட்டேன் . "

"என்னாச்சு ?"

"இவர் வீட்டுக்கு போன் பண்ணிட்டு , காரை விட்ட இடத்தில் நிலை எப்படி இருக்குதுன்னு பார்க்க போனேன் . இன்ஸ்பெக்டரிடம் மாட்டிக்கிட்டேன். எதோ சொல்லி தப்பிச்சிட்டேன்."

"சந்தேகப் படலையா ?"

"கொஞ்சம் சந்தேகம் இருக்கும்னு நினைக்கிறேன் ."

"எதுக்கும் ஈவ்னிங் இங்க இருந்து நாம கிளம்பிடறது நல்லது. "

"நைட் தான கிளம்பலாம்னு இருந்தோம்  "

"ஆமாம் . ஆனால் இங்க இருக்கறது அவ்ளோ நல்லது இல்லை. எவ்ளோ சீக்கிரம் கிளம்பரமோ அவ்ளோ நல்லது."

"சரி எந்த வழில இங்க இருந்து போகப் போறோம் ?"

"நீங்க ரெண்டு பேரும் இவரை கார்ல ஏத்திகிட்டு இங்க இருந்து அம்மாப்பேட்டை  வழியா அயோத்தியாபட்டினம் கேட்டுக்கு போய்டுங்க. அங்க இருந்து வலசையூர் போற வழி தெரியும்தானே ?"

"தெரியுமே . அங்க போய் ..."

"வலசையூர்ல இருந்து ஏற்காட்டுக்கு ஒரு வழி போகுது . அந்த ரூட் பிரச்சனை இருக்காது. பொதுவா அங்க எந்த செக் போஸ்ட்டும் இல்லை. அயோத்தியாப்பட்டினம் செக் போஸ்ட்ல எனக்குத் தெரிஞ்சு பத்துமணிக்கு மேலதான் போலிஸ் இருப்பாங்க,. அதுக்கு முன்னாடி நாம அதை க்ராஸ் பண்ணிடனும். உங்க கிட்ட காரை கொடுத்தப்புறம் நான் பஸ் பிடிச்சு ஏற்காடு வந்திடுவேன். உங்களுக்கு அந்த ரூட் தெரியும்தானே ?"

"ம்ம் தெரியும் ரெண்டு முறை போயிருக்கேன் ."

"அப்ப சரி. நான் மலைக்கு வந்தப்புறம் உங்களுக்கு கால் பண்றேன். "

- வியாபாரம் தொடரும்