டிசம்பர் 02, 2010

திவ்யாவின் பக்கம் IX

மரியாதையா நான் சொல்றத கேட்கப் போறியா இல்லையா # திவ்யாவின் மிரட்டல்

இதுவரை அவளிடம் எங்களால் மாற்ற முடியாத ஒரே பழக்கம் வாயில் விரல் போடுவது. யாரவது நல்ல ஐடியா கொடுங்கள். இப்பொழுது இரண்டரை வயது ஆகிறது. இப்படியே தொடர்ந்தால் பற்கள் பாதிக்கப்படும் என்பது எனது பயம்.

தமிழ் மாதங்கள், நட்சத்திரங்கள் பெயர் சரியாக சொல்கிறாள். அதே போல், ஆங்கில எழுத்துக்கள் முழுவதும். தமிழ் ரைம்ஸ் நன்றாக  பாடுவாள். அதேபோல் பாரதியார் பாடியுள்ள பாட்டுக்களும்.


"நீ யாரோட செல்லம் ?" இது திவ்யாவின் அத்தை .
"நான் பாப்பாவோட செல்லம் " இது திவ்யா
"அப்பா/அம்மா செல்லம் இல்லையா நீ ?" அத்தை
"இல்லை " இது திவ்யா . # எவ்வளவு விவரம் ...


பல வார்த்தைகள்  தெளிவாக பேசினாலும், ஒரு சில சமயம் அவள் என்ன பேசுகிறாள் என்று அந்த மழலையில் புரிவது இல்லை. அப்படிப்பட்ட சில வார்த்தைகள், மேடம் கோபத்தில் இருக்கும் பொழுது பேசப்படுபவை என்பது கவனிக்கவேண்டிய ஒன்று.


இப்பொழுதே, அவளுடைய சைக்கிளில் அமர்ந்து கொண்டு, "ஸ்கூலுக்கு போயிடு வரேன் என்று ஹாலில் இருந்து ரூம் வரை வந்து விட்டு ,திரும்பி வந்து "ஸ்கூலில் இருந்து வந்தாச்சு " என்று கூறுகிறாள். ஆனால் ஸ்கூலில் சேர்த்தப் பிறகு எத்தனை நாள் அழுது ஆர்பாட்டம் பண்ணப் போகிறாள் என்றுத் தெரியவில்லை .அன்புடன் எல்கே

49 கருத்துகள்:

கலாநேசன் சொன்னது…

நாம் எதை செய்ய வேண்டாம் என்கிறோமோ அதையே செய்யக் கூடும். வாயில் விரல் வைக்க வேண்டாம் என அடிக்கடி மிரட்டாதீர்கள்.

அன்பரசன் சொன்னது…

//இதுவரை அவளிடம் எங்களால் மாற்ற முடியாத ஒரே பழக்கம் வாயில் விரல் போடுவது. யாரவது நல்ல ஐடியா கொடுங்கள்.//

சிறிது காலத்திற்கு கையில் விளக்கெண்ணை தடவி விடலாம். (பாட்டி வைத்தியம்)

Balaji saravana சொன்னது…

//ஸ்கூலில் சேர்த்தப் பிறகு எத்தனை நாள் அழுது ஆர்பாட்டம் பண்ணப் போகிறாள் என்றுத் தெரியவில்லை .//
கவலையே படாதீங்க LK. திவ்யா இப்போவே சமத்துல ஸோ உங்களுக்கு கஷ்டம் கொடுக்க மாட்டா :)

அன்னு சொன்னது…

பரவாயில்லை, இந்த கால்த்துல பெற்றோர்கள் புலம்பறதுக்கும் ஒரு வழி கிடைச்சிருச்சு. ஹி ஹி ஹி

ஜுஜ்ஜூ இப்படித்தான் இருந்தன். பட் அவனாகவே விட்டுவிட்டான். கலானேசன் சொல்வது போல நீங்க வேண்டாம்னு சொல்றதைத்தான் அவர்கள் அதிகமாக செய்ய விரும்புவார்கள். அதனால கொஞ்ச நாளைக்கு ஃப்ரீயா விடுங்க. அவங்களுக்கு எப்ப து கூடாதுன்னு தோணுதோ அப்ப நிறுத்திடுவாங்க. வெளியாளுங்க என்ன சொல்வாங்கனெல்லாம் யோசிச்சு டென்சன் ஆகாதீங்கண்ணா. குழந்தைகள் எதையுமே சில காலத்திற்குதான் செய்யும் அப்புறம் விட்டுடும். திவ்யா செய்யறதை என்சாய் பண்ணுங்க. பெரிய பொண்ணாயிட்டாளேன்னெல்லாம் தப்பா நினச்சிராதீங்க. :) Lots of love to her :)

kavisiva சொன்னது…

//மரியாதையா நான் சொல்றத கேட்கப் போறியா இல்லையா//

ஒழுங்கா பொண்ணு சொல்றத கேளுங்க :)

கையில் விளக்கெண்ணெய் தடவி விடுங்க. அதோடு வாயில் விரல் போடுவதால் வரும் பிரச்சினைகளை கதைகளாக சொல்லுங்க. உடனே அவள் கேட்காவிட்டாலும் கொஞ்சம் கொஞ்சமா அந்த பழக்கத்தை விட்டுடுவாங்க

அமைதிச்சாரல் சொன்னது…

வாயில் விரல் போடுவதை அவங்களாவே நினைச்சா தவிர நம்மால மாத்தமுடியாது. இதனால பற்கள் பாதிக்கப்படுவதை, வேறு ஏதோ ஒரு குழந்தைக்கு நடப்பதைப்போல சின்னஞ்சிறு கதைகளாக அவளுக்கு சொல்லுங்க. (நல்ல பிள்ளைங்களெல்லாம் இப்படி பண்ணமாட்டாங்கன்னு ஒரு இடைச்செருகலோட)கேக்க வாய்ப்பிருக்கு..

பெயரில்லா சொன்னது…

//சிறிது காலத்திற்கு கையில் விளக்கெண்ணை தடவி விடலாம். (பாட்டி வைத்தியம்)//

எங்களுக்கேவா? நாங்க அம்மா ட்ரெஸ்ல தொடைச்சிட்டு கையை வாயில் போடுவோமே.

துளசி கோபால் சொன்னது…

விளக்கெண்ணெய் வைத்தியம் ஓக்கே.

அந்தக் காலத்தில் வேப்பெண்ணை தடவுவாங்க!

குழந்தை குழந்தையா இருக்கட்டும்.கள்ளமில்லாப் பருவம் இது. அவர்களுக்குக் கற்பனைவளம் இந்த வயதில் அதிகம்:-)))))

Ananthi சொன்னது…

குழந்தைக்கு வாழ்த்துக்கள்..!

சங்கரியின் செய்திகள்.. சொன்னது…

திவ்யா குட்டி ரொம்ப சமத்து. குறும்பு பண்ணமாட்டா. ஒழுங்கா ஸ்கூலுக்கு போயிடுவா கவலையை விடுங்க.......

vanathy சொன்னது…

வாயில் விரல் வைப்பது மாற்றுவது கொஞ்சம் கஷ்டமான வேலை. கைக்கு ஏதாவது வேலை குடுங்க. விரலில் வேப்பெண்ணை பூசினால் நல்ல ரிசல்ட் தெரியும் ( ஐடியா குடுத்தது நான் என்று சொல்ல வேண்டாம் ). ரொம்ப பயமுறுத்தறேன் என்று நினைக்க வேண்டாம். சொந்த அனுபவம் தான்.

Chitra சொன்னது…

She is cute

பத்மநாபன் சொன்னது…

வேப்பெண்ணை விரலில் தடவுவது தான் எளிய வழி ..( குழந்தைக்கு இதை செய்ய நமக்கு சங்கடமாக இருக்கும் ..தடவிவிட்டால் ஓரிரு தடவை முயற்சித்து .கசப்பில் முகம் சுழித்து தவிர்க்க ஆரம்பித்து விடுவார்கள் )

//மழலையில் புரிவது இல்லை//அது தானே இனிமை ,குழல் , யாழ் தாண்டிய இசை ..

komu சொன்னது…

குழந்தைகளை குழந்தைகளாக இருக்க விடுங்க. விரல் போடுவது இந்த வயசில் தான் முடியும்.!!!!!!!!!
அதெல்லாம் தன்னைப்போல சரி ஆகும் சார். இந்தவயசு குறும்புகளை ரசிக்கனுமே தவிர கவலைப்பட என்ன இருக்கு?!!!!!!!!!!!

nis சொன்னது…

ஆரம்பத்திலேயே school போக ஆர்வம் வந்து விட்டது.
அழுது ஆர்ப்பாட்டம் செய்தாலும், அது முதலாவது நாள் மட்டுமே.

பதிவுலகில் பாபு சொன்னது…

நயமாக சொல்லித்தாங்க இந்தப் பழக்கத்தை நிப்பாட்டனும்..

மத்தபடி அன்பரசன் சொன்னமாதிரி கொஞ்சம் அதிரடி வைத்தியம் பண்ணியும் பார்க்கலாம்.. ஆனால் குழந்தைக்கு ஏமாற்றமாயிடும்.. ஆனால் நிறைய பேருக்கு ஒர்க்கவுட் ஆயிறுக்கு இந்த முறை..

Venkat Saran. சொன்னது…

என்ன மாதிரி சின்ன குழந்தைகள் அப்படித்தான் இருப்போம், நீங்கதான் adjust பண்ணிக்கணும்

Jaleela Kamal சொன்னது…

//நாம் எதை செய்ய வேண்டாம் என்கிறோமோ அதையே செய்யக் கூடும். வாயில் விரல் வைக்க வேண்டாம் என அடிக்கடி மிரட்டாதீர்க//
கலா நேசன் சொலவது சரி,
என் பையன் சின்னட்தா இருக்கும் போது
பகக்த்து வீட்டு பையனும் ஒரே வயது

வார வாரம் பேச்சிலர்கள் சாப்பிட வரும் போது சாப்பிட்டு முடித்ததும், உடனே பால்கனியில் தம் அடிக்க போவார்கள்.
இவர்கள் இருவரும் அதை பார்த்து கொண்டு
மறுநாள் ஆலுக்கொரு பென்சில் எடுத்து டேய் வாடா நாம இரண்டு பேரும் ஷாகுல் அங்கிள் , ஷரஃப் அங்கிள் போல சூடு ஊதுவோம்

என்பார்கள் போட்டோ கூட எடுத்து வைத்துள்ளேன்,. ஆனால் பிள்ளைகளின் அந்த குரும்பெல்லாம் இப்ப நினைத்தாலும் நல்ல இருக்கும்,.

Jaleela Kamal சொன்னது…

என் பையனுக்கும் வாயில் விரல் போடும் பழக்கம் உண்டு எதாவது கசப்பா பாகற்காயை தடவி விடனும். இல்லை அந்த நேரம் ஏதாவது வேலை ஏவனும்.
பிஸியான வேலைய சொல்லனும்.

சில விதமான பயத்துக்கு (அ) சாப்பிட அடம் பிட்க்கும் குழந்தைகள் பசிய அடக்க அப்படி ஒரு தம் /

நல்லபுரிந்து கொள்கிறாள் என்றால்

இங்க பார் உன் அழகான பல் பூச்சாண்டி போல் வெளிய வந்துடும் அப்படின்னு சொல்லனும்/

Geetha6 சொன்னது…

good experience!

அருண் பிரசாத் சொன்னது…

அட புரியற மாதிரி திட்டினா நீங்க மறந்துடுவீங்க... அதான், நல்லா குழம்புங்க

Arun Prasath சொன்னது…

எங்க வீட்ல வேப்பம் காய் அரச்சு கொஞ்சமா தடவுவாங்க... இல்ல நண்பர் சொன்ன மாறி வெளக்கெண்ணை...

வெங்கட் நாகராஜ் சொன்னது…

வீட்டுக்குள் சைக்கிள் ஓட்டிக்கொண்டு பள்ளிக்குச் செல்கிறாளா, என் மகளும் செல்வாள், அவள் பொம்மைகளை பள்ளிக்குக் கொண்டு விட.. :)

பெயரில்லா சொன்னது…

she s very smart like u ...
so she wont u @ anytime LK

asiya omar சொன்னது…

ஸ்கூல் போக அவ ஏன் அழப்போறா?நீங்க கலங்காம இருந்தால் போதும்.

மனோ சாமிநாதன் சொன்னது…

குழந்தைகளை முதன் முதலில் பள்ளியில் சேர்க்கும்போது, அவர்கள் அழுகிறார்களோ இல்லையோ, நமக்கு என்னவோ குழந்தையை பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் அனுப்புவது போல மனது ரணகளமாகி விடும். அதுவும் பள்ளிக்கு போக மாட்டேன்று அடம் பிடித்து அழுதால் கேட்கவே வேண்டாம், நம் மனது அப்படியே சோகத்தில் கரைந்து விடும். பள்ளிக்கு அனுப்பிய பின்னாலோ அந்த முதல் நாள் குழந்தை என்ன செய்ததோ, எப்படி இருக்கிறதோ என்ற கவலையில் நிலை கொள்ளாது. ஆனால் இப்போதெல்லாம் முதல் நாள் தாயோ, தந்தையோ கூடவே இருக்க பள்ளிகள் அனுமதிக்கிறார்கள் என்று கேள்விப்படுகிறேன்.
க‌ரியாப்ப‌ழ‌ம் என்ற‌ ஒன்று [ஜாதிக்காய் மாதிரி இருக்கும்] நாட்டு மருந்துக் க‌டையில் கிடைக்கும். பொதுவாக‌ தாய்ப்பாலை ம‌ற‌க்க‌டிக்க‌ இதை உப‌யோக‌ப்ப‌டுத்துவார்க‌ள். அதை இழைத்து குழந்தைக்குத் தெரியாம‌ல் விர‌லில் த‌ட‌வினால் விர‌ல் ச‌ப்பும்போது க‌ச‌க்கும். குழந்தை தானாக‌வே விர‌ல் ச‌ப்புவ‌தை விட்டு விடும்.

சாதாரணமானவள் சொன்னது…

திவ்யாவின் விரலில் ஒரு பொம்மை வரைந்து அதை பத்திரமாக பார்த்துக்கொள்ள சொல்லுங்கள். அவள் நிச்சயம் நினைவின்றி விரலை வாயில் வைத்து அழித்து விடுவாள். பாப்பா உன் வயித்துக்குள்ள போயிடுச்சு போ.. என பயமுறுத்துங்கள். பின் வேறு பாப்பா என்று சொல்லி மீண்டும் வரைந்து விடுங்கள். கொஞ்சம் கொஞ்சமாக அவள் அதை பார்த்துக்கொள்ளுவதில் கவனம் வந்து விரலை வாயில் வைப்பதை விட்டு விடுவாள்.

ஜெயந்தி சொன்னது…

வேப்பெண்ணை அல்லது வேப்ப இலையை அரைத்து பூசிவிடலாம். ஆனால் பாவம் குட்டிப்பாப்பா.

சென்னை பித்தன் சொன்னது…

எனெக்கென்னவோ ‘சாதாரணமானவள்’ சொன்ன கருத்துதான் அசாதாரணமாகத்(சிறந்ததாக) தெரிகிறது.முயன்று பாருங்கள்.
இந்தக் காலத்தில் குழந்தைகள் பள்ளி செல்ல அழுது அடம் பிடிப்பதில்லை-(என்னை மாதிரி!)

Gayathri சொன்னது…

Ellarum solvathu pol veppennaiyay thadavi vidalaam

சைவகொத்துப்பரோட்டா சொன்னது…

வாயில் விரல் வைத்தால், வயிற்றில் பூச்சி வரும் என்று விரல் வைக்கும் நேரங்களில் (அன்பாக) சொல்லிப்பாருங்கள்.

Tamilbookmark.co.cc சொன்னது…

தமிழ் வலைப்பதிவர்களே!
புதிய தமிழ் திரட்டியான தமிழ்புக்மார்க்கில் உங்கள் வலைப்பதிவுகளை இனைத்துபயன் பெறுங்கள்.
‍தமிழ்புக்மார்க்
http://tamilbookmark.co.cc

கோவை2தில்லி சொன்னது…

ஸ்கூல் போனால் ஒரு வாரம் அழுவார்கள். எங்க பொண்ணு நான் விட்டுட்டு வரும் போது தெரு முக்கு வரைக்கும் அவ அழற சத்தம் கேட்கும். முதல் நாள் ராத்திரியே சொல்லிவிடுவாள் நாளைக்கு பென்சில், புக், வாட்டர் பாட்டில் , பேக் எல்லாத்துக்கும் லீவு. அதனால எனக்கும் லீவு என்று. இப்போ அதெல்லாம் ஒன்னும் இல்லை.

அதனால கவலைப்படாதீங்க. திவ்யா ஜாலியா ஸ்கூல் போவாள்.

ப.செல்வக்குமார் சொன்னது…

//பல வார்த்தைகள் தெளிவாக பேசினாலும், ஒரு சில சமயம் அவள் என்ன பேசுகிறாள் என்று அந்த மழலையில் புரிவது இல்லை. அப்படிப்பட்ட சில வார்த்தைகள், மேடம் கோபத்தில் இருக்கும் பொழுது பேசப்படுபவை என்பது கவனிக்கவேண்டிய ஒன்று.
///

ஆனா கூட கேக்குறதுக்கு நல்லா இருக்கும்ல அண்ணா ..!!

S.Menaga சொன்னது…

குட்டிமாவுக்கு வாழ்த்துக்கள்!!

Priya சொன்னது…

ச்சோ ஸ்வீட் திவ்யா:)

தெய்வசுகந்தி சொன்னது…

cute divya!!

Sethu சொன்னது…

Cute. Record it and enjoy at a later date.

மாணவன் சொன்னது…

//இப்பொழுதே, அவளுடைய சைக்கிளில் அமர்ந்து கொண்டு, "ஸ்கூலுக்கு போயிடு வரேன் என்று ஹாலில் இருந்து ரூம் வரை வந்து விட்டு ,திரும்பி வந்து "ஸ்கூலில் இருந்து வந்தாச்சு " என்று கூறுகிறாள்//

மழலைக்கே உள்ள சுட்டித்தனம் அருமை,
//மரியாதையா நான் சொல்றத கேட்கப் போறியா இல்லையா # திவ்யாவின் மிரட்டல்//

மழலையின் குரலில் மிரட்டலாக இருந்தாலும் நம்மை ரசிக்க வைக்கும்...

திவ்யாவுக்கு எனது பாராட்டுகளும், வாழ்த்துக்களும்

வாழ்க வளமுடன்
நன்றி
நட்புடன்
மாணவன்

நிலாமதி சொன்னது…

பள்ளிக்கு போகும் வரையிலும் விரல் சூபியவர்கள் இருக்கிறார்கள். சிலர் சூப்பி பாவிப்பார்கள் (pacifire ).அதை விடுவது கஷ்டம் விரல் தானே ஆரோக்கிமானது வளர விட்டுவிடுவாள். தனிமையில் இருக்க விடாமல் ஈடுபாட்டுடன் இருக்க விடுங்க. தனிமை விரல் வைக்க வசதி.

எம் அப்துல் காதர் சொன்னது…

// மாற்ற முடியாத ஒரே பழக்கம் வாயில் விரல் போடுவது.//

இதுக்குப் போயா இவ்வளவு feelings. அவ வாயில் விரல் போடும் போது அவள் விரலை பிடுங்கி உங்க வாயில் வைத்துக் கொள்ளுங்கள் நாளடைவில் சரியாகிவிடும்.:)))

அப்பாவி தங்கமணி சொன்னது…

//மரியாதையா நான் சொல்றத கேட்கப் போறியா இல்லையா # திவ்யாவின் மிரட்டல்//

இது சும்மா ட்ரைலர் தான்... மெயின் மூவி இனி தான் ஆரம்பம் கார்த்தி... வெயிட் அண்ட் சி... ஹா ஹா ஹா

I heard these days kids are happy to goto school, no crying and all.. may be happy to escape from you all...just kidding... but I really heard kids are changed now...not like us (crying to goto school)

அப்பாவி தங்கமணி சொன்னது…

வாயில் விரல் வைப்பதை தடுக்க-
குழந்தைகள் தங்களை குழந்தைகள்னு சொல்றதை பெரும்பாலும் விரும்பறதில்லை... திவ்யாவும் அப்படி தான்னு நினைக்கிறேன்... ஒரு டயலாக் ட்ரை பண்ணி பாருங்க

"babies தான் விரல் வெக்கும்... நீ என்ன பேபியா? பெரிய பொண்ணு தானே..."


Dont force, but just keep on saying this often as possible. I know one of my friend, she uses this dialogue for everything and her son listens

Ofcourse Dhivya over விவரம்... அவளுக்கு வொர்க் அவுட் ஆகுமான்னு தெரியல... no harm trying...

மோகன்ஜி சொன்னது…

குழந்தை விரல் சூப்பும் பழக்கத்தை பெரும்பாலும் தன்னாலே விட்டுவிடும். உங்கள் பெட் டயம் கதைமாந்தர்களில் மக்குகளுக்கும் திட்டு வாங்குறவங்களுக்கும் கைசூப்பல் மேனரிசத்தைக் கட்டாயமாக்குங்கள்.
குழந்தை புரியாமல் பேசும் மழலை தமிழை விட இனியது எல்.கே.
குழந்தைக்கு என் அன்பு. குழந்தைக்கு முதலில் சுற்றிப் போடுங்கள்.

சுசி சொன்னது…

ஆவ்வ்வ்.. அக்காவோட கடைசிவால் சேரன்.. இதே பிரச்னை இருக்கு.. உங்களுக்கு கிடைக்கிற ஐடியாக்களை பின்பற்ற சொல்றேன் :))

அதெல்லாம் சமத்தா படிப்பாங்க.. கவலை விடுங்க கார்த்திக்.

பிரியமுடன் பிரபு சொன்னது…

"நீ யாரோட செல்லம் ?" இது திவ்யாவின் அத்தை .
"நான் பாப்பாவோட செல்லம் " இது திவ்யா
"அப்பா/அம்மா செல்லம் இல்லையா நீ ?" அத்தை
"இல்லை " இது திவ்யா . # எவ்வளவு விவரம் ...

///////

irukkaatha pinna .....

பிரியமுடன் பிரபு சொன்னது…

ன்பரசன் said...
//இதுவரை அவளிடம் எங்களால் மாற்ற முடியாத ஒரே பழக்கம் வாயில் விரல் போடுவது. யாரவது நல்ல ஐடியா கொடுங்கள்.//

சிறிது காலத்திற்கு கையில் விளக்கெண்ணை தடவி விடலாம். (பாட்டி வைத்தியம்)
//

yes

LK சொன்னது…

@கலாநேசன்
ஹ்ம்ம் சரிதான்,...நன்றி

@அன்பரசன்
முயற்சி செய்கிறேன்

@பாலாஜி
அப்படிதான் எண்ணுகிறேன்

@அன்னு
ஹஹா உண்மைதான் . அப்படி இல்லை, அவள் பல் பாதிக்கப் படும் என்பதுதான் கவலை

@கவிசிவா
வேற வழி ...

@சாரல்
இது நல்ல ஐடியாவா இருக்கு. பார்கிறேன்

@அனாமிகா
அவ்
@துளசி டீச்சர்
அதிகம் வற்புறுத்துவது இல்லை

@ஆனந்தி
நன்றிங்க

@சங்கரி
நன்றிங்க

@வானதி
என் நீங்க சொன்னீங்கனு சொல்ல வேண்டாம் ?

@சித்ரா
நன்றிங்க

@பத்மநாபன்
முயற்சிக்கிறேன்

@கோமு
ஹ்ம்ம்

@பாபு
ஹ்ம்ம் பார்க்கலாம்

@வெங்கட்
என்னது ??

@ஜலீலா

அதைத்தான் சொல்கிறேன். சொன்னால் அந்த ஒரு பத்து நிமிடம். பிறகு மீண்டும் வாயில் விரல்

@அருண்
ஆஹா .. அங்கயும் இதுதானா?

@அருன்ப்ரசாத்
ஹ்ம்ம்
@வெங்கட்
அதே அதே.. இங்கயும் அதேதான்

@கல்பனா
நன்றி

@ஆசியா
சகோ நான் கலங்க மாட்டேன். தங்க்ஸ் தான்

@மனோ
உண்மைதான் அம்மா. நமக்குதான் கஷ்டமாக இருக்கும். அவர்கள் புது இடம், புது நட்பு எண்டு சகஜம் ஆகி விடுவார்கள்.

@சாதாரணமானவள்
ஹ்ம்ம் முயற்சிக்கலாம். மருதாணி வைத்துப் பார்த்தேன்.. பிரயோஜனம் இல்லை

@ஜெயந்தி
என்ன பண்ண ?

@சென்னை பித்தன்
ஆமா நீங்கள் அழுது இருப்பீர்கள் இவர்கள் அழ மாட்டார்கள்

@காயத்ரி
ஹ்ம்ம் சரி

@சை.கொ. ப

ஹ்ம்ம் பார்கிறேன்

@கோவை
ரைட்டு

@செல்வா
ஹ்ம்ம் ஆமாம் தம்பி

@மேனகா
நன்றி

@சுகந்தி
நன்றி

@சேது
ரிகார்ட் பண்ணுகிறேன்

@மாணவன்
நன்றிங்க

@நிலாமதி
ஹ்ம்ம்

@அப்துல்
அதெல்லாம் வேலைக்கு ஆகவில்லை

@அப்பாவி
நீ வேற ? அப்படி சொன்னா நான் இன்னும் குட்டிப் பாப்பா அப்படின்னு சொல்றா

@மோகன்ஜி
முயற்சிக்கிறேன்

@சுசி
நான் ஐடியா கேட்டா நீங்க திருப்பி என்கிட்டே கேக்கறீங்களா ?

@பிரபு
நன்றி

கீதா சாம்பசிவம் சொன்னது…

டெம்ப்ளேட் ரொம்பவே டார்க்கா இருக்கா, படிக்கக் கஷ்டமா இருக்கு எனக்கு!

குழந்தை விரலைப் போட்டுக்கறதை அவ்வளவு சீக்கிரம் தடுக்க முடியாது. அமைதிச் சாரல் சொல்லிய அமைதியான வழியிலேயே மெல்ல மெல்ல முயற்சி செய்யுங்கள். விரல் போட்டுக்கறதை நிறுத்தினால் பரிசு கிடைக்கும்னு சொல்லுங்க. தானே தான் மாறணும். மற்றபடி இரண்டரை வயதுக்குச் சரியாத் தான் எல்லாம் பண்ணிண்டு இருக்கா. குழந்தைகளுக்கு இதெல்லாம் ஜகஜம்! :)))))))) நாம் சொல்றதை எல்லாம் திரும்பச் சொல்லும்.