Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Gradient Skin

Gradient_Skin

இந்த வலைப்பதிவில் தேடு

பிரபலமான இடுகைகள்

Breaking News

latest

வெங்காயம்

முதல் நபர் : ஏன் இந்த சம்பந்தம் வேண்டாம்னு சொல்லிட்டீங்க ?? பெண்ணின் தந்தை : ரொம்ப அதிகம் எதிர் பாக்கறாங்க . முதல் நபர் : அப்படி என்ன கே...


முதல் நபர் : ஏன் இந்த சம்பந்தம் வேண்டாம்னு சொல்லிட்டீங்க ??

பெண்ணின் தந்தை : ரொம்ப அதிகம் எதிர் பாக்கறாங்க .
முதல் நபர் : அப்படி என்ன கேட்டாங்க ?
பெண்ணின் தந்தை : அஞ்சு மூட்டை வெங்காயம் வேண்டுமாம். அப்புறம், கல்யாணத்தில், வெங்காய சாம்பார், வெங்காய பக்கோடா இதெல்லாம் போடணுமாம். நடக்கற காரியமா ?அதான் வேண்டான்னு சொல்லிட்டேன்

************************************************************************************************
மனைவி : என்னங்க இந்த கருப்பு பைல?
கணவன் : உஷ். சத்தம் போடாத. பிருச்சி பாரு.வெங்காயப் பக்கோடா இருக்கு. நீ பாட்டுக்கு யார்கிட்டயும் சொல்லிடாத. வெங்காயப் பக்கோடா சாப்பிடற  அளவுக்கு அவனுக்கு வசதி ஜாச்தியானு பொறாமை படுவாங்க
மனைவி :ஆமாங்க நீங்க சொல்றது சரிதான்.
************************************************************************************************
வெங்காயத்தை
நறுக்கினால் கண்ணீர் - வெங்காய
விலையை நினைத்தாலே
கண்ணீர்தான்  இப்பொழுது


************************************************************************************************
பத்து  வருடங்களுக்கு முன்பு என்று எண்ணுகிறேன் . ஒரு ஆட்சி கவிழ காரணமாய் இருந்தது வெங்காய விலையேற்றம். மீண்டும் இப்பொழுது முன்பு எப்பொழுதும் இல்லாத அளவு வெங்காய விலை உயர்ந்துள்ளது. நேற்றைய சென்னை நிலவரம் கிலோ 80 ரூபாய் .

இந்த ரீதியில் போனாள், மேலே நான் எழுதி உள்ளவாறுதான் நடக்கும். சமீபத்தில் பெய்த மழையின் காரணமாக அனைத்து காய்கறிகளுமே விலை உயர்ந்துள்ளது. நடுத்தர வர்க்கத்தினால் சமாளிக்க முடியாத வண்ணம் விலையேற்றம் உள்ளது. இதற்காக கவலைப் படவேண்டிய முதல்வரோ அடுத்து எங்கே ரெய்டு யார் கைது என்றக் கவலையில்.

போராடவேண்டிய பிரதான எதிர்கட்சித் தலைவியோ கொடநாட்டில். மருத்துவர் அய்யாவோ யார் அடுத்து கூட்டணிக்கு வருவார் என்ற எதிர்பார்ப்பில்.  மக்களோ கவலையில் .

அன்புடன் எல்கே

60 கருத்துகள்

நீச்சல்காரன் சொன்னது…

ரொம்ப காஸ்டிளியானப் பதிவு. பெரிய பணக்காரர் தான் போல கும்புடுறேன் எஜமான்.

Philosophy Prabhakaran சொன்னது…

ஒரு பத்து வருஷம் கழிச்சு இதெல்லாம் படிச்சா ஜோக்கே கிடையாது...

சகாதேவன் சொன்னது…

முன்னே பெரியார் சொல்வார், "அதென்ன பெருங்காயம்" என்று. இனி முடியமா?

சகாதேவன்

Asiya Omar சொன்னது…

எல்.கே நான் வெங்காயம் நிறைய உபயோகிப்பேனே,ரொம்ப கவலையான செய்தி தான்.

மனோ சாமிநாதன் சொன்னது…

காய்கறிகளின் விலையேற்றத்தில் இன்னும் சில காலத்தில் நீங்கள் எழுதியது போலத்தான் நடக்குமோ என்னவோ? இந்தியாவிலிருந்தும் பாகிஸ்தானிலிருந்தும் வெங்காயம் வருவது இங்கு குறைந்து விட்டது. ஹோட்டல்களுக்கு ஈரான், இராக்கிலிருந்து இறக்குமதியாகும் வெங்காயத்தை வாங்கினாலும் அவ்வளவாக நன்றாக இல்லையாம்.

Gayathri சொன்னது…

ஹஹஹஹஹா நடந்தாலும் நடக்கலாம் நீங்க தீர்கதரிசி

settaikkaran சொன்னது…

தமிழ்நாட்டுத்தலைவர்களை விடுங்க கார்த்தி! அவங்களை இன்னுமா நம்பிட்டிருக்கீங்க? மத்திய உணவுத்துறை அமைச்சர் ஐ.பி.எல்.வேலையிலே பிஸியா இருக்காரு! கொடுமை!!

Porkodi (பொற்கொடி) சொன்னது…

அப்போ இனிமே "வெங்காயமா போச்சு"ன்னு அலுத்துக்க முடியாதா.. ;)

எங்க அப்போ வெங்காயம் மட்டும் தான் விலை ஏறி இருந்துது.. இப்போ எந்த பொருளுமேன்னா யானை விலை இருக்கு? (யானையே விலை கம்மியா இருக்குமோ..) புலம்பி புலம்பி தீர்த்தாலும்..!

கோலா பூரி. சொன்னது…

ஆஹா வெங்காயத்தை வச்சு ஒரு இண்ட்ரெஸ்டிங்க் பதிவா? சூப்பர்தான்
இங்க உள்ளவங்களுக்கு வெங்காயம் இல்லாம சமைக்கவே தெரியாது.

raji சொன்னது…

விலையேற்றம் வெங்காயத்தில் மட்டுமா?போக போக நடுத்தர வர்க்கத்துக்கெல்லாம் வெறும் நீராகாரம்தான் அதுவும் தண்ணீர் ஒழுங்காக கிடைத்தால்

சாந்தி மாரியப்பன் சொன்னது…

உங்க வீட்டுல நிறைய வெங்காயம் இருக்குதுபோலிருக்கே.. சிபிஐ இதையெல்லாம் கண்டுக்காதா :-))))))

Vidhya Chandrasekaran சொன்னது…

கடவுளே:((

வெங்காயம் இல்லாம சமைக்கவும் வரமாட்டேங்குது..

சைவகொத்துப்பரோட்டா சொன்னது…

மேட்டரை படிக்கும்போதே, கண்ல தண்ணி வருது.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

தில்லியிலும் வெங்காயம் 80 ரூபாய் கிலோ விற்கிறது. உணவுத்துறை அமைச்சர் லண்டனில் கிரிக்கெட் விளையாட்டுப் பற்றி விவாதித்துக் கொண்டு இருக்கிறார். பனிரெண்டு வருடங்களுக்கு முன் தில்லியில் இருந்த பி.ஜே.பி.யின் ஆட்சி கவிழ காரணமாய் இருந்ததும் திருவாளர் வெங்காயம்தான். நல்ல பகிர்வு கார்த்திக்.

sathishsangkavi.blogspot.com சொன்னது…

வெங்காயத்தை வைத்து கிண்டல் அடிப்போம்...

இனி வெங்காயம் என்றால் வாயைத்திறக்க வேண்டியது தான்...

pudugaithendral சொன்னது…

ஹைதையில் கிலோ 50.. டில்லியில் 70 ரூபாயாம். நாங்க தேவலைன்னு அல்ப சந்தோஷப்பட்டுக்க வேண்டியது தான்.

பத்து வருஷம் முன்னாடி ஆட்சி கவிழ காரணமா இருந்துச்சு. ஆனா இப்ப யாரும் கண்டுக்க ரெடியா இல்லை. பெட்ரோலும் விலை ஏறுதே!!!

Geetha6 சொன்னது…

எதுவும் நடக்கலாம்.
சிந்திக்க வேண்டிய விஷயம்.

ஹுஸைனம்மா சொன்னது…

மறுபடியுமா?... ஸ்பெக்ட்ரத்தால் விழாத ஆட்சி, வெங்காயத்தால விழுந்துடும் போல!!

உங்களுக்காவது வெங்காயம் மட்டும்தான் போல. இங்கே அபுதாபியில, இஞ்சி, பூண்டு எல்லாமே!! அதுவும் அழுகலாத்தான் கிடைக்குது!!

முன்னே இதேபோல வெங்காயத்தட்டுப்பாடு வந்தப்ப, வெங்காயத்துக்குப் பதிலா கோஸ் பயனபடுத்தலாம், அதே எஃபெக்ட்(?) கிடைக்கும்னு சமையல்காரர்கள் சொன்ன ஞாபகம்.

ஆமா, அந்த “சிவகாமி மகனிடம்..” பாட்டு குறித்த சரியான விடையைச் சொல்லவே இல்லியே நீங்க?

Jaleela Kamal சொன்னது…

நகைச்சுவை + பதிவு சூப்பர்

நானும் இப்ப்ப முட்டை கோஸ் தான் அதிகமாக சேர்க்கிறேன்.


தினம் வெங்காய்ம் இல்லை என்றால் முடியவே முடியாதும் , இங்கும் 1.80, 2, 3.50, இப்ப 5 திர்ஹம் ஆனதிலிருந்து எவ்வள்வுக்கு எவ்வள்வு குறைத்து பயன் படுத்த முடியுமோ அவ்வளவுக்கு அவ்வ்ள்வு குறைத்து தான் பயன் படுத்துகிறேன்

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... சொன்னது…

ஆகா.. அருமை...

எல் கே சொன்னது…

@நீச்சல்

நான் அம்புட்டு பணக்காரன் இல்லீங்க. எழுத்தில் மட்டுமே வெங்காயத்தை பார்க்கிறேன்

எல் கே சொன்னது…

@பிரபாகரன்
இருக்கலாம்

எல் கே சொன்னது…

@சகாதேவன்
"வெங்காயம் என்று வரவேண்டும் "

எல் கே சொன்னது…

@ஆசியா
குறைத்து கொள்ளுங்கள் சகோ

எல் கே சொன்னது…

@மனோ
இந்தியாவில் இருந்து ஏற்றுமதிக்கு தடை விதித்து இருக்கிறார்கள்.

எல் கே சொன்னது…

@இளங்கோ
:)

@காயத்ரி
அவ்வ்.

எல் கே சொன்னது…

@சேட்டை
உண்மைதான். அவருக்கு அவர் பை ரொம்பினால் போதும்

எல் கே சொன்னது…

@கேடி
ஆமா. அலுத்துக்க முடியாது. சொல்லப் போனா கொஞ்ச நாளில் யானை விலை குறைந்து விடும்

எல் கே சொன்னது…

@கோமு
இங்கையும்தான்

@ராஜி
அப்படி ஒரு நிலை விரைவில் வரும்

எல் கே சொன்னது…

@சாரல்
ஏன் இந்த கொலை வெறி ? நான் பேப்பேர்ல மட்டும்தான் பாக்கிறேன் வெங்காயத்தை

எல் கே சொன்னது…

@வித்யா
கத்துகோங்க

@சை.கொ.ப
வேற வழி இல்லை நண்பா

எல் கே சொன்னது…

@வெங்கட்
அப்ப நடந்தது இருக்கட்டும். இப்ப ஆட்சி கவிழுமா ??

@சங்கவி
உண்மைதான்

எல் கே சொன்னது…

@புதுகை
ஹை கம்மியா இருக்கே. கொடுத்து வச்சவங்க நீங்க

@கீதா
நன்றி

எல் கே சொன்னது…

@ஹுசைனம்மா
கவிழ்ந்தால் நல்லது. கோசும் விலை ஜாஸ்தி (அப்பா சொன்ன தவகல் ) பதில் சொல்லுகிறேன்

எல் கே சொன்னது…

@ஜலீலா
ஆமாம். வெங்காயம் இல்லாமல் சமைக்க கத்துக்கணும். வேற வழி இல்லை

சென்னை பித்தன் சொன்னது…

நேரத்திற்கேற்ற பதிவு.இன்று டைம்ஸ் ஆஃப் இந்தியா வில் தலைப்பே இதுதான்”At rs.85/=per kg,onion prices bring tears.

”வெங்காயம்”.

R.Gopi சொன்னது…

வாழ்க்கை இங்கே அநியாயம்.. பெரியார் சொன்ன வெங்காயம்...

பாஸ்.... வெங்காயத்தின் விலை தங்கத்தோட விலைய விட ஜாஸ்தியாமே??

நார்மலா, வெங்காயத்த உரிச்சா தான் கண்ணுல தண்ணி வரும்... இப்போ, அதோட ரேட் பார்த்தாலே கண்ணுல தண்ணி வருது...

ஸ்ரீராம். சொன்னது…

வெங்காய மேட்டர்தானே என்று சும்மாவும் இருந்து விட முடியாது. நாங்கள் சாம்பார் செய்யும் போது வெங்காயம் என்று பேப்பரில் எழுதி கொதிக்கும்போது காட்டி விடுகிறோம். சாம்பார் ஏமாந்து விடும்.

'பரிவை' சே.குமார் சொன்னது…

ஹ... ஹ... ஹா... நடந்தாலும் நடக்கலாம்.

ADHI VENKAT சொன்னது…

இப்ப இருக்கிற விலையில வெங்காயம்னு எழுதி பார்த்துக்க வேண்டியது தான். நான் கூட தென்னிந்திய சமையலில் வெங்காயம் அவ்வளவாக சேர்க்க மாட்டேன். வட இந்திய சப்ஜிக்கு தான் சேர்ப்பேன். கொஞ்சம் குறைத்து செலவு பண்ணவேண்டியது தான். நல்ல பகிர்வு.

அருண் பிரசாத் சொன்னது…

இது 10 வருஷத்துக்கு முன்னாடி வந்த ஜோக்தான்....

எல் கே சொன்னது…

@பித்தன்
பார்த்தேன் அய்யா

எல் கே சொன்னது…

@கோபி
போற போக்குல அதுதான் நடக்கும் போலத் தெரியுது

எல் கே சொன்னது…

@ஸ்ரீராம்
ஹை. இது சூப்பர் ஐடியா. இனி எல்லோரும் இப்படி பண்ணிடலாம்

எல் கே சொன்னது…

@குமார்
நன்றி

@கோவை
நாங்களும்தான்.

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) சொன்னது…

ha ha good one...ingayum nelama appadi thaan irukku... kodumai

ஹேமா சொன்னது…

என்ன...எல்லா இடமும் ஒரே வெங்காய வாசனை !

vanathy சொன்னது…

வெங்காய பதிவு நல்லா இருக்கு.

பத்மநாபன் சொன்னது…

வெங்காயத்துக்கு இனி தங்காயாம் பெயர் மாற்ற வேண்டியது தான்.

ஆமினா சொன்னது…

கடவுளே!!!

பேங்க்ல உள்ள பணம்லாம் இதுலேயே செலவாகிடும் போலயே!!!

அதுக்கப்பறம் வீட்டை வித்து காட்டை விக்கிற லெவலுக்கு போயிடுவேன் போலயே....

ஸாதிகா சொன்னது…

//philosophy prabhakaran said...
ஒரு பத்து வருஷம் கழிச்சு இதெல்லாம் படிச்சா ஜோக்கே கிடையாது.// அது ரொம்ப ஜாஸ்திதான்.ஐந்தே வருடம் போதும்.

எல் கே சொன்னது…

@கல்பனா

:)

எல் கே சொன்னது…

@அப்பாவி
நீ இட்லி செஞ்சு சமாளிச்சுடுவ , நாங்க ??

எல் கே சொன்னது…

@ஹேமா
அபப்டி ஆகி போச்சு நிலைமை

எல் கே சொன்னது…

@வாணி
:))

எல் கே சொன்னது…

@பத்மநாபன்

அண்ணா இல்லை தங்கம் இனி வெங்கம் என்றழைக்கப் படும்

எல் கே சொன்னது…

@ஆமி
அங்கயுமா ???

@சாதிகா
அக்கா என் இப்படி பயமுறுத்தறீங்க ??

Matangi Mawley சொன்னது…

photo pottathukku thanks! kannaala paaththukka thaan venum inime polirukku! :)

அன்னு சொன்னது…

நல்ல பதிவு கார்த்திண்ணா, சிரிக்கிறதா அழுகறதான்னுதான் தெரியலை. தமிழ்னாட்டில் மட்டுமல்ல, ஒரிசாவிலும் இதே கதைதான். எங்க மாமியார் வீட்டில் பருப்பு கடைசல் வார்ம் முழுவதும், வாரத்தின் ஒரு நாளில் அரிசி, சாம்பார், பொரியல் என்றும் சாப்பிட வேண்டிய நிலமை. இப்படியே நிலமை சென்றால் என்ன செய்வது என்றுதான் புரியவில்லை. :(

kunthavai சொன்னது…

ha..ha... எதை வாங்க போனாலும் கண்ணீர் தான் வருது.