டிசம்பர் 19, 2010

பாரதியார் பாடல்கள்

காலத்தால் அழிக்க  முடியாத பாரதியார் பாடல்களில் எனக்குப் பிடித்த ஒரு சிலப் பாடல்களின் காணொளியை இங்கு இணைத்திருக்கிறேன். இது கடந்த வாரமே வந்திருக்கவேண்டியது. ஊரில் இல்லாததால் இன்று பதிவிடுகிறேன்.

ஆசை முகம் மறந்து போச்சே


ஆசை முகம் மறந்து போச்சே -இதை
யாரிடம் சொல்வேனடி தோழி
நேசம் மறக்கவில்லை நெஞ்சம் - எனில்
நினைவு முகம் மறக்கலாமோ

சுட்டும் விழி சுடர் தான்


சுட்டும் விழி சுடர் தான் - கண்ணம்மா
சூரிய சந்திரரோ

வட்ட கரிய விழி - கண்ணம்மா
வானக் கருமை கொல்லோ


வந்தே மாதரம் என்போம்

இதற்கு இரண்டு காணொளிகளை இணைத்துள்ளேன். முதலாவது பாரதியாரின் குடும்ப உறுப்பினர்கள் பாடியது. இரண்டாவது, பதிவுலக பெரியவர்கள் ஆர்வீஎஸ்,ஸ்ரீராம்,பத்மநாபன், தக்குடு ஆகியோரின் பேவரைட் நித்யஸ்ரீ அவர்கள் பாடியது.ஒன்று பட்டால் உண்டு வாழ்வே - நம்மில்
ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே
நன்றிது தேர்ந்திடல் வேண்டும் - இந்த
ஞானம் வந்தாற்பின் நமக்கெது வேண்டும்


தொன்று நிகழ்ந்த தனைத்தும் உணர்ந்திடு


 முப்பதுகோடி முகமுடை யாள்உயிர்
மொய்ம்புற வொன்றுடையாள் - இவள்
செப்பு மொழிபதி னெட்டுடை யாள் எனிற்
சிந்தனை ஒன்றுடையாள்.


அன்புடன் எல்கே

32 கருத்துகள்:

பால் [Paul] சொன்னது…

நல்ல தொகுப்பு.. :)

சைவகொத்துப்பரோட்டா சொன்னது…

ம்ம்...பாரதி ஸ்பெஷல்ஸ், தொகுப்பிற்கு நன்றி கார்த்திக்.

தேவன் மாயம் சொன்னது…

கலக்குங்க!

ரிஷபன் சொன்னது…

ஆஹா.. அருமையான தொகுப்பு. கேட்க தெவிட்டாத பாடல்கள்.

RVS சொன்னது…

பாரதி பாடல்கள் என்றுமே கேட்க கேட்க இனிப்பவை. அதிலும் நித்யஸ்ரீயின் கச்சேரி சூப்பரோ சூப்பர். ;-)

Geetha6 சொன்னது…

super collections.

Jaleela Kamal சொன்னது…

மிக அருமையான தொகுப்பு

அமைதிச்சாரல் சொன்னது…

நல்ல தொகுப்பு..

பிரபு எம் சொன்னது…

ரொம்ப அற்புதமான தொகுப்பு நண்பா..
மிக்க நன்றி பகிர்வுக்கு :)
பொக்கிஷப் படுத்தி வைத்துக்கொள்வோம்...
உன்னிகிருஷ்ணனின் பாரதியார் கலெக்ஷன் குறிப்பிடத்தக்கது.........
ரொம்ப லயிச்சுக் கேட்பேன் அடிக்கடி இரவில்.....

தக்குடுபாண்டி சொன்னது…

கம்பீரமான பாரதியின் பாடல்கள் நித்யஷ்ரீயோட 'கனீர்' குரல்ல கேக்கர்து தனி அழகு தான்!...:)

asiya omar சொன்னது…

மிக மிக மிக நன்றி எல்.கே.சங்கீத சீசனில் எங்களுக்கும் அழகிய இசை விருந்து படைத்து மனசை நெகிழச் செய்து விட்டீர்கள்.அருமையான பகிர்வு.

பதிவுலகில் பாபு சொன்னது…

நல்ல தொகுப்பு..

சே.குமார் சொன்னது…

அருமையான தொகுப்பு.

ஸ்ரீராம். சொன்னது…

பிரியா சிஸ்டர்ஸ் பாடல் அருமை. சிடியில் கேட்டது. உன்னி கிருஷ்ணன் சினிமா பாடல்களை நான் ரசிப்பதில்லை. இது போன்ற பாடல்கள் விரும்பிக் கேட்பேன். நித்யஸ்ரீ பாடல்கள் எப்பவுமே அருமை. நீங்கள் எப்பவுமே முதலில் வந்து படித்து கமெண்ட் செய்து விடுகிறீர்கள் நான் எப்பவுமே லேட்.

Lakshmi சொன்னது…

கார்த்திக் மிகவும் அருமையான பதிவு.பாரதியார் பாடல்கள் என்றுமேஇனிமைதான். அதுவும் யூ ட்யூபுடன் பதிவுபோட்டிருப்பது இன்னமும் அருமை

LK சொன்னது…

@ஸ்ரீராம்

அண்ணா இதில் என்ன இருக்கு. நமக்கு இருக்கும் நேரத்தை பொருத்து அமைகிறது . எனக்கும் உன்னியோட சினிமா பாடல்கள் பிடிக்காது.

நித்யஸ்ரீ மூவர் கூட்டணிக்காக போட்டது

LK சொன்னது…

பின்னூட்டம் இட்ட அனைவருக்கும் நன்றி

Harini Sree சொன்னது…

Awesome! :)

vgr சொன்னது…

very good collection. quite popular songs too. nice. thanks for sharing.

ஹேமா சொன்னது…

கேட்டேன் கேட்டேன் எல்லாக் காணொளிகளையும்.
ஸ்தம்பித்துப்போனேன் ஒரு கணம் !

philosophy prabhakaran சொன்னது…

என்ன நண்பரே... மார்கழி மாத ஸ்பெஷலா....

தாமதமான பின்னூட்டத்திற்கு மன்னிக்கவும்... எனக்கு எப்போதுமே பின்னிரவுகளில் பின்னூட்டம் போடுவதே வழக்கம்...

சுசி சொன்னது…

நல்ல பகிர்வு கார்த்திக்.

வந்தே மாதரம்.. தலைமுறைப் பாடல்.. மெய்சிலிர்த்துப் போச்சு..

Porkodi (பொற்கொடி) சொன்னது…

Super!!! =)

apram, kaalathal azhikka or alikka? :)

LK சொன்னது…

@கேடி
எப்படி பார்த்தாலும் சரிதானே ? இனிமேல வரும் காலத்திலும் இது போல் பாடல்கள் வராது தானே (எப்படி எல்லாம் சமாளிக்க வேண்டி இருக்கு )

LK சொன்னது…

@பிரபாகரன்
பாரதியார் ஸ்பெசல் .. போன வாரமே போட்டு இருக்கணும். ஊர்ல இல்லை அதனால் ஒரு வாரம் தாமதம்

LK சொன்னது…

நீங்க போட்ட பின்னிரவு இல்லைங்க. விடியல் காலை

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நல்ல பகிர்வு கார்த்திக். நன்றி.

கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…

நல்ல விசயம் கார்த்திக் ...

கோவை2தில்லி சொன்னது…

எல்லா பாடல்களுமே இனிமையானவை. நல்ல தொகுப்பு.

பத்மநாபன் சொன்னது…

பாரதியின் பிறந்த நாள் நினவுக்கு பாடல்கள் அமர்க்களமாக போட்டு அசத்தி விட்டீர்கள்..பாரதி மன்றத்தின் சார்பாக நன்றி...
நித்யஸ்ரீ ரசிகர் மன்றத்தின் சார்பாகவும் நன்றி...

அப்பாவி தங்கமணி சொன்னது…

//சுட்டும் விழி சுடர் தான் - கண்ணம்மா
சூரிய சந்திரரோ//
எனக்கு இது ரெம்ப பிடிச்ச பாட்டு... நினைவு படுத்தினதுக்கு தேங்க்ஸ்... Good post

அப்பாவி தங்கமணி சொன்னது…

//சின்னஞ்சிறு வயதில் எனக்கோர் சித்திரம் தோணுதடி//

This I like the most of all from Bharathiar...