டிசம்பர் 08, 2010

பதிவுத் திருட்டு

தமிழ் பதிவுலகம் வளர  வளர , பதிவுத் திருட்டும் வளர ஆரம்பித்துள்ளது. சென்ற மாதத்தில் சகோதரி ஜலீலா அவர்களின் பதிவு திருடப்பட்டுள்ளது என்று போட்டிருந்தார்.எனதுக் கவிதைகள் சிலது கூட திருடப்பட்டு இருந்தது.  இப்பொழுது நிலா ரசிகனின் கவிதைகள் . சமீபத்தில்தான் இவரது கவிதைத் தொகுப்பு வெளியாகி உள்ள நிலையில் இந்த செயல் கண்டிப்பாக அவரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது என்பதில் எந்த ஐயமும் இல்லை.

நம் பதிவை படிக்கும் நண்பர்கள் அதை பல இடங்களில், கூகிள் பஸ் ,குழுமங்கள் மற்றும் மெயில் மூலம் பலரிடம் பகிர்ந்துக் கொள்கின்றனர். ஆரம்பத்தில் பதிவின் லின்கோடு செல்லும் மெயில் எதோ ஒரு இடத்தில் லிங்க் துண்டிக்கப்பட்டு அதில் உள்ள தகவல்கள் மட்டும் மேலும் பலருக்கு செல்கின்றன. இது இந்த மாதிரி திருடுவோருக்கு வசதியாக போகிறது. நீங்கள் கேட்டால் ஒரே வார்த்தையில்  மெயிலில் வந்தது என்று சொல்லிவிடுவர். இதை நாம் தவிர்க்க இயலாது .

இந்திய இணைய பாதுகாப்பு சட்டம் , இந்த மாதிரி விஷயங்களில் என்ன சொல்கின்றன என்று சட்ட வல்லுனர்கள் யாராவது  ஒரு பதிவு போட்டால் பரவாயில்லை . மேலை நாடுகளில் இது மிகப் பெரிய குற்றம். இங்கு இன்னும் இத்தகைய விழிப்புணர்வு இன்னும் வரவில்லை. அடுத்தவர்களின் உழைப்பை திருடுவது தவறு என்று பலருக்கும் தெரிவது இல்லை. பலரும் இந்த மாதிரி வேறு ஒரு பதிவில் இருப்பதை எடுத்து போடுவது தவறு, எளிதில் கண்டுபிடிக்கமுடியும் என்பதை உணர்வது இல்லை. அதுதான் முதல் காரணம்.


உங்கள் பதிவில் இருக்கும் தகவல்களை உங்கள் பதிவிற்கு லிங்க் கொடுக்காமல் தனது சொன்ன பதிவு என்று சொல்லி கொள்வோரிடம் முதலில் பின்னூட்டம் மூலமோ இல்லை மெயில் மூலமோ சொல்லிபாருங்கள். அப்பொழுதும் அவர்கள் கேட்கவில்லை என்றால் நீங்கள் கூகிளிடம் புகார் செய்யலாம். அதற்கு கீழ்க்கண்ட சுட்டிக்கு செல்லவேண்டும். அதில் கேட்டிருக்கும் தகவல்களை நிரப்பி சப்மிட் செய்தால், கூகிள் தகவல்களை சரிபார்த்து தேவையான நடவடிக்கையை எடுக்கும். அதற்கான சுட்டி  கீழே உள்ளது. இதை அந்தந்த பதிவின் உரிமையாளரே செய்ய முடியும்.


http://www.google.com/support/blogger/bin/request.py?contact_type=blogger_dmca_infringment

 இந்திய இணைய பாதுகாப்பு சட்டம் என்ன சொல்கின்றது என்று தெரிந்தப் பின் அதை பற்றி தனியாக ஒரு பதிவு போடுகிறேன்.


பி .கு : இப்பொழுது சோதனை முயற்சியாக எனது பதிவில் காப்பி பேஸ்ட் செய்வதை தடை செய்யும் ஒரு கோட் சேர்த்துள்ளேன். நண்பர்கள் எனதுப் பதிவில் காப்பி செய்ய முடிகிறாதா என்று பார்த்து சொல்லவும் அதை வீட்டில் ஒரு முறை சோதனை செய்து பார்த்துவிட்டு நாளை பதிவில் இடுகிறேன்

அன்புடன் எல்கே

53 கருத்துகள்:

ராமலக்ஷ்மி சொன்னது…

நல்ல இடுகை.

Chitra சொன்னது…

பயனுள்ள தகவல் தந்து இருக்கீங்க.... மிக்க நன்றிங்க....

வெறும்பய சொன்னது…

அவசியமான இடுகை..

அவனவன் எழுதுறதுக்கு என்ன பாடு படுரான்னு அவனுக்கு தெரியும்.. இங்கே வந்து நகம் நோகாம நத்தெடுக்கிறாங்க.. என்னைக்கு தான் திருந்த போரானுன்களோ..

புவனேஸ்வரி ராமநாதன் சொன்னது…

தகவலுக்கு நன்றி.

Nithu Bala சொன்னது…

very useful info..thx for sharing.

துளசி கோபால் சொன்னது…

Book marked this post.

Thanks a lot.

Madhavan Srinivasagopalan சொன்னது…

I din't worry much, b'cos I am not writing anything much worth. Nor I am professional blogger.

அமைதிச்சாரல் சொன்னது…

இந்தமாதிரி ஆட்களை என்ன செஞ்சா தகும்??.. ராப்பகலா யோசிச்சு, ஒரு கவிதையோ, கட்டுரையோ எழுதினா அதை மேலலுங்காம சுட்டுட்டுப்போயி தன் பேரை போட்டுக்கறாங்களே :-((((

nis சொன்னது…

பயனுள்ள தகவல்.

சீமான்கனி சொன்னது…

பயனுள்ள தகவல் தந்து இருக்கீங்க...நன்றி எல்.கே....

Balaji saravana சொன்னது…

உழைப்புத் திருட்டு எப்படி குற்றமோ அது போலவே இந்த கற்பனை / படைப்புத் திருட்டையும் குற்றச் செயல் ஆக்கணும்..

பிரஷா சொன்னது…

மிகவும் பயனுள்ள தகவல் நன்றி சேர்

பெயரில்லா சொன்னது…

அவசியமான இடுகை....LK

கீதா சாம்பசிவம் சொன்னது…

பயனுள்ள தகவல்கள், ரொம்ப நன்றி கார்த்திக், பாதுகாப்புக் குறித்து உங்களுக்குக் கிடைக்கும் தகவல்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தெய்வசுகந்தி சொன்னது…

நல்ல தகவல்!

ஜீ... சொன்னது…

பயனுள்ள தகவல்!

asiya omar சொன்னது…

மிக்க நன்றி எல்.கே.
இரவு பகல் விழித்து சொந்த வேலையை விட்டு கஷ்டப்படுகிறவங்களூக்கு தான் படைப்பின் அருமை புரியும்.காப்பி பேஸ்ட் செய்யாமல் இருக்க ப்ளாக்கில் என்னென்ன தொழில்நுட்பம் இருக்கு என்று தெரிய படுத்தினாலும் மிக நல்லதாக இருக்கும்.

ஸ்ரீராம். சொன்னது…

இதைத் தடுப்பது மிக கடினம். சில ப்ளாக்குகளில் காப்புரிமை அல்லது பதிவுரிமை பெற்றது என்ற வரிகளைப் படித்த ஞாபகம் இருக்கிறது. திருடப் பட்டிருக்கிறது என்பதை எப்படி கண்டு பிடிப்பது? அப்பாதுரை ஒரு சமயம் எங்கோ வெளிநாட்டில் இணையப் பக்கங்களில் உள்ளவை துண்டுப் பிரசுரங்கள் போல அச்சிடப் பட்டு விற்கப் படுவதாகச் சொல்லியிருந்தார். விழிப்புணர்வு ஏற்பட்டு நல்ல பழக்கங்கள் தானாய் வளர வேண்டும். "திருடனாய்ப் பார்த்து திருந்தா விட்டால்..."கதைதான்.

பிரியமுடன் ரமேஷ் சொன்னது…

நல்ல பதிவு நண்பரே... கூடவே பாதுகாப்புக்கான வழியையும் சொல்லியிருப்பது சிறப்பு... பயனுள்ள தகவல்..

komu சொன்னது…

ஐயோ, இப்படில்லாம்கூட விஷயங்கள் நடக்கிரதா?

Lakshmi சொன்னது…

இப்படி எதுவும் நடக்ககூடடதுன்னா நாம
எப்படி பாதுகாப்பா இருக்கனும்?

நாகராஜசோழன் MA சொன்னது…

நல்ல தகவல் எல்கே. மேலும் தகவல்கள் கிடைத்தால் பகிருங்கள்.

Sriakila சொன்னது…

நம்முடைய அனுபவங்களே ஆயிரமாயிரம் கதை, கவிதைகளைக் கொடுக்கும். இதற்கு ஏன் திருட வேண்டும் என்றுதான் தெரியவில்லை.

GEETHA ACHAL சொன்னது…

Thanks for sharing the links with us karthik...It so useful and needed currently...

karthikkumar சொன்னது…

தகவல் நன்று. இது போன்ற தகவல்கள் தான் தற்போது தேவை போல

அருண் பிரசாத் சொன்னது…

திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது...

பிரியமுடன் ரமேஷ் சொன்னது…

@ Sriakila said...

//நம்முடைய அனுபவங்களே ஆயிரமாயிரம் கதை, கவிதைகளைக் கொடுக்கும். இதற்கு ஏன் திருட வேண்டும் என்றுதான் தெரியவில்லை. //

எழுத்துத் திறமை எல்லோருக்கும் வாய்ப்பதில்லை நண்பரே.. அதனால்தான் இது போல் அடுத்தவன் மூளையைக் குடைந்து புகழ் பெற நினைக்கிறார்கள் சிலர்..

வித்யா சொன்னது…

:(

பயனுள்ள தகவல்கள்..

ஆமினா சொன்னது…

பயனுள்ள தகவல்

அதை பற்றிய தகவல்களையும் விரைவில் வெளியிடுங்கள்

Arun Prasath சொன்னது…

அவசியமான தகவல் தான்.. ஆனா தல! காப்புரிமை கெடைக்காம சட்டம் ஒன்னும் பண்ண முடியாதுன்னு நெனைக்கறேன.அத பத்தி தெரிஞ்சிட்டு சொல்லுங்க ப்ளீஸ்

வெங்கட் நாகராஜ் சொன்னது…

பயனுள்ள தகவல் கார்த்திக். பதிவுத் திருட்டு நடந்து கொண்டு இருப்பதைத் தடுக்க என்ன வழி? தெரிந்தவர்கள் யாரும் பதிவு போட்டால் நன்றாக இருக்கும். பகிர்வுக்கு நன்றி.

சுந்தரா சொன்னது…

அவசியமான இடுகை கார்த்திக்.

மிக்க நன்றி!

தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது…

சரியான நேரத்தில் சரியான தகவல் கார்த்திக்...

சைவகொத்துப்பரோட்டா சொன்னது…

//இந்திய இணைய பாதுகாப்பு சட்டம் என்ன சொல்கின்றது என்று தெரிந்தப் பின் அதை பற்றி தனியாக ஒரு பதிவு போடுகிறேன்.//

எதிர்பார்த்து காத்திருக்கிறேன், நன்றி கார்த்திக்.

Geetha6 சொன்னது…

useful!thanks..

பார்வையாளன் சொன்னது…

useful entry..

write more

பத்மநாபன் சொன்னது…

அப்படி திருடி போடுவதில் என்ன திருப்தியோ அவர்களுக்கு .... இதை அடக்கியோ திட்டியோ சரி செய்யமுடியாது ..அவர்களுக்கே உறுத்தி ஓயும்வரை காத்திருக்க வேண்டியதுதான்

தமிழ் உதயம் சொன்னது…

தேவையான தகவல். இப்படி திருடி ஒரு பதிவு போடுவதால் அவர்களுக்கு என்ன தான் கிடைக்க போகிறது.

ப.செல்வக்குமார் = வடை (வாங்கி) வங்கி சொன்னது…

//உங்கள் பதிவில் இருக்கும் தகவல்களை உங்கள் பதிவிற்கு லிங்க் கொடுக்காமல் தனது சொன்ன பதிவு என்று சொல்லி கொள்வோரிடம் முதலில் பின்னூட்டம் மூலமோ இல்லை மெயில் மூலமோ சொல்லிபாருங்கள். /

நானும் எனது பதிவுகள் சிலவற்றை http://www.copyscape.com/
இந்த தளத்தில் இட்டு தேடினேன் .. சில பதிவுகள் திருடப்பட்டிருந்தன ..!
ஆனா என்ன நான் எழுதுறது மொக்கைதானே ..!!

விக்கி உலகம் சொன்னது…

தற்போதைய சூழ்நிலையில் இந்த பதிவு பகின்றதட்க்கு நன்றி

பதிவுலகில் பாபு சொன்னது…

கண்டிக்கப்பட வேண்டிய விசயம்.. நம்முடைய உழைப்பைப் பிறர் திருடுவது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று..

நல்ல பதிவு..

சே.குமார் சொன்னது…

என்னைக்கு தான் திருந்த போரானுன்களோ...

சென்னை பித்தன் சொன்னது…

இப்போதுதான் பார்த்தேன்-என் இடுகை
http://shravanan.blogspot.com/2009/08/blog-post.html
எந்தவிதமான லின்க்கும் இன்றி எடுக்கப்பட்டிருக்கிறது
கீழ்க்கண்ட பதிவில்-
http://stavelmurugan.blogspot.com/2009/10/blog-post.html.
உபயோகமான தகவலுக்குநன்றி-ப.செல்வக்குமாருக்கும்!

கோவை2தில்லி சொன்னது…

பயனுள்ள தகவல்.

LK சொன்னது…

@ராமலக்ஷ்மி
நன்றி மேடம்

@சித்ரா
நன்றி

@ஜெயந்த்
திருந்த மாட்டாங்க தம்பி

@புவனேஸ்வரி
நன்றிங்க

@நிது
நன்றி

@துளசி
டீச்சர் வருகைக்கு நன்றி

@மாதவன்
அவ் இதுக்கு நீங்க என்னை இரண்டு அடி அடிக்கலாம். நானும் தொழில் முறை பதிவர் இல்லை

@சாரல்
என்ன பண்ண சகோ. ஒருவர் போனால் இன்னொருவர் என்று வந்துக் கொண்டே இருக்கின்றனர்

@நிஸ்
நன்றி

@சீமான்கனி
நன்றி சார்

@பாலாஜி
உண்மை

@பிரஸா
நன்றி மேடம்

@கல்பனா
நன்றிங்க

@கீதா
எனக்குத் தவகவல் கிடைத்தால் பதிவிடுகிறேன்

@சுகந்தி
நன்றி

@ஜி
நன்றி

@ஆசியா
உண்மை சகோ. நெறைய கஷ்டப்பட்டு தகவல் சேகரித்து எழுதுகிறோம். இப்படி சுட்டா என்ன பண்ண ? அதற்கு என்ன பண்ண முடியும் என்றுத் தெரிய வில்லை. முயன்று பார்கிறேன்

@ஸ்ரீராம்
அண்ணா உண்மைதான். ரொம்ப கஷ்டம். நீங்கள் சொன்ன முறை கூட திருடியப் பிறகு கண்டுபிடிக்கவே உதவும்

@ரமேஷ்
நன்றி

@கோமு
ஆமாம்

@லக்ஷ்மி
முயன்று கொண்டிருக்கிறேன் . விடை கிடைத்தவுடன் பகிர்ந்து கொள்கிறேன்

@எம் எல் ஏ
சொல்கிறேன் நண்பா

@அகிலா
உண்மைதான்
@கீதா
உண்மையில் சமையல் பதிவு வைத்திருப்பவர்கள்தான் பாதிக்கப் படுகின்றனர்

@கார்த்திக் குமார்
நன்றி

@அருண்
:(

@வித்யா
நன்றி

@ஆமினா
கண்டிப்பா

@அருண்
ஹ்ம்ம் அதற்க்குத்தான் சிலத் தளங்கள் உள்ளனவே

@வெங்கட்
முயற்சி செய்கிறேன்

@சுந்தரா
நன்றி

@தேனம்மை
நன்றி

@சை.கொ. ப

நன்றி

@கீதா

நன்றி

@பார்வையாளன்
நன்றி

@பத்மநாபன்
உண்மைதான்

@தமிழ் உதயம்
புகழ் பெயர்

@செல்வா
திருடியப் பிறகுதான் கண்டுபிடிக்க இயலும்

@விக்கி
நன்றி

@பாபு
நன்றி

@குமார்
:(
@பித்தன்
நன்றி சார்

@கோவை
நன்றி

vanathy சொன்னது…

பயனுள்ள தகவல்.

RVS சொன்னது…

பிறர் உழைப்பில் சுகம் காணும் ஈனப்பிறவிகள். ஒன்றும் செய்வதற்கில்லை. இணையத்தில் கடை விரித்துவிட்டால் டைப் டைப்பாக திருடுவார்கள் எல்.கே. ஒன்றும் செய்ய முடியாது. திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது.

எனினும் மிகவும் பயனுள்ள பதிவு. நன்றி ;-)

ஆனந்தி.. சொன்னது…

very useful post karthik!!

சௌந்தர் சொன்னது…

பி .கு : இப்பொழுது சோதனை முயற்சியாக எனது பதிவில் காப்பி பேஸ்ட் செய்வதை தடை செய்யும் ஒரு கோட் சேர்த்துள்ளேன். நண்பர்கள் எனதுப் பதிவில் காப்பி செய்ய முடிகிறாதா என்று பார்த்து சொல்லவும் அதை வீட்டில் ஒரு முறை சோதனை செய்து பார்த்துவிட்டு நாளை பதிவில் இடுகிறேன்

அன்புடன் எல்கே/////காபி செய்ய முடிகிறது ஆனால் கீ போர்டை பயன் படுத்தி காபி செய்ய முடிகிறது

அப்பாவி தங்கமணி சொன்னது…

Wow...nice option this is...(but ennoda blog ellam yaarum thiruda poradhillainu veyyi...hum... )

Useful post

sakthi சொன்னது…

நல்ல பகிர்வு எல் கே

dondu(#11168674346665545885) சொன்னது…

இல்லையே காப்பி பேஸ்ட் செய்ய முடிகிறதே.

மேலும், அப்படியே பதிவை காப்பி செய்ய முடியாவிட்டாலும், கமெண்ட் போடுவதற்காக இருக்கும் பக்கத்தில் ஒரிஜினல் போஸ்டை வரவழைத்து ஜாம் ஜாம் என காப்பி செய்யலாம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

எல் கே சொன்னது…

இப்பொழுது அந்த கோடை(code ) எடுத்துவிட்டேன். நான் பதிவிலே சொன்னவாறு முழுவதும் தடுக்க இயலாது