Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Gradient Skin

Gradient_Skin

இந்த வலைப்பதிவில் தேடு

பிரபலமான இடுகைகள்

Breaking News

latest

நான் ரசித்த சிலப் பாடல்கள்

1. விஷமக்கார கண்ணன்   ஒரு சிலப் பாடல்கள் , வரிகளுக்காகப் பிடிக்கும். ஒரு சிலப் பாடல்கள் அதை பாடியவர்களுக்காகப் பிடிக்கும்.ஊத்துக்காடு அவர்க...

1. விஷமக்கார கண்ணன் 
ஒரு சிலப் பாடல்கள் , வரிகளுக்காகப் பிடிக்கும். ஒரு சிலப் பாடல்கள் அதை பாடியவர்களுக்காகப் பிடிக்கும்.ஊத்துக்காடு அவர்களின் செஞ்சுருட்டி ராகத்தில் அமைந்த   இந்தப் பாடல் வரிகளுக்காகவும் இதை பாடிய அருணா சாய்ராம் அவர்களுக்காகவும் பிடிக்கும். பலர் இந்தப் பாடலை பாடியிருந்தாலும், அருணாவின் மேனரிசம் நம்மை இந்தப் பாட்டோடு ஒன்ற வைத்து விடும். கண்ணனின் குறும்புத்தனங்களை அழகாக விவரிக்கும் இந்தப் பாடல், அருணா சாய்ராமின் குரலில்



 2 . மாடு மேய்க்கும் கண்ணே

மாடு மேய்க்க செல்லும் கண்ணனை தடுக்கும் யசோதைக்கும் கண்ணனுக்கும் நடக்கும் விவாதமாய் இந்தப் பாட்டு. நம் கண்முன்னே கண்ணனையும் ,யசோதையும் கொண்டு வந்து நிறுத்திவிடுவார் அருணா. இந்தப் பாடலை இயற்றியவர் யார் என்று யாரவது சொல்லுங்களேன்



3 . குறை ஒன்றும் இல்லை

ஒரு சிலப் பாடல்கள் ஒரு சிலரின் குரலில் மட்டுமே கேட்கப் பிடிக்கும். அப்படி பட்ட ஒரு சிலப் பாடல்களில் ஒன்று  குறை ஒன்றும் இல்லை . ராஜாஜி அவர்கள் எழுதிய ராகமாலிகா ராகத்தில் அமைந்த இந்தப் பாடல், மறைந்த எம்.எஸ் அவர்களின் குரலில் மட்டுமே கேட்கப் பிடிக்கும். என்ன ஒரு குரல் ....



 4 . கல்யாணப் பாடல்கள்

இந்த வாரும் ஒரு கல்யாணம் சென்ற பொழுது கேட்டது. உடனே தேடி பிடித்தேன். எதிர்பார்க்காமல் இன்னொரு பாட்டும் இணைத்து கிடைத்தது. இரண்டாவது பாடலை மறக்காமல் கேளுங்கள். கண்டிப்பா எல்லோருக்கும் பிடிக்கும்



 பி.கு . இந்த முறை சென்னையில் திருவையாறு விழாவில் எஸ்.பி.பி. கர்நாடக கச்சேரி செய்யப் போகிறார்.

அன்புடன் எல்கே

44 கருத்துகள்

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

நான் அவ்வளவாக இந்த நிகழ்சிகள் பார்ப்பதில்லை.. ஆனால் இந்த பாட்டுக்களை கேட்க்கும் பொது அதோடு நானறியாமல் மனம் ஒன்றி போய் விடும்...

இசைக்கு மயங்காதவர் இவ்வுலகில் யார்...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! சொன்னது…

தொகுப்பு அருமை...மிக நல்ல பாடல்கள்.. "குறை ஒன்றும் இல்லை"... பாடலை கேட்கும் போது மனதில் ஒருவகை அமைதி கிடைக்கும்....

Chitra சொன்னது…

weekend ம் பதிவா? usually, miss ஆயிடும். இன்று செக் செய்ததால், நல்ல பாடல்கள் கண்டேன். நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

இசைக்கு மயங்காதவர் இவ்வுலகில் யார்...?

நல்ல தொகுப்பு.

Unknown சொன்னது…

எனக்கு சங்கீதம் தெரியாது ஆனால் குறையொன்றுமில்லை....மிகப் பிடிக்கும்.

சேலம் தேவா சொன்னது…

நல்ல தொகுப்புண்ணே..!! அடிக்கடி இந்த மாதிரி போடுங்க..!! கேட்டு ரசிக்கறோம்..!!

Ananthi (அன்புடன் ஆனந்தி) சொன்னது…

"குறை ஒன்றும் இல்லை"...

My alltime favorite of MSS.. Thanks

nis சொன்னது…

இப்படியான பாடல்களை களை Tv யில் போட்டால் பார்க்க பொறுமை இல்லை.
இங்கு parallel ஆ கேட்க முடிந்தது . நன்றி

Unknown சொன்னது…

Super! :-)

சைவகொத்துப்பரோட்டா சொன்னது…

பகிர்வுக்கு நன்றி கார்த்திக்.

Simulation சொன்னது…

//"மாடு மேய்க்கும் கண்ணே" - இந்தப் பாடலை இயற்றியவர் யார் என்று யாரவது சொல்லுங்களேன்//

இந்தப் பாடலை இயற்றியவரும் ஊத்துக்கடு வெங்கடகவி அவர்கள்தான். இது 'காவடிச்சிந்து' என்ற அமைப்பில் இயற்றப்பட்டது.

- சிமுலேஷன்

எல் கே சொன்னது…

@ஜெயந்த்

நானும் டிவியில் பார்ப்பது இல்லை... கணினிதான்

எல் கே சொன்னது…

@பிரசா
முற்றிலும் உண்மை. அந்தப் பாடல் கேட்டால் மனதில் நிம்மதி வரும்

எல் கே சொன்னது…

@சித்ரா
ஹ்ம்ம் நன்றி .

Asiya Omar சொன்னது…

குறையொன்றுமில்லை பாட்டு மட்டும் கேட்டிருக்கிறேன்.பாடல்கள் அருமை.

எல் கே சொன்னது…

@குமார்
உண்மைதான் நன்றி

எல் கே சொன்னது…

@கலாநேசன்

எனக்கும் அவ்வளவா தெரியாது, ரசிப்பேன் அவ்வளவுதான்

எல் கே சொன்னது…

@சேலம் தேவா
ஹ்ம்ம் கண்டிப்பா போடறேன்

பெயரில்லா சொன்னது…

"குறை ஒன்றும் இல்லை"..எனக்கு ரொம்ப பிடிக்கும் ...
பகிர்வுக்கு நன்றி LK

எல் கே சொன்னது…

@ஆனந்தி
பலருக்கும் அதி மிகப் பிடித்த பாடல். நன்றி ஆனந்தி

எல் கே சொன்னது…

@கங்கா

நன்றி

எல் கே சொன்னது…

@ஜீ
நன்றி

எல் கே சொன்னது…

@சை.கொ.ப

நன்றி

எல் கே சொன்னது…

@சிமுலேசன்

ரொம்ப நன்றிங்க. எனக்கு சிறய தெரியலை அதுதான் கேட்டேன்

பெயரில்லா சொன்னது…

இந்த முறை சென்னையில் திருவையாறு விழாவில் எஸ்.பி.பி. கர்நாடக கச்சேரி செய்யப் போகிறார்///
இதுக்காகவே சென்னை வரணும் LK

Harini Nagarajan சொன்னது…

kurai ondrum illai mattrum kalyana paadalgal ennudaya favorite kooda! :)

Ram சொன்னது…

அருமையான பாடல்கள்..
குறை ஒன்றும் இல்லை-என்றுமே எனது அலைபேசியின் அழைப்பொலி..

இங்கும் வாருங்கள் நண்பரே...
http://kirukaninkirukals.blogspot.com/
http://ram-all.blogspot.com/

வெங்கட் நாகராஜ் சொன்னது…

”குறையொன்றுமில்லை” எனக்கு மிகவும் பிடித்த பாடல். ”மாலை மாற்றினாள்” பாட்டு என் கல்யாண வீடியோவில் இருக்கிறது :) நல்ல பாடல்களை பகிர்ந்ததற்கு நன்றி.

சங்கரியின் செய்திகள்.. சொன்னது…

சுவை மிகுந்த தேவ ராகங்களைக் கொடுத்து இந்த ஞாயிறை புனிதமாக்கி விட்டீர்கள் எல்.கே. நன்றி.....குறையொன்றும் இல்லை தேவகானம்.....தன்னையே மறக்கச் செய்யும் பாடல், ஆயிரம் முறை கேட்டாலும் அலுக்காது.....

Gayathri சொன்னது…

விஷமகார கண்ணன் என்ற பாடலும் , குறை ஒன்றும் இல்லை என்ற பாடலும் எனக்கு மிக மிக பிடித்த ஒன்று.

பகிர்ந்தமைக்கு நன்றி ப்ரோ

Geetha6 சொன்னது…

very nice LK!

GEETHA ACHAL சொன்னது…

அருமையான பாடல்கள் தொகுப்பு...அதுவும் குறை ஒன்றும் இல்லை ...பாடல் விரும்பாதவர்கள் யாரும் இருக்கா மாட்டார்கள்...அந்த பாடலில் தான் எவ்வளவு ஈர்ப்பு...அக்ஷ்தாவிற்கு அடிக்கடி போட்டு காட்டும் பாட்டில் இதுவும் ஒன்று...பகிர்வுக்கு நன்றி...

Angel சொன்னது…

thanks for sharing kurai ondrum illai song lk.
its my all time favorite.

ஸ்ரீராம். சொன்னது…

//"இந்த முறை சென்னையில் திருவையாறு விழாவில் எஸ்.பி.பி. கர்நாடக கச்சேரி செய்யப் போகிறார்"//

அடேடே...மறக்காமல் பார்க்க வேண்டும். எந்த சேனலில் வரும்?
சிலப் பாடல்கள் என்று வருமா? சில பாடல்கள்தான் சரி என்று தோன்றுகிறது.
கல்யாணப் பாடல்கள் ஒரு முழு செட்டே இருக்கிறதே. (நான் இங்கு கேட்கவில்லை. பஃபர் ஆக நேரம் ஆகும் என்று!)

ADHI VENKAT சொன்னது…

அனைத்துப் பாடல்களுமே அருமையான பாடல்கள். எனக்கு பிடித்தது என்றால் அது “விஷமக்காரக் கண்ணன்”, ”குறையொன்றுமில்லை”.

Menaga Sathia சொன்னது…

nice collections,like it!!

Madhavan Srinivasagopalan சொன்னது…

நாலு பாடலுமே ரொம்ப நல்ல பாடல்கள்..
எனக்கும் பிடிக்கும்.. நன்றி.

Porkodi (பொற்கொடி) சொன்னது…

அருமையான பாடல்கள்னு நானெல்லாம் சொல்லவே கூடாது.. ரசிச்சேன்! எஸ்.பி.பி கச்சேரியா!!! கலக்குங்க!

பெயரில்லா சொன்னது…

நல்ல செலக்சன் LK!

R.Gopi சொன்னது…

ஆஹா...

திவ்யமான செலக்‌ஷன் பாடல்கள்...

கேட்க கேட்க திகட்டாத வரிசையில் வரும் பாடல்கள் இவை...

மியூசிக் அகாடமியில் கச்சேரிக்கு வரும் கூட்டத்தை விட அறுசுவை நடராஜன் கேண்டீனுக்கு கூட்டம் ஜாஸ்தி வரும்...

குறையொன்றுமில்லை. சொன்னது…

கார்த்திக் எல்லாபாடல்களும் ஏ.ஒன். ரொம்ப ரசிச்சுக்கேட்டேன். குறையொன்றுமில்லை கேட்டு கண்களில் கண்ணீரே வந்தது. விஷமக்கார கண்ணா, மாடுமேய்க்கும் கண்ணே அருணாசாய்ராம் குரலில் யசோதையாகவே மாறிட்டப்ல இருக்கு.
ஒரு 50 வருஷம் முன்ன என் கல்யாணத்திபோது, என் சித்திப்பாட்டி
மாலை மாற்றினாள்கோதை,போஜனம்செய்ய வாருங்கோ எல்லாம் பாடினா. அதன் பிறகு இங்கதான் கேட்டேன். நன்றி கார்த்திக்.

vanathy சொன்னது…

எல்லா பாடல்களும் அருமை, கார்த்திக்.

பத்மநாபன் சொன்னது…

பாடல்கள் அனைத்தும் அருமை ...அருணா சாய்ராம் கண்ணனை கொண்டுவந்து நிறுத்தி விட்டார் ...எம். ஸ் அம்மாவின் குறை ஒன்றுமில்லை எவ்வளவு ஆயிரம் முறை கேட்டாலும் இனிமை குறைவதில்லை .கடைசியில் போட்ட இரண்டு கல்யாண பாடல்களும் புதிதாக கேட்கிறேன் .ஜோர் ....

பின்தொடர்ந்தாலும் உங்கள் பதிவுகள் , என் டேஸ்போர்டில் அப்டேட் ஆவதில்லை ...காரணம் தெரிந்தால் சொல்லுங்கள்...

பத்மநாபன் சொன்னது…

நிங்க சொன்ன மாதிரி வெளிய வந்துட்டு உள்ள போனவுடன் அப்டேட்ஸ் வர ஆரம்பிச்சிருச்சு...