டிசம்பர் 26, 2010

ஜகத்குரு -6- நதி



ஸுக்ருதே (அ)திக்ருதே பஹுதா பவதோ
பவிதா ஸமதர்சனலாலஸதா
அதிதீனமிமம் பரிபாலய மாம்
பவ சங்கர தேசிக மே சரணம்!!

ஆஹா, தங்களின் எங்கும் பிரும்மமே என்ற கொள்கையே எத்தனைவிதமான புண்ணியங்களைச் செய்ததால் தங்களுக்கு ஏற்பட்டிருக்கும்?? எங்கும் நிறைந்திருப்பது அந்தப் பிரம்மமே தான் என்ற இத்தகைய எண்ணம் ஏற்பட எத்தகைய புண்ணியங்களைச் செய்யவேண்டும்?? அப்படி ஒன்றுமே செய்யாமல் மிகவும் பராதீனனாக, ஏழையாக இருக்கும் என்னை உங்கள் கருணை ஒன்றே காப்பாற்ற வேண்டும். ஹே சங்கர குருவே, தங்கள் திருவடி சரணம்!
*********************************************************************************************
தாயுடன் கழிந்த நாட்களில், அவளுக்கு புரியும் படியான எளிதான வகையில் தத்துவங்களை சொல்லி கொடுத்து வந்தார் சங்கரர். இப்படி இருக்கையில் ஒரு நாள், அவரது தாய் தூங்குகையில் அவரது கனவில் சங்கரர் சந்நியாசம் பெற்றுப் போவது போல் ஒரு நிகழ்வு வந்தது.

அதில் இருந்து அவர் மனம் சஞ்சலம் அடைந்தவாறு இருந்தது. இத்தகைய சஞ்சலத்துடன் அவர் ஒரு நாள் குளிக்க செல்லுகையில் சேற்றில் கால் வைத்து விழுந்து காலில் பலத்த அடி பட்டுவிட்டது.

"இதனால் இனி ஆற்றில் குளிக்கவும் செல்ல முடியாதே என்று சங்கரனிடம் புலம்பினாள்."

தன் தாய் மனம் கலங்குவதை கண்ட சங்கரர் நதியை வணங்கி ,மனதினால் தன் வீட்டருகே ஓடுமாறு வேண்டினார்.

அடுத்த நாள் விடியலில் , பூர்ணா நதி சங்கரரின் வீட்டு கொல்லைப்புறம் வழியாக தன் போக்கை மாற்றி ஓட ஆரம்பித்தது. இதையும் தன் தாயிடம் தான் வேண்டியதாக சொல்லாமல், அவளின் பக்திக்கும் இறை வெளிப்பாட்டுக்கும் கிடைத்த பரிசாகத்தான் சங்கரர் கூறுகிறார்.

இந்த நிலையில் காலடிக்கு புதிதாய் மூன்று பிராமணர்கள் வருகிறார்கள். அவர்கள், சங்கரரின் வீட்டை விசாரித்து வந்து அவரை காண வருகிறார்கள். அப்பொழுது சங்கரர் த்யானத்தில் இருக்கிறார். அவரைக் கண்ட அந்தப் பிராமணர்கள் தங்களுக்குள் "வேலை வந்துவிட்டது " என்று பேசிக் கொள்கிறார்கள்.

அதைக் கேட்டத் தாயின் மனம் திடுக்கிடுகிறது.

-தொடரும்

பி.கு : தோடகாஷ்டகம் தரவிறக்கம் செய்யும் லிங்க் ஸ்ரீராம் அண்ணா கேட்டிருந்தார். அவருக்காக இந்த லிங்க்


அன்புடன் எல்கே

18 கருத்துகள்:

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நல்ல பகிர்வு. தோடகாஷ்டகம் சுட்டி கொடுத்ததற்கு நன்றி.

komu சொன்னது…

ஜகத்குரு நல்ல பக்ர்வு.னிறைய விஷயங்கள் தெரிந்துகொள்ள முடிகிரது.

Gayathri சொன்னது…

என் அப்பா சொல்ல சங்கரரை பற்றி சிலது கற்றுகொண்டேன்
இப்பொழுது நீங்க சொல்லி மீதி தெரிஞ்சுகறேன்
மிக்க நன்றி ப்ரோ .தொடருங்கள்

பெயரில்லா சொன்னது…

நல்ல பகிர்வு:)
பகிர்வுக்கு நன்றி LK

RVS சொன்னது…

எளிமை..இனிமை...அருமை....
குருவருள் திருவருள் எல்லோருக்கும் நிரம்ப வாழ்த்துக்கள்.
நன்றி எல்.கே. ;-)

பத்மநாபன் சொன்னது…

ஜகத்குருவின் செய்திகள் அனைத்தையும் விடாமல் மிக சுவராஸ்யமாக பதித்து வருகிறிர்கள் ,,வாழ்த்துக்கள்.

சங்கரரை வேண்டும் பக்தரின் பாடல் விளக்கமும் சிறப்பாக வந்து கொண்டிருக்கிற்து...

ஸ்ரீராம். சொன்னது…

நன்றி LK, தரவிறக்கிக்கொண்டேன்.

எளிமையாக சொல்கிறீர்கள்...தொடருங்கள்.

Balaji saravana சொன்னது…

மிகச் சிறப்பா இருக்கு LK!

அமைதிச்சாரல் சொன்னது…

சுட்டி கொடுத்ததுக்கு நன்றி..

Harini Sree சொன்னது…

Intha nathi information enakku puthusu! :)

சே.குமார் சொன்னது…

மிகச் சிறப்பா இருக்கு LK.

கோவை2தில்லி சொன்னது…

நல்ல பகிர்வு. சென்ற முறை கேரளா சென்ற போது இந்த புண்ணிய நதியான பூர்ணா நதியை படகில் கடந்து சென்றோம்.

asiya omar சொன்னது…

எனக்கு இது எல்லாமே புதுசு,தெரிந்து கொண்டேன்.

சுசி சொன்னது…

நல்ல பகிர்வு கார்த்திக்.

பெயரில்லா சொன்னது…

Good Post.
Please visit my blog at
http://srinivasgopalan.blogspot.com

I have started a series on Soundarya Lahiri. Please go over it and give feedback.

Srinivas Gopalan
NJ

ஜிஜி சொன்னது…

சங்கரரை பற்றி நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டேன். பகிர்வுக்கு நன்றி.
தொடருங்கள்.

சென்னை பித்தன் சொன்னது…

சுவாரஸ்யம்.
லின்க்குக்கும் நன்றி.

எம் அப்துல் காதர் சொன்னது…

உங்களுக்கு அவார்ட் கொடுத்திருக்கிறேன் பெற்றுக் கொள்ளுங்கள். நன்றி!!
http://mabdulkhader.blogspot.com/2010/12/blog-post_26.html#