டிசம்பர் 20, 2010

ஜகத்குரு -4-கனகதார ஸ்தோத்திரம்

பவதா ஜனதா ஸுகிதா பவிதா
நிஜபோதவிசாரண சாருமதே
கலயேச்வர ஜீவ விவேகவிதம்
பவ சங்கர தேசிகமே சரணம்!!

பொருள்  :

தாங்களே பரப்பிரும்மம். அதனால் தாங்கள் தெளிந்த ஞானத்தை உடையவராய் இருக்கிறீர்கள். தங்கள் ஞான போதனை எனக்கு மட்டுமின்றி உலகத்து மக்களுக்கும் பயன்பட்டு அதனால் க்ஷேமம் உண்டாகும். என்னை விவேகம் உள்ளவனாக என்னை ஜீவனை அறிந்தவனாக ஈஸ்வரனை அறிந்தவனாக மாற்றுங்கள். ஹே, சங்கர குருவே, தாங்கள் தான் எனக்குச் சரணம்!

*********************************************************************************************
"எவ்வளவு நாள் அவர் குருகுலத்தில் இருந்தார் ?  எத்தனை வருடம் குருகுல வாசம் கட்டாயம் ?"

"பொதுவா குருகுல வாசம் முடிக்க பல வருடங்கள் ஆகும். குருகுலம் முடிச்சு ஒருவர் திரும்பினால் அடுத்து உடனடியா அவனுக்குத் திருமணம் செய்து வச்சிடுவா அந்த காலத்தில். ஆனால் ,சங்கரர் குருகுலத்தில் இருந்தது ஒரே ஒருவருடம்தான். கத்துக்க வேண்டிய அனைத்தையும் கத்துண்டார் . பிறவி ஞானி அல்லவா அவர் ? "

"முடிச்சிட்டு வர வழில மதிய உணவுக்கு வழக்கம் போல ஒரு வீட்டில் பிக்ஷை கேக்கறார். அது ஒரு ஏழை பிராமணரோட வீடு. அவாளே சாப்பாட்டுக்கு கஷ்டப்பட்டுக்கிட்டு இருக்கா. இந்த நிலைல இவர் போய் எனக்கு பிக்ஷை  குடுன்னு கேட்கிறார்.இப்ப மாதிரி அந்த காலத்தில் வீட்டில் எதுவும் இல்லைன்னு சொல்லமாட்டா . இருக்கறதுல கொஞ்சம் பகிர்ந்து கொடுப்பா. வீட்டுக்கு ஒரு பிரம்மச்சாரி வந்து பிக்ஷை கேட்டா கண்டிப்பா கொடுக்கணும்.

இதனால் வீட்டில் இருந்த அந்த அம்மாக்கு என்ன பண்றதுன்னு புரியலை. எதாவது இருக்கான்னு தேடறாங்க. கடைசியா ஒரே ஒரு நெல்லிக் கனி  மட்டும் இருக்கு. இதுவாது இருக்கேன்னு ஒரு பக்கம் சந்தோசம், இதையா கொடுப்பது என்று தயக்கம் ஒரு பக்கம். ஒருமாதிரி மனதை தேத்திக்கிட்டு , வாசலுக்கு போய் அங்க நிக்கற சங்கரனின் பிக்ஷை வோட்டில் அந்த நெல்லிக்கனியை இடுகிறார்.

அந்த அம்மாவைப் பார்க்கிறார் . அவருடைய உடையும்,அவர் கொடுத்த நெல்லிக்கனியும் அவர்களது ஏழ்மையை சங்கரருக்கு உணர்த்துகிறது. பொதுவா அந்த காலத்தில் பிராமணர்கள் யாரிடமும் சென்று எனக்கு பொருள் இல்லியோ. உதவி பண்ணுங்கன்னு கேட்கமாட்டாங்க. அவர்கள் யாரிடமும் சம்பளத்திற்கு வேலையும் செய்யமாட்டார்கள். வேத பாராயணமே அவர்கள் வேலை. அதற்கு சன்மானம் யாரவது கொடுத்தல் பெற்றுக் கொள்வார்கள். அவர்களை சென்று எனக்கு இவ்வளவு கொடு என்று கேட்க மாட்டார்கள்.
இந்த ஏழை பிராமணனும் அப்படிப்பட்ட ஒருவரே.

சங்கரருக்கு மனசு கேட்கலை. வேதப் பாராயணம் பண்றவர் வீட்டில் இப்படி ஒரு நிலையா என்று ? உடனே அங்கே லக்ஷ்மியை மனசில எண்ணி லக்ஷ்மியை வேண்டி "கனகதார ஸ்தோத்திரம்" பாடுகிறார். அவர் பாடிய உடனே தங்க நெல்லிக் கனிகளாய் வானில் இருந்து விழுகிறது"

கனகதார ஸ்தோத்திரம்

அங்கம் ஹரே:புனகபூஷன
மாச்ரயந்தீ
ப்ருங்காங்கனேவ முகலாபரணம்
தமாலம்
அங்கீக்ரு தாகில விபூதி
ரபாங்கலீலா
மாங்கல்ய தாஸ்து மம
மங்கல தேவதாயா:

மொட்டுக்களால் அலங்கரிக்கப்பட்டு காட்சி தரும் மரத்தைப் பொன்வண்டு மொய்த்துக் கொண்டு இருப்பதைப் போல, பரந்தாமனின் அழகிய மார்பை உள்ளம் மகிழ மெய் மறந்து பார்த்துக் கொண்டிருக்கும் ஸ்ரீதேவியின் அருட்கண்கள் சகல மக்களுக்கும் சகல செல்வங்களையும் வழங்குமாறு வேண்டுகிறேன்."

-தொடரும்
அன்புடன் எல்கே

30 கருத்துகள்:

சுசி சொன்னது…

நல்லா எழுதி இருக்கிங்க கார்த்திக்.

Balaji saravana சொன்னது…

பள்ளிப் பருவத்தில ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அம்மா எங்கள கனகதாரா ஸ்தோத்திரம் ( தமிழ் வெர்சன், கவியரசு கண்ணதாசன் எழுதியது ) பாடச் சொல்வாங்க. இப்போ அதை ஞாபகப் படுத்திட்டீங்க LK! :)
தொடர் அருமையா போகுது LK :)

RVS சொன்னது…

கனகதாரா ஸ்லோகம் விளக்கம் அருமை.
ஜகத்குரு தொடர் அட்டகாசமா போகுது. வாழ்த்துக்கள். ;-)

வித்யா சொன்னது…

கனகதார ஸ்தோத்திரம் சின்ன வயதில் அம்மா மற்றும் அத்தையுடன் சேர்ந்துப் படித்த ஞாபகம். இப்போ சுத்தம்...

அமைதிச்சாரல் சொன்னது…

நல்லாருக்கு..

siva சொன்னது…

இவை பற்றி தெரியாது
இருந்தாலும்
மிக நன்றாக இருக்கிறது
உங்கள் பகிர்வுக்கு நன்றி

வெங்கட் நாகராஜ் சொன்னது…

கனகதாரா ஸ்தோத்திரம் பற்றிய உங்கள் பகிர்வு அருமை. தொடருங்கள், தொடர்கிறேன்....

ஸ்ரீராம். சொன்னது…

தொடருங்கள் கார்த்திக்.

கோவை2தில்லி சொன்னது…

கனகதாரா ஸ்தோத்திரம் காலையில் கேட்பதற்கு அவ்வளவு இனிமையாய் இருக்கும். இன்னும் மனனம் செய்ய முடியவில்லை. தொடர் அருமையாய் போய்க் கொண்டிருக்கிறது.

LK சொன்னது…

@சுசி

நன்றி

LK சொன்னது…

@பாலாஜி
இப்பவும் நீங்க சொல்லலாமே ?? நல்ல பலன் தரும்

LK சொன்னது…

@ஆர்வீஎஸ்

நன்றி

LK சொன்னது…

@சாரல்

நன்றி

@சிவா
நன்றி நண்பா

LK சொன்னது…

@வெங்கட்

நன்றி


@ஸ்ரீராம்
நன்றி

LK சொன்னது…

@கோவை

கொஞ்சம் வார்த்தைகள் கடினாமாய் இருக்கும்

LK சொன்னது…

பின்னூட்டம் இட்ட அனைவருக்கும் நன்றி, இந்தத் தொடருக்கு பின்னூட்டங்கள் குறைந்துகொண்டே வருவது ஒருவிதத்தில் கவலையாக இருந்தாலும், இவ்வளவு பேராவது படிக்கிறார்களே என்று மகிழ்ச்சியாக உள்ளது

Lakshmi சொன்னது…

மிகவும் அருமையான விஷயங்கள் பகிர்ந்துகொள்கிரீர்கள்.படிக்கவே சந்தோஷமா இருக்கு.

தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது…

கனகதாரா ஸ்தோத்திரத்துடன் விளக்கம் அருமை கார்த்திக்

பத்மநாபன் சொன்னது…

ஆதி சங்கரரின் வாழ்க்கை வரலாற்றை கேள்வி பதில் பாணியில் சிறப்பாக சொல்லி வருகிறிர்கள் ..

வடமொழி உச்சரிப்பு சரியாக வராத எங்களை போன்றவர்களுக்கு கூட, கனகதாரா ஸ்தோஸ்திரமும் ,பஜகோவிந்தமும் கேட்க கேட்க காதுக்கு பழகி நாக்கும் பழகி விடும்..மனதிற்கு மிக இதமாக இருக்கும்...

Harini Sree சொன்னது…

அருமை! :) ஒரு ஒரு போஸ்ட்-உம் அடுத்து என்ன அடுத்து என்னனு கேக்க வெக்கற மாறி இருக்கு.

சென்னை பித்தன் சொன்னது…

இப்பதிவைப் படிப்பவர் வீட்டிலெல்லாம், பொன் மழை பெய்ய மஹாலட்சுமி அருள் புரியட்டும்.

ஸ்ரீராம். சொன்னது…

//"இந்தத் தொடருக்கு பின்னூட்டங்கள் குறைந்துகொண்டே வருவது ஒருவிதத்தில் கவலையாக இருந்தாலும்"//

அபபடி இருக்காது. எல்லோரும் படிப்பார்கள். இதில் எதைக் குறித்து கமெண்ட் செய்வது என்று தயக்கம் இருக்கும். வரிகளை எடுத்துப் போட்டு கமெண்ட் செய்வதோ, எதிர் வாதமோ வாய்ப்புக் குறைவு. எனவே ஒன்றும் சொல்லாமல் போய் விடுவார்கள் என்று நினைக்கிறேன்.

LK சொன்னது…

@லக்ஷ்மி

நன்றிமா

LK சொன்னது…

@தேனம்மை

ரொம்ப நன்றி சகோதரி

LK சொன்னது…

@பத்மநாபன்
அண்ணா, பஜ கோவிந்தம் உச்சரிப்பு கொஞ்சம் சுலபம். கனகதார கொஞ்சம் கஷ்டம். சொல்ல சொல்ல பழகிவிடும்

LK சொன்னது…

@பித்தன்
சார் ரொம்ப நன்றி. அந்த கனகதார ஸ்தோத்திரம் சொன்னாலே போதும் வீட்டில் சுபிக்ஷம் நிலவும்

LK சொன்னது…

@ஸ்ரீராம்

அண்ணா இருக்கலாம். நன்றி

LK சொன்னது…

@ஹரிணி

நன்றி

virutcham சொன்னது…

முழு ஸ்தோத்திரத்தின் அர்த்தத்தையும் கொடுக்கலாமே.

எல் கே சொன்னது…

@விருட்சம்

சார் நான் இன்னும் அந்த அளவுக்கு வரலை. இந்தத் தொடர் முடிந்தவுடன் கண்டிப்பா அதற்க்கு முயற்சி செய்கிறேன்