Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Gradient Skin

Gradient_Skin

இந்த வலைப்பதிவில் தேடு

பிரபலமான இடுகைகள்

Breaking News

latest

ஜகத்குரு -1 காலநிலை

கணபதி வணக்கம் "கஜானனம் பூதகணாதி சேவிதம் கபித்த ஜம்பூ பல சார பக்ஷிதம் உமா சுதம் சோக விநாச காரணம் நமாமி விக்னேஷ்வர பாத பங்கஜம் யான...

கணபதி வணக்கம்

"கஜானனம் பூதகணாதி சேவிதம்
கபித்த ஜம்பூ பல சார பக்ஷிதம்
உமா சுதம் சோக விநாச காரணம்
நமாமி விக்னேஷ்வர பாத பங்கஜம்

யானை முகத்தானும், பூத கணங்கள் முதல் அனைவராலும் போற்றப்படுபவனும், விளாம்பழம் நாவற்பழம் முதலிய பழங்களின் சாற்றை விரும்பி அருந்துபவனும், உமையின் மைந்தனும், கவலைகளை நீக்குபவனும் ஆன விக்னேஷ்வரனின் திருவடித் தாமரைகளை வணங்குகிறேன்"

குரு வந்தனம்

குரவே சர்வ லோகானாம் பீஷஜே பவ ரோகினாம்
நிதயே சர்வ வித்யானாம் தக்ஷிணா மூர்த்தயே நமஹ!

அனைத்துலகங்களுக்கு குருவானவரும், அஞ்ஞான நோய்களுக்கு மருந்தானவரும் சகல வித்தைகள் நிறைந்த நிதி புதையலும் ஆனவரான தென்திசை நோக்கி அமர்ந்தவரே உம்மை வணங்குகின்றேன் .



சுந்தரம் , அரசு வேலையில் இருந்து ஓய்வுப் பெற்று சென்னையின் புறநகர் பகுதியில் வசித்து வந்தார். திருமணம் ஆகி சில வருடங்களிலேயே மனைவி இறந்தப் பின், மறுமணம் செய்துக் கொள்ளாமல் ஆன்மீகத்தில் கவனம் செலுத்த துவங்கினார். வயதின் காரணமாய் உதவிக்கு தன் தூரத்து உறவினன் ஆன வெங்கட்டை வீட்டில் உதவிக்கு வைத்துள்ளார். வெங்கட் இன்றைய தலைமுறையை சேர்ந்தவன் ஆனாலும் ஆன்மீகத்தில் ஈடுபாடு உள்ளவன். எனவே தனக்கு வரும் சந்தேகங்களை சுந்தரத்திடம் கேட்டு தெளிவு பெறுவான் . அப்படிதான் அன்றும் .

"மாமா ! இப்ப நடக்கறதெல்லாம் பார்த்தால் எங்கே நமது பழமையான ஹிந்து மதம் கொஞ்சம் கொஞ்சமா அழிவு அடைந்து வருதோன்னு பயமா இருக்கு . இதை மாற்ற முடியாதா ?"

"வெங்கட், இப்படி நீ பயப்படறது அனாவசியம். யாரால் தோற்றுவிக்கப் பட்டது என்று அறியப்படாத அளவு தொன்மை உடைய ஹிந்து மதத்தை அவ்வளவு எளிதில் அழித்து விட முடியாது . அழியவும் அழியாது. சில சமயம் ஹிந்து மதத்திற்கு நெருக்கடி அதிகமாக இருப்பது போல இருக்கும். அந்த மாதிரி சமயத்தில் எல்லாம், புத்தணர்ச்சி பெற்று மீண்டும் பழையப் பொலிவோடு மீண்டு வந்திருக்கிறது.

ஆதி சங்கரர் பிறக்கறதுக்கு முன்னாடி , இப்படித்தான் ஹிந்து மதம் தனது செல்வாக்கை கொஞ்சம் கொஞ்சமாய் இழந்துகிட்டு இருந்துச்சி . அவர் வந்ததுக்குப் பின்னாடிதான் இதை மாற்றினார் "

"மாமா ! கொஞ்சம் விரிவா சொல்லுங்களேன் . அப்ப என்ன மாதிரி பிரச்சனைகள் இருந்தது. இப்ப இருக்கற மாதிரி அப்பவும் நாத்திகம் பேசறவா இருந்தாளா ?"

"நாத்திகம் பேசறவா எல்லா காலத்திலும் இருக்கறாங்க. சொல்லப் போனா ராமர் காலத்திலும் ஜாபாலி என்பவர் நாத்திகம் பேசி இருக்கார். எல்லா விதக் கருத்துக்களை கொண்டவர்களையும் அரவணைச்சு போவதுதான் ஹிந்து மதத்தின் சிறப்பு . இன்னும் விரிவா சொல்றேன் கேளு "


"பண்டைய காலத்தில் சிறப்போடு இருந்த ஹிந்து மதம், நடுவில் வந்த சில குழப்பங்களால் தனது பெருமையை இழக்க ஆரம்பித்தது. அதே சமயத்தில் பவுத்தமும், சமணமும் புகழ் பெற்று விளங்கியது. அதே போல், ஹிந்து மதத்தின் பிரிவுகளாக காளாமுகமும்,காபாளிகமும் புகழ் பெற துவங்கியது "

"மாமா, இந்த காளாமுகம், காபாலிகம் இதெல்லாம் என்ன ? இதுவரைக்கும் நான் கேள்விப் பட்டது இல்லையே ?"

"சுருக்கமா சொல்லனும்னா, இவை இரண்டும் வாழ்வு நிலையில்லாதது என்று சொல்லி, இறைவனை அடைய நரபலி கொடுத்தாலும் தவறில்லை என்று சொன்னவை. இவர்கள் பெரும்பாலும் சிவனை தங்களது இஷ்ட தெய்வமாகக் கொண்டு பல வகை தாந்த்ரீக வெளிப்பாடுகளை மேற்கொண்டவர்கள் . இந்த காளாமுகம்,காபாலிகம் போன்றவற்றின் வருகையும், அவர்களது வழிபாடு முறையும் மக்களை ஹிந்து மதத்தில் இருந்து சமண,பவுத்த மதங்களின் பக்கம் திருப்பியது. ஏறக் குறைய இந்தக் காலகட்டத்தில்தான் சங்கரர் பிறந்தார். ஹிந்து மத கோட்பாடுகளில் முக்கியமான அத்வைத சித்தாந்தத்தை நிலை நிறுத்தினார். "

"மாமா, முதலில் அத்வைதம்,த்வைதம், விசிஷ்டாத்வைதம் பத்தி சொல்லுங்கோ "

த்வைதம் மத்வரால் உபதேசிக்கப் பட்டது. துவி என்றால் இரண்டு. ஜீவாத்மாவும், பரமாத்மாவும் வெவ்வேறு எனது இவரது கருத்து.

அத்வைதம் சங்கரால் உபதேசிக்கப் பட்டது. அ + துவைதம் = இரண்டற்றது. அதாவது ஜீவாத்மா ,பரமாத்மா இரண்டும் இரண்டல்ல , ஒன்றுதான் .

விசிஷ்டாத்வைதம், ராமானுஜரால் உபதேசிக்கப் பட்டது. அதாவது, ஜீவாத்மா, பரமாத்வாவில் இருந்து பிறந்தது. பரமாத்மாவே நிலையானது என்பது இதன் கருத்து."

"ஓ ! இப்ப புரிஞ்சது . சரி சங்கரரை பற்றி சொல்லுங்கோ."

"இன்னிக்கு இது போதும். ஒரே நாள்ல எல்லாம் சொன்னா நீ புரிஞ்சிகிறது கஷ்டம். மீதம் அப்புறம் சொல்றேன் "

- தொடரும்

48 கருத்துகள்

RVS சொன்னது…

சுந்தரம் மாமா வெங்கட்டுவுடன் உரையாடுவது போன்று அமைத்திருக்கிறீர்கள். நன்று.
காபாலிகர்கள் நெற்றியில் கபாலம் தரிக்கும் பழக்கம் உடையவர்கள். ;-) ;-)

வெங்கட் நாகராஜ் சொன்னது…

ஓ, இன்று வெள்ளிக்கிழமை. ஜகத்குரு - 1படித்துவிட்டேன். அடுத்த பகுதிக்கு வெயிட்டிங்.

தக்குடு சொன்னது…

//ஒரே நாள்ல எல்லாம் சொன்னா நீ புரிஞ்சிகிறது கஷ்டம். மீதம் அப்புறம் சொல்றேன் "// ha ha

That is true also!!..:)

ADHI VENKAT சொன்னது…

ரொம்ப நல்லா துவக்கியிருக்கீங்க. அடுத்த சொற்பொழிவுக்காக காத்திருக்கிறேன்.

பெயரில்லா சொன்னது…

அருமையா இருக்கு கார்த்தி ..உன்னால் எப்பிடி இப்பிடியெல்லாம் எழுத முடிகிறது ?சந்தோஷமா இருக்கு ..நன்றி ...சந்தியா

பெயரில்லா சொன்னது…

"நண்பர் வட்டம் 217 "அதுக்கும் வாழ்த்துக்கள் கார்த்தி ...சந்தியா

பெயரில்லா சொன்னது…

அருமை ,,,,
படித்து விட்டேன்
அடுத்த பதிவிற்கு ஆவலாய்

பத்மநாபன் சொன்னது…

எல் .கே ...ஜகத்குரு தொடரை கேள்வி பதிலும் , சந்தேக விளக்கமுமாக அமைத்தது சிறப்பாக இருக்கிறது.. எல்லார்க்கும் பிடிக்கும் ..வாழ்த்துக்கள்

சாந்தி மாரியப்பன் சொன்னது…

அருமையாக ஆரம்பமாகியிருக்கிறது தொடர். காபாலிகர்களைப்பற்றி சிவகாமியின் சபதம் நாவலில் கூட படித்த ஞாபகம்.

பவள சங்கரி சொன்னது…

நலல ஆரம்பம். தொடருங்கள் எல்.கே

Geetha Sambasivam சொன்னது…

ஆரம்பமே அமர்க்களம், வாழ்த்துகள்.

Gayathri சொன்னது…

அழகா நெறைய விஷயங்கள் சொல்றீங்க.நெறைய தெரிஞ்சுக்க முடியுது,சேகரம அடுத்த பாகம் எழுதுங்க

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

நல்ல ஆரம்பம்.நெறைய விஷயங்கள்

'பரிவை' சே.குமார் சொன்னது…

அருமையா இருக்கு.

Menaga Sathia சொன்னது…

அருமையான பகிர்வு!! நீங்கள் குறிப்பிட்டிருக்கும் கணபதி மந்திரம் தினமும் நான் சொல்லிவிட்டுதான் மற்ற பதிகங்களைப் ப்டிப்பேன்...

SCCOBY BLOGSPOT.IN சொன்னது…

ஆன்மிகம் பற்றிய தங்களது ஜகத்குரு உபதேசங்கள் மற்றும் அவர் இந்து மதத்திற்கு ஆற்றிய அருந்தொண்டு ஆரம்பம் மிக அருமை தொடர்கிறேன் அடுத்த பதிவிற்கும்
licsundaramurthy@gmail.com
www.salemscooby.blogspot.com

எல் கே சொன்னது…

@ஆர்வீஎஸ்

நன்றி நண்பரே. அது மட்டும் இல்லை, கழுத்தில் மண்டை ஒட்டு மாலையும் அணிந்து இருப்பார்

எல் கே சொன்னது…

@வெங்கட்
நன்றி

எல் கே சொன்னது…

@தக்குடு

நன்றி

எல் கே சொன்னது…

@கோவை

நன்றிங்க

எல் கே சொன்னது…

@சந்த்யா
எல்லாம் நீங்கள் கொடுக்கும் ஊக்கம்தான்

எல் கே சொன்னது…

@கல்பனா

நன்றி

எல் கே சொன்னது…

@பத்மநாபன்
இப்படி சென்றால் அனைவரது சந்தேகங்களையும் பதிவில் கொண்டுவந்து விடலாம் என்று எண்ணினேன் . நன்றி அண்ணா

எல் கே சொன்னது…

@சாரல்

நன்றி. அதே .. அதில் கல்கி அவர்களை பற்றி சொல்லி இருப்பார்கள் ...

எல் கே சொன்னது…

@சங்கரி
நன்றிங்க

எல் கே சொன்னது…

@கீதா

மாமி உங்கள் பாராட்டு என்னை மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது நன்றி

எல் கே சொன்னது…

@காயத்ரி

நன்றி. திங்கள் அடுத்த பதிவு வரும்

எல் கே சொன்னது…

@ஜெயந்த்
நன்றி

எல் கே சொன்னது…

@குமார்
நன்றி

எல் கே சொன்னது…

@மேனகா
மகிழ்ச்சி,.

எல் கே சொன்னது…

@moorthi

nandri

எல் கே சொன்னது…

@மாற்று கருத்து உள்ள நண்பர்களுக்கு

உங்களுக்கு இந்தப் பதிவு பிடிக்கவில்லை என்றால் நாகரீகமான முறையில் உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள் அதற்க்கு பதில் அளிக்கப்படும். அநாகரீகமான முறையில் பின்னூட்டம் வந்தால் வெளியிடப்படாது

சுந்தரா சொன்னது…

நல்ல தகவல்கள் கார்த்திக். பேச்சு நடையில் அழகா சொல்லியிருக்கீங்க.

குறையொன்றுமில்லை. சொன்னது…

மிகவும் அருமையா இருக்கு கார்த்தி.இன்னிக்குத்தான் உன்ப்ளாக்வந்துபாத்தேன். கோமு சொன்னா. தொடர்ந்து நல்லபதிவுகளாககொதுத்துவர வாழ்த்துக்கள்.

Unknown சொன்னது…

பிரசென்ட் போட்டுக்கங்க எல்.கே.. :-)

ஹேமா சொன்னது…

நானும் படிக்கிறேன் கார்த்திக் !

ஸ்ரீராம். சொன்னது…

நல்லதொரு தொடர். தொடருங்கள்.

Harini Nagarajan சொன்னது…

Really Nice read! Kathai vadivula irukkarathu innum arumai! :)

vanathy சொன்னது…

present, Sir.

dheva சொன்னது…

அத்வைதம் பற்றி அறிய ஆவல் ....

வரப்போகும் பதிவுகளுக்காக வெயிட்டிங்...!

Unknown சொன்னது…

ஓ! இதுதானா அந்த மந்திரத்தோட(கஜானனம்) பொருள்! நன்றி!

சென்னை பித்தன் சொன்னது…

சிறிது கனமான விஷயத்தை எளிதாக்கித் தந்திருக்கிறீர்கள். தொடரட்டும் இந்நற்பணி .

பெயரில்லா சொன்னது…

ரொம்ப சிறப்பா ஆரம்பிச்சிருக்கீங்க LK
நிறைய தெரிஞ்சுக்க வெய்டிங் :)

எல் கே சொன்னது…

@சுந்தரா
நன்றிங்க


@லக்ஷ்மி
ரொம்ப நன்றிமா. தொடர்ந்து வாருங்கள்

எல் கே சொன்னது…

@பாபு
நன்றி

@ஹேமா

நன்றி


@ஸ்ரீராம்

நன்றி அண்ணா

எல் கே சொன்னது…

@ஹரிணி

நன்றி

@வாணி

:)

@தேவா
ஹ்ம்ம் தொடர்கிறேன்

எல் கே சொன்னது…

@ஜி

ஆமாம்.

@சென்னை பித்தன்
அந்த இறைவனுக்குத்தான் பாராட்டுக்களும் நன்றிகளும்

@பாலாஜி
நன்றி பாலாஜி

aranthairaja சொன்னது…

நல்ல முயற்சி... ஜெகத்குரு தங்களையும் வழிநடத்துவார்.