நவம்பர் 13, 2010

சொந்த மண் XV

தீமிதி பற்றி சென்றப் பகுதியில் இருவர் கேட்டு இருந்தனர். செவ்வாய் பேட்டையில் தீமிதி பழக்கம் இல்லை . குகை மாரியம்மன் கோவிலில் தீ மிதிக்கும் பழக்கம் உண்டு. அதேபோல் நண்பர் ஆரூரான் அவர்கள் வண்டி வேடிக்கை பற்றி சொல்லி இருந்தார்.  குகை பகுதியில் மாரியம்மன் பண்டிகையின் ஒரு பகுதியாக வண்டி வேடிக்கை எண்ணும் நிகழ்ச்சி நடைபெறும்.

இதில் அலங்கார ஊர்திகளும், பல்வேறு கடவுள் வேடம் இட்டவர்களும் அணிவகுப்பாக வருவார்கள் . இந்த நிகழ்ச்சியைக் காண நகரத்தின் பலபகுதியில் இருந்தும் மக்கள் கூடுவார்கள். சுருங்க சொல்லப் போனால், குடியரசு தின அலங்கார ஊர்தி அணிவகுப்பு போல் இருக்கும். இதில் சிறந்த ஊர்திக்கு பரிசும் கிடைக்கும்.

சொல்ல மறந்த சில இடங்கள்/விஷயங்கள்

௧. கோட்டை பெருமாள் கோவில் , இது நகரப் பேருந்தை ஒட்டி அமைந்துள்ள ஒன்று. வைகுண்ட ஏகாதசி அன்று சேலம் நகர  மக்கள் இங்கு குவிவர்.

௨. சென்னைக்கும் சேலத்திற்கும்  ஒரு ஒற்றுமை உள்ளது. இரண்டு நகரங்களிலுமே நதியாய் ஓடி இன்று கழிவு நீர் மட்டுமே செல்லும் சாக்கடையாய் மாறிய ஆறுகள் உண்டு. சென்னைக்கு கூவம் என்றால் சேலத்திற்கு திருமணி முத்தாறு. ஒரு காலத்தில் நல்ல தூய நீர் ஓடு நதியாய் இருந்ததாம். எனது தந்தை சொல்லி கேட்டிருக்கிறேன்.

௩. நான்கு ரோடு அருகே குழந்தை இயேசு பேராலயம் உண்டு.

௪. மிக விரைவில் சேலத்தில் டைடல் பார்க் முழுமை பேரும் என்று எதிர் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அவ்வாறு முடிந்து அங்கு நிறுவனங்கள் இயங்கத் துவங்கினால், சொந்த ஊருக்கே செல்லும் வாய்ப்பு கிடைக்கும் என்ற எண்ணமே இந்த எதிர்பார்ப்பிற்கு காரணம் .

௫. தொடர்ந்து சேலத்திற்கு விமானப் போக்குவரத்து இருந்தால் மிக நன்றாக இருக்கும். துவங்குவதும் பின் நிறுத்துவதுமாக  விளையாடிக் கொண்டுள்ளனர். பாப்போம் எப்பொழுது இதற்க்கு ஒரு முடிவு வருகிறது என்று.

இந்தப் பகுதியுடன் சொந்த மண் தொடர் நிறைவு பெறுகிறது. சேலத்தை பற்றி எனக்குத் தெரிந்த அனைத்து விஷயங்களையும் சொல்லி விட்டேன். தெரியாத விஷயங்கள் ஒரு சில உள்ளன. அவற்றை பற்றி அறிந்து கொண்டப் பின் பிறிதொரு சந்தர்ப்பத்தில் அவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். இந்தப் பயணத்தில் உடன் வந்த அனைவருக்கும் என் நன்றி.

ஏற்காட்டில் இருந்து சேலம் நகரத்தின் அழகிய இரவு நேர தோற்றத்துடன் இந்தத் தொடரை முடித்துக் கொள்கிறேன் ..


அன்புடன் எல்கே

38 கருத்துகள்:

வெங்கட் நாகராஜ் சொன்னது…

சேலத்தைப் பற்றி நிறைய விஷயங்களை இத்தொடரில் தந்ததற்கு நன்றி கார்த்திக். அதற்குள்ளாகவே முடித்து விட்டீர்களே என்ற வருத்தம். எப்போது முடியுமோ அப்போது தொடரவும். வாழ்த்துக்கள்.

சைவகொத்துப்பரோட்டா சொன்னது…

"வண்டி வேடிக்கை" எனக்கு புதிய தகவல்! பயணம் முடிஞ்சிருச்சா!

philosophy prabhakaran சொன்னது…

என்னது...? தொடரை முடித்துக் கொள்கிறீர்களா... நான் இப்போது தான் உங்கள் பதிவுகளை படிக்கவே ஆரம்பித்திருக்கிறேன்... சரி... பிறிதொரு நாளில் பதினைந்து பாகங்களையும் பொறுமையாக உட்கார்ந்து படிக்கிறேன்...

புவனேஸ்வரி ராமநாதன் சொன்னது…

சேலத்தை பற்றி நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டேன். சொந்த ஊருக்கே செல்லும் வாய்ப்பு மிக விரைவில் அமைய வாழ்த்துக்கள்.

கலாநேசன் சொன்னது…

நம்ம ஊர் நினைவுகள் தொடராய் அருமை. விரைவில் முடிந்துவிட்டது.

asiya omar சொன்னது…

தொடர் முழுவதும் தகவல் பரிமாற்றம் அருமை சகோ.

ஸ்ரீராம். சொன்னது…

உங்கள் ஊரைப் பற்றி நன்கு அறியத் தந்தீர்கள். நன்றி.

வித்யா சொன்னது…

நல்லாருந்தது. எனக்கும் சேலம் பக்கம்தான் சொந்த ஊர்:) கள்ளக்குறிச்சி:))

RVS சொன்னது…

ஏர்காட்டிலிருந்தும் உங்கள் பார்வையிலும் சேலம் அருமை.. ;-)

வெறும்பய சொன்னது…

சேலத்தை பற்றி நிறைய விசயங்கள் தெரிந்து கொள்ள முடிந்தது இந்த தொடரால்... நன்றி அண்ணா...

சே.குமார் சொன்னது…

ஊர் நினைவுகள் அருமை.

வானம்பாடிகள் சொன்னது…

நிறைய விஷயங்கள் தெரிஞ்சது. நன்றி.

கோவை2தில்லி சொன்னது…

பல புதிய தகவல்களை தந்தமைக்கு நன்றி. சொந்த ஊரில் பணிபுரியவும் வாழ்த்துக்கள்.

Balaji saravana சொன்னது…

நிறைய தகவல்கள் இந்த தொடர் முழுவதும்.. நன்றி :)

venkat சொன்னது…

தகவல் அருமை.
நன்றி.

LK சொன்னது…

@வெங்கட்
நன்றி. பெரும்பாலான தகவல்களை அளித்துவிட்டேன். ஒரு சில தகவல்களுக்கு ஆதாரம் தேவை படுகிறது. அது கிடைத்தவுடன் மீண்டும் எழுதுகிறேன்

LK சொன்னது…

@சை.கொ. ப

ஒரு முறை வாங்க. போயிட்டு வரலாம்.

LK சொன்னது…

@பிரபாகரன்
நன்றி பாஸ். படிச்சிட்டு சொல்லுங்க

LK சொன்னது…

@புவனேஸ்வரி
நன்றி

LK சொன்னது…

@கலாநேசன்
நன்றி பாஸ். இந்த இடத்தில் கல்கி அவர்களின் வரி "ஏன் முடித்தீர்கள் என்று கேட்பதே இந்தத் தொடரின் வெற்றி. ஏன் இன்னும் முடிக்கலைன்னு கேட்க வைப்பதற்கு முன் முடித்துவிடவேண்டும் "

LK சொன்னது…

@ஆசியா

நன்றி சகோ

LK சொன்னது…

@ஸ்ரீராம்

நன்றி அண்ணா

LK சொன்னது…

@வித்யா
அடடே. நல்லது.. நன்றிங்க

LK சொன்னது…

@ஆர்வீ எஸ்
நன்றி நண்பரே

LK சொன்னது…

@ஜெயந்த்
நன்றி

LK சொன்னது…

@குமார்
நன்றி

LK சொன்னது…

@பாலா
நன்றி

LK சொன்னது…

@கோவை
நன்றி

LK சொன்னது…

@பாலாஜி
நன்றி நண்பா

LK சொன்னது…

@வெங்கட்

முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

S Maharajan சொன்னது…

ஊர் நினைவுகள் அருமை

Sethu சொன்னது…

உங்கள் சேலம் பயணம் அருமை.

முக்கியமா ஒன்னு குறிப்பிட விரும்புவது, நீங்க சேலம் மாவட்டத்தை ஒட்டியுள்ள கோவில், குளம், சுற்றுலா மையங்களை ஒட்டியே எழுதியுள்ளீர்கள். அடுத்த பகுதியாக அங்குள்ள மக்களின் தொழில், கல்வி, சமூக வாழ்க்கைப் பற்றி தெரிந்து எழுதவும். சேலம், ஈரோடு எல்லாம் சிறுதொழில்களின் உல்லாச பூமி. சேலம் ராஜாஜி, கல்யாணசுந்தரம், மோகன் குமாரமங்கலம் போன்றவர்களை தந்த பூமி.

கரிசல் மண்ணைப் பற்றி நிறையபேர் எழுதியுள்ளனர். வெகு சிலரே சேலம், ஈரோடு மாவட்டம் பற்றி எழுதுகின்றனர். கு.சின்னப்பபாரதி ஒருவர் தான் கொல்லி மலை வாழ் மக்களைப் பற்றி எழுதியவர்.

மேட்டூரில் உருவான தொழிற்சாலைகள், அனல் உற்பத்தி மையம், முன்னாள் ஜனாதிபதி R வேங்கடராமனால் உருவாகப் பட்ட மேட்டூர் சிலிகான், இன்னும் பல உள்ளன.

சேலம் ராகவாச்சாரியார் ஹால், தாரமங்கலம் கோவில், அம்மா பேட்டை, செவ்வாபெட்டையில் உள்ள சிறு தொழில்கள், .....

விபச்சாரத்தினால் சேலம் அடைந்த கெட்ட பெயர், ...

தகவல் சேகரித்து நிறைய எழுத வாழ்த்துகள்.

Sethu சொன்னது…

"ஜனாதிபதி R வேங்கடராமனால் உருவாகப் பட்ட மேட்டூர் சிலிகான்"

சாரி! ஒரு திருத்தம்.

"உருவாகப் பட்ட" - Please read as 'திறந்து வைக்கப்பட்ட'

LK சொன்னது…

@சேது
தொடர் வருகைக்கு மிக்க நன்றி நண்பரே. சேலத்திற்கு வெகு நாட்களாய் போகாமல் இருந்த ஏக்கம் தான் இந்தத் தொடர் துவங்கக் காரணம். அதை ஒட்டி அந்த ஊரை பற்றி எழுதினேன். கண்டிப்பாக நீங்கள் குறிப்பிட்டுள்ள விஷயங்களை பற்றி விரைவில் தவகல் சேகரித்து எழுத முயலுகிறேன்

சேலம் தேவா சொன்னது…

கலக்கிட்டீங்க..!!

அமைதிச்சாரல் சொன்னது…

நிறைய விஷயங்கள் சொல்லியிருக்கீங்க.

கீதா சாம்பசிவம் சொன்னது…

சீக்கிரமாய் முடிச்சுட்டீங்களோ????

vanathy சொன்னது…

நல்லா இருக்கு எல்லா தகவல்களும்.