Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Gradient Skin

Gradient_Skin

இந்த வலைப்பதிவில் தேடு

பிரபலமான இடுகைகள்

Breaking News

latest

சொந்த மண் XIV

ஆனி மாத இறுதியிலேயே சேலத்தில் ஒரு வித பரப்பும் எதிர்பார்ப்பும் ஏற்படும். ஆடி மாத மாரியம்மன் பண்டிகையை எதிர்பார்த்தே இந்த பரப்பரப்பு. ஒரே ...


ஆனி மாத இறுதியிலேயே சேலத்தில் ஒரு வித பரப்பும் எதிர்பார்ப்பும் ஏற்படும். ஆடி மாத மாரியம்மன் பண்டிகையை எதிர்பார்த்தே இந்த பரப்பரப்பு. ஒரே சமயத்தில் சேலத்தில் எட்டு இடங்களில் பண்டிகை களைகட்டும். சேலம் கோட்டை மாரியம்மன், செவ்வாய்பேட்டை,அன்னதானப்பட்டி, குகை, டவுன் சின்ன மாரியம்மன் ,ஆட்டையாம்பட்டி ,அம்மாபேட்டை ,தாதகாப்பட்டி   ஆகிய கோவில்களில் ஒரே சமயத்தில் பண்டிகை நடைபெறும்.

இங்கு நான் விவரிக்கப் போவது  செவ்வாய் பேட்டையில் நடைபெறும் பண்டிகையை பற்றியே. நான் அருகே இருந்து ரசித்தது இங்குதான். ஆடி மாத முதல் செவ்வாய் கிழமை அல்லது இரண்டாவது செவ்வாய்கிழமை பூச்சாட்டல் நடைபெறும். அன்று நகரின் முக்கிய வீதிகளில் கோவில் சார்பாக பூக்கள் மக்களிடம் இருந்து சேகரிக்கப்பட்டு ,பின் கோவிலில் அம்மனுக்கு அந்த பூவை சமர்பிப்பார். அதற்கு அடுத்த நாள், கம்பம் நடுதல். இதற்காக ஏற்கனவே  வெட்டி ,பால் மார்க்கெட் அருகில் உள்ள ஒரு கிணற்றில் இறக்கி வைத்திருப்பர். அங்கிருந்து எடுத்து வந்து அம்மன் சந்நிதிக்கு நேராக நடப்படும். அன்றிலிருந்து பக்தர்கள் தினமும் அந்த மரத்திற்கு காலையில் தண்ணீர் ஊற்றலாம். அதாவது மரத்தை அம்மனாக உருவகித்து அம்மனுக்கு தாங்களே அபிஷேகம் செய்வது போல்.


இதற்கு அடுத்த திங்களில் இருந்து அம்மன் பவனி துவங்கும். தினமும் இரவு புறப்படும் பவனிக்காக மாலையில் இருந்தே அம்மனுக்கும், அந்த ஊர்திக்கும் அலங்காரம் துவங்கும். தினமும் ஓவ்வொரு வடிவில் அலங்காரம் நடக்கும். சில சமயம் முப்பெருந்தேவியாகக் கூட அலங்காரம் செய்து பெரிய ஊர்தியில் எடுத்து வருவர். அம்மனின் வாகனத்திற்கு முன்பு பெரும்பாலும் தவில் நாதஸ்வர வித்வான்களின் வாசிப்பு இருக்கும். சில நாட்களில், கரகாட்டமும் நடைபெறும்.


அம்மன் பவனி ஆரம்பித்த நாளில் இருந்து தினமும் கச்சேரியும், சில சமயம் சொற்பொழிவுகளும் நடைபெறும். தமிழகத்தின் புகழ்பெற்ற பாடகர்கள் பலர் இங்கு வந்து பக்தி பாடல்களை பாடியுள்ளனர். சமீப காலமாக சினிமா பாடல்களுக்கே முக்கியத்துவமும்,வரவேற்பும் அதிகமாக உள்ளது வருந்த வேண்டிய ஒரு விஷயம். மறைந்த திரு காளிமுத்து அவர்கள் குகையில் நடைபெறும் பேச்சரங்கம் நிகழ்ச்சியில்  வருடந்தோறும் தவறாமல் வந்து கலந்துக் கொண்டவர்.

வீதி உலா துவங்கிய வாரத்திற்கு மறுவாரம் செவ்வாய் கிழமை காலை, அலகு குத்தி வருவார்கள். சாதரணமான வேல் அலகில் இருந்து காவடி அலகு, வண்டியில் தொங்கியப் படி அலகு குத்தி வருவது போன்று தங்கள் வேண்டுதலுக்கு ஏற்ப அலகு குத்திவருவார்கள். மாலையில் பூஞ்சட்டி ஏந்தி வருவார்கள்.

இதன் பின் சக்தி அழைப்பு நடைபெறும். அருகில் உள்ள மீனாட்சியம்மன் கோவிலில் இருந்து சக்தி அழைத்து வருவார்கள். ஒரு குதிரையில் மஞ்சள் மூட்டை வைத்து அழைத்து வருவார்கள். சக்தி அழைப்பு கடந்து சென்றவுடன் அந்த வீதியில் தங்கள் நேர்த்திக் கடனை செலுத்துவார்கள். இது ஒரு வித்யாசமான நிகழ்வு என்று எண்ணுகிறேன். இது போல் வேறு எங்கும் உள்ளதா என்றுத் தெரியவில்லை. அதாவது, தங்கள் வேண்டியக் காரியம் நிறைவேறி இருந்தால், தெருவில் சூறைக் காய் உடைப்பார்கள். யாரவது ஒரு பத்து பேர் அப்படி செய்வார்கள் என்று எண்ணாதீர்கள். அந்த வீதி முழுவதுமே தேங்காய் ஓடுகளாய் நிறைந்திருக்கும்.

சக்தி அழைப்பு முடிந்தவுடன், அடுத்து கோவிலில் அங்கப் பிரதக்ஷணம் நடைபெறும். கோவிலின் வெளி ப்ரகார மார்பிள் தரையில் தான் இது நடைபெறும். சக்தி அழைப்பு முடிந்து பூஜைகள் முடிய நள்ளிரவை தொட்டுவிடும். பின்புதான் அங்கப் பிரதக்ஷணம். இதற்காக, ஆண்களும் பெண்களும் நீண்ட வரிசையில் நிற்பார்கள். சில சமயம் இந்த வரிசை, கடைத்தெருவை தொட்டுவிடும். விடிய விடிய அங்கப் பிரதக்ஷணம் நடைபெறும்.

காலை ஆறுமணி அளவில் பொங்கல் வைப்பவர்கள் அதற்கான வேலைகளை துவங்குவார்கள். அங்கு பொங்கல் வைத்து படைப்பவர்கள் ஒருபுறம் இருக்க, வீட்டில் மாவிளக்கு மாவு போட்டு கோவிலுக்கு எடுத்து வந்து அம்மனுக்கு படைப்பவர்கள் மறுபுறம். அன்று அம்மன் பல வித ஆபரணங்களில் ஜொலித்துக் கொண்டிருப்பாள். இங்கு உயிர் பலி கிடையாது.

இதற்கு அடுத்த நாள் ஊஞ்சல் உற்சவம். வெள்ளிகிழமை அம்மன் தேரோட்டம் நடைபெறும். வெள்ளிக் கிழமை அதிகாலையிலேயே அம்மன் விக்ரகம் தேருக்கு எடுத்து செல்லப்படும். பின் ஒன்பது மணியளவில், முதலில், லீபஜார் தொழிலாளர்கள் வடம் பிடித்து இழுக்க அம்மன்  செவ்வாய்ப்பேட்டைமக்களுக்கு தரிசனம் அளிப்பாள். முக்கிய பெரிய வீதிகளான பாத்திரக்கடை வீதி, பின் சின்ன எழுத்துக்கார தெரு வழியாக சென்று அங்கிருந்து சந்தைபேட்டை ரோடு வழியாக முக்கோணம் பகுதி சென்று கடைவீதி வழியாக தேர் நிலைக்கு வர நடுப் பகல் ஆகிவிடும். அன்று மாலை வரை அம்மன் தேரில் இருந்தே மக்களுக்கு காட்சி அளிப்பாள். இப்பொழுது இங்கு இருப்பது சமீபத்தில் செய்யப்பட புதியத் தேர். பழையத் தேர் சில வருடங்களுக்கு முன் எரிந்து சாம்பலாகிவிட்டது.

இதோடு பண்டிகையின் முக்கியப் பகுதிகள் முடிவடைந்துவிடும். தேரோட்டம் முண்டித அடுத்த வாரம், கம்பம் அகற்றப்பட்டு விழா முடியும். பண்டிகையின் ஒரு பகுதியாக, நகரப் பேருந்து நிலையத்தை ஒட்டிய மைதானத்தில் அரசு பொருட்காட்சி நடைபெறும்.

படம் : கூகிள் உதவி


அன்புடன் எல்கே

35 கருத்துகள்

Unknown சொன்னது…

நம்ம ஊர் நினைவுகள்.அருமை. மாரியம்மன் பண்டிகைகளில் மட்டுமே கிடைக்கும் சிலவித்தியாசமான விளையாட்டுப் பொருட்கள்.

பெயரில்லா சொன்னது…

//சக்தி அழைப்பு//
புதுசா இருக்கு LK.. நான் இதுக்கு முன்னாடி கேள்வி பட்டதில்ல..
நல்ல விவரிப்பு.. சிறு வயது திருவிழாக்கள் நினைவு வந்து போகிறது..

Chitra சொன்னது…

அரசு பொருட்காட்சி...... ...Bringing back lot of memories!!!!
பகிர்வுக்கு நன்றி.

Unknown சொன்னது…

நல்லா விவரிச்சிருக்கீங்க.மாரியம்மன் கோவிலுள்ள பல ஊர்களில் நீங்க சொன்ன மாதிரி நடக்கும். குறிப்பா சேலம் மாவட்டத்தில். கம்பத்தின் மேல் அக்னி சட்டி வேப்பிலைகளுக்கு இடையில் வைச்சிருப்பாங்க. கம்பம் பிடுங்கற அன்னிக்கு இதை கையி எடுத்து ஆடி வருவாங்க. கம்பத்தை காவேரி ஆற்றில் போட்டுவிடுவார்கள். சில ஊரில் கம்பம் நட்ட வுடன் வெளியூர் போக விட மாட்டாங்க. நையாண்டி மேளம், மற்று தாரை தம்பட்டைகளோட எல்லாம் ஆட்டம் பாட்டம் தினமும் நடக்கும். சக்தி அழைப்பு ஜோராக தாரை தம்பட்டைகளோட நடக்கும்.

RVS சொன்னது…

கோயில் திருவிழாப் பதிவுகள் எப்போதுமே எனக்கு விருப்பமானவை.. நல்ல பகிர்வு.
மாரியம்மன் கோயில் திருவிழாக்களில் பிரதானமான ஒன்று தீமிதி.. சூரியனில் கவுண்டமணி பூமிதிக்கிறேன் என்று ஜோக்காகியது.. உங்களூரில் அது கிடையாதா..

எல் கே சொன்னது…

@கலாநேசன்

அட நான் விட்டதை நீங்க சொல்லிட்டீங்க

எல் கே சொன்னது…

@பாலாஜி
ஊருக்கு ஊர் இது மாறுபடும். வேறு ஒரு ஊரில் வேறு பெயர் இருக்கலாம். நன்றி

எல் கே சொன்னது…

@சித்ரா
பழைய நினைவுகளை அசை போடுவதில் ஒரு சுகம் உள்ளது. நன்றி

எல் கே சொன்னது…

@சேது
செவ்வாய் பேட்டையில் தீச்சட்டி இருக்காது. வெறும் நீர் நிறைந்த ஒரு சட்டி மட்டுமே இருக்கும். இங்கே காவேரி இல்லை அதனால் கிணற்றில் போடுவார்கள்.

எல் கே சொன்னது…

@ஆர் வீ எஸ்

செவ்வாய்ப்பேட்டையில் தீமிதி இல்லை நண்பரே, வேறு இடங்களில் உள்ளது அது பற்றி அடுத்த பதிவில் சொல்கிறேன். முதல் வருகைக்கு நன்றி

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நல்ல பகிர்வு. திருவிழா கூட்டத்தில் ஒரு சுற்று போக வேண்டுமென்ற ஆசை வந்து விட்டது..

அருண் பிரசாத் சொன்னது…

இப்படி திருவிழாவைலாம் பார்த்து ரொம்ப வருஷம் ஆச்சு :(

nis சொன்னது…

கந்த ஷஸ்டி காலத்தில், கோயில் திருவிழாக்களை பற்றி பக்தியாக சொல்லி இருக்கிறீர்கள்.

'பரிவை' சே.குமார் சொன்னது…

ஊர் நினைவுகள் அருமை.

தினேஷ்குமார் சொன்னது…

நல்ல பகிர்வு நண்பரே திருவிழாவுக்கு வந்து போனது போன்ற ஒரு மனநிலை என்னில்

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

திருவிழா கொண்டாட்டமெல்லாம் பார்த்து ரொம்ப வருசமாச்சு..

ஆரூரன் விசுவநாதன் சொன்னது…

நான் சேலத்தில் இருந்த சில வருடங்களில் நானும் இவற்றையெல்லாம் பார்த்து ஆச்சரியப் பட்டிருக்கின்றேன். ஒரு குறிப்பிட்ட நாளில் நடைபெறும் வண்டி வேடிக்கை நிகழ்ச்சியும் எனக்கு புதியதாகத்தான் பட்டது.

பகிர்வுக்கு நன்றி

ஹரிஸ் Harish சொன்னது…

திருவிழா எல்லாம் ஓகே..அண்ணன் வீரபாண்டியார் வந்தாரா திருவிழாற்க்கு..

சாந்தி மாரியப்பன் சொன்னது…

தேர்,திருவிழா.. எல்லாம் பாத்து ரொம்ப வருஷம் ஆகிடுச்சு. உங்க இடுகை அதெல்லாம் ஞாபகப்படுத்திடுச்சு..

ADHI VENKAT சொன்னது…

நல்ல பகிர்வு. கோவில் திருவிழாக்களை பற்றி புதுப் புது விஷயங்களை தெரிந்து கொண்டேன் நன்றி.

Gayathri சொன்னது…

Ungala maathiri oora rasichu porumaya ezhudha yaaraalum mudiathu bro nalla irukku selame kan munnadi varuthu

ஹேமா சொன்னது…

முழுப்பாவாடை சட்டை போட்டு தலையில் மல்லிகைச் சரத்தோடு கை நிறையக் காப்புக்களோடு சுற்றியதும்,எங்களைச் சுற்றுபவர்களைக் காக்க என் அம்மம்மாவும் கூடச் சுற்றினதும் ஞாபகம் வருது !

எல் கே சொன்னது…

@வெங்கட்
எனக்கும்தான்

எல் கே சொன்னது…

@அருண்
பாஸ் நானும்தான்

எல் கே சொன்னது…

@nis
நன்றி நண்பா

எல் கே சொன்னது…

@தினேஷ்

நன்றி

எல் கே சொன்னது…

@ஜெயந்த்

நானும்தான் தம்பி

vanathy சொன்னது…

நல்லா இருக்கு, எல்கே.

எல் கே சொன்னது…

@ஆரூரன்
முதல் வருகைக்கு நன்றி. ஆம், மாரியம்மன் பண்டிகையின் ஒரு பகுதியாக அது நடைபெறும். அடுத்தப் பகுதியில் அதை பற்றி எழுதுகிறேன்

எல் கே சொன்னது…

@ஹரிஸ்

செவ்வாய் பேட்டைக்கு அவர் வரமாட்டர்பா.

எல் கே சொன்னது…

@சாரல்

நன்றிங்க

எல் கே சொன்னது…

@கோவை2டில்லி

நன்றிங்க

எல் கே சொன்னது…

@காயத்ரி

ரொம்ப நாள் சேலத்திற்கு செல்லாமல் இருந்ததும் இதற்க்கு ஒரு காரணம்

எல் கே சொன்னது…

@ஹேமா

அது ஒரு வசந்த காலம்

Menaga Sathia சொன்னது…

பகிர்வுக்கு நன்றி!!