நவம்பர் 09, 2010

திவ்யாவின் பக்கம் VIII

திவ்யாவுடன் இது மூன்றாவது தீபாவளி. முதல் வருடம் அவள் ஆறு மாதக் குழந்தை. அப்பொழுதே வெடிகளுக்கு அதிகம் பயப் படமாட்டாள். சென்றவருடம் கோவையில் தீபாவளி கொண்டாடிய பொழுது, விடிய விடிய பட்டாசு வெடிக்க வேண்டும் என்று அடம் பிடித்தாள்.

இந்த வருடம் சேலத்தில். மத்தாப்பு, சக்கரம் போன்றவற்றுக்கு பயப் படாத திவ்யா, சர வெடிகளுக்கு மிக பயந்தாள். சரத்தின் சத்தம் கேட்டவுடன் அருகில் இருப்பவரை கட்டி பிடித்துவிடுவாள். வளர வளர பயம் அதிகரிக்குமோ ??

தமிழ் எழுத்துக்கள் அனைத்தையும் சரியாக சொல்லுகிறாள். கூடவே, தமிழ் மாதங்களும். ஒரு முறை சொல்லி தருவதே போதுமானதாய் இருக்கிறது. ஆங்கில எழுத்துக்கள் பத்து சொல்லித் தந்து இருக்கிறோம். மேடம் நல்ல மூட்ல இருந்தா சொல்லுவாங்க இல்லையென்றால் ஏ, பி ,சி சொல்லிட்டு ஓடிடுவாங்க.

அதே போல் இரவு தூங்கும் முன் "good nite ,sweet dreams " சொல்ல பழக்கப் படுத்தி இருந்தேன். அவளும் "good nite, seemis " சொல்லுவாள். sweet dreams தனித் தனியா சொன்னால் ஒழுங்கா சொல்லுகிறாள். ஒன்றாக சேர்த்து சொல் என்றால் "ஒகே தேங்க் யூ " என்று சொல்லி சிரிக்கிறாள். அவளுக்கு எது சொல்ல வரவில்லையோ அதை சொல்லச் சொன்னால் இவ்வாறுதான் செய்கிறாள்.

அதே போல் ஒரு புதிய வார்த்தை முதல் முறை சொல்லும் முன் , மிக நிதானமாக சொல்லுவாள். அதற்கு நம்முடைய ரியாக்சன் எப்படி இருக்கிறது என்று பார்த்து அவள் சொல்லுவது சரி என்றுத் தெரிந்தால் மட்டுமே சத்தமாக பேசுவாள். இப்பவே எவ்வளவு தெரிந்து வைத்து இருக்கிறாள் ???


அன்புடன் எல்கே

58 கருத்துகள்:

Balaji saravana சொன்னது…

//"ஒகே தேங்க் யூ "//

ஹா ஹா.. சோ ப்ரில்லியன்ட்... :))
திவ்யாவிற்கு என் அன்புகள்..

//வளர வளர பயம் அதிகரிக்குமோ ??//

அப்படியும் இருக்குமோ?! ;)

சௌந்தர் சொன்னது…

குழந்தைகள் ஒரு வார்த்தையை முதல் முறையாக சொல்லும் போது அவ்வளவு அழகா இருக்கும்...

கவிதா | Kavitha சொன்னது…

திவ்விக்கு வாழ்த்துக்கள்!! :) அவங்க பேசறதை ரெக்கார்ட் செய்து போடுங்க ..கேக்கலாம்.. இப்ப விட்டா போச்சி..திரும்ப கிடைக்காது :)

வெங்கட் நாகராஜ் சொன்னது…

குழந்தைகள் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் அழகு தான். முடிந்தால் ஒலிப்பதிவு செய்து வைத்துக்கொள்ளுங்கள் கார்த்திக். நாங்க தான் மிஸ் பண்ணிட்டோம்.

சே.குமார் சொன்னது…

திவ்விக்கு வாழ்த்துக்கள்.

அமுதா கிருஷ்ணா சொன்னது…

nice..

அமைதிச்சாரல் சொன்னது…

இப்பல்லாம் வீடியோ வசதி, மொபைல்லயே வந்துட்டுது.. முடிஞ்சா, திவ்யாவோட குறும்புகளை வீடியோ க்ளிப்பிங்க்ஸா சேமிச்சு வையுங்க.. வளந்தப்புறம் அவகிட்ட காமியுங்க :-)

ஹரிஸ் சொன்னது…

:)..

சாதாரணமானவள் சொன்னது…

//அவள் சொல்லுவது சரி என்றுத் தெரிந்தால் மட்டுமே சத்தமாக பேசுவாள்// She must be a perfectionist. Good!

LK சொன்னது…

@பாலாஜி
எனக்குத் தெரியலை அதான் கேட்டேன் .

LK சொன்னது…

@சௌந்தர்
உண்மைதான் சௌந்தர்

LK சொன்னது…

@கவிதா
ரிகார்ட் பண்ணி இருக்கிறேன். அப்லோட் பண்ண சோம்பேறித் தனம்

LK சொன்னது…

@வெங்கட்
சமயம் கிடைக்கும்பொழுது ரிகார்ட் பண்ணுகிறேன் நண்பா

LK சொன்னது…

@குமார்
நன்றி

LK சொன்னது…

@அமுதா
நன்றி

LK சொன்னது…

@சாரல்
ஒரு சில வீடியோ எடுத்து இருக்கிறேன்

LK சொன்னது…

@ஹரிஸ்
முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

LK சொன்னது…

@சாதாரணமானவள்
இருக்கலாம்

LIC SUNDARA MURTHY சொன்னது…

திவ்யாவிற்கு முதலில் கண் பட்டு விடப்போகிறது முதலில் திருஷ்டி சுற்றிப் போடுங்கள்
தமிழ் எழுத்துக்கள் அனைத்தையும் சரியாக சொல்லுகிறாள். கூடவே, தமிழ் மாதங்களும்.
நம்மில் பெரும்பாலோருக்கு தெரியுமா ? ஞாபகம் இருக்கிறதா ?
குட் நைட் ஸ்வீட் ட்ரீம்ஸ் திவ்யாவிற்கு
www.salemscoobyblogspot.com
licsundaramurthy@gmail.com

கோவை2தில்லி சொன்னது…

குழந்தைகளின் பேசும் அழகே அலாதியானது. மறக்காமல் ஒவ்வொன்றையும் ஒலிப்பதிவு செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

ஹுஸைனம்மா சொன்னது…

//அவள் சொல்லுவது சரி என்றுத் தெரிந்தால் மட்டுமே சத்தமாக பேசுவாள்//

மழலையாகப் பேசுவதுதான் கேட்க இனிமை. திருத்தமாகப் பேசவந்துவிட்டால் கொஞ்சம் த்ரில் போய்விடும் - நமக்கு!! :-)))))

அதனால் இப்பவே எஞ்சாய்!!

sundara சொன்னது…

//நம்முடைய ரியாக்சன் எப்படி இருக்கிறது என்று பார்த்து அவள் சொல்லுவது சரி என்றுத் தெரிந்தால் மட்டுமே சத்தமாக பேசுவாள். இப்பவே எவ்வளவு தெரிந்து வைத்து இருக்கிறாள் ???//

புத்திசாலிக் குழந்தை :)

வாழ்த்துக்கள்!

தமிழ் உதயம் சொன்னது…

மழலை பேச்சை அணு அணுவாக ரசித்துள்ளீர்கள்.

ப.செல்வக்குமார் சொன்னது…

//"ஒகே தேங்க் யூ " என்று சொல்லி சிரிக்கிறாள். அவளுக்கு எது சொல்ல வரவில்லையோ அதை சொல்லச் சொன்னால் இவ்வாறுதான் செய்கிறாள்.///

ஹா ஹா ஹா ..

Sethu சொன்னது…

Cute.

பத்மா சொன்னது…

அழகு பதிவு
ஆசையாய் இருக்கு மழலை மொழி கேட்க

சுசி சொன்னது…

//"ஒகே தேங்க் யூ "//
இப்டி எங்களாலையும் சொல்லி சமாளிக்க முடிஞ்சா..

சமத்து செல்லம் :))

Chitra சொன்னது…

She is cute!!!!

ஸ்ரீராம். சொன்னது…

அழகிய மழலை மொழியினிலே....

இதையெல்லாம் ரெகார்ட் செய்து வைத்துக் கொள்வது சுவாரஸ்யமாக இருக்கும் கார்த்திக்...

Mrs.Menagasathia சொன்னது…

புத்திசாலி குழந்தை!! க்யூட்...

அருண் பிரசாத் சொன்னது…

ஆமாம், இந்த கால குழந்தைகள் வேகமாய் கற்று கொள்கிறார்கள்

Gayathri சொன்னது…

ஹை ரொம்ப கியுட் . நல்லா பொழுது போகுது அப்போ

எம் அப்துல் காதர் சொன்னது…

தினம் மூன்று மூன்று இங்கிலீஷ் வார்த்தையும் அதற்கு அர்த்தமும் சொல்லிக் கொடுங்கள். உலக நாடுகளில் உள்ள முக்கியமான நாட்டின் பெயர் சொல்லிக் கொடுங்கள். குழந்தைகள் கப்பென்று பிடித்துக் கொள்ளும். குழந்தைகள் வளர்ந்த பின் இதன் அருமை தெரியும். மறந்தும் கூட டிவி தொடர் பக்கம் உட்கார வைக்காதீர்கள் !! திவ்யாவிற்கு என் அன்புகள்..

வானம்பாடிகள் சொன்னது…

மழலையழகு. க்யூட்டீ

அன்னு சொன்னது…

//இப்பவே எவ்வளவு தெரிந்து வைத்து இருக்கிறாள் ???//

நீங் வேறண்ணா, இவங்க எல்லாம் அப்சேர்வ் பண்ணற விதத்தை பார்த்தா பேசாம இன்டெரோகேஷன் டீம்ல சேர்த்திடலாம் போல இருக்கும். அவ்வளவு உன்னிப்பா கவனிப்பாங்க. வேண்டம்னு நினச்சிட்டா, நாம தலைகீழா நின்னுட்டிருந்தாலும் கடைக்கண் தரிசனம் கூட கிடையாது :(

ஹேமா சொன்னது…

திவ்யாச் செல்லத்துக்கு வாழ்த்துகள்.அப்பாபோல புத்திசாலியா வரணும் !

நசரேயன் சொன்னது…

வாழ்த்துக்கள் திவ்யாவுக்கு

LK சொன்னது…

@மூர்த்தி

கண்டிப்பா

LK சொன்னது…

@கோவை

கண்டிப்பாங்க.. நன்றி

LK சொன்னது…

@ஹுசைனம்மா

அதுவும் சரிதான்

LK சொன்னது…

@சுந்தரா

நன்றிங்க

LK சொன்னது…

@செல்வா
நன்றி

LK சொன்னது…

@சேது

நன்றி

LK சொன்னது…

@பத்மா

முடிந்தால் அடுத்தமுறை ஒலியை இணைக்க முயற்சிக்கிறேன்

LK சொன்னது…

@சுசி

உண்மைதான்.

LK சொன்னது…

@சித்ரா

நன்றி

LK சொன்னது…

@அருண்

நன்றி பாஸ்

LK சொன்னது…

@ஸ்ரீராம்

ரிகார்ட் பண்ணி இருக்கேன் அண்ணா

LK சொன்னது…

@மேனகா

நன்றி

LK சொன்னது…

@காயத்ரி
நன்றி

LK சொன்னது…

@அப்துல்

இன்னும் இரண்டு மாதம் செல்லட்டும்

LK சொன்னது…

@பாலா சார்

நன்றி

LK சொன்னது…

@அன்னு
அது என்னவோ உண்மைதான்.. எல்லா குழந்தைகளுக்கும் பிடிவாதம் ஜாஸ்தி

LK சொன்னது…

@ஹேமா

உங்களுக்கு ஸ்பெசல் ஸ்வீட் ஒன்னும் அனுப்பறேன்.. நன்றி

LK சொன்னது…

@நசரேயன்

நன்றி

dineshkumar சொன்னது…

வண்ணத்து பூசிப்போல
பல வண்ணம்
வாண்டுகள் உள்ளம்
கள்ளமிலாது
கொள்ளைகொள்ளும்
பல நெஞ்சங்களை

கீதா சாம்பசிவம் சொன்னது…

kuzhanthai, kuzhanthai than, samaththukkutti! :)))))

அப்பாவி தங்கமணி சொன்னது…

//இப்பவே எவ்வளவு தெரிந்து வைத்து இருக்கிறாள் ???//

well said... they will teach us a lot these days... lovely sharing