Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Gradient Skin

Gradient_Skin

இந்த வலைப்பதிவில் தேடு

பிரபலமான இடுகைகள்

Breaking News

latest

தேடலின் தொடர்ச்சி V

சென்ற பதிவில் நண்பர் வேலு "தியானம்" என்றால் என்ன என்று கேட்டிருந்தார். சுருக்கமாக சொல்வதென்றால் "உங்களை நீங்கள் அறிவது "...

சென்ற பதிவில் நண்பர் வேலு "தியானம்" என்றால் என்ன என்று கேட்டிருந்தார். சுருக்கமாக சொல்வதென்றால் "உங்களை நீங்கள் அறிவது " இதுதான் அதன் பொருள். அதாவது, வேறு வேலைகள் செய்யாமல் ,மனதில் வேறு எந்த என்ன ஓட்டமும் இல்லாமல் அமைதியில் ஆழ்ந்து இருக்கும் பொழுது , உங்களை பற்றி நீங்கள் அறிய முடியும். இந்த இடத்தில் "உங்களை " என்ற சொல் ஆன்மாவை குறிக்கிறது.

நான் படித்த ஒரு ஜென் கதையில் , தியானம் என்றால் என்ன என்று கேட்கும் சீடனுக்கு "கவனித்தல் " என்று பதில் சொல்லுவார் குரு. இங்கு கவனித்தல் என்பது எதை குறிக்கிறது ? "தன்னை கவனித்தல் " என்பதே இதன் அர்த்தம் .

பொதுவாக, தியானத்தின் முதல் நிலையில் "உங்கள் மூச்சுக் காற்றை கவனியுங்கள் " என்று சொல்லுவார்கள். அது சீராக இருக்கவேணும். எந்த விட படபடப்போ இல்லாமல் இருக்கவேண்டும்.

பாலாஜி சரவணன், ஆரம்ப நிலை தியானத்திற்கு குரு அவசியமா என்று கேட்டார். ஆம் அவசியமே என்பதுதான் என் பதில். ஏனென்றால், ஆரம்பக் கட்டத்தில்தான் மனம் நம் வசம் அடங்க மறுக்கும். அதற்குண்டான வழிமுறைகளை முறைப்படி ஒரு குருவிடம்தான் கற்றுக் கொள்ளவேண்டும்.

அதுமட்டுமில்லாது, எந்த ஒரு கலையாக இருந்தாலும், குரு மூலம் கற்றுக் கொள்வதே சாலச் சிறந்தது. எனவே தகுந்த குருவின் வாயிலாக தியானத்தைக் கற்றுக் கொள்ளுங்கள்.

ஒவ்வொருவருக்கும் அனுபவங்கள் மாறலாம். எனவே நான் ஒரு குறிப்பிட்ட நபரிடம் கற்றுக் கொள்ளுங்கள் என்று யாரையும் நான் சிபாரிசு செய்யமாட்டேன். உங்களுக்கான குருவை நீங்கள் தான் தேட வேண்டும். அவரிடம் முறையாக தியானம் பழகுங்கள்.

இதனுடன் தியானத்தை பற்றி முடித்துக் கொள்கிறேன்.

தேடல் தொடரும்

அன்புடன் எல்கே

34 கருத்துகள்

S Maharajan சொன்னது…

//ஒவ்வொருவருக்கும் அனுபவங்கள் மாறலாம். எனவே நான் ஒரு குறிப்பிட்ட நபரிடம் கற்றுக் கொள்ளுங்கள் என்று யாரையும் நான் சிபாரிசு செய்யமாட்டேன்.//


அருமையான விளக்கம்

Arun Prasath சொன்னது…

கூடிய சீக்கரம் ஆரம்பிக்கணும்

பெயரில்லா சொன்னது…

என் சந்தேகத்திற்கு தெளிவாக விளக்கம் கொடுத்ததற்கு நன்றி LK! :)

ஹரிஸ் Harish சொன்னது…

தேடல் தொடரும் //
தொடருட்டும்..வாழ்த்துக்கள்

கோலா பூரி. சொன்னது…

தியானம் பற்றி இன்னமும் தெளிவாகத்தெரிந்து கொள்ள விரும்பினேன்.

venkat சொன்னது…

nice post

சைவகொத்துப்பரோட்டா சொன்னது…

எளிய விளக்கங்கள்! தியானம் பற்றி, மேலும் தொடர்வீர்கள் என்று நினைத்தேன்.

Geetha Sambasivam சொன்னது…

தியானம் அவரவர் அநுபவத்தில் உணரணும். சொல்லிப் புரிய வைக்கிறது கஷ்டம். பிராணாயாமத்தில் ஆரம்பிச்சால் அப்புறமாய் மெல்ல, மெல்ல ஆழ்நிலைத் தியானத்தில் கொண்டு போய்ச் சேர்க்கும்.

Jaleela Kamal சொன்னது…

http://samaiyalattakaasam.blogspot.com/

NaSo சொன்னது…

பகிர்வுக்கு நன்றி எல்கே சார்.

Unknown சொன்னது…

நல்ல பகிர்வுங்க.. தொடருங்கள்.. நன்றி..

Thenammai Lakshmanan சொன்னது…

உண்மை கார்த்திக்.. இதுபோல் மூச்சுப்பயிற்சி எல்லாம் குருவின் மூலம் கற்றுக் கொள்வதே சிறப்பு..

சுசி சொன்னது…

நல்ல பகிர்வு கார்த்திக்.

VELU.G சொன்னது…

தங்கள் விளக்கத்திற்கு நன்றி நண்பரே

உங்களை தேடலில் தொடர்கிறேன்

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

அருமையான விளக்கம்..

Nithu Bala சொன்னது…

Arumayana pathivu..

Asiya Omar சொன்னது…

நல்ல விளக்கமான பதில் எல்.கே.

Jaleela Kamal சொன்னது…

தியானம் பற்றி நல்ல விளக்கம்.எல்.கே..தொடர்ந்து எழுதுங்கள்
இது டெம்லேட் புதிதா?
நு்ழைந்்தும் பாகீரதி மேலே ஒ்ு வெளிச்சம் அடித்தது போல் இருந்தது.
கமெ ட் போட ம்ுஇஅய்ல, ரொம்ப சிரம்மப்ப்ி தான் போட்டே்்.
இன்னும் சரி பட்டு ்ரல

Chitra சொன்னது…

New template looks good.

எல் கே சொன்னது…

@மகாராஜன்

நன்றி

@அருண்
பண்ணுங்க

எல் கே சொன்னது…

@பாலாஜி

நன்றி

எல் கே சொன்னது…

@ஹரிஸ்

நன்றி

எல் கே சொன்னது…

@கோமு

இதற்கு மேல் விஷயங்கள் ஒரு குருவிடம் நேரடியாக கற்றுக்கொள்ளவேண்டியவை

எல் கே சொன்னது…

@வெங்கட்
நன்றி

எல் கே சொன்னது…

@சை.கொ.ப

விளக்கம் மட்டுமே நான் கொடுக்கிறேன் நண்பா.. அதை எப்படி பண்ணனும்னு ஒரு குருவிடம்தான் பயில வேண்டும்

எல் கே சொன்னது…

@கீதா

மாமி சரியா சொன்னீங்க

எல் கே சொன்னது…

@சோழன்

நன்றி எம் எல் ஏ

எல் கே சொன்னது…

@பாபு
நன்றி

@தேனம்மை

நன்றி அக்கா

எல் கே சொன்னது…

@சுசி
நன்றி

@வேலு
உங்கள் சந்தேகம் தீர்ந்ததில் மகிழ்ச்சி

எல் கே சொன்னது…

@ஜெயந்த்

நன்றி

@நிது
நன்றிங்க

@ஆசியா
நன்றி சகோ

எல் கே சொன்னது…

@ஜலீலா

புது முகவரி பார்த்தேன். ஏன்? என்ன ஆச்சு ?? ஏதேனும் பிரச்சனையா பின்னூட்டம் இடுவதில் ??

vanathy சொன்னது…

எல்கே, நான் எங்கே போவேன் குருவுக்கு???

anu சொன்னது…

Very nice flow.Good article

Unknown சொன்னது…

UNGAL POSTIL
virumbi padikum paguthi...

entha thedal...