நவம்பர் 23, 2010

தேடலின் தொடர்ச்சி IV


சென்ற தேடலில் , செல்வா தம்பி மனதை கட்டுப் படுத்தினால், புகழ் அடையலாம் என்ற ஆசைதானே, மனதை கட்டுப் படுத்தக் காரணம் என்று சொல்லி இருந்தார். அவருக்கு விரிவான பதில் முதலில் பார்ப்போம்.

மனத்தைக் கட்டுப்படுத்த வேண்டியது ஆசையினால் அல்ல. அது நாம் செய்ய வேண்டிய கடமை ஆகும். ஒரு சின்ன உதாரணம். இராவணன் மிக சிறந்த வீரன்,நல்ல பக்திமானும் கூட. அதுமட்டுமில்லை, அவன் வீணை மீட்டுவதில் வல்லவன். இப்படி பல இருந்தும், அவன் மனதை கட்டுப்படுத்த தவறியதால் , அவன் போரில் இறந்தான். ஒருவன் நல்லவனாக வாழவும்  மனக் கட்டுப்பாடு அவசியம் ஆகிறது .

திரு எம். எஸ். உதயமூர்த்தி எழுதிய "எண்ணங்கள்" புத்தகத்தை பற்றி கேள்விப்பட்டிருப்போம். அதில் அவர் சொல்லி இருப்பதும் இதுதான். மனதை அடக்கப் பழகுங்கள். அதற்கு உங்கள் நோக்கம் , குறிக்கோள் என்ன என்பதை சொல்லுங்கள். அதை நீங்கள் மனதிற்கு சொல்லி அதற்கு பயிற்சி கொடுத்தால் ,உங்களை அது உங்கள் குறிக்கோளை நோக்கி அழைத்து செல்லும். 

உபநிஷத்தில் ஒரு சிறு கதை வரும். நசிகேதன் என்னும் சிறுவனின் கதை. எமன் அவனுக்கு மூன்று வரங்களை தருவார். அவற்றில் ஒன்றாக ஆத்மாவை பற்றிய அறிவு எனக்கு தர வேண்டும் என்று கேட்பான். எமனும் எவ்வளவோ போராடுவர், வேறு என்ன வேண்டுமானாலும் தருகிறேன் என்று. ஆனால் நசிகேதன் ஸ்திரமாக எனக்கு அது மட்டும்தான் வேண்டும் என்று குறிக்கோளில் வெற்றி பெறுவான். தான் கொண்ட குறிக்கோளில் உறுதியாக மனதை செலுத்தி அதிலேயே ஒன்ற வேண்டும். அவ்வாறு ஒன்றினால் நீங்கள் எந்தக் குறிக்கோளை அடைய விரும்புகிறீர்களோ அதை அடையலாம்.

 எதை அடைய வேண்டுமானாலும், மனதை கட்டுபடுத்தும் திறன் வேண்டும். அது இல்லையேல் எந்த ஒரு உயரிய இலட்சியத்தையும் அடைதல் மிகக் கடினம். இல்லாத ஒன்று என்று அவர் குறிப்பிட்டு இருந்தார். அவர் எதை சொல்ல வருகிறார் என்று புரியவில்லை. அவர் இந்தப் பகுதியில் அதை சொன்னால், அதை பற்றியும் நாம் பார்ப்போம்.

மனதைக் கட்டுபடுத்த சிறந்த வழி தியானம். இதை பயிலும் முன் நாம் உற்சாகமாகத்தான் இருப்போம். புதிய விஷயத்தை கற்கும் ஆவலில். நாம் நினைப்பது போல் இது எளிதான விஷயம் அல்ல. ஆரம்பத்தில் நம் கட்டுப்பாட்டுக்குள் இருப்பது போல் தோன்றும். பிறகு மீண்டும் தனது சுய ரூபத்தை காட்டும்.

தியானம் என்றால் ஒரு அரை மணி நேரமோ ஒரு மணி நேரமோ ,கண்ணை மூடிக் கொண்டு அமருவது அல்ல. அந்த நேரத்தில், மனதை அலைபாய விடாமல் வேறு எதை பற்றியும் நினையாமல் ஒருமுகப் படுத்த வேண்டும். ஆரம்பக் கட்டங்களில் , கண்ணை மூடி அமர்ந்தவுடன் அன்று செய்யாமல் விட்ட வேலையும் , தொலைகாட்சியில் அந்த நேரத்தில் வரும் மெகாத் தொடரும் நம் மனதில் வரும். அவற்றை புறம் தள்ளி, ஒரு புள்ளியில் நம் மனதை நிறுத்த பயில வேண்டும்.

யோகமோ இல்லை தியானமோ ஒரு குருவிடம் முறையாக  பயில வேண்டும்.  புத்தகத்தை பார்த்தோ இல்லை இணையத் தளத்தை பார்த்தோ பயில வேண்டாம். எந்த ஒரு விஷயமும் ஒரு குரு மூலம்தான் கற்றுக் கொள்ளவேண்டும். இன்று தியானம் பற்றி பலர் பலவித வகுப்புகள் எடுக்கின்றனர். எனக்கு தெரிந்து பல பெரிய மென்பொருள் நிறுவனங்கள் இதற்காக வெளியில் இருந்து ஆட்களை அழைத்து வகுப்புகள் எடுக்கிறார்கள் தங்களது ஊழியர்களுக்காக.

முறையாக பயின்று ,தியானம் செய்து பாருங்கள். அதன் அற்புதத்தை உணருவீர்கள்

-தொடரும்


அன்புடன் எல்கே

30 கருத்துகள்:

அன்னு சொன்னது…

கார்த்திண்ணா,

அந்த கேக் டெம்ப்ளேட் அழகா இருந்ததே. இதென்ன சீசனல் மாற்றம் மாதிரி மாத்திட்டே இருக்கீங்க?

//மனதை கட்டுபடுத்தும் திறன் வேண்டும். அது இல்லையேல் எந்த ஒரு உயரிய இலட்சியத்தையும் அடைதல் மிகக் கடினம். இல்லாத ஒன்று என்று அவர் குறிப்பிட்டு இருந்தார். அவர் எதை சொல்ல வருகிறார் என்று புரியவில்லை//

இந்த எடத்தில எனக்கு புரிஞ்சதை சொல்றேன். ஒருவன் கின்னஸ் ரெக்கார்டுக்கு கஷ்டப்பட்டு முயற்சிக்கறப்ப, சின்ன சின்ன விளம்பரங்கள், அவனுடைய முயற்சியை வைத்து தன்னுடைய இடத்தை மேம்படுத்த நினைக்கிற அரசியல்வாதிகள் என பலர் வந்து அவனுடைய வாழ்வில் திடீர் புகழ்ச்சியையும் பெருமையையும் காட்டி அவனை வழி தவற செய்ய முடியும். ஆனால், அதையும் தாண்டி, சங்கடங்களைப் போல இவற்றையும் கடந்து போக தெரிய வேண்டும். இதுவே மன உறுதி. இல்லையென்றால், சின்ன சின்ன போட்டிகளில் வியக்கும் அளவிற்கு சாதனைகள் பல புரிந்த விளையாட்டு வீரர்கள், இன்னும் பெரிய விளையாட்டுக்கள் வரும்போது வழி தவறி தன் மீது நம்பிக்கையற்று ஊக்க மாத்திரைகளை துணை கொள்கிறார்களே அது போல்தான் எவரின் நிலையும் ஆகும்...!!
:)

Balaji saravana சொன்னது…

தியானத்தைப் பற்றி இன்னும் விரிவா எழுதுங்க LK..
ஆரம்பநிலை தியானத்துக்கும் குரு அவசியமா?

vanathy சொன்னது…

super post.

சைவகொத்துப்பரோட்டா சொன்னது…

ரைட்டு, குருவைத்தேட வேண்டும்.

S Maharajan சொன்னது…

//தியானம் செய்து பாருங்கள். அதன் அற்புதத்தை உணருவீர்கள்//

முயற்சிக்கிறேன்..............

வித்யா சொன்னது…

தொடருங்கள்...

Chitra சொன்னது…

very nice suggestions. Good post. :-)

Arun Prasath சொன்னது…

ஒரு முக படுத்தணும்னு சொல்றீங்க... அந்த டைம்ல எத பத்தி நெனச்சா ஒரு முக படுத்த முடியும்? கேள்வி புரிஞ்சது தானே LK சார்....

நாகராஜசோழன் MA சொன்னது…

யோகா கத்து தர்றேன்னு ஏகப்பட்ட ஆட்கள் கிளம்பி வர்றாங்க. அவர்களில் நல்ல குருவை கண்டுபிடிப்பது எப்படி எல்கே சார்?

VELU.G சொன்னது…

மிக அருமையான தொடராய் தெரிகிறது,

முன் பதிவுகளையும் படித்து விட்டு வருகிறேன் நன்பரே

அதற்குள் எனக்கு சின்ன சந்தேகம் ஒன்று உள்ளது. அதை தெளிவு படுத்த முடியுமா?

தியானம் என்றால் என்ன?

சே.குமார் சொன்னது…

அருமையான பகிர்வு... தொடருங்கள்.

சென்னை பித்தன் சொன்னது…

//யோகமோ இல்லை தியானமோ ஒரு குருவிடம் முறையாக பயில வேண்டும்.//
//முறையாக பயின்று ,தியானம் செய்து பாருங்கள். அதன் அற்புதத்தை உணருவீர்கள்//.
மிகச் சரி.
சரியான குருவிடம் முறையான பயிற்சி அவசியம்!பின் முறையாக செய்தலும் அவசியம்.

”குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்ளார்
குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வர்
குருடும் குருடும் குருட்டாட்டம் ஆடிக்
குருடுங் குருடுங் குழிவிழு மாறே.”
(திருமந்திரம்)
நல்ல இடுகை.

ஹரிஸ் சொன்னது…

நல்ல பதிவு..

ஹேமா சொன்னது…

கார்த்திக்....தியானம் செய்ய மனம் அமைதியா இருக்கணுமே !

komu சொன்னது…

தியானம் பற்றிய பதிவு அருமை. முயன்றால் முடியாதது எதுவுமில்ல.
மனதைக்கட்டுப்படுதுகிரோமோ இல்லியோ, முயற்சி செய்துபார்ப்பதில் தவரொன்றும் இல்லியே.

LK சொன்னது…

@அன்னு
எதோ மாத்தணும்னு தோனுச்சி. மாத்தினேன்... உன் புரிதல் சரியே..

LK சொன்னது…

@பாலாஜி
ஆரம்ப நிலைக்குதான் குருவின் உதவி மிக அவசியம் ...

LK சொன்னது…

@வாணி
நன்றி

@சை.கொ. ப

ஆமாம்

@மகாராஜன்
நன்றி

@வித்யா
நன்றி

@சித்ரா
நன்றி

LK சொன்னது…

@அருண்
அது நீங்கள் முடிவு செய்யணும் . ஒரு சிலர் அவர்கள் இஷ்ட தெய்வத்தின் மேல் நினைப்பை வைத்து அதில் ஒன்றுபட முயற்சிப்பார். சிலர் ஓம்காரத்தின் மேல்... இப்படி மாறுபடும்

@நாகராஜன்
எம் எல் ஏ சார், இது யோகா இல்லை. தியானம். இரண்டும் வேறு வேறு.. நீங்கள் சொல்வது போல் தியானத்திற்கு கூட நிறைய பேர் கிளம்பி இருக்காங்க. அதை பற்றி நான் விசாரித்து சொல்கிறேன்

LK சொன்னது…

@வேலு
சின்ன சந்தேகமா இது ? விரிவாக பதில் எழுத வேண்டிய விஷயம். பதிவாகவே போடுகிறேன்

LK சொன்னது…

@குமார்
நன்றி

LK சொன்னது…

@சென்னை பித்தன்

மிக அருமையாக சொல்லி இருக்கீங்க. பாடலுக்கு நன்றி சார்

LK சொன்னது…

@ஹரிஸ்
நன்றி

@ஹேமா
அதற்க்குத்தான் குரு உதவுவார் ஹேமா

சுசி சொன்னது…

//அன்று செய்யாமல் விட்ட வேலையும் , தொலைகாட்சியில் அந்த நேரத்தில் வரும் மெகாத் தொடரும் நம் மனதில் வரும். //

எனக்கென்னமோ பதிவுலகம் மட்டுந்தேன் நினைவுல வருது கார்த்திக் :((((

நல்லா இருக்கு.. தொடருங்க.

வெறும்பய சொன்னது…

அருமையான பகிர்வு...

VELU.G சொன்னது…

//Blogger LK said...

@வேலு
சின்ன சந்தேகமா இது ? விரிவாக பதில் எழுத வேண்டிய விஷயம். பதிவாகவே போடுகிறேன்
//

நன்றி நண்பரே

விரைவில் ஆவலோடு எதிர்பார்க்கிறேன்

அப்பாவி தங்கமணி சொன்னது…

Nice post LK

நித்திலம் - சிப்பிக்குள் முத்து. சொன்னது…

அருமையான பதிவு.....எல்.கே. இந்த முகம் மிக நன்றாக உள்ளது. வாழ்த்துக்கள் எல்.கே.

GEETHA ACHAL சொன்னது…

வாழ்த்துகள் கார்த்திக்...நல்லா இருக்குது...

ப.செல்வக்குமார் சொன்னது…

மன்னிக்கவும் அண்ணா ., என்னால் தங்களது இந்தப் பதிவில் வர இயலவில்லை ., எனது அலுவலகப் பணிகள் காரணமாக நேரம் கிடைக்காமல் போனது . உங்களது அடுத்த தேடலில் நிச்சயம் நான் அதைப்பற்றி அதாவது நான் என்ன இல்லை என்று சொன்னேன் என்பது பற்றி கூறுகிறேன் ..!!