Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Gradient Skin

Gradient_Skin

இந்த வலைப்பதிவில் தேடு

பிரபலமான இடுகைகள்

Breaking News

latest

தேடலின் தொடர்ச்சி III

மனிதன் வாழ்நாள் முழுவதும் எதன் மேலாவது பற்று வைத்துதான் வாழ்கிறான்.ஒரு பொருளின் மீது மட்டும்தான் பற்று வைக்கிறானா என்றால் அதுவும் இல்லை....



மனிதன் வாழ்நாள் முழுவதும் எதன் மேலாவது பற்று வைத்துதான் வாழ்கிறான்.ஒரு பொருளின் மீது மட்டும்தான் பற்று வைக்கிறானா என்றால் அதுவும் இல்லை. ஒவ்வொரு கட்டத்திலும் ஒவ்வொன்றின் மீது.  கல்லூரியில் படிக்கும்பொழுது எதிர் பாலினத்தின் மீதும்,போகப் பொருட்களின் மீதும், பின் திருமணம் முடிந்தப் பின் தான் துணையின் மீது. பின் குழந்தைகள் மீது. இடையில் பணத்தின் மீது.

இந்தக் கட்டத்தில்  நம் குழந்தைகளின் மீது வைக்கும் பற்றே வயதான காலத்தில் அவர்கள் நம்மை கவனிக்காத பொழுது ஏமாற்றமாய், ஆதங்கமாய் வெளிப்படுகிறது. நம் குழந்தைகளை வளர்ப்பதோடு நமது கடமை முடிந்தது என்று எண்ணி செய்யுங்கள். பின் உங்களுக்கு ஏமாற்றம் இருக்காது. 

இதையெல்லாம் விட, உயிரின் மீதான பற்று மனிதனுக்கு அதிகம். உயிரை காப்பாற்ற எதுவும் செய்வோம். பற்று அதிகரிக்க அதிகரிக்க அதை நாம் இழக்காமல் இருக்க என்ன செய்யவேண்டும் என்றே எண்ணத் துவங்குகிறோம். வேறு எண்ணங்கள் நமக்கு வருவதில்லை. அந்தப் பொருளை இழந்துவிடுவோமோ என்ற பயமும் அதிகரிக்கும். 

ஒரு பொருளின் மீது பற்று வைப்பதற்கும் , பற்றை அகற்றுவதற்கும் நம் மனதே காரணம். மனதை கடிவாளம் போட்டு அடக்க ஆரம்பித்தால் நாம் செல்லும் பாதை சரியான பாதையாக இருக்கும். எனவே நாம் முதலில் சரி செய்ய வேண்டியது நமது மனதையும் எண்ணங்களையும். 

"கண் போன போக்கிலே கால் போகலாமா?
கால் போன போக்கிலே மனம் போகலாமா
?
மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா?"

இது வாலி அவர்கள் இயற்றிய ஒரு திரைப்பாடல். எவ்வளவு உண்மை உள்ளது இதில். நம் மனம் போன போக்கில் வாழ்வதா வாழ்க்கை ? அப்படிப் பட்ட வாழ்க்கை வாழ நமக்கு எதற்கு ஆறறிவு ??



மனதை கட்டுபடுத்தி வைப்பது அவ்வளவு எளிதானது அல்ல. ஆரம்பக் கட்டங்களில் நமக்கு கட்டுபடுவது போல் இருக்கும் , நாம் அசந்தால் மீண்டும் துவக்கப் புள்ளிக்கே சென்று விடுவோம்.

இதற்கு ஒரு நல்ல உதாரணம். இதை நான் எழுத துவங்கிய பொழுது தொடர்ந்து இதை மட்டுமே ஒரு சில வாரங்கள் எழுத வேண்டும் என்று நினைத்து துவங்கினேன். நான்கு பகுதிகள் எழுதினேன். பின்பு மனம் வேறு பக்கம் சென்று விட்டது.

அடுத்தப் பகுதியில் மனதை கட்டுப் படுத்தும் வழிமுறைகளை பார்ப்போம்

டிஸ்கி : நானும் மனதை கட்டுப் படுத்தும் விஷயத்தில் துவக்க நிலையில் உள்ளவனே. ஏதேனும் தவறு இருந்தால் சொல்லுங்கள். திருத்திக் கொள்கிறேன்.

அன்புடன் எல்கே

36 கருத்துகள்

ராமலக்ஷ்மி சொன்னது…

அருமை. தொடருங்கள் தேடலை. பகிர்ந்திடுங்கள் தொடர்ந்து.

Chitra சொன்னது…

டிஸ்கி : நானும் மனதை கட்டுப் படுத்தும் விஷயத்தில் துவக்க நிலையில் உள்ளவனே. ஏதேனும் தவறு இருந்தால் சொல்லுங்கள். திருத்திக் கொள்கிறேன்.


......நீங்களாவது தொடக்க நிலைக்கு வந்துட்டீங்க.... நாங்க இன்னும் தொடங்கவே இல்லையே..... அப்புறம் எங்கே குத்தம் சொல்றது? ஹா,ஹா,ஹா,ஹா....

Unknown சொன்னது…

நல்லா எழுதியிருக்கிங்க. நெகடிவ் சிந்தனை நம்மை முழுகடிக்காதவரை, மனதை ஒரு கட்டற்ற சிந்தனையோடு அலைய விடலாம். ஆனா அடிப்படை மனித நேய ஒழுக்கத்திற்கு உட்பட்டு இருக்க வேண்டும். கொஞ்சம் கவலையில்லாமல் இருக்கலாம். மனுஷன் முதலில் நல்லா சிந்திக்கணும்.

Philosophy Prabhakaran சொன்னது…

நான் என்ன சொல்ல நினைத்தேனோ அதையே சித்ராக்காவும் சொல்லியிருக்காங்க... அவ்வ்வ்வ்...

பெயரில்லா சொன்னது…

//மனதை கடிவாளம் போட்டு அடக்க ஆரம்பித்தால் நாம் செல்லும் பாதை சரியான பாதையாக இருக்கும்//
சரியாய் சொன்னீர்கள் LK..
தொடருகிறேன் உங்களை..

ஹரிஸ் Harish சொன்னது…

//ஒரு பொருளின் மீது பற்று வைப்பதற்கும் , பற்றை அகற்றுவதற்கும் நம் மனதே காரணம்//

முழுதும் உடன்படுகிறேன்..தொடருங்கள்..

தினேஷ்குமார் சொன்னது…

காட்டருவி
கணக்காக
கடந்து செல்லும்
மனதை தடுக்க
கடிவாளம்
வேண்டும் கண்டிப்பாக

தொடருங்கள்
நண்பரே............

அருண் பிரசாத் சொன்னது…

ஓவரா தேடிட்டீங்க போல.... சீக்கிரம் அடுத்த ஸ்டேஜிக்கு போங்க...

'பரிவை' சே.குமார் சொன்னது…

அருமை. தொடருங்கள்.

sakthi சொன்னது…

எல் கே நல்ல பகிர்வு

மனிதன் தன் வாழ்வின் ஏதோ ஒரு கட்டத்தில் இத்தேடலின் பக்கம் வந்தே தீரவேண்டும்.

Unknown சொன்னது…

தட்டுங்கள் திறக்கப்படும் ...

சௌந்தர் சொன்னது…

அடுத்தப் பகுதியில் மனதை கட்டுப் படுத்தும் வழிமுறைகளை பார்ப்போம்///

காத்திருக்கிறேன்...

எல் கே சொன்னது…

@ராமலக்ஷ்மி
நன்றிங்க

எல் கே சொன்னது…

@சித்ரா

நன்றி

எல் கே சொன்னது…

@சேது
அப்படி அலைய விட்டால் நம்மை கண்டிப்பாக மூழ்கடிக்கும்

எல் கே சொன்னது…

@பிரபாகரன்

நன்றி

எல் கே சொன்னது…

@பாலாஜி
நன்றி பாலாஜி

எல் கே சொன்னது…

@ஹரிஸ்
நன்றி

எல் கே சொன்னது…

@தினேஷ்
முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

எல் கே சொன்னது…

@அருண்
தேடிக் கொண்டே இருக்கிறேன்

எல் கே சொன்னது…

@குமார்
நன்றி

எல் கே சொன்னது…

@சக்தி

உண்மைதான்

எல் கே சொன்னது…

@செந்தில்

கேளுங்கள் தரப் படும்

எல் கே சொன்னது…

@சௌந்தர்
நன்றி

ADHI VENKAT சொன்னது…

நீங்கள் சொல்லியிருக்கும் விஷயங்கள் நூற்றுக்கு நூறு உண்மை. தொடருங்கள்.

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

அருமை. தொடருங்கள்.

Thenammai Lakshmanan சொன்னது…

தேடல் அருமை.. கார்த்திக்..

ஆமாம் தீபாவளி மலரில் வந்த கவிதையை பதிவிடவில்லையா..

எல் கே சொன்னது…

அக்கா, அது ஏற்கனவே போட்டது தானே , அது கவிச் சோலையில் இருக்கு http://kavisolaii.blogspot.com

செல்வா சொன்னது…

// மனதை கடிவாளம் போட்டு அடக்க ஆரம்பித்தால் நாம் செல்லும் பாதை சரியான பாதையாக இருக்கும். எனவே நாம் முதலில் சரி செய்ய வேண்டியது நமது மனதையும் எண்ணங்களையும்.
///

மனத்தைக் கட்டுப்படுத்துவது என்பது கூட ஒரு ஆசைதானே அண்ணா ..
மனதைக்கட்டுப்படுதி நாம் பூமியில் நன்றாக வாழவேண்டும் , சிறந்தவராக வாழவேண்டும் என்ற ஆசையின் அடிப்படைதானே... ஆகா மனத்தைக் கட்டுப்படுத்துவது என்பதும் பொய்யான ஒன்றினை அடையலாம் என்ற ஆசையின் மூலம் தானே.!!

எல் கே சொன்னது…

@செல்வா

நல்ல கேள்வி தம்பி. அதற்கு என் நன்றிகள். புகழ் அடைய மனதை கட்டுப் படுத்தக் கூடாது. அவ்வாறு நான் எங்கும் சொல்லவில்லை.

பொய்யான ஒன்று என்று எதை சொல்லுகிறீர்கள் ? விளக்க முடியுமா ??

நிகழ்காலத்தில்... சொன்னது…

மனதின் பின்னால் நாமா?
நம் பின்னால் மனமா?

என்ற கேள்வியை எழுப்பி உள்ளீர்கள்.

வாழ்த்துகள்

Menaga Sathia சொன்னது…

நல்லாயிருக்கு,தொடருங்கள்...

கவின் இசை சொன்னது…

அருமை.

மனோ சாமிநாதன் சொன்னது…

அன்பு என்பதை அடுத்தவரிடம் காட்டும்போதே, மனம் அந்த அன்பின் பிரதிபலிப்பை எதிர்பார்க்கத்தான் செய்யும். அதுதான் வாழ்க்கை. வாழ்க்கை முழுவதும் எதிர்பார்ப்புகளால் நிறைந்ததுதான். சில நல்ல எதிர்பார்ப்புகளும் பற்றுக்களும் இல்லையென்றால் வாழ்க்கையின் சுவாரஸ்யம் தொலைந்து போகும். மனம் நம்மை ஆட்சி செய்ய அனுமதித்தால் மட்டுமே சோகம். மனதை நாம் ஆளத் தெரிந்து கொன்டாலே தேவயற்ற பற்றுக்களை விட்டு விலகி விட முடியும்.

Geetha Sambasivam சொன்னது…

ellaarume start up le than irukkom. Thanks for sharing.

பவள சங்கரி சொன்னது…

அடடா...பாகீரதி.......எங்கேயோ போய்க்கொண்டிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.......