Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Gradient Skin

Gradient_Skin

இந்த வலைப்பதிவில் தேடு

பிரபலமான இடுகைகள்

Breaking News

latest

பேக் அப் எடுப்பது மற்றும் திரட்டிகளில் இணைப்பது

கூகிள் பஸ்ஸில் சின்னம்மிணி பதிவுகளை பேக்கப் எடுப்பதை பற்றி ஒரு பதிவு போட சொல்லி இருந்தார்கள். மேலும் ஒரு புதியப் பதிவரிடம் பேசிக் கொண்ட...







கூகிள் பஸ்ஸில் சின்னம்மிணி பதிவுகளை பேக்கப் எடுப்பதை பற்றி ஒரு பதிவு போட சொல்லி இருந்தார்கள். மேலும் ஒரு புதியப் பதிவரிடம் பேசிக் கொண்டிருந்தபொழுது எப்படி திரட்டிகளில் நம் வலைப்பூவை சேர்ப்பது என்று கேட்டார். அந்த இரண்டு விஷயங்களை பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்

பேக் அப் எடுப்பது :

 பதிவுகள் எழுத மெனக்கெட்டு நேரம் செலவழிக்கிறோம் . சில சமயம் சில புத்தகங்கள் ,இணையத் தளங்களை தேடி விஷயங்கள் சேகரிக்கிறோம். திடீரென்று உங்கள் வலைப்பூ ஹேக் செய்யப் பட்டாலோ அல்லது கூகிள் ஸ்பேம் என்று உங்கள் வலைப்பூவை தடைசெய்தாலோ  மீண்டும் அந்தப் பதிவுகள் கிடைக்காது . அந்த நிலையில் நீங்கள் அது வரை எழுதிய பதிவுகளை மீண்டும் எழுதுவது என்பது கடினம். எனவே வாரத்திற்கு ஒருமுறையோ இல்லை உங்கள் விருப்பம் போல் எப்பொழுது வேண்டுமோ அப்பொழுதோ பேக்கப் செய்துக் கொள்ளலாம் .


முதலில் உங்கள் பதிவின் தேஷ்போர்ட் சென்று அங்கிருந்து செட்டிங்க்ஸ் (settings) செல்லுங்கள். பிறகு அங்கு அதில் blog tools இருக்கும் அதன் அருகில் மூன்று ஆப்ஷன்ஸ் இருக்கும். அதில் export blog என்பதை கிளிக் பண்ணுங்கள். 



பின், கீழ்க்கண்ட ஸ்க்ரீன் உங்கள் திரையில் வரும். அதில் டவுன்லோட் ப்ளாக் என்ற பட்டனை கிளிக் செய்தால், உங்கள் கணிணியில் அதை எங்கு சேமிக்க விரும்புகிறீர்கள் என்று கேட்கும். நீங்கள் எங்கு சேமிக்க விரும்புகிறீர்களோ அந்த இடத்தை தேர்வு செய்து, "save" பட்டனை கிளிக் செய்தால் உங்கள் வலைப்பூவின் பேக்கப்  உங்கள் கணிணியில் இருக்கும்(பின்னூட்டங்களுடன்) . 

பின் எப்பொழுதாவது உங்கள் வலைப்பூவிற்கு மேலே சொன்ன சோதனைகள் எதாவது வந்தால், செட்டிங்க்ஸ் சென்று import blog கிளிக் செய்தால் கீழ்க்கண்ட மெசேஜ் வரும்.
அதில் உங்கள் நீங்கள் ஏற்கனவே உங்கள் கணிணியில் சேமித்து வைத்துள்ள வலைப்பூவின் பிரதியை ஓபன் செய்து பின் வோர்ட் வெரிபிகேசன் பூர்த்தி செய்து  import blog கிளிக் பண்ணினால் உங்கள் பழைய பதிவுகள் அனைத்தும் மீண்டும் வந்து விடும். 

திரட்டிகள் :

உங்கள் பதிவை பலர் படிக்க வழி செய்பவை இந்தத் திரட்டிகள்தான். திரட்டிகளில் இணைப்பது மூலம் பலர் உங்கள் பதிவை பற்றி அறியும் வாய்ப்பு ஏற்படும். தமிழ் வலைபூ  திரட்டிகளில் முதன்மையாக இருப்பது தமிழ்மணம். இதில் நீங்கள் வலைப்பூவை  இணைக்க கீழே கொடுத்துள்ள லிங்கை உபயோகப் படுத்தவும். 
 இதில் நீங்கள் உங்கள் கணக்கை துவக்கி , பின் இந்த லிங்க் சென்று
http://tamilmanam.net/user_blog_submission.php உங்கள் வலைப்பூ விவரங்களை கொடுத்தவுடன் இரண்டில் இருந்து மூன்று நாட்கள் காத்திருக்க சொல்லும். அதன்பின் நீங்கள் கொடுத்த மின்னஞ்சலுக்கு உங்கள் வலைப்பூ ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதா இல்லையா என்ற தகவல் வரும். அதன்பின் தமிழ்மண ஓட்டுப் பட்டையை நீங்கள் உங்கள் வலைப்பூவில் நிறுவலாம். ஒட்டுப்ப்பட்டை நிறுவ கீழ்க்கண்ட லின்க்கிர்க்கு செல்லவும் .

http://www.tamilmanam.net/tamilmanam/toolbar/blogger.html


இதன்பின் ஒவ்வொரு பதிவு போட்டபின்பும் உங்கள் பதிவை "submit to tamilmanam " என்ற பட்டனை கிளிக் செய்வதன் மூலம் தமிழ்மண தளத்தின் முகப்பு பக்கத்தில் கொண்டு வரலாம். உங்கள் வாசகர்களும் ஓட்டு இட முடியும்.

தமிழ்மணம் உங்கள் பதிவின் ஆர்.எஸ்.எஸ் பீட் செட்டிங்கை அடிப்படையாக கொண்டு இயங்குகிறது. எனவே அதில் நீங்கள் மாற்றம் செய்தால் தமிழ்மணத்தை தொடர்புகொண்டு அங்கும் மாற்றம் செய்ய வேண்டும்.

இன்ட்லி என்ற தமிழ் வலைப்பூ திரட்டியில் இணைப்பது இன்னும் எளிது .
http://ta.indli.com/register என்ற தளத்திற்கு சென்று புதிய பயனர் கணக்கை துவங்கவும் . பின் கீழே உள்ள இணையத் தளத்திற்கு சென்று அங்கு சொல்லப் பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றவும்

http://ta.indli.com/static/add-indli-voting-widget-blogger-tamil

இதன் பிறகு உங்கள் ஒவ்வொரு பதிவிலும் இன்ட்லி ஓட்டுப் பட்டை இருக்கும் அதில் submit பட்டனை கிளிக் செய்து பதிவுகளை இணைக்கலாம். இன்ட்லி உங்கள் பதிவின் உரலை (லிங்க்) வைத்து வேலை செய்கிறது.

அன்புடன் எல்கே

45 கருத்துகள்

பத்மநாபன் சொன்னது…

மிக உபயோகமான பதிவு.. நன்றி..தமிழ் வலைப்பூவுலகம் நிச்சயம் நன்றி கூறும்...

Chitra சொன்னது…

பதிவர்கள் அனைவருக்கும், மிக பயனுள்ள பதிவு. நன்றி.

Unknown சொன்னது…

பயனுள்ள பதிவு.

எழுத்துக்கள் கண்ணுக்கு தெரியவில்லை. select செய்தே படிக்க முடிந்தது. font நிறம் மாற்றுங்களேன்.

Philosophy Prabhakaran சொன்னது…

பேக் அப் எடுப்பது பற்றிய தகவல் பயனுள்ளதாக அமைந்தது...

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

periappaa ,useful post.r u keep 4 blogs?vov

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

பதிவர்கள் அனைவருக்கும், மிக பயனுள்ள பதிவு.

பெயரில்லா சொன்னது…

நல்ல தகவல்கள் LK
//ஆர்.எஸ்.எஸ் பீட் செட்டிங் //
அப்படின்னா என்ன Lk?

சைவகொத்துப்பரோட்டா சொன்னது…

நன்றி வாத்தியாரே.

பவள சங்கரி சொன்னது…

நல்ல பயனுள்ள பதிவு. மிக்க நன்றி எல்.கே.

Nithu Bala சொன்னது…

very useful post..

vanathy சொன்னது…

நல்ல தகவல்கள்.
உங்களுக்கு ஒரு விருது என் வலைப்பூவில் கொடுத்திருக்கிறேன். வந்து பெற்றுக் கொள்ளுங்கள். நன்றி.
//http://vanathys.blogspot.com/2010/11/blog-post_27.html//

வெங்கட் நாகராஜ் சொன்னது…

பயனுள்ள பகிர்வு கார்த்திக். பகிர்வுக்கு நன்றி.

Arun Prasath சொன்னது…

ரொம்ப பயனுள்ள பதிவு சார்

சுந்தரா சொன்னது…

பேக் அப் எடுப்பதுபற்றிய தகவல், மிகவும் பயனுள்ளது. பலர் தேடிக்கொண்டிருந்ததும்கூட.

பகிர்வுக்கு நன்றி கார்த்திக்.

சசிகுமார் சொன்னது…

அருமை அண்ணா

சாதாரணமானவள் சொன்னது…

புதிய பதிவர்கள் நிச்சயம் பயனடையும் பதிவு. .

'பரிவை' சே.குமார் சொன்னது…

மிக பயனுள்ள பதிவு. நன்றி.

அருண் பிரசாத் சொன்னது…

உங்களை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன்.

http://blogintamil.blogspot.com/2010/11/blog-post_30.html

நன்றி

பெயரில்லா சொன்னது…

நல்ல பயனுள்ள பதிவு.நன்றி LK

Jaleela Kamal சொன்னது…

மிகவும் பயனுள்ள பதிவு

geetha santhanam சொன்னது…

very useful info. பதிவுகளை backup செய்யும் வழி என்னைப் போல் பலருக்குப் பயனுள்ளதாக இருக்கும்.

அருண் பிரசாத் சொன்னது…

புதியவர்களுக்கு தேவையான் பதிவு

செ.சரவணக்குமார் சொன்னது…

மிக நல்ல பகிர்வு. நன்றி நண்பரே.

Asiya Omar சொன்னது…

எல்.கே.மிக பயனுள்ள பதிவு.நன்றி.இண்ட்லியில் ஓட்டு போட முடியலை.

ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி சொன்னது…

useful info

NaSo சொன்னது…

பேக்அப் எடுப்பதன் அவசியத்தை தெரிந்து கொண்டேன். நன்றி எல்கே!

Gayathri சொன்னது…

மிக உபயோகமான பதிவு , குறிப்பா
எனக்கு ரொம்பவே யூஸ் ஆகும்..

எல் கே சொன்னது…

@பத்மநாபன்
நன்றி

@சித்ரா
நன்றி

@கலாநேசன்
நன்றி

@பிரபாகரன்
நன்றி

எல் கே சொன்னது…

@செந்தில்குமார்
மொத்தம் மூன்று. போட்டோ ப்ளாக் அப்டேட் அதிகம் இல்லை

@ஜெயந்த்
நன்றி

@பாலாஜி
நன்றி. அதை பத்தி தனியா போடறேன்

@சை.கொ.ப
நன்றி

எல் கே சொன்னது…

@செந்தில்குமார்
மொத்தம் மூன்று. போட்டோ ப்ளாக் அப்டேட் அதிகம் இல்லை

@ஜெயந்த்
நன்றி

@பாலாஜி
நன்றி. அதை பத்தி தனியா போடறேன்

@சை.கொ.ப
நன்றி

எல் கே சொன்னது…

@நித்திலம்
நன்றி

@நிது
நன்றி

@வாணி
நன்றி இன்னிக்குதான் பார்த்தேன்..

@வெங்கட்
நன்றி

@அருண்
நன்றி

@சுந்தரா
நன்றி

@சசி
நன்றி தம்பி

@சாதாரணமானவள்
நன்றி

@குமார்
நன்றி

எல் கே சொன்னது…

@அருன்ப்ரசாத்
பார்த்தேன். நன்றி

@கல்பனா
நன்றி

@ஜலீலா
நன்றி

@கீதா சந்தானம்

ரொம்ப நன்றிங்க
@சரவணகுமார்
நன்றி

@ஆசியா
அது என்ன பிரச்சனைன்னு தெரியல சகோ

எல் கே சொன்னது…

@கடல் நுரை
நன்றி

@எம் எல் ஏ
நன்றி
@காயத்ரி
நன்றி

GEETHA ACHAL சொன்னது…

மிகவும் பயனுள்ள பதிவுகள்...
நன்றி கார்த்திக்...

ADHI VENKAT சொன்னது…

பயனுள்ள தகவலுக்கு நன்றி.

சுசி சொன்னது…

மிக பயனுள்ள பதிவு கார்த்திக்.

ஹேமா சொன்னது…

அறிந்துகொண்டேன் கார்த்திக்.நன்றி !

Thenammai Lakshmanan சொன்னது…

மிக அருமை மற்றும் எளிமை கார்த்திக்.. திண்ணையில் வந்ததற்கும் வாழ்த்துக்கள்.

Menaga Sathia சொன்னது…

பகிந்தமைக்கு நன்றி எல்கே!! தமிழ்மண ஒட்டுப்பட்டையை கீழே எப்படி கொண்டு வருவது??

ஸ்ரீராம். சொன்னது…

இதன்பின் ஒவ்வொரு பதிவு போட்டபின்பும் உங்கள் பதிவை "submit to tamilmanam " என்ற பட்டனை கிளிக் செய்வதன் மூலம் தமிழ்மண தளத்தின் முகப்பு பக்கத்தில் கொண்டு வரலாம்"//

எங்கள் பெரிய பிரச்னை இது..வரவே இல்லை.

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! சொன்னது…

மிக உபயோகமான பதிவு.. நன்றி

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) சொன்னது…

Useful Post. Is it the same for wordpress as well. One of my friend asked

சசிகுமார் சொன்னது…

Thanks

Unknown சொன்னது…

புதியவர்கள் அனைவருக்கும் மிகவும் பயனுள்ள பதிவு.. பிளாக்கை பேக்கெப் எடுப்பது பற்றி எனக்கும் தெரியாது.. அறிமுகப்படுத்தியதற்கு நன்றிங்க எல்.கே.

பெயரில்லா சொன்னது…

உங்களுக்கு ஒரு விருது அளித்துள்ளேன் பெற்றுக் கொள்ளவும்
http://kalpanarajendran.blogspot.com/2010_12_01_archive.html