Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Gradient Skin

Gradient_Skin

இந்த வலைப்பதிவில் தேடு

பிரபலமான இடுகைகள்

Breaking News

latest

நடவடிக்கை எடுக்குமா ????

இன்றோடு இரண்டு வருடங்கள் முடிந்து விட்டன அந்தக் கோர சம்பவம் நடந்து முடிந்து. சம்பவம் நடந்த இடங்களும் புனர் நிர்மாணம் செய்யப்பட்டுவிட்டன. சில...

இன்றோடு இரண்டு வருடங்கள் முடிந்து விட்டன அந்தக் கோர சம்பவம் நடந்து முடிந்து. சம்பவம் நடந்த இடங்களும் புனர் நிர்மாணம் செய்யப்பட்டுவிட்டன. சில,பல மாதங்கள் பரப்பரப்பு செய்தியாய் கத்திய மீடியாக்களும் தங்கள் கேமராவை வேறு பக்கம் திருப்பி விட்டன.

நீதிமன்ற விசாரணையும் முடிந்து விட்டது,தீர்ப்பும் தரப்பட்டு விட்டது ஆனால் ,குற்றவாளி இன்னும் உயிரோடு, நமது வரிப் பணத்தில் . இன்னும் இருபது நாட்களில், நமது பார்லிமென்ட்டை தாக்கி ஒன்பது வருடங்கள் முடிவடைய போகின்றது. அதிலும் தீர்ப்பு தரப்பட்டு பல வருடங்கள் ஆகின்றன. ஆனால் ,குற்றவாளி இன்னும் உயிரோடு ....

கேட்டால், ஜனாதிபதி இன்னும் கருணை மனுவை பற்றி முடிவு சொல்லவில்லை என்கிறார்கள். அவரிடம் கேட்டால், நான் உள்துறைக்கு அனுப்பி இருக்கிறேன் என்கிறார். உள்துறை அமைச்சரோ புது டெல்லி அரசாங்கத்திடம் இருந்து பதில் வரவில்லை என்கிறார் . அப்பொழுது இதற்கு யார் பொறுப்பு ??

தங்கள் இன்னுயிரை கொடுத்த ராணுவ வீரர்களுக்கு என்ன பதில் ? மும்பை தாக்குதலில் உயிர் இழந்த மக்களின் குடும்பத்தினருக்கு என்ன சொல்லப் போகின்றனர் ஜனாதிபதியும் அரசாங்கமும் ??

கருணை மனுவிற்கு பதில் அளிக்க காலக் கெடு இல்லையா ? நாட்டை தாக்கும் தீவிரவாதிகளுக்கு எதற்கு நாம் கருணை காட்ட வேண்டும் ? எதற்கு விசாரணை நடத்த வேண்டும் ?

இதன் மூலம் தீவிரவாதிகளுக்கு என்ன சொல்ல வருகிறார்கள் ? நீங்கள் வந்து குண்டு வையுங்கள் யாரையும் கொள்ளுங்கள் நாங்கள் உங்களை எதுவும் செய்ய மாட்டோம் என்று சொல்லாமல் சொல்லுகின்றனரா ??

மும்பை தாக்குதல் நடந்து கொண்டிருந்தபொழுது பாதுகாப்புப் படையின் ஒவ்வொரு நடவடிக்கையையும் பத்திரிக்கை தர்மம் என்ற பெயரில் நேரடி ஒளிபரப்பு செய்து தீவிரவாதிகள் எளிதில் நமது பாதுகாப்பு படையினரின் நடவடிக்கைகளை தெரிந்து கொள்ள வழி செய்த பர்க்கா தத் இன்று எங்கே சென்றார் ? இல்லை பிரானாய் ராய் என்ன செய்து கொண்டிருக்கிறார் ? பரப்பரப்பு உண்டு பண்ணு செய்திகளில் மட்டுமே ஒரு சில வாரங்களுக்கு ஒளி பரப்புவதுதான் பத்திரிக்கை தர்மமா ??

இனியாவது அரசாங்கம் விரைந்து நடவடிக்கை எடுக்குமா ???

மும்பை தாக்குதலில் உயிர் இழந்த மக்களுக்கும், தீவிரவாதிகளை கொல்லும் முயற்சியில் தங்கள் உயிரை துறந்த பாதுகாப்பு படையினருக்கும் எனது கண்ணீர் அஞ்சலிகள் ...


அன்புடன் எல்கே

38 கருத்துகள்

பெயரில்லா சொன்னது…

இந்த விஷயத்தில் தான் எவ்வளவு மெத்தனம் :(
எனது அஞ்சலிகளும்..

BalajiVenkat சொன்னது…

congress arasu irukum varai avargal onrum seiya matargal... avargal theeviravathathayum madathayum onraga inaithu paarkiraargal...
namadhu vari panam ellamey veenga thaan poi kondu irukirathu... enna seiya....

Ramesh சொன்னது…

அருமையான பதிவுங்க எல்.கே..

கருனை மனுவுக்கு காலக்கெடு எதுவும் கிடையாது... நாலைந்து ஜனாதிபதிகளைப் பார்த்த கருனை மனுக்களெல்லாம்.. இன்னும் நிறைய ஜனாதிபதி அலுவலகத்தில் இருக்கின்றனவாம்.. நம் நாட்டில் எந்த முதல் குடிமகனும் முடிவு எடுப்பதில்லை.. அவர்கள் டம்மி பீசுதான்.. எப்பவுமே..

ஏன் ரொம்பவே எதிர்பார்ப்பை கிளப்பிய அப்துல்கலாமே எதுவும் செய்யவில்லையே... இந்திய அரசியல் அப்படி... ஒன்னும் சொல்றதுக்கு இல்ல..

வெங்கட் நாகராஜ் சொன்னது…

அரசாங்கம் இது போன்ற விஷயத்தில் மெத்தனம் காட்டுவது நல்லதல்ல. எல்லா நிகழ்வுகளிலும் அரசியலும் ஆதாயமுமே பார்க்கப்படுகிறது மோசமான விஷயம்.

Chitra சொன்னது…

மும்பை தாக்குதலில் உயிர் இழந்த மக்களுக்கும், தீவிரவாதிகளை கொல்லும் முயற்சியில் தங்கள் உயிரை துறந்த பாதுகாப்பு படையினருக்கும் எனது கண்ணீர் அஞ்சலிகள் ...

....கண்ணீர் அஞ்சலிகள்!!! :-(

kavisiva சொன்னது…

என்ன சகோ நீங்க! ஜனாதிபதி பொம்மையால் என்ன செய்ய முடியும். அப்படியே மரணதண்டனையை உறுதிப் படுத்தினாலும் அடுத்தாப்புல வருவானுங்க மனித உரிமை கமிஷன் மண்ணாங்கட்டி உரிமைக் கமிஷன்னு! இப்படியெல்லாம் நடப்பதால்தான் மக்கள் என்கவுண்டரைக் கூட ஆதரிக்க ஆரம்பித்து விட்டார்கள்.
இப்படி புலம்பி புலம்பியே ஆதங்கத்தை தீர்ப்பதைத் தவிர நம்மால் என்ன செய்ய முடிகிறது :(

கோலா பூரி. சொன்னது…

இந்த விஷயதில் என்று இல்லை எல்லா விஷயங்களிலும் நம் அரசியல் வாதிகள் இப்படி பொறுப்பில்லாமல் மெத்தனத்துடன் தான் நடந்துகொள்கிறார்கள். நாமும் எதுவும் செய்யமுடியாமல் மௌன சாட்சியாகத்தானே இருக்க முடிகிரது?

'பரிவை' சே.குமார் சொன்னது…

//மும்பை தாக்குதலில் உயிர் இழந்த மக்களுக்கும், தீவிரவாதிகளை கொல்லும் முயற்சியில் தங்கள் உயிரை துறந்த பாதுகாப்பு படையினருக்கும் எனது கண்ணீர் அஞ்சலிகள் ...//

எனது அஞ்சலிகளும்...

அருண் பிரசாத் சொன்னது…

இவனுங்களைலா என்கவுண்டர் பண்ணமாட்டனுங்க....

NaSo சொன்னது…

மக்கள் நலனுக்காக ஆட்சி செய்யாமல் ஓட்டுக்காக ஆட்சி செய்யும் நாட்டில் இது போன்ற பல கொடுமைகளை நாம் பார்க்க வேண்டி வரும். என்றாவது ஒருநாள் நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையோடு தான் ஓட்டுப் போடுகிறோம். நல்லது ஆட்சியாளர்களுக்கு மட்டுமே நடக்கிறது.

மும்பை தாக்குதலில் உயிர் இழந்தவர்களுக்கும் தீவிரவாதிகளுடன் போராடி உயிர் நீத்த காவல்துறை மற்றும் ராணுவ வீரர்களுக்கும் எனது கண்ணீர் அஞ்சலிகள்!!

settaikkaran சொன்னது…

//இனியாவது அரசாங்கம் விரைந்து நடவடிக்கை எடுக்குமா ???//

எடுக்க வேண்டும். மும்பை தாக்குதலில் வெளிநாட்டினர் சிலர் உயிரிழந்தனர் என்பதற்காக காட்டுகிற அதே மும்முரத்தை, இந்தியாவின் பல பகுதிகளில் பல தீவிரவாத அமைப்புகளால் நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்த விசாரணையிலும் காட்டி, அனைத்துக் குற்றவாளிகளையும் கூண்டில் ஏற்றி தண்டிக்க வேண்டும். ஒரு கண்ணில் வெண்ணை; ஒரு கண்ணில் சுண்ணாம்பு என்று மும்பைத் தாக்குதலை மட்டுமே முன்னிலைப்படுத்தி, பிற தாக்குதல்களை ஒதுக்காமல் இருக்க வேண்டும்.


//மும்பை தாக்குதலில் உயிர் இழந்த மக்களுக்கும், தீவிரவாதிகளை கொல்லும் முயற்சியில் தங்கள் உயிரை துறந்த பாதுகாப்பு படையினருக்கும் எனது கண்ணீர் அஞ்சலிகள் ...//

இந்தியாவின் எந்த மூலையில் தீவிரவாதத்தால் எவர் ஒருவர் உயிர் இழந்திருந்தாலும், அவர்களுக்கும் சேர்த்து எனது ஆழ்ந்த அஞ்சலிகளைத் தெரிவிக்கிறேன். நல்ல இடுகை கார்த்தி...

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

//மும்பை தாக்குதலில் உயிர் இழந்த மக்களுக்கும், தீவிரவாதிகளை கொல்லும் முயற்சியில் தங்கள் உயிரை துறந்த பாதுகாப்பு படையினருக்கும் எனது கண்ணீர் அஞ்சலிகள் ...//

எனது அஞ்சலிகளும்...

Vidhya Chandrasekaran சொன்னது…

எனது அஞ்சலிகள்:(

பர்கா தத் - அம்மிணி அடுத்த கவர்மெண்ட் உருவாக்க அரும்பாடுப்பட்டுகிட்டுருப்பாங்க..

Sriakila சொன்னது…

உயிரிழந்தவர்களுக்கு கண்ணீர் அஞ்சலிகள் ...

Geetha Sambasivam சொன்னது…

மனித உரிமைக்கமிஷன் சார்பில் உங்க மேலே வழக்குத் தொடரப் போறேன். :)))))))

இப்போ நிலைமைக்கு அதான் நடக்கும். பர்கா தத் இப்போ 2Gலெ பிசி. அவங்களுக்கு என்ன போச்சு??

Geetha Sambasivam சொன்னது…

இந்த அரசாவது நடவடிக்கை எடுக்கிறதாவது??

ஹரிஸ் Harish சொன்னது…

எனது அஞ்சலிகள்..:(..

சௌந்தர் சொன்னது…

அவங்களை பாதுகாத்து வைத்து இருப்பார்கள் அவர்கள் யாரையாவது கடத்தி வைத்து கொண்டு மிரட்டுவார்கள்

சுசி சொன்னது…

என்னுடைய அஞ்சலிகளும் :((

செல்வா சொன்னது…

//மும்பை தாக்குதலில் உயிர் இழந்த மக்களுக்கும், தீவிரவாதிகளை கொல்லும் முயற்சியில் தங்கள் உயிரை துறந்த பாதுகாப்பு படையினருக்கும் எனது கண்ணீர் அஞ்சலிகள் ...//

எனது சார்பாகவும் கண்ணீர் அஞ்சலிகள் அண்ணா ., என்ன பண்ணுறது ..?

//தங்கள் இன்னுயிரை கொடுத்த ராணுவ வீரர்களுக்கு என்ன பதில் ? மும்பை தாக்குதலில் உயிர் இழந்த மக்களின் குடும்பத்தினருக்கு என்ன சொல்லப் போகின்றனர் ஜனாதிபதியும் அரசாங்கமும் ??
///

Philosophy Prabhakaran சொன்னது…

கண்ணீர் அஞ்சலி...

உங்கள் புது டெம்ப்ளேட் அருமை... எனக்கு இதைப்போன்ற வேறு ஏதாவது டெம்ப்ளேட் கிடைத்தால் நன்றாக இருக்கும் ஏதாவது தள முகவரிகள் தர முடியுமா...?

எல் கே சொன்னது…

@பாலாஜி சரவணா
என்ன பண்ண ?

எல் கே சொன்னது…

@பாலாஜி வெங்கட்
என்னடா பண்ண? ஓட்டு போட்டு தொலைக்கராங்களே ஒவ்வொரு முறையும் அவங்களுக்கே

எல் கே சொன்னது…

@ரமேஷ்
உண்மை உண்மை உண்மை

எல் கே சொன்னது…

@வெங்கட்
அதே அதே. எல்லாம் ஓட்டு அரசியல்

@சித்ரா
:(

எல் கே சொன்னது…

@கவிசிவா
மனித உரிமை கமிஷன் உறுபினர்கள் வீட்டு உறுப்பினர் இபப்டி செத்தா என்ன பண்ணுவாங்களாம் ?

எல் கே சொன்னது…

@கோமு
நம் ஓட்டு உரிமையை சரியாகப் பயன் படுத்தவேண்டும்

@குமார்
:(

எல் கே சொன்னது…

@அருண்
அதுதான் பண்ணனும்

எல் கே சொன்னது…

@எம் எல் ஏ
சரியான ஆட்களை தேர்ந்து எடுக்க வேண்டும்

எல் கே சொன்னது…

@சேட்டை
ஒரு உதாரனத்திற்க்கு அதை சொன்னேன். மற்றப் படி அரசாங்கம் மௌன சாட்சிதான்

@வெறும்பய
:(
@வித்யா
அவங்களை பத்தி பேசினாலே எரிச்சல்தான் வருது

@கீதா மாமி
தாராளமா போடலாம். நான் ரெடி. ஐம்பது வருஷம் ஆனாலும், காங்கிரஸ் நடவடிக்கை எடுக்காது

@ஹரிஸ்
:(

@சௌந்தர்
அவங்களுக்கு ஐடியா தர நீ

@சுசி
:(

@செல்வா
:(

@பிரபாகரன்
என் தளத்தின் இறுதியில் இருக்கும் லிங்க் கிளிக் பண்ணி பாருங்க.

ராமலக்ஷ்மி சொன்னது…

எனது அஞ்சலிகளும்..

Gayathri சொன்னது…

arasiyal vadhigalum namma govt ipdithan seylana seylanu sollu senja mariyadhai kedaiyathu, suyanala vadhigal

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) சொன்னது…

Nice thoughtful post

ஸ்ரீராம். சொன்னது…

செக்குலர் கன்ட்ரி, ஜன நாயகம், மனித உரிமை என்று பெரிய பெரிய வார்த்தையாகப் பேசுவார்கள். பர்கா தத்தா? அவர் யாருக்கு எந்தப் பதவி வாங்க தரகு பேசலாம் என்று இருப்பார். பார்லிமென்ட் தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தார் சென்ற வருடமே தங்களுக்கு வழங்கப் பட்ட விருதுகளை அரசாங்கத்திடம் திருப்பிக் கொடுத்தனர். வோட்டு நீதி.

சென்னை பித்தன் சொன்னது…

பதில் கிடைக்காத கேள்விகள்.என்ன செய்ய? அனைவருடன் சேர்ந்து நானும் அஞ்சலி செலுத்துகிறேன்.

சுந்தரா சொன்னது…

அத்தனைபேரின் மனதிலும் இருக்கிற ஆதங்கத்தை வார்த்தைகளில் வெளிப்படுத்தியிருக்கீங்க கார்த்திக்.

உயிரிழந்தவர்களுக்கு என் அஞ்சலிகள்!

vanathy சொன்னது…

அரசியல்வாதிகளுக்கு ஆயிரம் வேலை இருக்கும். இதை மறந்திருப்பார்கள்.

சங்கரியின் செய்திகள்.. சொன்னது…

இதுதாண்டா அரசியல்.........அருமையான பதிவுங்க எல்.கே.