நவம்பர் 22, 2010

லிவ்விங் டுகெதர் - கலாச்சார புற்றுநோய்.

தொண்ணூறுகளில் இந்தியாவின் சந்தை மேற்க்கத்திய நாடுகளுக்கு திறந்து விடப் பட்டது .மேற்கத்திய நாடுகளின் நிறுவனங்கள் இந்தியாவில் கொஞ்சம் கொஞ்சமாக புற்றீசல் போல் வர துவங்கின. அவற்றின் வரவால் இந்தியாவின் பொருளாதாரம் மேபட்டதும் , வேலை வாய்ப்புகள் அதிகரித்தும் எந்த அளவிற்கு உண்மையோ அந்த அளவிற்கு அவற்றால் நமது கலாச்சாரம் சீரழிந்ததும் உண்மைதான்.


அதற்கு முன்பும் நம் நாட்டில் காதல் இருந்தது. ஆனால் அதன் பெயரால் நடக்கும் காம களியாட்டங்கள் இல்லை. காதலர்கள் தினம் என்ற பெயரில் அன்று நடக்கும் ஆபாசங்கள்தான் எத்தனை ??? காதல் என்ற பெயரில் இப்பொழுது வெறும் காமமே நடந்து கொண்டிருக்கிறது.


இந்த வரிசையில் இப்பொழுது புதிதாய் ஒன்று உள்ளே புகுந்து கொண்டிருக்கிறது. திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழும் லிவ்விங் டுகெதர் என்ற முறைதான் அது. பிடிக்கும் வரையில் இணைந்து வாழ்வோம் ,பிடிக்காத பொழுது பிரிந்து சென்று விடுவோம் என்பதே இதன் சாரம்.


இதைக் கேட்கும் பொழுதே நமது மனதில் பல சந்தேகங்கள் எழும். இதில் என்ன பிரச்சனைகள் உள்ளன ?? இதில் உள்ள சிக்கல்கள் எத்தகையவை ? அவற்றிற்கு நிரந்தர தீர்வு உள்ளதா ? இப்படி பல கேள்விகள் எழுகின்றன.


முதலில் இவற்றை ஆதரிப்பவர்கள் சொல்லும் விஷயங்களை பார்ப்போம். அவர்கள் கீழ் கண்ட காரணத்தினால் இதை ஆதரிக்கிறோம் என்று சொல்கிறார்கள்.


௧. தனி மனித உரிமை இதில் அதிகம் உள்ளது
௨. வரதட்சணை கொடுமை இல்லை
௩. பிடிக்காதவர்களுடன் வாழ்நாள் முழுவதும் சேர்ந்து வாழத் தேவை இல்லை
௪. எதற்காகவும் யாருக்காகவும் என் தேவைகளை விட்டுக் கொடுக்கத் தேவை இல்லை.


நாம் , நம் கடமையை செய்கிறோமோ இல்லையோ உரிமையை எதிர்பார்ப்போம். முதலில் தனி மனித உரிமை என்று இவர்கள் எதை சொல்லுகிறார்கள் ?? குடும்பம் என்று வந்தால், அதற்கென்று சில பொறுப்புகள் உள்ளன. அவற்றை நிறைவேற்றித்தான் ஆக வேண்டும். அவற்றை நிறைவேற்ற தனது உரிமைகளை சிறிது தியாகம் செய்துதான் ஆக வேண்டும். அதில் என்ன தவறு இருக்கிறது ??


அடுத்தது , இதில் பெண்களுக்கு என்னப் பாதுகாப்பு உள்ளது ? ஒரு உதாரணத்திற்கு ஒரு பெண் நன்றாக இருக்கும் வரை அவருடன் இருந்துவிட்டு, அவருக்கு உடல் நிலையோ இல்லை அவரது பொருளாதாரமோ பாதிக்கப் பட்ட நிலையில் ,எனக்கு உன்னுடன் இருக்க பிடிக்கவில்லை என்று ஒருவன் விலகி சென்றால் அந்தப் பெண்ணின் நிலைமை ??? என்னதான் சட்டரீதியாக பொருளாதார பாதுகாப்பு கிடைத்தாலும் , ஒரு குறிப்பிட்ட வயதைத் தாண்டினால் ஒரு துணை வேண்டும் .


பொதுவாக, விவாகரத்து வழக்குகளில் கூட அதிகம் பாதிக்கப் படுவது அவர்களின் குழந்தைகள்தான் என்று நாம் காண்கிறோம்.

அதேப் போல் இந்த லிவ்விங் டுகேதரில் குழந்தை பிறந்தால் அவற்றின் எதிர்காலம் கேள்விக் குறிதான் . ஜீவனாம்சம் கிடைத்தாலும், மனரீதியாக குழந்தைகள் பாதிக்கப்படுவார்கள் என்பது உறுதி. அவ்வாறு சிறு வயதில் பாதிப்பிற்கு உள்ளாகும் குழந்தைகளின் எதிர்காலம் எவ்வாறு இருக்கும் ? கண்டிப்பாக அந்தக் குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கப் படும்.


திருமணம் என்பது நமது பார்வையிலும், மேல் நாட்டவர் பார்வையிலும் வேறுபாடும். நமது பார்வையை பொறுத்தவரை திருமணம் ஆயுட்கால பந்தம். ஆனால் அவர்களை பொறுத்தவரை அவ்வாறு இல்லை. அவர்களின் தேவை மாறுபடும் பொழுது உறவு மாறும்.


நமது குடும்பங்களில் பெற்றோரை பார்த்துக் கொள்ளவேண்டிய பொறுப்பும் உள்ளது. ஆனால் லிவ்விங் டுகதரில் இது சாத்தியமா ?? ஒரு கட்டம் வரைக்கும்தான் உங்களுடைய பார்ட்னர் பொறுத்துக் கொள்வார். அதன்பின் நடக்காது. அப்பொழுது அவர்களின் நிலைமை என்ன ஆகும் ??


இது ஒரு கலாசார சீரழிவு என்பதை ஏற்க மறுக்கும் நபர்கள் சொல்வது, திருமணம் தமிழர் கலாச்சாரம் இல்லை என்பதே. இது ஒரு பொய்யான கூற்று. பண்டைய தமிழகத்தில் காதல் மனம்,களவு மனம் போன்றவை இருந்தாலும், பெரும்பாலும் பெற்றோர் செய்து வைத்த திருமணங்களே என்பது பல சங்கப் பாடல்களில் இருந்து நிரூபணம் ஆகிறது.


'கொடுப்பக் கொள்ளும்' பெற்றோர் ஏற்பாட்டுத் திருமணமாகவே தென்னிந்தியாவில் திருமணங்கள் காலம் காலமாகவே நடைபெற்று வந்திருப்பதாகச் சமூகவியல் அறிஞர்கள் கருதுகின்றனர். தமிழ் இலக்கியத்தை ஆராய்ந்த மேலை நாட்டு அறிஞர் ஒருவரும் இந்த முடிவுக்கே வருகின்றார். 

காதல் திருமணங்கள் நடைபெறவில்லை என்பது இதன் பொருளன்று. "கொடுப்போர் இன்றியும்' திருமணம் நிகழும் என்பதை தொல்காப்பியமே உறுதி செய்கிறது. "ஏற்பாட்டுத் திருமணங்களே பெரும்பான்மையானவை' என்பதே ஆய்வாளர்கள் வெளிப்படுத்தும் கருத்து. "தாய்மாமன்' என்ற உறவு, 
தமிழ்நாட்டில் திருமண உறவுகளிலும், நிகழ்வுகளிலும் பெற்றிருக்கின்ற இடத்தை அறியாதார் யார்? 

திருமணச்சடங்கு பெண்ணுக்கான தேவை என்பது சங்க இலக்கியத்தில் இந்தத் தேவை, அழுத்தமாகப் பதிந்திருக்கிறது. "" என்னைப் பிடிக்காவிட்டாலும் பரவாயில்லை, என்னை மணந்து கொள் '' (நயவாய் ஆயினும் வரைந்தனை கொண்மோ - ஐங்குறுநூறு, 276 ) என்றும், "" மனைவி என்ற ஸ்தானத்தைக் கொடு '' (பெண்டெனப்படுத்தே, ஐங்குறு, 276 ) என்றும் பெண் ஆணிடம் கெஞ்சிக் கதறுவது, பெண்ணின் திருமணத் தேவையை உறைக்கும்படி வெளிப்படுத்துகிறது. 


ஆக மொத்தத்தில் திருமண சடங்குகளில் வேண்டுமானாலும் பிற்காலத்தில் மாறுதல் வந்திருக்கலாம். ஆனால் திருமணம் என்பது சங்க காலம் தொட்டே தமிழக கலாச்சாரத்தில் ஒரு பகுதியாகத்தான் உள்ளது. இதை யாரும் மறுப்பதற்கு இல்லை.
திருமண பந்தத்திலும் இன்று பிடிக்கவில்லை என்றால் விலகி செல்ல விவாகரத்து இருக்கிறது. அதில் சட்ட ரீதியான பாதுகாப்பு பெண்களுக்கு உள்ளது .அதேப்போல் இருவருக்கும் இடையில் பிரச்சனை என்றால் அதை தீர்த்து வைக்க குடும்ப பெரியவர்கள் இருக்கிறார்கள் .நாம் செய்யும் தவறை தட்டி கேட்க பெரியவர்கள் இருக்கிறார்கள் என்றாலே தவறு செய்ய யோசிப்பார்கள். லிவ்விங் டுகதரில் இவை எல்லாம் இல்லை.பொதுவாக, இதை அதிக காசு வைத்துக் கொண்டு இருக்கும் சிலரும், இந்தியக் கலாச்சாரத்தில் வளர்ந்து ,இன்று வெளிநாட்டில் வேலைக்காக சென்று பின் அங்கு இருக்கும் பழக்க வழக்கங்களில் ஊறிய சிலரும் மட்டுமே வரவேற்கின்றனர்.

அவர்களுக்கு ஒரு கோரிக்கை உங்களுக்கு பிடித்தால் நீங்கள் அவ்வாறு அங்கேயே இருந்து கொள்ளுங்கள் . எங்கள் தாய் திருநாட்டிற்கு கொண்டு வர வேண்டாம்.


எங்களுக்கு சமாளிக்க வேறு பல பிரச்சனைகள் உள்ளன. இந்த விஷச் செடியால் வரும் பிரச்சனைகளை சமாளிக்க நேரம் இல்லை எமக்கு .


டிஸ்கி 1 : நீல நிறத்தில் கொடுக்கப் பட்டுள்ள வரிகள் " யாழ் " இணையத் தளத்தில் இருந்து 30-11-2004, மதுரை காமராசர் பல்கலைக்கழகத் தமிழ் புலமும் , சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கமும் இணைந்து நடத்திய உலகத் தமிழாசிரியர்களுக்கான தமிழர் பண்பாட்டுச் சிறப்பு பயிற்சி வகுப்பு, மதுரை, பற்றியத் தலைப்பில் வந்த செய்தியில் இருந்து கையாளப் பட்டுள்ளது

டிஸ்கி 2 : இது திண்ணை.com இல் வந்துள்ளது

அன்புடன் எல்கே

66 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

௧. தனி மனித உரிமை இதில் அதிகம் உள்ளது
௨. வரதட்சணை கொடுமை இல்லை
௩. பிடிக்காதவர்களுடன் வாழ்நாள் முழுவதும் சேர்ந்து வாழத் தேவை இல்லை -----------------

இதையும் சேர்த்துக்கிடனும். இதுனாலே என் தாய்த்திரு நாட்டில் ஜாதி, மதம் ஒழிந்து நாம் எல்லோரும் இந்த நாட்டின் ஒரே குடிமக்கள் என்று உணர ஆரம்பிப்போம்.

ஆணும், பெண்ணும் பழகி கீழ் ஜாதிக்காரிக்கும், மேல் ஜாதிக்காரணும் அடிப்படையில் ஒறே உணர்ச்சிதன் எண்டு புரிஞ்சிக்குவாங்க. அதுனாலே இன்னும் சத்தமா நாங்க ஜெய்கிந்த் சொல்லுவோம்.

தெய்வசுகந்தி சொன்னது…

template நல்லா இருக்குதுங்க கார்த்திக்!

asiya omar சொன்னது…

வெளிநாடுகளில் வேலைக்கு செல்லும் பேச்சிலர்ஸ் அங்கு சிலர் அதிகம் இந்த லிவிங் டுகெதர் கலாச்சாரத்தால் பாதிக்கப்படுவதுண்டு.பகிர்வுக்கு நன்றி.

துமிழ் சொன்னது…

இந்தப் பதிவுக்கு அனானி ஆப்சனை எடுத்துவிடுவது நன்று.
http://thamilmaruththuvam.blogspot.com/2010/11/blog-post_404.html

எனது இந்தப் பதிவிலே முறைகேடாக பதில் சொன்ன அனானிகள் நிரூபித்து விட்டார்கள்
அவர்களின் இந்தக் கலாச்சாரமும் முறைகேடானது என்று

S Maharajan சொன்னது…

அவசியமான பதிவு

சௌந்தர் சொன்னது…

நல்லாவே சொல்லி இருக்கீங்க நாங்கள் சொல்வது எங்களுக்கு தேவை இல்லை என்பது தான் உங்களை தடுக்க வில்லை அது உங்கள் விருப்பம் எங்களால் சொல்ல தான் முடியும் இது "லிவ்விங் டுகெதர் கொஞ்சம் கொஞ்சமாக கொள்ளும் பூச்சி கொள்ளி

நாகராஜசோழன் MA சொன்னது…

உங்கள் கருத்தில் முற்றிலும் உடன்படுகிறேன். பகிர்வுக்கு நன்றி!

GEETHA ACHAL சொன்னது…

கரெக்டாக சொன்னீங்க...இது எல்லாம் நம்மூருக்கு சரிப்பட்டு வராது...வரவும் கூடாது என்பது தான் என்னுடைய கருத்து....

உங்க புது டெம்பிளேட் சூப்பர்ப்...

பிரியமுடன் ரமேஷ் சொன்னது…

அருமையான தெளிவான விளக்கங்கள் கொண்ட பதிவு நண்பரே.. நன்றி..

பதிவுலகில் பாபு சொன்னது…

நல்ல கருத்துக்கள்..

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ சொன்னது…

தெய்வசுகந்தி said...
template நல்லா இருக்குதுங்க கார்த்திக்!//

:))

ரிப்பீட்டு!

Arun Prasath சொன்னது…

உங்க கருத்துக்கு என் வோட் உண்டு நண்பரே..... உங்களை நான் வழி மொழிகிறேன்

வித்யா சொன்னது…

ம்ம்ம். அவங்கவங்க சந்தோஷம் அவங்கவங்களுக்கு. அடுத்தவன் பண்றது தப்புன்னு கிண்டல் பண்ணும்போது தான் பிரச்சனை வருது.

எங்கதான் போவுதுன்னு பாப்போம்.

முகிலன் சொன்னது…

//வித்யா said...
ம்ம்ம். அவங்கவங்க சந்தோஷம் அவங்கவங்களுக்கு. அடுத்தவன் பண்றது தப்புன்னு கிண்டல் பண்ணும்போது தான் பிரச்சனை வருது.

எங்கதான் போவுதுன்னு பாப்போம்//

சந்தோஷம்ங்கிற எடத்துல வாழ்க்கைன்னு போட்டுக்கிட்டு ரிப்பீட்டறேன்.

siva சொன்னது…

டெம்ப்ளட் நல்ல இருக்கு அண்ணா

பகிர்வு அருமை

உங்கள் தேடல் மிக அதிகம்

Swami சொன்னது…

Ungal padhivu arumai. Living together, Nammai marubadi kattumirandi vazhkaikku azhaithu sellum .

நித்திலம்-சிப்பிக்குள் முத்து சொன்னது…

ஆழ்ந்து சிந்தித்திருக்கிறீர்கள் எல்.கே. ஆனால் என்னைப் பொறுத்தவரை இது அவரவர் தனிப்பட்ட விடயம் இதெல்லாம்.........

ஹரிஸ் சொன்னது…

தெளிவான கருத்துக்கள்.. நன்றி.

LK சொன்னது…

@அனானி

நன்றி. இதே காதல் திருமணத்திலும் செய்யலாமே ??

LK சொன்னது…

@சுகந்தி
நன்றி

LK சொன்னது…

@ஆசியா
ஆம் சகோ. அது மெள்ள மெள்ள நம்மையும் விழுங்க வருகிறது

LK சொன்னது…

@துமிழ்
நன்றி நண்பரே. என் பதிவில் மட்டுறுத்தல் உண்டு. எனவே இங்கு வந்து யாரும் வாந்தி எடுக்க இயலாது

LK சொன்னது…

@மகாராஜன்
நன்றி

@சௌந்தர்
அதேதான் தம்பி.

@நாகராஜா சோழன்
நன்றி

@கீதா
ஆதரவுக்கு நன்றி

@ரமேஷ்
நன்றி

@பாபு
நன்றி

@ஷங்கர்
நன்றி.. ஆனா...

LK சொன்னது…

@அருண்
நன்றி

LK சொன்னது…

@வித்யா
சமுதாயத்தை பாதிக்காத வரையில் மட்டுமே ..

@சிவா
நன்றி

LK சொன்னது…

@சுவாமி
அதைதான் சொல்லிக்கிட்டு இருக்கோம் நாங்க

LK சொன்னது…

@நித்திலம்
அடுத்தவரையும் சமுதாயத்தையும் பாதிக்காத வரை மட்டுமே. சமூகத்தை பாதிக்கும் எதற்கும் என் எதிர்ப்பு உண்டு

LK சொன்னது…

@ஹரிஸ்
நன்றி

ஜெயந்தி சொன்னது…

இந்த கலாச்சாரம் இன்னும் இங்க வரலன்னு நெனக்கிறீங்களா? அது வந்து ஜோரா ஓடிக்கிட்டிருக்கு. இன்னும் விரைவில் இதன் விளைவுகள் வெளிவரும்.

பயணமும் எண்ணங்களும் சொன்னது…

குடும்பம் என்று வந்தால், அதற்கென்று சில பொறுப்புகள் உள்ளன. அவற்றை நிறைவேற்றித்தான் ஆக வேண்டும். அவற்றை நிறைவேற்ற தனது உரிமைகளை சிறிது தியாகம் செய்துதான் ஆக வேண்டும். //

லிவிங்-டுகெதரில் இவை இல்லை என எப்படி சொல்ல முடியும்.?

உங்கள் பயம் நியாமென்றாலும், சில தவறான புரிதலும் இருக்கு..

http://punnagaithesam.blogspot.com/2010/11/3.html

விளக்கம் இங்கே

கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…

இங்கு எதைபற்றியும் நாம் கருத்து சொல்ல முடிவதில்லை.. கலச்சாரம் பற்றி ஜக்கி வாசுதேவ் அற்புதமான விளக்கம் தருவார்..

தொன்மை வாய்ந்த பாரத கலாச்சாரம் பற்றிய போதிய அறிவு நமக்கு இல்லை என்றுதான் நினைக்கிறேன்.

Jo Amalan Rayen Fernando சொன்னது…

Living together has become news only in the aftermath of Supreme Court's decision to allow maintenance to the woman deserted by the man in the Living together concept.

Before that, it existed in an unrcognised form of வைப்பாட்டிக் கலாச்சாரம்.

In that, any man can keep another woman providing for her; and children if born out of that.

The man can be either a married person or a bachelor.

Society has allowed it. Because, to have 'keep' or 'keeps' is a status symbol for a rich man. A symbol of macho culture of a man.

Society wants men to be machos; and women to suffer his macho acts.

Of course, all ills that you have enlisted, are applied here also, like children feeling unwanted; or living neglected lives w/o claims on father's property etc.

But the vaipaatti culture was not openly recognised; only taken for granted.

We have many social evils like that For e.g castes. We dont want it in theory; but we allow it.

As you said, living together may remain as an indiviudal's personal matter. Not as a recognised form of life.

You have written neatly w/o confusion.

anu சொன்னது…

Very nice flow.Good article

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

பணம் அதிகம் சம்பாதிக்கும் தனி சுதந்திர மனிதர்களின் கலாசாரம் இது என்பது என் அபிப்ராயம்

விக்கி உலகம் சொன்னது…

இதுக்கு பேரு கலாச்சாரம் இல்ல -

பச்சையான உடல் பசி மட்டுமே.

என் மனைவி பிள்ளைகள் என்பது போயி
உன் பிள்ளையும் , என் பிள்ளையும் என்று ஆகிவிடும்.

மற்றும் இது thikka கொழுப்பு உள்ளவங்களுக்குதான்.

பெயரில்லா சொன்னது…

Plz guys sorry i am posting anonymous bcoz i didnt start my blog sofar,(leave it) and i will learn how to write in tamil letters in web spl. in blogs.
i just want to tell plz read history and our culture!dont blame western world for everything! it was there in our old time,now we are exposed to the world thats all..finally anybody can write anything since they have their keyboard! is in it?

Gayathri சொன்னது…

ennamo epdiyo pogattum, sonna kekkavaa poranga??? kali gaalam ithaan arambhichuduchu,

Unga padhivu rombha nalla irukku,
aadhangam puriyuthu..atleast namma kuzhandhaingal marrum uravinarukkavathu bhudhimathi sollu parthu kollathaan mudium

ப.செல்வக்குமார் சொன்னது…

//அதேப் போல் இந்த லிவ்விங் டுகேதரில் குழந்தை பிறந்தால் அவற்றின் எதிர்காலம் கேள்விக் குறிதான் . ஜீவனாம்சம் கிடைத்தாலும், மனரீதியாக குழந்தைகள் பாதிக்கப்படுவார்கள் என்பது உறுதி. அவ்வாறு சிறு வயதில் பாதிப்பிற்கு உள்ளாகும் குழந்தைகளின் எதிர்காலம் எவ்வாறு இருக்கும் ? கண்டிப்பாக அந்தக் குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கப் படும்.//

கருத்தில் கொள்ள வேண்டிய விஷயம் அண்ணா ., நானும் விரைவில் இது பற்றிய எனது புரிதலை கூறுகிறேன் ..

கோவை2தில்லி சொன்னது…

நல்ல பகிர்வு.

LK சொன்னது…

@ஜெயந்தி

இன்னும் அதிகம் வரவில்லை சகோதரி. அது வளரும் முன் ஒழிக்கப் படவேண்டும்

LK சொன்னது…

@பயணமும்

நன்றி.

@செந்தில்
முற்றிலும் உண்மை. ஆனால் எல்லாம் தெரிந்தவர்கள் போல் இங்கு பலர் பேசுகின்றனர்

LK சொன்னது…

@ஜோ
நீங்கள் சொல்லுவது பழங்காலமாக இருந்து வருகிறது. அதையே சட்டபூர்வமாகத்தான் பலர் முயல்கின்றனர், அதன் பின் விளைவுகளை பற்றி யோசிக்காமல். நன்றி

LK சொன்னது…

@அனானி
உங்கள் பெயரி குறிப்பிட்டு இருக்கலாமே. நீங்கள் சொல்லுவது எந்த காலத்தில், எந்த நூற்றாண்டில் என்று ஆதாரத்துடன் சொல்ல முடியுமா ?? உடன்போதல் என்ற பழக்கம் இருந்தாலும், அவர்கள் பின் திருமணம் செய்தே வாழ்ந்தனர். ஒருவருடன் உடன் போய் விட்டு சிறிது காலம் கழித்து வேறு ஒருவருடன் மாறவில்லை. சரியாக தெரிந்து கொண்டு பிறகு பேசவும் . யார் வேண்டுமானாலும் எதை பற்றியும் எழுதலாம். அவரவர் கருத்து அவரவருக்கு. எழுதக் கூடாது என்று சொல்ல உங்களுக்கு உரிமை இல்லை

LK சொன்னது…

@அனு
நன்றி

@சதீஷ்
ஆமாம் சதீஷ். அதுதான் உண்மை

LK சொன்னது…

@விக்கி உலகம்.

அப்படி ஆகக் கூடாது என்பதே எங்கள் நோக்கம்

LK சொன்னது…

@காயத்ரி
அதற்குத்தான் நாங்கள் முயல்கிறோம்

LK சொன்னது…

@செல்வா
எழுதுங்கள் தம்பி

சுசி சொன்னது…

என்ன சொல்ல.. கொடுமை.. அவ்ளோதான்..

புது வீடு நல்லா இருக்குன்னு போன போஸ்ட்ல சொன்னேனா?? சூப்பரா இருக்கு.

வாழ்த்துக்கள் கார்த்திக்.. திண்ணையில் பிரசுரமானதுக்கு.

kavisiva சொன்னது…

கணவன் மனைவி உறவு வேண்டாம் சின்னவீட்டு உறவே போதும் என்று நினைப்பவர்களிடம் என்ன சொன்னாலும் புத்தியில் ஏறாது சகோ!

dheva சொன்னது…

ஒரு விசயம் சொல்லவா....

மேடைல பேசி கைதட்டல் வாங்கற மாதிரி பேசுறது வேற...உண்மையா வாழ்றது வேற....!

தமிழ் நாட்டுல திருமணம் பண்ணி கெட்டு குட்டிச் சுவரா எத்தனை குடும்பம் போயிருக்கு.....!!!!

புரட்சிக்கவியே குடும்பம் பிள்ளைகள்னு வாழ்ந்தவர்தானே....

காலம் காலமா.....கூட்டம் கூட்டமா ..கூடி வாந்துகிட்டு இருக்குற சமூகம்....நாம்!!!!!

அப்டியெல்லாம் யாரும் ஒண்ணும் செஞ்சுட முடியாது பாஸ்.....!!!!!!

நாம எல்லாம் மூளையை மட்டும் யூஸ் பண்றது இல்ல...இதயத்தையும்தான் (மனச சொன்னேன்) யூஸ் பண்றோம்...!

வித்தியாசமான கடவுள் சொன்னது…

எல்லாமே அவரவர் புரிந்துகொள்ளுதலில் தான் இருக்கிறது... இன்னிக்கு வீட்டில் பார்த்து நடத்தி வைத்த திருமணத்திலேயே நிறைய கள்ளக்காதல்கள் வந்து விட்டன... அதிலும் அதிகம் பாதிக்கப்படுபவர் ஆணாகத்தான் இருக்கிறார் (கள்ளக்காதலில் இந்தியாவில் அதிகம் இறந்தது, இறப்பது ஆண்கள் தான்.)... இந்த "Live-in" பற்றிய எனது பதிவிற்கு இங்கே சொடுக்கவும்... http://mightymaverick.blogspot.com/2010/04/blog-post_15.html

ஹேமா சொன்னது…

கார்த்திக் நீங்களுமா....!

இந்த லிவிங்க் டூகெதர் ஒரு கலக்குக் கலக்கிக்கொண்டேயிருக்கு.
யாருக்காவது ஞாயம் புரியுதா,அதன்படி வாழ்கிறார்களான்னு தெரில.ஆனா...நிறையவே புரிந்துகொள்கிறார்கள் பதிவுகள்மூலம் !

அப்பாவி தங்கமணி சொன்னது…

நம்ம ஊர்ல இந்த "லிவிங் டுகெதர்" ங்கற விஷயம் தவறா புரிந்து கொள்ளப்பட்டுள்ளதுன்னு தான் எனக்கு தோணுது. இங்க நான் நெறைய அந்த மாதிரி மக்களை பாக்கறேன் தினமும். இவங்ககிட்ட இந்த உறவு முறைல "தான் தோன்றித்தனம்" நிச்சயம் இல்லை. கிட்டத்தட்ட அது ஒரு திருமண உறவு போலதான் இங்க எடுத்துக்கப்படுது. அந்த உறவு முறியும் போது அது பெரிய விஷயமாவும் இருக்கு. நம்ம ஊருல அந்த கான்செப்ட் மட்டும் காபி பண்ணிட்டு கருத்தை விட்டுட்டாங்க. நம்ம கலாசாரத்துக்கு அது ஒத்து வராதுங்கறது இன்னொரு விஷயம்

இங்க கேர்ள் பிரெண்ட்னு சொல்லப்படறது ஒரு நிலையான உறவா தோன்றப்ப தான். அவங்களுக்குள்ள ஒரு கமிட்மென்ட் கூட இருக்கு. நம்ம ஊர்ல சும்மா ஒரு நாள் பேசி பழகினா உடனே கேர்ள் பிரெண்ட்னு அறிமுகம் செய்யறது ரெம்பவும் அபத்தம் தான்

சுருக்கமா சொல்லணும்னா நம்ம யூத் இப்படியும் இல்லாம அப்படியும் இல்லாம ரெண்டும் கெட்டானா இருக்கறது தான் இந்த கொடுமைக்கு காரணம்

இதை பத்தி ஒரு போஸ்ட் எழுதணும்னு கூட தோணுது

LK சொன்னது…

@சுசி

நன்றி

LK சொன்னது…

@தேவா
வாங்க பாஸ் .சரியா சொன்னீங்க. வெறும் மூளையை மட்டும் உபயோகப் படுத்தினால் போதாது

LK சொன்னது…

@கவி
:))

LK சொன்னது…

@ஹேமா

எனக்கு ஓரளவு புரிதல் உண்டு இதில். இது நான் கடந்த வாரமே எழுதியது. கொஞ்சம் தாமதமாய் வெளியிடுகிறேன்

LK சொன்னது…

@அப்பாவி

நாங்களும் அதுதான் சொல்கிறோம். அது என்ன வேண்டுமானாலும் இருந்துகொள்ளட்டும் . இந்தியாவிற்கு அது சரி வராது.

அன்னு சொன்னது…

//நாம் , நம் கடமையை செய்கிறோமோ இல்லையோ உரிமையை எதிர்பார்ப்போம். முதலில் தனி மனித உரிமை என்று இவர்கள் எதை சொல்லுகிறார்கள் ?? குடும்பம் என்று வந்தால், அதற்கென்று சில பொறுப்புகள் உள்ளன. அவற்றை நிறைவேற்றித்தான் ஆக வேண்டும். அவற்றை நிறைவேற்ற தனது உரிமைகளை சிறிது தியாகம் செய்துதான் ஆக வேண்டும். அதில் என்ன தவறு இருக்கிறது ??//

Hats Off Anna. ஆனா எல்லாரையும் எல்லா நேரத்திலும் திருப்திப்படுத்த முடியாது. கீழ்த்தரமான கைதிகளுக்கே மனித உரிமை நிறுவனங்கள் போராடும்போது இவற்றை என்ன செய்ய முடியும்? அரசாங்கம் தலையிட்டு நம் கலாசாரத்தை, காப்பாற்றினால்தான் உண்டு.

vanathy சொன்னது…

என்னத்தை சொல்ல? ஏதோ பிடிச்சிருக்கு இருக்கிறோம். பிடிக்காவிட்டால் பிரிகிறோம் என்கிறாங்க.
நல்ல பதிவு.

Mitr Friend - Bhushavali சொன்னது…

I know how sad it is!!! Children are indeed the most affected in these cases!!! :(
Wish we could get back to the pre-British era. Life wasn't so comfortable, but not so complicated too!!!
Office Outfit - 20
Trichy Temple Tour - Part 2

Sriakila சொன்னது…

ப்ளாக் நல்லா ஃப்ரெஷ்ஷா இருக்கு கார்த்திக். கலாச்சாரத்த நீங்களும் விடலையா?

Sriakila சொன்னது…

என் குழந்தைக்கு ரொம்ப நேரம் ஒதுக்க வேண்டியிருப்பதால நிறையப் பதிவுகளுக்கு கமெண்ட்ஸ் கொடுக்க முடியல. சாரி!

தக்குடுபாண்டி சொன்னது…

அவசியமான பதிவு நல்லாவே சொல்லி இருக்கீங்க LK!

ரஜின் சொன்னது…

சகோ.எல்.கே.பதிவு அருமை.இதை எத்துனைமுறை,எவ்வளவு எடுத்து சொன்னாலும் விளங்காது.

இது பற்றிய இன்னும் சில விளக்கங்களோடு,எனது புரிதலும் இதோ...
http://sunmarkam.blogspot.com/2010/11/blog-post_24.html

அன்புடன்
ரஜின்

சாகம்பரி சொன்னது…

கொஞ்சம் தாமதம் ஆகிவிட்டது. சங்ககாலத்தில் பொறுப்பை உணர்ந்த ஆண்கள் இருந்தனர். எனவே காதல் மணம் கடி மணம் நிகழ்ந்தன. இப்போதைய கலாச்சாரத்திற்கு இந்த கண்ணராவி எல்லாம் தேவையா. லிவிங்க் டு கெதர் இன்னும் முட்டாள் பட்டாம்பூச்சிகளையும் வெற்று நத்தைகூடுகளையும் உருவாக்கும். முத்துக்கள் உருவாகாது.