Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Gradient Skin

Gradient_Skin

இந்த வலைப்பதிவில் தேடு

பிரபலமான இடுகைகள்

Breaking News

latest

கிரிக்கெட்டும் மற்ற விளையாட்டுகளும்

ஆசியப் போட்டிகள் பற்றிய பதிவுக்கு பின்னூட்டம் அளித்த பலர் சொன்னது கிரிக்கெட்டினால் மற்ற விளையாட்டுகள் பாதிக்கப்படுகின்றன. இதில் ஓரளவு உண்...


ஆசியப் போட்டிகள் பற்றிய பதிவுக்கு பின்னூட்டம் அளித்த பலர் சொன்னது கிரிக்கெட்டினால் மற்ற விளையாட்டுகள் பாதிக்கப்படுகின்றன. இதில் ஓரளவு உண்மை இருந்தாலும்., அது மட்டுமே காரணம் இல்லை. இதை பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.

முதலில் கிரிக்கெட்டை இந்தியாவில் நிர்வகிப்பது சுயேச்சை அதிகாரம் கொண்ட இந்திய கிரிக்கெட் வாரியம். மற்ற விளையாட்டுகளுக்கு அவ்வாறு இல்லை. அதை மத்திய அரசாங்கமே நிர்வகிக்கிறது. இதனால், வருடம்தோறும் அதற்கென்று ஒதுக்கப் படும் தொகை சரியான அளவு இல்லை. தனியார் நிறுவனங்கள் ஊக்கம் தர தயாராக உள்ளன. ஆனால் ,அவை நேரடியாக வீரர்களுக்குத்தான் செலவு செய்ய தயாராக உள்ளன. இந்திய விளையாட்டு வாரியத்திடம் பணம் கொடுக்க அவை தயாராக இல்லை. காரணம் ஊழலே. 

இந்தியாவின் புகழ்பெற்ற டாடா நிறுவனம், கால்பந்துக்கென்று தனியாக ஒரு பயிற்சி பள்ளியே நடத்தி கொண்டுள்ளது. இந்திய கால்பந்து லீகில் அந்த அணியும் விளையாடுகிறது. மற்றொரு  நிறுவனமான சஹாரா ஹாக்கி அணிக்கு ஸ்பான்சர் செய்கிறது. ஆக , நிறுவனங்கள் தயாராக உள்ளன உதவி செய்ய, ஆனால் நமது ரெட் டேப் விதிமுறைகள் காரணமாக அவை களம் இறங்க யோசிக்கின்றன . 
 


அதேபோல், மற்ற விளையாட்டு போட்டிகளுக்கு தகுதிவாய்ந்த வெளிநாட்டு பயிற்சியாளர் நியமிப்பதிலும் பிரச்சனை உள்ளது. புது பயிற்சியாளர் வந்தவுடன் உலகத் தரம் வாய்ந்த வீரர்களாக யாரையும் மாற்ற இயலாது. அவர் சுதந்திரமாக இயங்க அனுமதிக்கவேண்டும். கொஞ்சம் பொறுமையாக இருந்தால் நடக்கும். ஆனால் அவருக்கு போதுமான நேரம் தராமல் அவரை நீக்குவது உடனே மற்றொருவரை நியமிப்பது என்று இருந்தால் நிலைமை மாறவே மாறாது.

கால்பந்தில் ஹக்டன் என்பவரை நியமித்தார்கள். ஆரம்பத்தில் எந்த வித மாற்றமும் தெரியவில்லை. ஆனால் அவரே தொடர்ந்து இருந்த காரணத்தினால், ஆசிய கோப்பை கால்பந்தாட்ட போட்டிக்கு (2011 ) இந்தியா பல வருடங்கள் கழித்து தகுதி பெற்றுள்ளது.

கிரிக்கெட்டில் ஒரு உலகக் கோப்பையை பெற்ற பின்னே ,மக்களின் கவனம் அதில் திரும்பியது. மேலும் அது ஒரு நாள் அல்லது ஐந்து நாட்கள் நடக்கும் போட்டி என்பதால் அதன் மூலம் தொலைகாட்சி வருவாய் அதிகம். அதிக விளம்பரங்கள் போடலாம் . அதனால்தான் நிறுவனங்கள் கிரிக்கெட்டில் அதிகப் பணத்தை கொட்டுகின்றன.

பல்வேறு விளையாட்டு வாரியங்களையும் சுய அதிகாரம் உள்ள அமைப்பாக மாற்ற வேண்டும்.அதன் பொறுப்புகளில் ஒய்வு பெற்ற வீரர்கள் இறுகக் வேண்டும். அரசியல்வாதிகள் அதில் எந்த விட குறுக்கீடும் செய்யக் கூடாது. வீரர்களுக்கான உபகரணங்கள் சரியான நேரத்தில் அளிக்கப்படவேண்டும். (படகுப் போட்டியில் பத்து வருட பழையப் படகை வைத்தே பதக்கம் வென்றுள்ளனர் நமது வீரர்கள் ).

இவற்றை செய்தால், மற்ற விளையாட்டு போட்டிகளிலும் கிரிக்கெட் அளவு ஜொலிக்க முடியும். 



அன்புடன் எல்கே

12 கருத்துகள்

ஸ்ரீராம். சொன்னது…

யோசனைகள் சரியே... ஆனால் மக்களின் ரசனை, சுவாரஸ்யம் எதில் என்பதைப் பொறுத்துதானே அந்தந்த விளையாட்டுக்களின் புகழ் பெருகுகிறது?

Menaga Sathia சொன்னது…

நல்ல யோசனைதான்,ஆனா எல்லோரும் விரும்புவது கிரிக்கெட் தான்.தேசிய விளையாட்டைகூட மறந்துட்டாங்க...

ஸாதிகா சொன்னது…

என்ன செய்வது.அன்று முதல் இன்று வரை மக்களின் ஆர்வம் அதிகளவில் கிரிக்கெட்டில்தான் அதிகளவு உள்ளது?நல்ல பகிர்வு.

NaSo சொன்னது…

இந்த மாற்றங்கள் எல்லாம் வரும் காலங்களில் நடக்கும் என எதிர்பார்ப்போம்.

சங்கரியின் செய்திகள்.. சொன்னது…

நல்ல யோசனை எல்.கே.கிரிக்கெட்டில இருக்கிற ஆர்வம் மக்களுக்கு வேற விளையாட்டில் சற்று குறைவாகத்தானே இருகிறது......

மனோ சாமிநாதன் சொன்னது…

நல்ல கருத்துக்கள்! ஆனால் என்னதான் மாட்ச் ஃபிக்ஸிங், ஊழல்கள் என்று புயலடித்தாலும் கிரிக்கெட்டின்மீது இருக்கும் கவர்ச்சி பெருகிக் கொண்டே தான் போகிறது!

Asiya Omar சொன்னது…

ஆமாம் உண்மைதான்,நாம நினைச்சா முடியுற காரியமா?எல்லாவற்றுக்கும் ஒரு செல்வாக்கு வேணும் எல்.கே.

சுசி சொன்னது…

இந்தியான்னா கிரிக்கெட்னு ஆகிப் போச்சு.

நல்ல பகிர்வு கார்த்திக்.

Philosophy Prabhakaran சொன்னது…

நல்லதொரு ஆராய்ச்சிப் பதிவை வெளியிட்டிருக்கிறீர்கள்... நான் ஸ்ரீ ராமின் கருத்தை ஆமோதிக்கிறேன்... // யோசனைகள் சரியே... ஆனால் மக்களின் ரசனை, சுவாரஸ்யம் எதில் என்பதைப் பொறுத்துதானே அந்தந்த விளையாட்டுக்களின் புகழ் பெருகுகிறது? //

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

இந்தியாவோட தேசிய விளையாட்டு ஹாக்கி என்பது இந்த தலைமுறைக்கு தெரியுமா என்பதே சந்தேகம் தான்...

ஜெயந்தி சொன்னது…

லஞ்ச லாவண்யங்களினால்தான் மற்ற விளையாட்டுக்கள் பிரபலமாகவில்லை. நீங்கள் சொல்வது சரிதான்.

vanathy சொன்னது…

கிரிக்கெட் மக்களை கவர்ந்த அளவுக்கு மற்ற விளையாட்டுக்கள் கவரவில்லை என்பதே என் கருத்து.