Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Gradient Skin

Gradient_Skin

இந்த வலைப்பதிவில் தேடு

பிரபலமான இடுகைகள்

Breaking News

latest

ஆசிய போட்டிகள்

தலைநகரில் நடந்த காமன்வெல்த் போட்டிகளில் இந்தியா பதக்கங்களை  குவித்து (சரியா சொல்லனும்னா 101 ) இரண்டாவது இடத்தை பிடித்தது,அதில் நடந்த ஊழல்களை...

தலைநகரில் நடந்த காமன்வெல்த் போட்டிகளில் இந்தியா பதக்கங்களை  குவித்து (சரியா சொல்லனும்னா 101 ) இரண்டாவது இடத்தை பிடித்தது,அதில் நடந்த ஊழல்களை ஓரளவு மறக்க வைத்தது இந்தப் பதக்க வேட்டை. அதைத் தொடர்ந்து ஆசிய போட்டிகள் நடைபெற்று வருகின்றன. எப்பவும் நான் பெரிய அளவில் எதிர்பார்க்க மாட்டேன். ஆனால் இந்த முறை நம்பினேன். ஆனால் வழக்கம் போல ஏமாற்றி விட்டனர்


தில்லியில் துப்பாக்கி சுடும் போட்டிகளில் அதிகப் பதக்கங்களை குவித்த நம் வீரர்கள் , இப்பொழுது குறி தவறி விட்டனர் . மிகவும் எதிர்பார்க்கப்பட்டவர்கள் அவர்கள்தான். இதற்கடுத்து டேபிள் டென்னிஸ் ,அவர்களும் சொதப்பல். பேட்மின்டனில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் ஆன சாய்னா நேற்று தோற்று விட்டார்.

இதில் ஒரே சந்தோசம், நீச்சலில் வெகு நாட்களுக்குப் பிறகு பதக்கமும், ஜிம்னாஸ்டிக் போட்டியில் பதக்கமும் தான். குத்துசண்டை நம்பிக்கை அளிக்கும் போல் இருக்கிறது. பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

இதை நான் எழுதும் சமயத்தில் பதக்கப் பட்டியலில் பதினொன்றாவது இடத்தில் உள்ளது இந்தியா.

நமக்கு வரும் சந்தேகம் , ஒரே மாதத்தில் எப்படி இவ்வளவு மோசமாக மாறுவார்கள் நமது வீரர்கள்? இல்லை அவர்கள் மாறவில்லை என்றால் உண்மை என்ன ???

காமன்வெல்த் போட்டிகளில் , போட்டியின் தரம் அவ்வளவு அதிகம் இல்லை என்பதே உண்மை. பல வீரர்கள் இதில் கலந்துக் கொள்ளவில்லை. அதேப்போல் ஆஸ்திரேலியா மட்டுமே அதில் ஜாம்பவான். ஆனால் ஆசிய போட்டிகள் என்று வரும்பொழுது, சீனா,ஜப்பான், கொரியா ,சிங்கப்பூர் போன்றவை இந்தியாவை பின்னுக்குத் தள்ளி விடுகின்றன.

அடுத்து, ஆசிய போட்டிக்கும் ,காமன்வெல்த் போட்டிக்கும் இருந்த மிகக் குறுகியக் கால இடைவெளி. எந்த ஒரு விளையாட்டு வீரருக்கும் போட்டிகளில் பங்கேற்கும் பொழுது , அதிகபட்ச மன அழுத்தம் எதிர்பார்ப்புகளினால் உண்டாகும். அதில் இருந்து விடுபட்டு அடுத்த போட்டியில் கலந்துகொள்ள கால இடைவெளி தேவை. காமன்வெல்த் போட்டிகள் இன்னும் கொஞ்சம் நாள் முன்னால் நடத்தி இருக்கலாம்.

இதில் இன்னொரு கொடுமை , வாட்டர் போலோ அணிக்கு மத்திய அரசு அனுமதி அளிக்கவில்லையாம். ஆனால், அங்கு சென்று நன்றாக கோல் வாங்கிக் கொண்டு இருக்கிறார்கள். இந்தியாவில் மட்டுமே இது சாத்தியம் .

சென்றமுறை ஐம்பது மூன்று பதக்கங்கள்  வாங்கினர் நமது வீரர்கள் . இந்த முறை அவ்வளவு வாங்குவார்களா???

 பி.கு. இன்று எனது அக்காவிற்கு  பிறந்த நாள் . அவருக்கு என் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

அன்புடன் எல்கே

34 கருத்துகள்

Unknown சொன்னது…

அக்காவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

காமன் வெல்த் போட்டிகளில் நிறைய நாடுகள் பங்குகொள்ளவில்லை. ஆனாலும் நாம் அதை ஒலிம்பிக் போல கொண்டாடினோம். ஆசிய போட்டிகளிலேயே இந்த நிலமைனா அப்புறம் ஒலிம்பிக்......

nis சொன்னது…

உங்கள் அக்காவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

//ஒரே மாதத்தில் எப்படி இவ்வளவு மோசமாக மாறுவார்கள் நமது வீரர்கள்?//

சரியான கேள்வி

ADHI VENKAT சொன்னது…

நேற்று துடுப்பு படகுப் போட்டியில் இந்தியா தங்கம் வென்றுள்ளது. இந்த பிரிவில் வென்றது இதுவே முதல் முறையாம்.
அக்காவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

சைவகொத்துப்பரோட்டா சொன்னது…

சகோதரிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

vanathy சொன்னது…

அக்காவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

ஆசியப் போட்டிகள் பார்க்கவில்லை.

சாந்தி மாரியப்பன் சொன்னது…

பிறந்தநாள் வாழ்த்துக்கள்..

சங்கரியின் செய்திகள்.. சொன்னது…

அக்காவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் எல்.கே.

ஸ்ரீராம். சொன்னது…

இப்போதான் ரெண்டாவது தங்கம் வாங்கி இருக்காங்க...

அக்காவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்...

பாலா சொன்னது…

அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா. எப்போது கிரிக்கெட் மட்டுமே விளையாட்டு அல்ல என்ற மனநிலை வருகிறதோ அப்போதுதான் இதில் மாற்றம் ஏற்படும்.

நன்றி

வெங்கட் நாகராஜ் சொன்னது…

இரண்டு தங்கம் வென்று இருக்கிறார்கள். எல்லா வற்றிலும் அரசியல் வந்து விட்டது கார்த்திக். நேற்று தங்கம் வாங்கிய பஜ்ரங் லால் டாக்கர் கடந்த 40 நாட்களாக டின் ஷெட்டில் தங்கி இருந்து பயிற்சி செய்து இருக்கிறார் என்கிறது இன்றைய நாளிதழ்.

உங்கள் சகோதரிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

Thenammai Lakshmanan சொன்னது…

உங்க அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கார்த்திக்..

நிச்சயம் இதைவிட அதிகம் பதக்கங்கள் வாங்க வாழ்த்துவோம்

சென்னை பித்தன் சொன்னது…

நம் நாட்டில் கிரிக்கட்டுக்குக் கொடுக்கும் முக்கியத்துவம் மற்ற விளையாட்டுகளுக்குக் கொடுக்கப் படுவதில்லை.இந்த மாதிரிப் போட்டிகளில் யாராவது பதக்கம் வெல்லும்போதுதான்,அவர்கள் எத்தகைய இன்னல்களையும் மீறிச் சாதனை படைத்திருக்கிறார்கள் என்று தெரிய வரும்.ஒவ்வொரு கார்பரேட்டும்,கிரிக்கெட்டில் பணத்தைக் கொட்டுவதற்குப் பதில் வேறு எதாவது ஒரு விளயாட்டுத் துறையத் தேர்ந்தெடுத்து அதை முன்னேற்றத் துணை புரிந்தால், நம்மால் நிச்சயமாக பதக்கங்களை அள்ள முடியும்.செய்வார்களா?

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

சகோதரிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

தினேஷ்குமார் சொன்னது…

சகோதரிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நண்பரே........

சௌந்தர் சொன்னது…

உங்க ஆதங்கம் புரியுது இந்தியா இன்னும் பதக்கம் வாங்கும்...உங்கள் அக்காவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

செல்வா சொன்னது…

//சென்றமுறை ஐம்பது மூன்று பதக்கங்கள் வாங்கினர் நமது வீரர்கள் . இந்த முறை அவ்வளவு வாங்குவார்களா???//

சிரமம் தான் அண்ணா ..
அக்காவிற்குப் பிறந்தநாள் வாழ்த்துக்கள் ..!!

Prasanna சொன்னது…

எனக்கும் இதே ஆதங்கம் தான் :)

அக்காவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்..

ஜெயந்தி சொன்னது…

அக்காவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

சென்னை பித்தன் சொன்னது…

மன்னிக்கவும்.உங்கள் சகோதரிக்குப் பிறந்த நாள் வாழ்த்துத் தெரிவிக்க விட்டுப் போய் விட்டது.வாழ்த்துகள்

'பரிவை' சே.குமார் சொன்னது…

அக்காவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

ஹேமா சொன்னது…

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் கார்த்திக்கின் அக்காவுக்கு !

எல் கே சொன்னது…

@கலாநேசன்

அதை பத்தி எல்லாம் நினைக்கவே கூடாது

எல் கே சொன்னது…

@ராவணா

நன்றி

எல் கே சொன்னது…

@கோவை
பார்த்தேன் . ஆனாலும் ஒட்டுமொத்த நிலை மோசமாக இருக்கு

எல் கே சொன்னது…

@சை.கொ.ப
நன்றி

எல் கே சொன்னது…

@வாணி
நன்றி


@சாரல்
நன்றி

@நித்திலம்
நன்றி

@ஸ்ரீராம்
ஆமாம் நன்றி

எல் கே சொன்னது…

@பால

கிரிகெட்டுக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை. அதை பற்றி பிறகு எழுதுகிறேன்

எல் கே சொன்னது…

@வெங்கட்
உண்மைதான் வெங்கட்.. நன்றி

எல் கே சொன்னது…

@தேனம்மை

நன்றி

எல் கே சொன்னது…

@சென்னை பித்தன்

நன்றி சார். பாலாவிற்கு சொன்ன அதே பதில்தான். அதை பற்றி விரிவாக எழுதுகிறேன்

எல் கே சொன்னது…

@ஜெயந்த்

நன்றி

@தினேஷ்

நன்றி

எல் கே சொன்னது…

@சௌந்தர்

நன்றி

@செல்வா

ம்ம். நன்றி

@ஜெயந்தி

நன்றி

எல் கே சொன்னது…

@பிரசன்னா

நன்றி

@ஹேமா

நன்றி


@குமார்

நன்றி

பெயரில்லா சொன்னது…

Off Topic: மேகனா, குற்றாலீஸ்வரன் போன்றவர்கள் எங்கே?

அக்காவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். ஒரு கேக் படம் போட்டிருக்கலாம் இல்ல? என்ன தம்பி இந்த எல்.கே சார். ஹி ஹி.