Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Gradient Skin

Gradient_Skin

இந்த வலைப்பதிவில் தேடு

பிரபலமான இடுகைகள்

Breaking News

latest

ஸ்டோரேஜ் மீடியா பற்றிய சில விளக்கங்கள்

இது  ஸ்டோரேஜ் மீடியா( இன்டெர்னல்/எக்ஸ்டெர்னல் ஹார்ட் டிஸ்க் ,பென் டிரைவ் )எல்லாவற்றிற்கும் இது பொருந்தும் . சென்ற பதிவின் பின்னூட்டத்தில்...

இது  ஸ்டோரேஜ் மீடியா( இன்டெர்னல்/எக்ஸ்டெர்னல் ஹார்ட் டிஸ்க் ,பென் டிரைவ் )எல்லாவற்றிற்கும் இது பொருந்தும் .

சென்ற பதிவின் பின்னூட்டத்தில் நவீன் என்பவர் ஒரு கேள்வி கேட்டு இருந்தார் . அவர் வாங்கிய 1 TB  டிரைவ் 900  GB  மட்டுமே காட்டியதாக சொல்லி இருந்தார். இது அவருக்கு மட்டும் அல்ல. அனைவருக்கும் எழும் நியாயமான சந்தேகம். விண்டோஸ் ஹார்ட் டிஸ்க் அளவை தவறாக காட்டுவதாக எண்ண வேண்டாம். அது சரியாகத்தான் காட்டுகிறது. முதலில் கீழ் உள்ள படத்தை பாருங்கள். 


இது 2 GB பென் டிரைவின் ப்ராபெர்ட்டீஸ் பக்கம். இதில் வலது பக்கம் பார்த்தால் 1.87 GB மட்டுமே காட்டி இருக்கும். பலரும் இதை பார்த்துவிட்டு , அந்த பென் ட்ரைவோ இல்லை ஹார்ட் டிஸ்க்கோ பிரச்சனை உள்ளது என்று எண்ணுகின்றனர். 

அதில் வலது பக்கம் பார்த்தால் சரியான கொள்ளளவு காட்டப்பட்டிருக்கும். ஏன் இந்த மாறுபாடு. இடது பக்கம் இருப்பது டெசிமல் கணக்கீடு ,வலது பக்கம் இருப்பது பைனரி கணக்கீடு . இரண்டுமே சரிதான் . அதனால் உங்களுக்கு கிடைக்கும் கொள்ளளவில் எந்த மாறுபாடும் இல்லை. 

நவீன் மற்றொன்றையும் கேட்டிருந்தார். இப்பொழுது அதே 1 TB டிரைவ் 600 GB மட்டுமே காட்டுவதாக. இது ஹார்ட் டிஸ்க்கில் பிரச்சனை உள்ளதை காட்டுகிறது. எதற்கும் ஒரு முறை டிஸ்க்கை defragmentation செய்துப் பாருங்கள் . அப்படியும் சரியாகவில்லை என்றால் அதை சர்விஸ் சென்டருக்கு எடுத்து செல்லவேண்டும். 

சென்ற பதிவை படித்துவிட்டு திருமூர்த்தி அண்ணா, கூகிள் பஸ்ஸில் ஹார்ட் டிஸ்க் அல்லது பென் டிரைவை சர்வீசுக்கோ இல்லை வேறு ஒரு நபருக்கு விற்கும் முன்னோ செய்ய வேண்டிய பாதுகாப்புகளை பற்றி கேட்டிருந்தார். 

உங்கள் ஹார்ட் டிஸ்க் / பென் டிரைவ் விற்பதாக இருந்தால் அதில் உள்ள டேட்டாவை அழித்து விட்டு ,பார்மெட் செய்துவிடுங்கள். 

சர்விசுக்கு கொடுப்பதாக இருந்தால் ,உங்களால் டிரைவை திறந்து (கணிணி வழியாக )அதில் உள்ள டேட்டா பார்க்க முடிந்தால் அவற்றை உங்கள் கணினியிலோ இல்லை எக்ஸ்டெர்னல் ஹார்ட் டிஸ்க்கிலோ பேக்கப் எடுத்துக்கொண்டு பிறகு சர்விஸ் சென்டரில் கொடுக்கவும். ஏற்கனவே சொன்னமாதிரி டேட்டாவிற்கு யாரும் வாரண்டி தருவது இல்லை. சர்விஸ் செய்யும்பொழுது டேட்டா அழிய வாய்ப்பு அதிகம். 

உங்களால் டேட்டாவை பார்க்க இயலவில்லை அல்லது கணிணியில் டிரைவை ஓபன் செய்ய இயலவில்லை என்றால் நீங்கள் ஒன்றும் செய்ய இயலாது. அப்படியேதான் தரவேண்டும். இந்த இடத்தில் நீங்கள் உங்கள் ஹார்ட் டிஸ்க்கில் வைத்துள்ள  டேட்டாவை சர்விஸ் சென்டரில் உள்ளவர்கள் பார்க்க இயலுமா அதை வைத்து ஏதாவது செய்வார்களா என்று கேட்டால், அங்கீகரிக்கப் பட்ட சர்விஸ் சென்டரில் உள்ளவர்கள் அவ்வாறு செய்ய மாட்டார்கள் என்றுதான் சொல்லுவேன். 

அவர்களுக்கு இவ்வாறு பார்க்க நேரம் இருக்காது. மேலும் அந்த நிறுவனத்தின் உடன் போடப்பட்டுள்ள  ஒப்பந்தத்தின் அடிப்படையிலும் இவ்வாறு பார்ப்பது ஒப்பந்தத்தை மீறுவது. இது மிகப் பெரிய குற்றம். 

மற்றப் படி நீங்கள் உங்கள் ஹார்ட் டிஸ்க்கை ஒரு எஞ்சினியரிடம் கொடுத்து அவர் சர்விஸ் செய்து கொண்டு வருவார் என்றால் அதில் ஆபத்துகள் அதிகம்.  எனவே நீங்கள் கணிணியை பழுதுப்பார்க்க அழைக்கும் நபர் நன்கு தெரிந்தவராக உங்கள் நம்பிக்கைக்கு உரியவராக இருத்தல் அவசியம் ஆகிறது. 

மேலும் இது சம்பந்தமாக ஏதேனும் சந்தேகம் இருந்தால் கேளுங்கள். அடுத்தப் பதிவில் விளக்குகிறேன்.


அன்புடன் எல்கே

25 கருத்துகள்

பெயரில்லா சொன்னது…

மிக பயனுள்ள தகவல்.
அந்த படம் தெரியவில்லை Lk

எல் கே சொன்னது…

@பாலாஜி

இப்ப மறுபடியும் இணைத்துள்ளேன். எனக்கு சரியாக வருகிறதே

vanathy சொன்னது…

very useful informations, LK.

nis சொன்னது…

needed information

சாந்தி மாரியப்பன் சொன்னது…

//நீங்கள் கணிணியை பழுதுப்பார்க்க அழைக்கும் நபர் நன்கு தெரிந்தவராக உங்கள் நம்பிக்கைக்கு உரியவராக இருத்தல் அவசியம் ஆகிறது.//

ரொம்ப சரி..

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நல்ல தகவல்கள். நன்றி.

Arun Prasath சொன்னது…

//சொன்னமாதிரி டேட்டாவிற்கு யாரும் வாரண்டி தருவது இல்லை. சர்விஸ் செய்யும்பொழுது டேட்டா அழிய வாய்ப்பு அதிகம். //

ஆமாம் சார், எனக்கு ஒரு முறை டேட்டா திரும்பவும் எடுத்து தர, 10000 ரூபா கேட்டாங்க....

'பரிவை' சே.குமார் சொன்னது…

மிக பயனுள்ள தகவல்.

Harini Nagarajan சொன்னது…

Thodarnthu ubayogamana thagavalgal! Nandri! :)

geetha santhanam சொன்னது…

useful info. thanks.

Unknown சொன்னது…

சாதரணமாக எல்லோர் மனதிலும் எழும் சந்தேகம்,அதற்க்கு அருமையான விளக்கம்.மிக்க நன்றி.

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

மிகவும் பயனுள்ள பதிவு அண்ணா... இது பற்றி தெரியாமல் ஆரம்ப காலத்தில் குழம்பியிருக்கிறேன்..

அருண் பிரசாத் சொன்னது…

//மேலும் இது சம்பந்தமாக ஏதேனும் சந்தேகம் இருந்தால் கேளுங்கள். அடுத்தப் பதிவில் விளக்குகிறேன்//

Hard Disku Hard Dickuனு சொல்லுறீங்களே அது எவ்வளோ hardஆ இருக்கும் # டவுட்டு

சங்கரியின் செய்திகள்.. சொன்னது…

very useful article....Thanx L.K.

எல் கே சொன்னது…

@வாணி

நன்றி

@கங்கா
நன்றி

@சாரல்
நன்றி

@வெங்கட்
நன்றி

எல் கே சொன்னது…

@அருண்

ஆமாம் அதிகம் ஆகும்

எல் கே சொன்னது…

@குமார்
நன்றி

@ஹரிணி
நன்றி

@கீதா சந்தானம்
நன்றி

எல் கே சொன்னது…

@இனியவன்
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

@ஜெயந்த்
நன்றி

எல் கே சொன்னது…

@அருண் பிரசாத்
அது நீங்க சென்னை வருவீங்க இல்லை அப்ப தெரிஞ்சிபீங்க

எல் கே சொன்னது…

@நித்திலம்
நன்றி

நவீன் சொன்னது…

வணக்கம்
நீங்கள் கூறியது போல் என்னுடைய external hard disk defragmentation செய்துவிட்டேன் இப்பொழுதும்
total capacity 631 gb தான் காட்டுகிறது... கொஞ்சம் உதவமுடியுமா

நவீன்

எல் கே சொன்னது…

நவீன், உங்கள் எக்ஸ்டெர்னல் ஹார்ட் டிஸ்க் ப்ராபர்டீசை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து எனது மெயில் ஐடிக்கு அனுப்ப முடியுமா ??? karthik.lv@gmail.com

Priya சொன்னது…

very useful, Thanks LK!

சுசி சொன்னது…

நல்ல பகிர்வு கார்த்திக்.

எல் கே சொன்னது…

[ma]அனைவருக்கும் நன்றி [/ma]