Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Gradient Skin

Gradient_Skin

இந்த வலைப்பதிவில் தேடு

பிரபலமான இடுகைகள்

Breaking News

latest

நான் ,ஷங்கர் மற்றும் கந்தாஸ்ரமம்

சொந்த மண்ணில் உங்கள் அனுபவங்களையும் எழுதுங்கள் என்று அமீரக சிங்கம் தேவா கேட்டிருந்தார். அவர் கோரிக்கைக்கு ஏற்ப இதோ ஒரு கொசுவர்த்தி பதிவு. ...

சொந்த மண்ணில் உங்கள் அனுபவங்களையும் எழுதுங்கள் என்று அமீரக சிங்கம் தேவா கேட்டிருந்தார். அவர் கோரிக்கைக்கு ஏற்ப இதோ ஒரு கொசுவர்த்தி பதிவு.

இன்னும் அந்த சம்பவம் நன்றாக நினைவில் இருக்கிறது. நானும் எனது மாமா பையன் சங்கரராமனும் நெருங்கிய நண்பர்கள். இருவருக்கும் ஒரே வயது என்பதால் ஒட்டுதல் அதிகம். அவன் சென்னையில் படித்து வந்தான். நான் சேலத்தில்.

1997 ஆம் வருடம் மே மாதம் இரண்டாம் தேதி. எனது அக்காவின் நிச்சயதார்த்தம் முடிந்த அடுத்த நாள். இருவரும் எனது சைக்கிளில் கந்தாஸ்ரமம் செல்ல முடிவெடுத்தோம். போறப்ப ஒன்னும் பிரச்சனை இல்லை. அங்க போய் நிதானமா சாமி கும்பிட்டு கொஞ்ச நேரம் உக்காந்த கதை அடிச்சபின்னாடி கிளம்ப முடிவெடுத்தோம்.


அப்பதாங்க ஆரம்பிச்சது பிரச்சனை. சின்ன குன்றாக இருந்தாலும், இறக்கம் அதிகம். எனவே நான் சைக்கிளை தள்ளிக் கொண்டு போகலாம் என்றேன். காரணம், ப்ரேக் கொஞ்சம் மக்கர் பண்ணும். அவனோ , இல்லை மச்சி பார்த்துக்கலாம் வா என்று சொல்ல, சரி அவன் பேச்சை கேப்போம்னு, அந்த முருகனை வேண்டிக்கிட்டு கிளம்பினோம்.

முதல் இரண்டு வளைவுகள் நல்லாத்தான் போச்சு. அப்புறம்தான் அது நடந்தது, சுவாரஸ்யமாக பேசிக்கொண்டே அடுத்த வளைவில் வேகமாக திரும்ப, எதிரில் ஒரு வாகனம் வந்தது. அதன் மேல் இடிக்ககூடாதே என்று இடது புறம் சைக்கிளை திருப்பினேன். அவ்வளவுதான் எனக்குத் தெரியும். அடுத்த நிமிஷம், ஆளுக்கு ஒரு புறம் கீழ விழுந்து கிடந்தோம்.எழுந்த பிறகுதான் பார்த்தோம், எத்தனை பெரிய ஆபத்தில் இருந்து தப்பித்தோம் என்று. தடுப்பு சுவருக்கு அந்தப் பக்கம், முட்புதரும் பள்ளமும் இருந்தது. அந்தப் பக்கம் விழுந்திருந்தால் ????

அவனுக்கு அதிகம் அடி இல்லை. எனக்குதான் காலிலும் உள்ளங் கையிலும் நல்ல அடி. பிறகு , மெதுவாக சைக்கிளை தள்ளிக் கொண்டு அடிவாரம் வந்தோம். அதன் பிறகு வீடு வரை அவனே ஒட்டிக் கொண்டு வந்தான். வீட்டுக்கு வந்தப் பிறகு சகஸ்ரநாம அர்ச்சனை கிடைத்தது என்று சொல்ல வேண்டுமா ??

இன்றைக்கும் கந்தாஸ்ரமம் சென்றாலோ, அதை பற்றி படிதலோ, இந்த நிகழ்ச்சிதான் எனக்கு நினைவிற்கு வரும்.



அன்புடன் எல்கே

34 கருத்துகள்

நசரேயன் சொன்னது…

நல்லா சுத்துங்க

Chitra சொன்னது…

கொசுவர்த்தி - சைக்கிள் வீல் - எல்லாம் நல்லா சுத்தி இருக்கே! :-)

பெயரில்லா சொன்னது…

அப்பப்போ இந்த மாதிரி கொஞ்சம் கொசுவத்தி சுத்துங்க பாஸ்! :)

SCCOBY BLOGSPOT.IN சொன்னது…

கந்தாஸ்ரமம் சென்றால் எப்படி செல்ல வேண்டும் அதுவும் குறிப்பாக cyclelல்
செல்லக்கூடாது என்பது அறிந்து கொண்டேன் தற்போது யாரும் பள்ளி சிறார் கூட மோடோர் cycle ஓட்டும் காலம் கந்தாஸ்ரமம் முருகனையும் மற்ற தேவ தேவர்களையும் அடுத்த பதிவில் குறிப்பிடலாம் என்று நினைக்கிறீர்கள் போலும் தொடர்க தங்களது பணி
www.salemscoobyblogspot.com
licsundaramurthy@gmail.com

அருண் பிரசாத் சொன்னது…

கந்தனுக்கு அரோகரா போட போய் உங்களுக்கு அரோகரா போட்டு இருப்பாங்க போல?

'பரிவை' சே.குமார் சொன்னது…

கொசுவர்த்தி... நல்லா சுத்தி இருக்கே!

dheva சொன்னது…

அது சரி சைக்கிளுக்கு என்னா ஆச்சு..! நிஜமாவே சொல்லுங்க.. வந்தது பஸ்ஸா இல்லா வேற ஏதாச்சும் பொண்ண பாத்துட்டு வண்டிய விட்டுட்டீங்களா....

ஹா..ஹா..ஹா...

அதுக்கப்புறம் வீட்ல டின்னு கட்டினத சொல்லாம விட்டுட்டீங்க.. நான் வேணா சொல்லாவா...????

சைவகொத்துப்பரோட்டா சொன்னது…

வீர சாகசங்கள் செஞ்சுருக்கீங்க போல!

எல் கே சொன்னது…

@நசரேயன்

அப்படியா

எல் கே சொன்னது…

@சித்ரா
சைக்கிள் வீல் ரொம்ப சுத்தினதுதான் பிரச்சனை

எல் கே சொன்னது…

@பாலாஜி
கண்டிப்பா சுத்திடலாம் .நன்றி

எல் கே சொன்னது…

@பாலாஜி
கண்டிப்பா சுத்திடலாம் .நன்றி

எல் கே சொன்னது…

@மூர்த்தி
நன்றி :)

எல் கே சொன்னது…

@அருண்
ஆமாம் பாஸ்

எல் கே சொன்னது…

@குமார்
நன்றி

எல் கே சொன்னது…

@குமார்
நன்றி

எல் கே சொன்னது…

@தேவா
சைக்கிளுக்கு ஒன்னும் ஆகலை பாஸ். வீல் மட்டும் பென்ட் ஆகிடுச்சி. பஸ்சும் இல்லை பொண்ணும் இல்லை, காரோ இல்லை ஜீப்போ . அதை இங்க சொன்ன நான் பாவம் .

எல் கே சொன்னது…

@சை.கொ.ப
இது என்ன . இதை விட அதி வீர சாகசம்லாம் பண்ணி இருக்கேன்

Unknown சொன்னது…

திரில்லான அனுபவம்தான்..

ஸ்ரீராம். சொன்னது…

பெரிய விபத்திளுருந்து தப்பியிருக்கிறீர்கள் போல. கந்தாச்ரம அனுபவத்தால் சகஸ்ரநாம அர்ச்சனை...!
:))

vasu balaji சொன்னது…

கந்தாஸ்ரமம் ரொம்ப அருமையான இடம். மனசு ஏங்குது. போகணும்.

சுசி சொன்னது…

அடுத்தவங்க கஷ்டத்தில சிரிக்க கூடாது.. அதிலையும் நண்பர்கள்னா கூடவே கூடாது.. இருந்தாலும் சிரிச்சுட்டேன்.. சாரி..

ADHI VENKAT சொன்னது…

மறக்க முடியாத கொசுவத்தி அல்லவா உங்களுக்கு. கந்தாஸ்ரமம் பற்றி விரிவாக எழுதுங்களேன். உபயோகமாக இருக்கும்.

சாந்தி மாரியப்பன் சொன்னது…

ஏற்கனவே அர்ச்சனை நடந்துடுச்சா.. அப்டீன்னா நான் சொல்றதுக்கு ஒண்ணூம் இல்லை... என் பையனும் இதுமாதிரிதான் வுழுந்துவெச்சதில் உள்ளங்கையில் நாலு தையல் போடும்படியாச்சு. அது நினைவு வந்துச்சு.

Menaga Sathia சொன்னது…

ம்ம்ம் கொசுவத்தி நல்லாயிருக்கு...

எல் கே சொன்னது…

@பாபு

நன்றிங்க

எல் கே சொன்னது…

@ஸ்ரீராம்

ஆமாம். அந்த முருகனால எனக்கு அர்ச்சனை

எல் கே சொன்னது…

@பாலா சார்

உண்மைதான். அதிக மக்கள் இருக்க மாட்டார்கள்

எல் கே சொன்னது…

@சுசி

அவ்ளோ மோசமாவா இருக்கு :(

எல் கே சொன்னது…

@கோவை

ஹ்ம்ம் நன்றி. முயற்சிக்கிறேன்

எல் கே சொன்னது…

@சாரல்

ஆகா தப்பிசிடேனா ???

Unknown சொன்னது…

முப்பது வருஷத்துக்கு முன்னே போயிருக்கிறேன். யாரும் அதிகம் பேர் இருக்கமாட்டாங்க. மேடு நடந்து ஏறிய ஞாபகம்.

vanathy சொன்னது…

//கொசுவர்த்தி - சைக்கிள் வீல் - எல்லாம் நல்லா சுத்தி இருக்கே// repeat.

Harini Nagarajan சொன்னது…

very good incident! or very bad accident?? :P