நவம்பர் 03, 2010

தீபாவளி வாழ்த்து(க்)கள்

இதோ வந்து விட்டது தீபாவளி . இன்னும் இரண்டு நாட்களே உள்ளது . எனக்கு பண்டிகை மகிழ்ச்சியை விட ஒன்றரை ஆண்டுகள் கழித்து மீண்டும் சேலம் செல்லவிருப்பதே மகிழ்ச்சியையும் எதிர்பார்ப்பையும் தருகிறது.

இது கூட ஒரு சிறு விடுமுறையே . இரண்டு நாட்கள் மட்டுமே அங்கு இருக்க இயலும். சனிக் கிழமை அலுவலகம் உள்ளதால் உடனே திரும்பியாகவேண்டிய சூழ்நிலை.  தீபாவளிக்கு முந்தைய வாரத்தில்தான் சென்னையில் வேலை கிடைத்து, தீபாவளி முடிந்த இரு தினங்களில் சென்னை வந்து சேர்ந்தேன். இது நடந்து ஏழு வருடங்கள் முடிந்து விட்டது. அதற்குப் பின் சில வருடங்கள் தீபாவளி சேலத்திலும் சில முறை சென்னையிலும், ஒரு முறை கோவையிலும் கொண்டாடி இருக்கிறேன்.

சேலத்தில் இருந்த பொழுது, அதிகாலை ஐந்த மணிக்கு எழுந்து ஒரு ஆயிரம் வாலா பட்டாசை வெடித்து தெருவையே எழுப்பி விடும் இன்பம் இருக்கிறதே .. அதில் உள்ள சந்தோசம் வேறு எந்த ஊரிலும் கிடைக்காது.அதிலும் சென்னையில் வாய்ப்பே இல்லை.அதே போல் வெங்காய வெடி வெடிச்ச நாட்கள். அது திரும்பவும் வராது. வெங்காய வெடி இப்ப தடை பண்ணியாச்சு. அதை பத்தி ஊருக்கு போயிட்டு வந்து எழுதறேன். .

இந்தத் தீபாவளி பல கொசுவர்த்திகளை கொளுத்தி விடும். சேலம் பயணத்தை மிக எதிர்பார்க்கும் இன்னொரு காரணம் எங்கள் கடை டிபன். ரொம்ப நாள் ஆச்சு சாப்பிட்டு.

அனைவருக்கும் தீபாவளி வாழ்த்து(க்)கள் . நல்லா பட்டாசு வெடிச்சு, விபத்து இல்லாமல் இனிப்போட கொண்டாடுங்கள் ..


அன்புடன் எல்கே

59 கருத்துகள்:

சேலம் தேவா சொன்னது…

வாங்க கொண்டாடுவோம்..!! இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்..!!

Nithu Bala சொன்னது…

ஆபிசில் விடுமுறை கிடைத்து தாங்கள் சேலம் செல்வது குறித்து மிக்க மகிழ்ச்சி. தீபாவளி வாழ்த்துகள் எல்.கே.

Chitra சொன்னது…

HAPPY DEEPAVALI!!!

கலாநேசன் சொன்னது…

ஊர்ல எல்லாரையும் கேட்டதா சொல்லுங்க....
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

philosophy prabhakaran சொன்னது…

டிக்கட் எடுத்தாச்சா.... ரயிலா...? ஆம்னி பஸ்ஸா... தீட்டி இருப்பாங்களே...

புவனேஸ்வரி ராமநாதன் சொன்னது…

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

Balaji saravana சொன்னது…

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் LK :)

kavisiva சொன்னது…

இனிய மகிழ்ச்சியான தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

LK சொன்னது…

@தேவா

நன்றி.. சேலத்தில் எங்க இருக்கீங்க

LK சொன்னது…

@நிது

நன்றி.. உங்களுக்கும் என் வாழ்த்துக்கள்

LK சொன்னது…

@சித்ரா

நன்றி

LK சொன்னது…

@கலா நேசன்

கண்டிப்பா சார். நன்றி

LK சொன்னது…

@பிரபாகரன்

ஆம்னி பஸ். தெரிஞ்ச டிரைவர் மூலம் எடுத்தேன். கொஞ்சம்தான் ஜாஸ்தி

LK சொன்னது…

@புவனேஸ்வரி ராமநாதன்

நன்றி

LK சொன்னது…

@பாலாஜி

உங்களுக்கும் என் வாழ்த்துக்கள் நண்பா

LK சொன்னது…

@கவிச்வா

உங்களுக்கும் என் தீபாவளி வாழ்த்துக்கள்

vanathy சொன்னது…

தீபாவளி வாழ்த்துக்கள், தல. இப்பவும் போய் ஆயிரம் வாலா பட்டாசு வெடிப்பீங்களா?

LK சொன்னது…

@வாணி

கண்டிப்பா.. அதுக்கு பின்னாடி வேற ஒரு காரணம் இருக்கு.. அப்புறம் சொல்றேன் அதை..

asiya omar சொன்னது…

அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

துளசி கோபால் சொன்னது…

ஆஹா.........


தீபாவளிப் பண்டிகைக்கான இனிய வாழ்த்து(க்)கள்.

தலைப்பு சூப்பர்.

காப்பிரைட் என் வசம்:-)))))

தெய்வசுகந்தி சொன்னது…

இனிய தீபத்திருநாள் நல்வாழ்த்துக்கள்!!

அமைதிச்சாரல் சொன்னது…

தீபாவளி வாழ்த்துக்கள்..

சௌந்தர் சொன்னது…

உங்களுக்கு தீபாவளி நல் வாழ்த்துக்கள்...

வெறும்பய சொன்னது…

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்..!!

அருண் பிரசாத் சொன்னது…

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாற்கும் தீபாவளி வாழ்த்துக்கள்

அப்புறம், எல்லா பட்டாசையும் நீங்களே வெடிச்சிடாதீங்க திவ்யாக்கும் குடுங்க

திவ்யா குட்டியை பயப்படாம பார்த்து பட்டாசு வெடிக்க சொல்லுங்க. நீங்க கூடவே இருங்க....

வானம்பாடிகள் சொன்னது…

இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள்.

சே.குமார் சொன்னது…

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்..!

ஸ்ரீராம். சொன்னது…

தீபாவளி வாழ்த்துக்கள்...

சைவகொத்துப்பரோட்டா சொன்னது…

உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.

gomy சொன்னது…

Nanum diwaliku salem dhan...neenga salemla yenga?

gomy சொன்னது…

Nanum diwaliku Salemdhan...Neenga salemla yenga irukeenga?

Kousalya சொன்னது…

அனைவருக்கும் என் அன்பான தீபாவளி வாழ்த்துக்கள்.

கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்..!!

LK சொன்னது…

@ஆசியா
நன்றி சகோ

LK சொன்னது…

@டீச்சர்

கண்டிப்பா உங்களுக்குத்தான் காப்பி ரைட் . உங்களுக்கும் என் வாழ்த்துக்கள்

LK சொன்னது…

@தெய்வ சுகந்தி
நன்றி உங்களுக்கும் என் வாழ்த்துக்கள்

LK சொன்னது…

@சாரல்
நன்றிங்க

LK சொன்னது…

@வெறும்பய
நன்றி தம்பி

@அருண்
பாஸ், அவ பயப் படர ஒரே விஷயம் குக்கர்தான். நன்றி

LK சொன்னது…

@பாலா

சார்,உங்களுக்குகும், உங்கள் குட்ம்பதினருக்கும் என் வாழ்த்துக்கள்

LK சொன்னது…

@வெங்கட்
நன்றி

@குமார்
நன்றி

LK சொன்னது…

@ஸ்ரீராம்
நன்றி அண்ணா

@சை.கொ.ப
நன்றி

LK சொன்னது…

@கோமி
நன்றிங்க. நான் செவ்வைபேட்டை நீங்க

LK சொன்னது…

@கௌசல்யா
உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் :)) உங்களுக்கும் என் வாழ்த்துக்கள்

LK சொன்னது…

@செந்தில்

நன்றி உங்களுக்கும் என் வாழ்த்துக்கள்

நித்திலம்-சிப்பிக்குள் முத்து சொன்னது…

தீபாவளி நல்வாழ்துக்கள் எல்.கே.

ப.செல்வக்குமார் சொன்னது…

//வெங்காய வெடி இப்ப தடை பண்ணியாச்சு. அதை பத்தி ஊருக்கு போயிட்டு வந்து எழுதறேன். . //

இது வேறயா ..? சரி எழுதுங்க அண்ணா ..
இனிய இனிய தீபாவளி வாழ்த்துக்கள் .!!

Gayathri சொன்னது…

happy diwali,
happy and safe journey brother

ஹுஸைனம்மா சொன்னது…

இனிய தீப ஒளி வாழ்த்துகள்!!

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ சொன்னது…

Happy and Safe Diwali LK :)

Mrs.Menagasathia சொன்னது…

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!

Sethu சொன்னது…

தீபாவளி நல்வாழ்த்துகள்.

உங்க restaurant பெயர் என்ன? Vilvaadri Bhavan?

நசரேயன் சொன்னது…

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

Geetha6 சொன்னது…

வாழ்த்துக்கள்.

மாதேவி சொன்னது…

தீபஒளித்திருநாள் வாழ்த்துகள்.

Jaleela Kamal சொன்னது…

நல்் படியா கொண்டாடுக்்்்்.
்ா்்்்வா்்த்துக்க்கள்.

angelin சொன்னது…

happy diwali to your family and especially to the little princess

சுசி சொன்னது…

விடுமுறைக்கும் தீபாவளிக்கும் சேர்த்து வாழ்த்துக்கள் கார்த்திக்.

Harini Sree சொன்னது…

Iniya deepavali nal vaazhthukkal! :)