நவம்பர் 01, 2010

எறும்பின் தொல்லை

 "பொண்ணுங்க இருக்கற இடத்துக்கு பசங்க போவாங்க. இனிப்பு இருக்கற இடத்துக்குதான் எறும்புங்க போகும் " இதுதான் வழக்கம். ஆனால், எங்க வீட்ல இந்த எறும்புங்க பண்ற தொல்லை தாங்க முடியலை. 

கொசுவாது பரவாயில்லை, மழை காலத்தில் வரும் , அதுவும் கொசுவர்த்தி , பேட் எல்லாம் இருக்கு. இந்த எறும்பு எல்லா சீசன்லையும் வருது . இதை என்ன பண்றதுனே புரியலை. அப்படி என்ன பிரச்சனைன்னு கேக்கறீங்களா ? இதோ சொல்றேன் பாருங்க.

இப்ப இருக்கற வீட்டுக்கு வந்த அடுத்த நாள் , ஆபிஸ்க்கு லீவ் போட்டுட்டு தூங்கலாம்னு படுத்தேன். கொஞ்ச நேரத்துல, கையில் சுர்ரீர்னு எதோ வழி. என் தங்கமணி இந்த மாதிரி எல்லாம் கிள்ள மாட்டாளேன்னு முழிச்சு பார்த்தா, நல்லா பெரிய சைஸ் சிவப்பு எறும்புகள் போயிட்டு இருக்கு. இதென்னட வம்பா போச்சுன்னு, வீட்ல இருந்த எறும்பு, பூச்சிக் கொல்லி ஸ்ப்ரேயை எடுத்து அந்த அறையில் இருந்த இரும்பை ஒழிச்சேன். 

அதான் முடிஞ்சுடுசுன்னு நினைக்கறீங்களா , அதுதான் இல்லை, அதுக்கப்புறம் ஒரு வாரம் கழிச்சு , கோவை போய்ட்டோம். வந்து பார்த்த மறுபடியும் எறும்பு ...அட அது பாட்டுக்கு வந்துட்டு போயிட்டு இருந்தா கூட பிரச்சனை இல்லை. ஆனால், ஒரு பக்கம் மண்ணை வேற குமிக்குது. இது எலியா இல்லை எறும்பா ???

இந்த முறை ஸ்ப்ரே அடிச்சும் அது சாகலை . (ஒரு வேலை தடுப்பு ஊசி போட்டுட்டு வருதோ ???) சரின்னு , எறும்பு பவுடர் கடைல வாங்கிட்டு வந்து அதை போட்டேன். இந்த எறும்பு பவுடர் போடறதுல ஒரு பிரச்சனை. வீட்டில் குழந்தை வேறு இருக்கிறாள். நாம் கவனிக்காத  பொழுது அதை போய் தொட்டுவிட்டால் அப்புறம் பெரிய பிரச்சனை. 

இப்படி ஒரு வழியா எறும்பை ஒழிச்சிட்டோம்னு நிம்மதியா இருந்தேன். நேத்து மதியம் வரைக்கும் எல்லாம் சரியாதான் போயிட்டு இருந்துச்சி. அப்புறம் என்ன பழைய கதைதான் . மறுபடியும் ஸ்ப்ரே, எறும்புப் பவுடர். 

இதுல ஒரு வேடிக்கை , சமையல் அறை பக்கம் மறந்தும் கூட இந்த எறும்பு வரது இல்லை. (அதுக்குக் கூட என் தாங்க்ஸ் சமையல் பத்தி தெரியுது ). முதல் முறை எங்கள் படுக்கை அறை. இந்த முறை, என் கணிணி அறை. இப்படி இருக்கலாமா , நான் ரொம்ப ஸ்வீட்னு எறும்புக்குத் தெரிஞ்சிடுச்சோ ???

இதை ஒரேடியாக ஒழிக்க வழி இருக்கா? தெரிஞ்சா யாரவது சொல்லுங்களேன். 
53 கருத்துகள்:

சௌந்தர் சொன்னது…

தொடர்ந்து எறும்பு பொடி போடனும் பாப்பா இருப்பது தான் கொஞ்சம் உஸ்ரா இருக்கணும் நீங்க இப்போ ஊருக்கு போகும் போது நல்ல மருந்தை போட்டுட்டு போங்க காதி கிராப்ட் கடையில் இருக்கும் எறும்பு பொடி வாங்கி போடுங்க ஸ்ப்ரே எல்லாம் வேஸ்ட்

வெங்கட் நாகராஜ் சொன்னது…

ஒருவேளை அந்த எறும்புகளுக்கு நீங்க “ச்சோ ஸ்வீட்ட்ட்ட்...”ன்னு தெரிஞ்சிடுச்சோ... :)

kavisiva சொன்னது…

கரப்பான் பூச்சிக்கு ஒரு சாக்பீசால் கோடு போடுவாங்களே அதை வச்சு சுவர் ஓரங்கள் நிலைப்படிகளில் கோலம் மாதிரி கோடு போட்டு விடுங்க. எறும்புகள் செத்துப் போயிடும். மஞ்சள் பொடி தூவினாலும் எறும்புகள் அண்டாது. ஆனால் எல்லா இடங்களிலும் மஞ்சள் பொடி தூவுவது சாத்தியம் இல்லை.

நித்திலம்-சிப்பிக்குள் முத்து சொன்னது…

ஆமாங்க எல்.கே என்னோட சாய்ஸ்ம் எறும்பு பவுடர்தான். ஸ்பிரே எல்லாம் தலை முடிக்குத்தான்......எறும்புக்கு வேலைக்காவாது....

ஜிஜி சொன்னது…

கரப்பான் பூச்சி வராமல் இருக்க விக்குற சாக்பீசால எறும்பு வர்ற இடத்துல கோடு போடுங்க.எறும்பு வராது.செத்துவிடும்.
கரப்பான் பூச்சி சாகுறதுக்காக விக்குற அந்த சாக்பீஸ் எறும்பு கொல்லத்தான் பயன்படுது.கரப்பான் பூச்சி சாக மாட்டேன்குது.
உங்களுக்கு எறும்பு பிரச்சனை மாதிரி எங்க வீட்டுல சின்னதா குட்டியா இருக்குற கரப்பான் பூச்சிகள். தாங்க முடில.தொல்லை.
நானும் இந்தப் பூச்சிகளால் குழந்தைய வச்சிருக்க பயப்படறேன்.இதை ஒழிக்க உங்களுக்கு ஏதாவது வழி தெரிஞ்சா சொல்லுங்க.

அருண் பிரசாத் சொன்னது…

ஒரு No Entry for Ants னு போர்டு வெச்சி பாருங்க... அந்த பக்கமே வராது...

ஸ்ரீராம். சொன்னது…

லக்ஷ்மன் ரேகா சாக் பீஸ் வாங்கி எறும்பு வரிசையைப் பின் தொடர்ந்து செல்லவும். அதன் ஆரம்பப் புள்ளியைக் கண்டு பிடிக்கவும். அந்த ஒட்டையைச் சுற்றி சிறிய இடைவெளியில் இரண்டு வட்டம் போடவும். நின்று விடும். இரண்டு நாட்கள் கழித்து புதிய ஓட்டை போடப் பட்டு வெளிவரும். அங்கும் இதே போலச் செய்யவும். இப்படிதான் நான் செய்கிறேன்.

இளங்கோ சொன்னது…

//ஒரு No Entry for Ants னு போர்டு வெச்சி பாருங்க... அந்த பக்கமே வராது.//

hahhahaha

ஹுஸைனம்மா சொன்னது…

வித்தியாசமான தொல்லைதான்; உங்க பதிவு ஒண்ணை வாசிச்சுக் காட்டுங்களேன்!! :-)))))

asiya omar சொன்னது…

எறும்புக்கு ஊரில் எங்க வீட்டில எறும்பு கரப்பான் பூச்சி சாக்பீஸ் வாங்கி எல்லா இடத்திலும் கோடு போட்டு விடுவோம்.அதன் பின்பு வரவேயில்லை.சாக்பீஸ் ட்ரை செய்து பாருங்க.

சே.குமார் சொன்னது…

தொடர்ந்து எறும்பு பொடி போடனும்.

Gayathri சொன்னது…

simple neenga konja naal ooruku poydunga sweetana karthi illannu erumbhu veetta vittu odidum..

சைவகொத்துப்பரோட்டா சொன்னது…

சாக்பீஸ் பயன்படுத்தி பாருங்கள்.

LK சொன்னது…

@சௌந்தர்

பாப்பா இருக்கறதுதான் பிரச்சனை

LK சொன்னது…

@வெங்கட்
நானும் அப்படிதான் நினைக்கிறன்

LK சொன்னது…

@கவிசிவா
உண்மைதான் மஞ்சள் எல்லா இடத்துலையும் போட முடியாதே

LK சொன்னது…

@நித்திலம்

இது பூச்சி கொல்லி ஸ்ப்ரே. தலைக்கு போட்டா தலை காலி

LK சொன்னது…

@ஜிஜி
கரப்பானுக்கு ஸ்ப்ரே நல்லா உபயோகம் ஆகும். முயற்சி செய்துப் பாருங்கள். ஸ்ப்ரே அடிச்சிட்டு அப்புறம் சாக்பீஸ் கோடு போடுங்கள்

LK சொன்னது…

@அருண்

எப்படி தம்பி இப்படில்லாம் ? ரொம்ப அறிவாளி ஆகிட்டு வர நீ

LK சொன்னது…

@ஸ்ரீராம் அண்ணா

எத்தனை நாளுக்கு வொர்க் ஆகுது ??

LK சொன்னது…

@இளங்கோ
நன்றி

LK சொன்னது…

@ஹுசைனம்மா
அவ்.. ஏன் இந்தக் கொலை வெறி ??

LK சொன்னது…

@ஆசிய
ஏற்க்கனவே போட்டதுதான் சகோ, முயற்சிக்கிறேன்

LK சொன்னது…

@ஆசிய
ஏற்க்கனவே போட்டதுதான் சகோ, முயற்சிக்கிறேன்

LK சொன்னது…

@குமார்
ஹ்ம்ம்

LK சொன்னது…

@@காயத்ரி
எப்படி இப்படிலாம் ??

LK சொன்னது…

@சை.கொ.ப
ஹ்ம்ம் நன்றி

ஹுஸைனம்மா சொன்னது…

எல்.கே.: ஸ்ப்ரே அதிகம் பயன்படுத்த வேண்டாம். நல்லதில்லை. காற்றில் பரவி, மனிதர்களுக்கும் கேடு விளைவிக்கும். அடிக்கப்படும் இடத்திலும், சாமான்களிலும் தெறித்து படர்ந்து காய்ந்துவிடும். பூச்சி மருந்து, பூச்சிகளுக்கு மட்டுமல்ல, மனிதர்களுக்கும் கேடுதான். இதற்கு சாக்பீஸ் பரவாயில்லை என்று தோன்றுகிறது.

Mrs.Menagasathia சொன்னது…

better u use chalkpiece..

Chitra சொன்னது…

இந்த முறை, என் கணிணி அறை. இப்படி இருக்கலாமா , நான் ரொம்ப ஸ்வீட்னு எறும்புக்குத் தெரிஞ்சிடுச்சோ ???


.....கவிதை சோலையில் இனிமையான கவிதைங்க வாசிக்க வந்து இருக்குமோ?

vanathy சொன்னது…

எனக்கு ஒரு ஐடியாவும் தோண மாட்டேன் என்கிறது. நீங்க ஸ்வீட்டா... ரொம்ப ஓவர். ஒரே ஒரு அட்வைஸ் சாப்பாடு, நொறுக்கு தீனிகளை சமையல் அறையில் போய் சாப்பிடுங்க. இதனால் பூச்சி/எறும்புகளின் தொல்லை ஓரளவிற்கு குறையும்.

மோகன்ஜி சொன்னது…

கடைசியா ஒரே ஒரு வழிதான் எனக்குத் தோணுது. ஜன்னல் கதவை எல்லாம் மூடிட்டு, "ஏலே எரும்புப் பசங்களா! பத்து நிமிஷம் டயம் தரேன்.. அதுக்குள்ள இடத்தை காலி பண்ணல்லைன்னா, ப்ளாகுல இருந்து நிறைய கவிதஎல்லாம் படிக்கப் போறேன்! கபர்தார்!"னு சொல்லிப் பாருங்க.. அப்பவும் போலியா? நீங்களே அதுங்களைப் படிங்க.. எறும்புக் கடியே
சுகமாத் தோணும் ..(சும்மா ஜோக்குதான்! என் கவிதைகளையும் சேத்துக்குங்க!)

கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…

எனக வீட்லயும் பாடாய் படுத்துது.. பசங்களை கடிச்சு வச்சுருது.. ஒன்னும் பண்ணமுடியல ...

LK சொன்னது…

@ஹுசைனம்மா

உண்மைதான் இனி தவிர்க்கிறேன்

LK சொன்னது…

@மேனகா

நன்றி

LK சொன்னது…

@சித்ரா

ஓ அப்படி கூட இருக்கலாம்.

LK சொன்னது…

@மோகன்ஜி

நன்றி சார்.. முதலில் நீங்க முயற்சித்து பார்த்து சொல்லவும்

LK சொன்னது…

@வாணி
கணிணி அறையில் எதுவும் சாப்பிட மாட்டேன்

LK சொன்னது…

@செந்தில்

அடடே .. எதாவது வழி தெரிஞ்சா சொல்லுங்க

தெய்வசுகந்தி சொன்னது…

//ஒரு No Entry for Ants னு போர்டு வெச்சி பாருங்க... அந்த பக்கமே வராது.// // வித்தியாசமான தொல்லைதான்; உங்க பதிவு ஒண்ணை வாசிச்சுக் காட்டுங்களேன்!! :-))))// //simple neenga konja naal ooruku poydunga sweetana karthi illannu erumbhu veetta vittu odidum..// ஒரு மார்க்கமாத்தான் வராங்க போல எல்லாரும். // (அதுக்குக் கூட என் தாங்க்ஸ் சமையல் பத்தி தெரியுது ).// நாளைக்கு சாப்படு கிடைக்குமான்னு பாத்துகுங்க :-)!!!

Mitr Friend - Bhushavali சொன்னது…

Ayya Saami,
Therinja enakkum sollunga... En kadha vera... Samayal kattukulla mattum dhan erumbu. Saadha saadham kooda vittuttu office poga mudiyala!!! :(

My Best Friend's TADA Trip
The Pleated Top to Office

Sethu சொன்னது…

பொதுவாக கதவு, ஜன்னல் இடுக்கு வழியாக வர வாய்ப்பு இருக்கலாம். வீட்டில் குழந்தை இருப்பதால், வெளிப்பக்கமாக மேற்கூறியவர்கள் சொன்ன வற்றை ட்ரை பண்ணலாம். சமையல் அறையில் வருவதாக இருந்தால், மருந்துக்கு பதில் மஞ்சள் அல்லது நன்கு அரைபட்ட மிளகாய்த்தூள் ட்ரை பண்ணுங்கள். அடிக்கடி டெட்டால் பினாயில் போட்டு கழுவவேண்டும் .வீட்டை சுற்றி மருந்து தெளித்தால் வராது.

அன்னு சொன்னது…

கார்த்தின்ணா,
இதெல்லாம் ஒரு பிரச்சினையா?? அதுலயும் இவிங்க சொல்ற எதுவும் வர்க் அவுட் ஆகலைன்னா இந்த முறைகள் Try செய்து பார்க்கவும்.

1. உங்க ஃபோட்டோ (கண்டிப்பா குளோஸப்) ஒன்னு அப்படிக்கா செவுத்துல பேஸ்ட் பண்ணிடுங்க.
2. ஒரு சின்ன மஞ்சள் அட்டைல 'DEROUTE'னு எழுதி டூத்பிக்ல ஒட்டி அவிங்க போற வர்ற வழில வைங்க.Make alternate way also :)

3. இன்றைய ஸ்பெசல் அப்படின்னு எறும்பு பிரை ரெசிபி ஒன்னு தங்ஸ்கிட்ட சொல்லு(ற மாதிரி நடி)ங்க.
4. இதெல்லாம் முடியலைய்யா, சவால் சிறுகதை மாதிரி எறும்பை வீட்டிலிருந்து அகற்ற சவால் போட்டின்னு ஒன்னு வைங்க. ஏற்கனவே இங்க நிறைய பேர் அவ்ளோ அழகா ஐடியா கொடுத்திருக்காங்க. இன்னும் நிறைய கிடைக்கும்.
5. இதுக்கும் அசரலைன்னா எங்க பாட்டி ஒரு வைத்தியம் செய்வாங்க. ஒரு பழைய சீலைத்துணில கொஞ்சம் மண்ணெண்ணெய் தோய்ச்சு அது எறும்புகள் வாக்கிங் செய்யும் இடங்கள்ல தடவிடுவாங்க. பாப்பா இருப்பதனால் கவனமா செஞ்சு பாருங்க.
6. புது வீடு வாங்கினப்ப இங்கயும் கொஞ்சம் தொல்லை இருந்தது. கொஞ்சம் பூண்டை நசுக்கி அவிங்க என்ட்ரி ஆகற மற்றும் எக்ஸிட் ஆகற வழிகள்ல தேய்ச்சும், துண்டுகளைப் போட்டும் வச்சிட்டேன். இப்ப எல்லாரும் குடி மாறிப் போயிட்டாங்க (எறும்புங்கள சொன்னேன்).

சரி எது நல்லா உபயோகமா இருக்கோ அதை மறக்காம பதிவுல அப்டேட்டிடுங்க. ஏன்னா அடுத்த தலைமுறைக்கு யூஸ் ஆகுமில்ல. வரலாறு ரொம்ப முக்கியம் ண்ணா..!!

:))

philosophy prabhakaran சொன்னது…

மற்றவர்களிடம் பேசும்போது கொஞ்சம் காரமாகவும் போடி வைத்தும் பேசிப் பார்க்கவும்... எறும்புத்தொல்லை அடங்க வாய்ப்பு இருக்கிறது...

LK சொன்னது…

@தெய்வ சுகந்தி

அவங்க ஊருக்கு போய்ட்டாங்க..

LK சொன்னது…

@பூஷா
அதுக்கு கிச்சனை கிளீன் பண்ணு சரியாய் போய்டும்

LK சொன்னது…

@அன்னு

எப்படி அன்னு நீ இவ்ளோ புத்திசாலிய இருக்க. ஒன்னும் சொல்றதுக்கு இல்ல

LK சொன்னது…

@பிரபாகரன்

எப்படிங்க ?? செஞ்சிடலாம்

அமைதிச்சாரல் சொன்னது…

மஞ்சள்பொடியை போட்டா எறும்பு வராது, பட்சணங்களை இப்படித்தான் காப்பாத்திக்கிட்டு வரேன்.அதையும் மீறிவந்தா அதுகிட்ட போயி 'statue'ன்னு சொல்லுங்க. அப்படியே அசையாம நின்னுடும், தூக்கிப்போட்டுடுங்க :-)))))))

அன்னு சொன்னது…

//எப்படி அன்னு நீ இவ்ளோ புத்திசாலிய இருக்க. ஒன்னும் சொல்றதுக்கு இல்ல //

ஹி ஹி ஹி....எனக்கு புகழ்ச்சியே புடிக்காதுங்ணா...:)

Harini Sree சொன்னது…

Manjal podi podunga apdi illena spray is better than podi. weekly once veetla adichudunga oru rendu moonu thadava vaara vaaram thodarnthu adichu paarunga apram varaathu!

கீதா சாம்பசிவம் சொன்னது…

பொதுவா மழை வரதுக்கு முன்னே எறும்புகள் கொடி அணி வகுப்பு நடத்தும். ஆனாலும் சில வீடுகளில் ஜாஸ்தியாவே இருக்கும். ஹிஹிஹி, எங்க வீட்டிலே எங்கேன்னு சொல்றது?? எல்லா ஜீவராசிகளும் இஷ்டத்துக்குக் குடியேறி இருக்கு. லூஸ்லே விட்டுட்டோம். ரொம்பப் படுத்தினா எறும்பு மருந்து ஹிட் ஸ்ப்ரே பண்ண வேண்டியதுதான். கரப்புகள் இருந்தாலும் ஒழிஞ்சு போகும். கொசுவும் போயிடும். ஆனால் அடிச்சுட்டு ரூமைச் சாத்தி வைச்சுட்டு, அரை மணி கழிச்சுத் திறந்து ஜன்னல்களையும் திறந்து வைக்கணும். அப்புறமா ஜன்னல்கதவுகளைச் சார்த்திக்கலாம்.

Mathi சொன்னது…

தேடி வரும் விருந்தாளிகளை திருப்பி அனுபதீங்க..