அக்டோபர் 30, 2010

சொந்த மண் XII

மேட்டூர் இந்தப் பெயரை கேட்டவுடன் நமக்கு ஞாபகம் வருவது அணை மட்டுமே. சேலத்தில் இருந்து ஒன்றரை மணி நேரப் பயணத்தில் அமைத்திருக்கிறது. சேலம், ஈரோடு, தர்மபுரி மாவட்ட எல்லையில் அமைத்திருக்கிறது. 

ஒகேனக்கலில் தமிழகத்தில் நுழையும் காவிரி அன்னை இங்கே அணையினால் தடுத்து நிறுத்தப் படுகிறாள். மேட்டூர் அணையின் தண்ணீரை நம்பி கிட்ட தட்ட 271000 ஏக்கர் நிலங்கள் உள்ளன. 1934 ஆம் ஆண்டு கட்டப் பட்ட அணையின் பெயர் ஸ்டான்லி அணைக்கட்டு என்பதே. பின் பேச்சு வழக்கில் மேட்டூர் அணை என்று அழைக்கப் ப்பட்டு, இப்பொழுது அதன் உண்மையானப் பெயர் மறந்து போய்விட்டது என்றே சொல்லலாம். மேட்டூர் அணையின் நீளம் 1700 மீட்டர் , அதிகப் பட்சம் 120 அடி வரை நீரை நிறுத்தி வைக்கும் வசதி உள்ளது. 

அணைகட்டபட்ட பொழுது அருகில் இருந்த சில கிராமங்கள் மூழ்கின. அங்கு இருந்த சிவன் கோவில், சர்ச் போன்றவை இன்றும் அணையின் நீர்மட்டம் குறையும் பொழுது வெளியில் தோன்றும்.(இப்பொழுது நந்தி சிலை நன்றாகத் தெரியும் அளவு தண்ணீர்  குறைந்து விட்டது )

அணைக்கட்டை ஒட்டிய பூங்கா காண வேண்டிய ஒன்று . அதே போல் அருகில் இருக்கும் நெரிஞ்சிப் பேட்டை ,பன்னவாடி போன்றப் பகுதிகளில் இருந்து பரிசல் போக்குவரத்தும் உண்டு.  ஒரு காலத்தில், மேட்டுரை ஒட்டிய காடுகளின் வழியாகத்தான் வீரப்பன் தப்பி சென்றான் என்பது வரலாறு இப்பொழுது. 

 மேட்டூர் ஒரு தொழில் நகரம். தமிழகத்தில் அதிகம் மாசுபட்ட நகரங்களில் இதுவும் ஒன்று என்பது அதிர்ச்சி அளிக்கும் ஒன்று. ஆம், மேட்டூர் கெமிக்கல்ஸ்,மால்கோ ,சிச்கோல் போன்ற நிறுவனங்களால் இங்கு சுற்றுப்புற சூழல் பெருமளவு மாசடைந்து உள்ளது. 

வெகு சமீபத்தில்தான், இங்கிருந்து சென்னைக்கு ரயில் வசதி வந்துள்ளது. இங்கிருந்து கிளம்பும் ரயில் சேலம் சென்று , பின் சென்னை எக்மோரை அடைகிறது. 


அடுத்தப் பகுதியில் சேலம் உருக்காலை பற்றிப் பார்ப்போம் 

35 கருத்துகள்:

Gayathri சொன்னது…

matoorparrina nalla thagaval..
thodarndhu ezhudhunga

THOPPITHOPPI சொன்னது…

Nice

சைவகொத்துப்பரோட்டா சொன்னது…

கட்டுரையோடு, படங்களும் அழகு.

அமைதிச்சாரல் சொன்னது…

படங்களெல்லாம் நல்லாருக்கு.. அணையைப்பத்தி இன்னும் கொஞ்சம் சொல்லியிருந்தா நல்லாருக்கும் :-)

சுந்தரா சொன்னது…

//அணைகட்டபட்ட பொழுது அருகில் இருந்த சில கிராமங்கள் மூழ்கின. அங்கு இருந்த சிவன் கோவில், சர்ச் போன்றவை இன்றும் அணையின் நீர்மட்டம் குறையும் பொழுது வெளியில் தோன்றும்.//

இதுவரை அறியாத தகவல்கள்...

பகிர்வுக்கு நன்றிகள் கார்த்திக்!

வெறும்பய சொன்னது…

alakaana padankal..

Balaji saravana சொன்னது…

//அடுத்தப் பகுதியில் சேலம் உருக்காலை பற்றிப் பார்ப்போம்//
பார்த்துடுவோம் :)

asiya omar சொன்னது…

அணை பற்றிய தகவல் அருமை.

வித்யா சொன்னது…

பகிர்விற்கு நன்றி. ஓரிரு முறை சென்றிருக்கிறேன்.

Chitra சொன்னது…

சைவகொத்துப்பரோட்டா said...

கட்டுரையோடு, படங்களும் அழகு.


..Repeattu!

வானம்பாடிகள் சொன்னது…

இம்புட்டு அழகா தண்ணியிருக்கா தமிழ்நாட்டுல. நன்றி படத்துக்கு.

சே.குமார் சொன்னது…

very NICE.

அன்பரசன் சொன்னது…

Nice one..

Sriakila சொன்னது…

நல்லாருக்கு...

தெய்வசுகந்தி சொன்னது…

படங்கள் சூப்பர்!!!

Sethu சொன்னது…

"அணைகட்டபட்ட பொழுது அருகில் இருந்த சில கிராமங்கள் மூழ்கின."

மூழ்கிய கிராமம் பெயர் 'சாம்பள்ளி'. அதற்குமுன் அவர்கள் அருகில் குடியமர்த்தப்பட்டார்கள். அப்பிடி உருவாகியதே 'புதுசாம்பள்ளி'.

வானம்பாடி அய்யா மேட்டூர் போனது இல்லையா. போய்வாருங்கள் சார். அருமையான இடம்.

LK சொன்னது…

@காயத்ரி

நன்றி

LK சொன்னது…

@தொப்பிதொப்பி

நன்றி

LK சொன்னது…

@சை.கொ.ப

நன்றிங்க

LK சொன்னது…

@சாரல்

எனக்குத் தெரிந்த வரை எழுதிவிட்டேன். என்ன விஷயம் வேண்டும் என்று சொன்னால் அதை பற்றி விஷயம் சேகரித்து எழுதுவேன்

LK சொன்னது…

@சுந்தரா

நன்றி

LK சொன்னது…

@ஜெயந்த்
கூக்ல்க்கு நன்றி சொல்லு

LK சொன்னது…

@பாலாஜி

நன்றி

LK சொன்னது…

@ஆசியா

நன்றி சகோ

LK சொன்னது…

@வித்யா

நன்றி வித்யா . நானும் ஓரிரு முறைதான் சென்று இருக்கிறேன்

LK சொன்னது…

@சித்ரா
நன்றி

LK சொன்னது…

@பாலா சார்

கர்நாடகாவில் இருந்து தண்ணீர் திறந்த விடப் பட்டு, இங்கும் மழை பெய்து அணை முழுவது தண்ணி நிறைந்து இருக்கும் பாருங்கள். அப்பொழுது காண வேண்டும். காண கண் இரண்டு போதாது

LK சொன்னது…

@குமார்

நன்றி

LK சொன்னது…

@அன்பரசன்

நன்றி

LK சொன்னது…

@ஸ்ரீ அகிலா

நன்றி

LK சொன்னது…

@தெய்வ சுகந்தி

நன்றிங்க

LK சொன்னது…

@சேது
எனக்கு இது புதியத் தகவல்கள். நன்றி சார்

பெயரில்லா சொன்னது…

Chemplast also polluted Metur a lot. Please add this also.

LK சொன்னது…

@அனானி நண்பரே

மேட்டூர் கேமிகல்தான் கெம்ப்ளாஸ்ட்

வெங்கட் நாகராஜ் சொன்னது…

மேட்டூர் - கல்லூரி சுற்றுலா செல்லும் போது சென்ற இடங்களில் ஒன்று. பழைய நினைவுகளை கொடுத்தது உங்களது இவ்விடுகை.