அக்டோபர் 27, 2010

சொந்த மண் XI

 நாமக்கல் ஆஞ்சநேயர் அளவிற்கு, லாரி தொழிலுக்கும் புகழ் பெற்றது. நகரத்தில் நுழையும்பொழுதே, லாரி ஆபிஸ்களும், லாரி ரிப்பேர் செய்ய பட்டறைகளும்தான் உங்களை வரவேற்கும்.

நாமக்கல்லில் நரசிம்மர், ஆஞ்சநேயர் கோவில்களைத் தவிர்த்து மலை கோவில் ஒன்றும் உள்ளது. இப்பொழுது அதிகம் பேர் போவது இல்லை. மற்ற நகரங்களை போல் காதலர் சந்திக்கும் இடமாகி விட்டது அது.

அரை நாளில் நாமக்கலில் இரண்டு கோவில்களையும் தரிசித்து விடலாம். இங்கிருந்து அடுத்து நாம் போகபோவது திருச்செங்கோடு. நாமக்கல்லில் இருந்து நாற்பது கிலோமீட்டர்கள் மட்டுமே. இது திருக் கொடிமடசெங்குன்றூர் என்றும்  பழைய காலத்தில் அழைக்கப்பட்டு இருக்கிறது.திருச்செங்கோட்டில் உள்ள செங்குந்தர் கலை அறிவியல் கல்லூரியில்தான் மூன்று வருடம் படித்தேன். அதனால் அங்கு உள்ள ஒவ்வொரு இடமும் நன்கு ஞாபகம் உள்ளது.

இங்கு குன்றின் மேல் கோவில் கொண்டுள்ள சிவன் உமையொரு பாகனாய் வீற்றிருக்கிறார் .இந்த ஊரில் நாம் பார்க்கவேண்டிய இடம் இதுதான். முக்கியப் பண்டிகை வைகாசி விசாகம் தான். இரண்டு வாரங்களுக்கு மிகக் கோலாகலமாய் நடக்கும். இதைத் தவிர இங்கு பெரிதாய் வேறு ஒன்றும் இல்லை. (மூன்று வருடத்தில் இரண்டு முறைதான் கோவிலுக்கு சென்று இருக்கிறேன் ).

இங்கு முக்கியத் தொழில் கைத்தறி மற்றும் பவர் லூம்கள். இது மட்டும் இல்லாது, போர் போடும் லாரிகள் இங்கு அதிகம் . அதேப் போல் , லாரி கட்டும் தொழிலும் உண்டு. விவசாயம் பெரிய அளவில் இல்லை. இவர்கள் குடிநீருக்காக நம்பி இருப்பது ஈரோடு வழியாக செல்லும் காவேரி ஆற்றையே .

இங்கிருந்து கிட்டத்தட்ட பத்து கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது சங்ககிரி. ஊருக்குள் நுழையும் பொழுதே நம்மை வரவேற்பது மலைதான். விஜயநகர சாம்ராஜ்யத்தின் பொழுது இங்கு வலுமிகுந்த கோட்டை கட்டப் பட்டது. பின் திப்புசுல்தானும்  அதற்குப் பின் ஆங்கிலேயர்களும் இதை உபயோகப் படுத்தினர். இது மிக வலிமை மிகுந்த கோட்டையாகக் கருதினர். காரணம் இதன் ஒருபுறம் மட்டுமே ஏற முடியும், மற்ற பகுதிகள் மிக செங்குத்தாக ஏற முடியாத வண்ணம் உள்ளது. நிதானமாக ஏறினால் அரை நாள் ஆகும் மேலே ஏற. கல்லூரி இறுதியாண்டில், என் வகுப்பு  நண்பர்கள் அனைவரும் சேர்ந்து இங்கு வந்து ஒரு சிலர் ஏற முடியாமல் அவதிப் பட்டது இன்னும் நினைவிருக்கிறது.இதைத் தவிர்த்து, இங்கு சிமென்ட் ஆலை ஒன்றும் உள்ளது.

அடுத்தப் பகுதியில், மேட்டூர் சென்று பின் சேலம் திரும்புவோம்.

டிஸ்கி : படங்கள் உதவி கூகிள்

அன்புடன் எல்கே

36 கருத்துகள்:

asiya omar சொன்னது…

நல்ல அருமையாக போகுது,திருச்செங்கோடு என்றவுடன் என்னுடன் படித்த முருகேசன் என்ற (திருச்செங்கோட்டைசேர்ந்தவர்) மாணவரின் நினைவு வருகிறது.சேலத்தில் ஒரு குரூப்பே இருக்கு.எல்லாரையும் தேடிகிட்டு இருக்கேன்.

Chitra சொன்னது…

நல்ல தொகுப்புங்க...நிறைய விஷயங்கள். நன்றி.

வானம்பாடிகள் சொன்னது…

போன வருஷம் போனது. இந்த வருஷம் வாய்க்கணும்.:)

அருண் பிரசாத் சொன்னது…

அங்க கோட்டை இருக்குதா? புதிய தகவல்... இதுவரை எனக்கு தெரியாது

இளங்கோ சொன்னது…

திருச்செங்கோடு எனக்குப் பிடித்த இடங்களில் ஒன்று. கூட்டமே இல்லாத, சுத்தமான காற்று வீசும் அந்த மலைக்கு திரும்ப ஒரு நாள் போக வேண்டும்.

நாகராஜசோழன் MA சொன்னது…

பகிர்வுக்கு நன்றிங்க. அப்படியே எங்க ஈரோடு மாவட்டத்த பற்றியும் எழுதுங்க.

dheva சொன்னது…

மேட்டூருக்கு வெயிட்டிங்.....

கூடிய சீக்கிரம் வந்து சுத்தி பாக்குறோம் எல்லா ஏரியாவையும்..!

அமைதிச்சாரல் சொன்னது…

அருமையான தகவல்கள்.. நாமக்கல்ன்னதும் ஆஞ்சனேயரும், லாரிகளும் ஞாபகம் வருவது நிச்சயம்.

Balaji saravana சொன்னது…

திருச்செங்கோடு ஒரே ஒருமுறை தான் போயிருக்கேன். அர்த்தநாரீஸ்வரர் பற்றி இன்னும் கொஞ்சம் எழுதுங்க பாஸ்!

Nithu Bala சொன்னது…

நாமக்கல், திருச்செங்கோடு,சங்ககிரி என்பது எல்லாம் ஊர்களின் பெயர்கள் என்ற அளவில் மட்டுமே அறிந்து வைத்திருந்தேன். உங்கள் எழுத்தின் மூலம் அவ்வூர்களை பற்றி தெரிந்து கொண்டேன்...மற்ற பகுதிகளையும் விரைவில் படித்து விடுகிறேன். தொகுப்புக்கு நன்றி.

LK சொன்னது…

@ஆசியா

அப்படியா.. சீக்கிரம் கிடைப்பாங்க

LK சொன்னது…

@சித்ரா
நன்றி

LK சொன்னது…

@பாலா

நான் சென்று இரண்டு வருடம் ஆகி விட்டது

LK சொன்னது…

@அருண்
இருந்தது. இப்ப சில இடிபாடுகள் மட்டுமே

LK சொன்னது…

@இளங்கோ

உண்மைதான் ... கூட்டம் அதிகம் இருக்காது

LK சொன்னது…

@நாகராஜசோழன்

உங்க ஊர் பக்கம் அதிகம் போனது இல்லை நண்பரே.. கோவை செல்லும் பொழுது கடந்து செல்வது மட்டுமே..

LK சொன்னது…

@தேவா
வாங்க.. உங்களுக்குத்தான் காத்திருக்கிறோம்

LK சொன்னது…

@சாரல்

ஆமாம்

LK சொன்னது…

@பாலாஜி

தகவல் சேகரித்து எழுதுகிறேன்.

LK சொன்னது…

@நிது
நன்றிங்க

நித்திலம்-சிப்பிக்குள் முத்து சொன்னது…

நிறைய தகவலகள் எல்.கே நன்றி.

அன்புடன் மலிக்கா சொன்னது…

மண் மணத்துடன் நல்ல தவல்களாக தொகுத்து வெளியிடுவது அருமை கார்த்தி.

வெறும்பய சொன்னது…

நல்ல தொகுப்பு..

வெங்கட் நாகராஜ் சொன்னது…

சங்ககிரி, திருச்செங்கோடு ஆகிய ஊர்களின் பேருந்து நிலையத்தினை மற்றுமே பார்த்திருக்கிறேன். நீங்கள் தரும் விவரங்கள் அவ்வூர்களைப் பார்க்கத்தூண்டியது. பகிர்வுக்கு நன்றி.

சைவகொத்துப்பரோட்டா சொன்னது…

மேட்டூர் செல்ல காத்திருக்கிறேன்.

Sriakila சொன்னது…

உங்க ஊரப்பத்தி இவ்வளவு விஷயங்கள் தெரிஞ்சு வச்சிருக்கீங்க...
சுத்தாத இடம் இல்லையோ?

எப்படியோ சொந்த மண் பதிவின் மூலம் உங்கள் ஊரைப்பற்றி நன்றாகவே தெரிந்து கொள்கிறோம்.

Gayathri சொன்னது…

nalla irukku unga pagirvu unga punyathula naanga oc la tamilnatta suthi vandhunu irukom


azhaga naraya thagaval solrel..nandri

ப.செல்வக்குமார் சொன்னது…

//இங்கிருந்து கிட்டத்தட்ட பத்து கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது சங்ககிரி. ஊருக்குள் நுழையும் பொழுதே நம்மை வரவேற்பது மலைதான்///

ஆமாம் , நான் சேலம் வரும் போது சங்ககிரி வழியாதான் வருவேன் .. அந்த மலை சூப்பரா இருக்கும் ..!! ரொம்ப பெரிய மலை ..!!

சசிகுமார் சொன்னது…

நல்ல பகிர்வு நண்பரே.

LK சொன்னது…

@நித்திலம்

நன்றி

LK சொன்னது…

@மலிக்கா

நன்றி

LK சொன்னது…

@வெறும்பய

நன்றி தம்பி

LK சொன்னது…

@வெங்கட்

கண்டிப்பா போயிட்டு வாங்க ஒரு முறை

LK சொன்னது…

@சை.கொ.ப

விரைவில்

LK சொன்னது…

@ஸ்ரீஅகிலா

இவை அனைத்தும் சேலத்தின் மிக அருகில் இருப்பவை.... அடிக்கடி சென்ற இடங்கள். மதுரைக்கு தெற்கே அதிகம் போனது இல்லை

LK சொன்னது…

@செல்வா
உண்மைதான். நன்றி