அக்டோபர் 16, 2010

மக்களே உஷார் VII

 ஏற்கனவே உங்கள் வங்கி கணக்கு விவரங்கள் அனுப்பினால் , உங்கள் கணக்கிற்கு இத்தனை மில்லியன் டாலர்கள் மாற்றுவோம் என்று மெயில் வருவது அனைவருக்கும் தெரியும். அதேப் போல் உங்கள் மெயில் ஐடி இவ்வளவு டாலர் லாட்டரி வென்று இருக்கிறது என்றும் மெயில் வந்துப் பார்த்து இருப்பீர்கள். சமீபத்தில் இதே போல் ஒரு மெயில் வந்து கொண்டு இருக்கிறது. இது எத்தனை பேருக்கு வந்துள்ளது என்று தெரியவில்லை.

 எனக்கு சமீபத்தில், இந்தியாவின் முன்னணி வீட்டு உபயோகப் பொருட்கள் (house hold appliances) தயாரிக்கும் நிறுவனத்தின் பெயரில் ஒரு ஈமெயில் வந்திருந்தது. அதில் சொல்லப் பட்டத்தின் சாராம்சம் "உங்களை நாங்கள் எங்கள் நிறுவனத்தின் ஏற்பட்டுள்ள காலி இடத்தை நிரப்புவதற்கு உண்டான நேர்முகத் தேர்வுக்கு தேர்வு செய்துள்ளோம். மொத்தம் 66 பேர் தேர்வு செய்யப் பட்டுள்ளனர். இதில் அதிகப் பட்சம் 50 பேரை வேலைக்கு எடுப்பது உறுதி. நீங்கள் செய்யவேண்டியது , கீழ் குறிப்பிட்டுள்ள வங்கிக் கணக்கில் உடனடியாக ருபாய் 15000  செலுத்தவும். அவ்வாறு வங்கி கணக்கில் பணம் செலுத்தியவுடன், எங்களுக்கு தெரிவித்தால் உங்களுக்கு உடனடியாக டெல்லி வந்து  செல்ல விமான டிக்கெட் அனுப்பி வைக்கப் படும். மேலும் இந்தப் பணம் நீங்கள் வேலைக்கு தேர்வானவுடன் திருப்பிக் கொடுக்கப்படும். "

மேலோட்டமாகப் பார்த்தல் , இந்த மெயிலில் எந்த விவகாரமும் தெரியாது. சம்பந்தப் பட்ட நிறுவனம், எங்கள் நிறுவனத்தின் கிளையன்ட். அதனால் எனக்கு சிறிது சந்தேகம் வந்தது. உடனடியாக அந்த நிறுவனத்தை சேர்ந்தவர்களிடம் பேசினேன். அவர்கள் இவ்வாறு எந்த மெயிலும் யாருக்கும் அனுப்பவில்லை என்று உறுதி செய்தனர்.

வித விதமா மோசடி பண்றாங்க . கொஞ்சம் உஷாரா இருங்க. எந்த ஒரு நிறுவனமும் இதை போன்று பணம் கேட்டு மெயில் செய்ய மாட்டார்கள். இவ்வாறு மெயில் வந்தால் உடனடியாக ஸ்பேம் என்று மார்க் செய்யவும்



அன்புடன் எல்கே

51 கருத்துகள்:

Chitra சொன்னது…

If it is too good to be true... then it is not true. right?

சௌந்தர் சொன்னது…

இன்னும் இந்த மாதிரி மெயில் வந்துகொண்டே தான் இருக்கிறது நம்ம மக்களும் ஏமார்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள் நல்ல விழிப்புணர்வு பதிவு

LK சொன்னது…

@சித்ரா
சரிதான்

அமைதிச்சாரல் சொன்னது…

எனக்கு மெர்ஸிடிஸ் பென்ஸ் கார் பரிசு கிடைச்சிருக்கிறதா தினமும் மெயில் வந்து தொல்லைபண்ணுது. மெயில்ல அனுப்புற காரை நேர்ல வந்து கொடுத்தா வேணாம்ன்னா சொல்லப்போறோம்.. இந்தமாதிரி மெயில்கள் நிறைய நடமாடுது. அதுல, பணம் கேக்குற மெயில்களும் ஒண்ணு. ஸ்பாம் செஞ்சுட்டு வேற வேலையை பார்க்க வேண்டியதுதான் :-))))))

LK சொன்னது…

@சௌந்தர்
உண்மைதான்

LK சொன்னது…

@சாரல்

//ஸ்பாம் செஞ்சுட்டு வேற வேலையை பார்க்க வேண்டியதுதான் :-))))///

சரிதான். இருந்தாலும் ஏமாறுபவர்கள் இருக்கிறார்கள் இல்லையா ?? அதுவும் வேலை விஷயத்தில் ஏமாற வாய்ப்புகள் அதிகம்

asiya omar சொன்னது…

எனக்கு லாட்டரி விழுந்ததாக மெயில் வருவதுண்டு,நானும் தங்கள் சொன்னபடி தான் செய்தேன்.தேவையான பகிர்வு.

சைவகொத்துப்பரோட்டா சொன்னது…

ரூம் போட்டு யோசிப்பாங்களோ!

முகிலன் சொன்னது…

தேவையான எச்சரிக்கை

வெறும்பய சொன்னது…

உண்மை தான் அண்ணா... நல்ல வழியில் வாழ்வதற்கு பல வழிகள் இருந்தாலும் குறுக்கு வழியில் சம்பாதிக்கும் கூட்டம் இருக்கத்தான் செய்கிறது..

அமைதி அப்பா சொன்னது…

அவசியமான பதிவு. எச்சரிக்கை செய்வது நமது கடமை.
நன்றி.

ராம்ஜி_யாஹூ சொன்னது…

thanks for sharing

மங்குனி அமைசர் சொன்னது…

சார் என்ன ஒரு காமடின்னா , எல்லாத்துக்கும் படிப்பும் , பொது அறிவும் சொல்லிக்கொடுக்கும் ஒரு புரொபசர் காரைக்காலில் இந்தமாதிரியான பண மோசடியில் சுமார் 8 லட்சம் இழந்துள்ளார் (அனேகமா எல்லாம் நியுசுல பார்த்து இருப்பிங்க ), இந்த கொடுமைய எங்கபோயி சொல்றது , எல்லாம் பேராசைதான் காரணம்.

ஸ்ரீராம். சொன்னது…

நான் கூட இது மாதிரி கேள்விப் பட்டிருக்கிறேன்...ஏமாற்ற ஆயிரம் வழிகள்.

DREAMER சொன்னது…

இந்த எச்சரிக்கை மணி, நிச்சயம் ஏமாறுபவர்களின் செவிக்கு எட்ட வேண்டும். பகிர்வுக்கு நன்றி!

-
DREAMER

ஜெயந்தி சொன்னது…

இந்த மாதிரி மெயில்களை கண்டுக்கக்கூடாது. தேவையான பதிவுதான்.

வானம்பாடிகள் சொன்னது…

மூணு வைரவளையல் ஒன்னு 42,000ரூ வாங்கினா ஒன்னு ஃப்ரீனு விளம்பரம் குடுக்கறான். அவனுக்கென்னடா என் மேல பாசம், சும்மா குடுக்குறானேன்னு யாராவது யோசிப்பாங்க. அந்த வளையல் லாபம் சேர்த்து மத்த மூணு வளையல்ல சேர்ந்திருக்கும்னு தெரியாமலா இருக்கோம். இருந்தும் விளம்பரம் பண்றாங்கன்னா நம்ம மேல எவ்வளவு நம்பிக்கை. இவன் ரெம்ம்ம்ம்ம்ப நல்லவன். எவ்வளவு அடிச்சாலும் தாங்குவான்னு:))

பார்வையாளன் சொன்னது…

எனக்கும் இதே மெயில் வந்து இருந்துச்சு, ஏகப்பட்ட எழுத்து பிழைகளுடன்.. பிராடு என தெளிவாக தெரிந்த்தால் , புறக்கணித்து விட்டு அத்துடன் மறந்து விட்டேன்..
ஆனால் இப்படி பொது வெளியில் எழுதி எச்சரிக்க வேண்டும் என ஏனோ தோன்றாமல் போய் விட்ட்து..
மிகவும் அவசியமான பதிவு.. கண்டிப்பாக பலர் ஏமாந்து இருப்பார்கள்..

cheena (சீனா) சொன்னது…

அன்பின் பதிவர்களே நாம் ஏமாறும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். என்ன செய்வது - ஆசை - செய்து தான் பார்ப்போமே எனற ஒரு தவிர்க்க இயலாத மனம் - ம்ம்ம்ம்ம் - பட்டால் தான் தெரியும் நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

LK சொன்னது…

@ஆசியா

நன்றி சகோதரி

LK சொன்னது…

@சை,கொ. ப

அதான் பாருங்களேன்

LK சொன்னது…

@தினேஷ்

நன்றி

LK சொன்னது…

@வெறும்பய

நெறைய கூட்டம் இருக்கு தம்பி

LK சொன்னது…

@அமைதி அப்பா

நன்றிங்க

LK சொன்னது…

@ராம்ஜி
நன்றி

LK சொன்னது…

@amaichare

ennaki kodumai ithu

LK சொன்னது…

@ஸ்ரீராம்
அண்ணா ஆமாம்

LK சொன்னது…

@ட்ரீமர்

நன்றி சார்

LK சொன்னது…

@பாலா சார்

உண்மைதான் நன்றி சார்

LK சொன்னது…

@ஜெயந்தி

நன்றி

LK சொன்னது…

@பார்வையாளன்

யார் பகிர்ந்தால் என்ன. மக்களுக்கு விவரம் போனால் போதும்

LK சொன்னது…

@சீனா

சரியாக சொன்னீர்கள். நன்றி சார்

தெய்வசுகந்தி சொன்னது…

ஏமாறுவற்கு ஆள் இருக்கும் வரைக்கும் இது மாதிரி புதுசு புதுசா ஏமாத்திட்டுதான் இருப்பாங்க!
//ஸ்பாம் செஞ்சுட்டு வேற வேலையை பார்க்க வேண்டியதுதான் :-))))))//
அதேதான்!!

angelin சொன்னது…

its true .people should be aware of such scams.still i am reciving such mails .people should never give their personal details in pop up ads.

சுந்தரா சொன்னது…

எனக்கும் இதுமாதிரி ரெண்டு மூணு கார் கிடைச்சது. ஆனா, வேணம்னு சொல்லிட்டேன் :)

எச்சரிக்கைப் பகிர்வுக்கு நன்றி கார்த்திக்!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

இதெல்லாம் பரவால்ல, ஒருதடவ, என் நண்பர் ஈமெயில்ல இருந்து அவர் ஆப்பிரிக்காவுல மாட்டிக்கிட்டதாவும் அவசரமா பணம் வேண்டும்னும் மெயில் வந்தது. பதறிப் போயி போன் பண்ணா, அவரு ஈமெயில யாரோ ஹேக் பண்ணிட்டாங்கன்னு சொல்றாரு...!
ரொம்ப ரொம்ப எச்சரிக்கையா இருக்கனும் சார்!

நன்றி!

kunthavai சொன்னது…

:( எப்படியெல்லாம் ஏமாற்றுவது என்று உக்காந்து யோசிப்பாங்க போல.

சுசி சொன்னது…

நல்ல பகிர்வு கார்த்திக்.

எனக்கு ஸ்பெயின்ல இருந்து ஒரு லெட்டர் வந்தது. அதுவும் ஆஃபீஸ் மெயிலுக்கு. உன் பேர்ல இங்க ஒரு மோசடி நடந்திருக்கு உடனடியா எங்களுக்கு உன் டீடெயில்ஸ் வேணும்னு. எனக்கு எப்டி இருந்திருக்கும்??

ஸ்பெயின் வரைக்கும் என் பிளாக் ப்ரஃபைல் போயிடுச்சான்னு சந்தோஷமா இருந்துது.

vanathy சொன்னது…

I have received so many fraud mails like this frequently. Just ignoring these kinds of mails is the best. My best advice is do not click any links sent to you.

ப.செல்வக்குமார் சொன்னது…

ஆமாம் அண்ணா ., எனக்கு கூட அடிக்கடி லாட்டரி விளம்பரம் வரும் ..!!
என்ன பண்ணுறது . நாம கொஞ்சம் கவனமா இருக்கணும் ..

கீதா சாம்பசிவம் சொன்னது…

தொலைபேசி, கைபேசி மூலமும், நீங்க இந்த நக்ஷத்திரத்தோட விருந்து சாப்பிடத் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கீங்கனு வரும், போதாதற்கு ஏதேனும் ஒரு தொலைக்காட்சி சானலில் இருந்தே குறிப்பிட்ட நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உங்க நம்பரைக் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்தோம், இவ்வளவு பணம் கட்டுங்கனு சொல்வாங்க.

இரண்டு வருஷம் முன்னாடி ஒருத்தர் ஈரோட்டில் இருந்து வந்திருப்பதாயும், என் பேரில் அவரோட அக்கா இருந்ததாயும் சொல்லி மகள் கல்யாணத்திற்குப் பண உதவி கேட்டார். அவர் வரமாட்டாராம், அவர் சொல்ற இடத்துக்கு நாம போய்க் கொடுக்கணுமாம். என்னோட பேரே அது இல்லைனு சொல்லிட்டேன்! :)))))))

கீதா சாம்பசிவம் சொன்னது…

அதே ஆசாமி ரேவதிக்கும் தொலைபேசி, அவரோட கணவர் பேரிலே தன் அண்ணா இருந்ததாய்ச் சொல்லி இருக்கார். ஏமாத்தறவங்க நிறைய இருக்காங்க.

LK சொன்னது…

@தெய்வசுகந்தி

நன்றி

LK சொன்னது…

@ஏஞ்சல்

நன்றி

LK சொன்னது…

@சுசி

என் பதிவுக்கும் ஸ்பெயின்ல இறுதி யாரோ வந்திருக்காங்க.. யாருன்னு தெரியலை

LK சொன்னது…

@வானதி
சரிதான்

LK சொன்னது…

@selvaa

sarithaan thambi nandri

LK சொன்னது…

@ராமசாமி


அதேப்போல் எனக்கும் வந்தது நண்பா. nandri

LK சொன்னது…

@கீதா

அவ் இப்படிலாம் நடக்குதா ????

அன்னு சொன்னது…

//If it is too good to be true... then it is not true. right? //

absolutely true...only people should be more prepared and look for cleaner ways to earn money.

Karthinna, this template doesnt look fiendly...am I echoing a smiliar tone or a different I dont know...previous one was better, I wud say. :)

LK சொன்னது…

@அன்னு,

ம்ம். சரி பார்கிறேன். மாலையில் மாற்றி விடுகிறேன்