அக்டோபர் 29, 2010

கால் சென்டர் IX

சென்ற பதிவில் சொல்லி இருக்க வேண்டியது. மறந்து விட்டேன். இப்பொழுது முதலில் அதைப் பார்ப்போம் . வெளிநாட்டு கால்சென்டர்களில் வேலை செய்பவர்கள் பல்வேறு பிரச்சனைகளை எதிர் கொண்டாலும் , ஒரு முக்கியமான விஷயம் அவர்களுக்கு ஆதரவானது. கணிணியில் பிரச்சனை என்று அழைக்கும் வாடிக்கையாளர் ,இவர் சொல்லும் விஷயங்களை அங்கு செய்வார். ஆனால் இந்தியாவில் நிலைமை தலைகீழ் . பெரும்பாலான வாடிக்கையாளர்கள், நாங்கள் சொல்லும் வழிகளை பின்பற்ற தயாராக இருப்பது இல்லை.

ஒரு சில வாடிக்கையாளர்களுக்கு ரிமோட் மூலம் நாங்களே அதை சரி செய்வதாக சொன்னாலும் ,அவர்கள் அதற்கு தயாராக இருப்பது இல்லை. தங்கள் வீட்டிற்க்கு எஞ்சினியர் வந்து சரி செய்ய வேண்டும் அல்லது உடனடியாக தங்கள் பழுதடைந்த பொருள் மாற்றப் படவேண்டும் என்று எண்ணுகின்றனர்.ஆனால் எல்லா நிறுவனங்களும் அத்தகைய வாரண்டி அளிப்பது இல்லை. பொதுவாக ரிப்பேர் வாரன்டியே அதிகம். ஒரு பொருளை வாங்கும் பொழுதே வாரன்டியை பார்த்தால் பின் பிரச்சனை இல்லை. கால் சென்டர்களில் இருப்பவரிடம் சண்டை போட்டு உபயோகம் இல்லை.

இங்கு சில சமயம் சில வேடிக்கையான அழைப்புகள் வரும். உதாரணத்திற்கு , கேரளாவில் இருந்து கேஸ் வரவில்லை என்று அடிக்கடி அழைப்பு வரும். எங்களுக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லாத பொழுது எப்படி இத்தகைய அழைப்புகள் வருகிறது என்று குழம்பினோம்.

இதே போல், இலவச அழைப்புதானே என்று சும்மாவே அழைத்து யாரவது பெண்கள் லைனில் வந்தால் அவர்களிடம் வழியும் விடும் நபர்களும் உண்டு. இந்த மாதிரி நபர்களை சில முறை எச்சரிப்போம். பொதுவாக அதிலேயே அடங்கிவிடுபவர்கள் உண்டு. மீறி மீண்டும் மீண்டும் அழைத்தால், காவல் துறையிடம் புகார் போகும்.

பொதுவாக இந்தியாவில் உள்ள அனைத்து கால்சென்டர்களும் 1-800 என்று துவங்கும். இவ்வாறு துவங்கும் எங்களுக்கு நீங்கள் அழைத்தால் உங்களுக்கு எந்த செலவும் இல்லை. சில கால் சென்டர்கள் 1-860 என்றுத் துவங்கும். இவை இலவச சேவை எண்கள் அல்ல. சாதாரணமான அழைப்பை போலவே இவை கருதப்படும். உங்கள் அழைப்பு கட்டண அழைப்பே .

ஒரு வருடம் முன்பு வரை, ஒரு தொலைத் தொடர்பு நிறுவனம் கொடுக்கும் இலவச எண்ணை மற்றொரு தொலைத்தொடர்பு நிறுவனத்தின் தொலைபேசியில் இருந்து அழைக்க முடியாது. கொஞ்சம் விளக்கமாக சொல்வதாக இருந்தால், 1-800-425-4535 இது பி எஸ் என் எல் எண். இதை ஏர்டெல் ,ரிலையன்ஸ் போன்ற நிறுவன போன்களில் இருந்தும், அலைபேசிகளில் இருந்தும் தொடர்புக் கொள்ள முடியாத நிலை இருந்தது. இப்பொழுது அவை சரிசெய்யப் பட்டுவிட்டது. எந்த அலைப் பேசியில் இருந்தும் எந்த கால் சென்டரையும் (1-800) அழைக்கலாம் என்ற நிலை உள்ளது இப்பொழுது.

தொடரும் ....

அன்புடன் எல்கே

24 கருத்துகள்:

புவனேஸ்வரி ராமநாதன் சொன்னது…

1-860 பற்றிய தகவல் இப்பொழுது தான் அறிந்துகொண்டேன். நன்றி.

அருண் பிரசாத் சொன்னது…

நல்லா போகுது....

Balaji saravana சொன்னது…

நல்ல தகவல் LK
நன்றி!

Chitra சொன்னது…

இதே போல், இலவச அழைப்புதானே என்று சும்மாவே அழைத்து யாரவது பெண்கள் லைனில் வந்தால் அவர்களிடம் வழியும் விடும் நபர்களும் உண்டு.

....என்ன கொடுமைங்க இது! அவ்வ்வ்....

வடுவூர் குமார் சொன்னது…

இவை இலவச சேவை எங்கள் அல்ல
எண்கள் என்று இருக்கவேண்டும்.

அருண் கோபால் சொன்னது…

பயனுள்ள தகவல்கள், மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க மிக உதவிக இது இருக்கும் என்று நம்புகிறேன்

வித்யா சொன்னது…

Interesting......

வானம்பாடிகள் சொன்னது…

அவசியமான தகவல். 1-800 , 1-860 எல்லாம் யாருக்கு தெரியும். இப்ப தெரிஞ்சது.:)

LK சொன்னது…

@புவனேஸ்வரி

நன்றி

LK சொன்னது…

@அருண்

நன்றி தலை

LK சொன்னது…

@சித்ரா

இப்பொழுது ஓரளவு குறைந்திருக்கிறது

LK சொன்னது…

@பாலாஜி

நன்றி

LK சொன்னது…

@குமார்

நன்றி மாற்றி விட்டேன்

LK சொன்னது…

@அருண் கோபால்

முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

LK சொன்னது…

@வித்யா

நன்றி

LK சொன்னது…

@பாலா சார்

எனக்கும் இந்த விஷயம், உள்ளே நுழைந்தப் பின்தான் தெரியும்.

நித்திலம்-சிப்பிக்குள் முத்து சொன்னது…

நல்ல புதிய தகவல்.........தொடருங்கள் எல்.கே.

தெய்வசுகந்தி சொன்னது…

present sir!

சைவகொத்துப்பரோட்டா சொன்னது…

தகவல்களுக்கு நன்றி கார்த்திக்.

ஸ்ரீராம். சொன்னது…

1 800 - 1860 எண்கள் விவரம், இலவச சேவை விவரம் என்று சில பல தகவல்கள் புதிது. தெரிந்து கொண்டேன். தொடருங்கள்.

சசிகுமார் சொன்னது…

சூப்பர் சார்

தக்குடுபாண்டி சொன்னது…

//கேரளாவில் இருந்து கேஸ் வரவில்லை என்று அடிக்கடி அழைப்பு வரும்// yevloo mukkiyamaana vishayam ithu. ithai pooi vedikkainu solreengaleyy LK!! apparam antha kerala call fulla ungalukku mattumthaan varumnu kelvipatten, unmaiyaa??...:P

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நல்ல தகவல்கள். பகிர்வுக்கு நன்றி நண்பரே.

ஹுஸைனம்மா சொன்னது…

1-860 இலவச சேவையில்லை என்று இப்போத்தான் தெரியும். நன்றி. தொடருங்க...