Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Gradient Skin

Gradient_Skin

இந்த வலைப்பதிவில் தேடு

பிரபலமான இடுகைகள்

Breaking News

latest

பகல் கொள்ளை

பண்டிகை நாட்களில் மட்டுமே சொந்த ஊருக்கு போவோர் அதிகம். சிலருக்கு முன்கூட்டியே விடுமுறை எடுக்க முடியும் அதற்கேற்றார் போல் பஸ்ஸோ,ரயிலோ முன்பத...


பண்டிகை நாட்களில் மட்டுமே சொந்த ஊருக்கு போவோர் அதிகம். சிலருக்கு முன்கூட்டியே விடுமுறை எடுக்க முடியும் அதற்கேற்றார் போல் பஸ்ஸோ,ரயிலோ முன்பதிவு செய்து செல்ல இயலும். சிலருக்கு கிடைக்கும் ஆனால் கிடைக்காது என்பது போன்ற சூழ்நிலை நிலவும். இவர்கள் பாடு திண்டாட்டம்தான்.  முன்கூட்டியே எதுவும் திட்டமிட முடியாது. என் அலுவலகத்திலும் இது போன்ற சூழல் தான். இதுவரை எனக்கு தீபாவளிக்கு முதல்நாள் லீவ் அனுமதி கிடைக்கவில்லை.

வீட்டு தங்கமணியும், ஜூனியரும் இந்தவாரமே செல்வதால், எனக்கு மட்டுமே டிக்கெட் புக் பண்ண வேண்டும். வழக்கம்போல் இணையம் வழியாகப் பண்ணலாம் என்று ரெட்பஸ் தளத்திற்கு சென்றேன். எந்தப் பேருந்திலும் இடம் இல்லை என்று சொன்னது. சரி நேரடியா போய்டலாம் என்று , தனியார் பேருந்து நிலையத்திற்கு சென்றேன். ஒவ்வொரு கம்பெனியாக கேட்டேன். பெரும்பாலானோர் இல்லை என்று சொன்னார்கள். ஒரு தனியார் பேருந்தில் அவர்கள் சொன்ன கட்டணத்தை கேட்டு எனக்கு தலை சுத்தி விட்டது. ரொம்ப கம்மியாதான் கட்டணம் சொன்னார்கள். சாதாரண செமி ஸ்லீப்பர் பஸ் கட்டணம் ரூபாய் 1350. ஏற்காடு  எக்ஸ்ப்ரஸில் முதல் வகுப்புக் கட்டணம் கூட ஆயிரத்துக்கு குறைவுதான்.

சேலத்துக்கு இவ்வளவு கட்டணம் என்றால், எப்பொழுதும் அதிகம் பேர் செல்லும், திருச்சி, மதுரை, கோவை கட்டணம் ??? கண்ணை கட்டுது . என்னதான் அவர்கள் , மற்ற நாட்களில் நஷ்டத்திற்கு ஒட்டுகிறேன் என்று சொன்னாலும் இந்த அளவுக் கட்டணம் ரொம்ப ரொம்ப அதிகம் . அரசாங்க பேருந்தில் சரியான வசதிகள் இல்லை. எப்பொழுது எங்கு நிற்கும் என்றுத் தெரியாத நிலை  . இதனால்தான் மக்கள், தனியார் பேருந்தை நாடுகிறார்கள். அது அவர்களுக்கு வசதியாகப் போகிறது . அரசாங்கம் இதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காதா?

பி,கு : தெரிஞ்ச ஒரு பேருந்து ஓட்டுனர் மூலம் நார்மல் ரேட்டுக்கு டிக்கெட் எடுத்து விட்டேன்


அன்புடன் எல்கே

65 கருத்துகள்

பெயரில்லா சொன்னது…

என்ன சொல்ல LK..
தீபாவளி மாதிரியான பண்டிகைகளுக்கு மக்களுக்கு குதூகலம் வருதோ இல்லையோ, இந்த மாதிரி கொள்ளை கூட்டத்துக்கு குதூகலம் வந்திருது.. :(

Asiya Omar சொன்னது…

நானும் நியுசில் நேற்று பார்த்தேன்,ஒருவர் கட்டுப்படியாகததால் டூ விலரில் சொந்த ஊருக்கு பயணிக்கப்போவதாக கூட சொன்னார்.எப்படி எல்லாம் அலையவிடுறாங்கபா.

புவனேஸ்வரி ராமநாதன் சொன்னது…

அநியாயமா தான் இருக்கு.

சௌந்தர் சொன்னது…

பண்டிகை நேரத்தில் இப்படி செய்வது இவர்களின் வாடிக்கை

வெங்கட் நாகராஜ் சொன்னது…

இது என்னப்பா, சுத்தமான அக்மார்க் கொள்ளையா இருக்கே!

Vidhya Chandrasekaran சொன்னது…

இந்த மாதிரி பண்டிகை நேரத்தில் திண்டிவனம் விழுப்புரம் போன்ற ஊர்களுக்கு செல்லும் ஆட்களின் நிலைமை மிகக் கொடுமை. எதிலும் ஏத்த மாட்டார்கள். அப்படியே ஏத்தினாலும் ஸ்டேஜ் தாண்டி டிக்கெட் எடுக்க வேண்டியிருக்கும்.

அன்புடன் மலிக்கா சொன்னது…

எப்படியெல்லாம் அடிக்கமுடியுமோ அப்படியெல்லாம் கொள்ளையடிங்கிறாங்க! எங்கிருந்துதான் கத்துகின்னு வருவாங்களோ இதெல்லாம்..அநியாயம் பண்ணுறாங்க..

ஸ்ரீ.கிருஷ்ணா சொன்னது…

இதேர்க்கெல்லாம் முடிவே இல்லை யாரும் கண்டுகொள்வதே இல்லை ..அருமையான பகிர்வு

சாந்தி மாரியப்பன் சொன்னது…

பகல் கொள்ளையேதான்..

பவள சங்கரி சொன்னது…

நல்ல வேளை எப்படியோ டிக்கட் கிடைத்ததே......ஹாப்பி தீபாவளி....

Gayathri சொன்னது…

rombha kodumai ithu plane laye 2000ku travel pannalam ipo bus ku ivlova enna kodumai bro ithu?

happy and safe journey sonenu solunga siskum kuttikum

அருண் பிரசாத் சொன்னது…

இதைவிட கொடுமை தீபாவள், பொங்கலுக்கு முந்தின நாள் நடக்கும் பாருங்க... CMBT அதிரும்... எல்லா பஸ்சும் புல்... தொங்கிட்டு கூட போக முடியாது...நான் ஒரு முறை பொங்கலுக்கு ஊருக்கு போகாமலே விட்டு இருக்கேன்

பாலா சொன்னது…

நண்பரே... எல்லா இடத்திலும் இது நடக்கிறது. இதே போல நான் எழுதிய பதிவு இதோ...


http://balapakkangal.blogspot.com/2010/09/blog-post_16.html

Unknown சொன்னது…

முழுக்க உண்மைங்க.. என் ஊருக்கு நார்மலா 425 சார்ஜ் பண்றாங்க.. தீபாவளிக்கு முதல் நாள் போறதுக்கு 900ரூபாய் கேக்கறாங்க..

எல்லா டிராவல்ஸும் இப்படிதான் பண்றாங்க.. :(((

எல் கே சொன்னது…

@பாலாஜி

உண்மை

எல் கே சொன்னது…

@ஆசியா
நானே அப்படி ஒரு கமெண்டை சொல்லி வந்தேன் ஒருவரிடம். ஆனால் டிவியில் வந்தது நானில்லை

எல் கே சொன்னது…

@புவனேஸ்வரி

ஆமாம்

எல் கே சொன்னது…

@சௌந்தர்
அதற்கு ஒரு எல்லை வேண்டும்

எல் கே சொன்னது…

@வெங்கட்
ஆமாம் வெங்கட்

எல் கே சொன்னது…

@வித்யா
அது தனி கொடுமை வித்யா.அரசு பேருந்துகள் கூட நிக்காது

எல் கே சொன்னது…

@மலிக்கா
அரசு கொடுக்கும் தைரியம் தான்

எல் கே சொன்னது…

@புதிய மனிதா
நன்றி

எல் கே சொன்னது…

@சாரல்
நன்றி

எல் கே சொன்னது…

@நித்திலம்
அதை சொல்லுங்கள்

எல் கே சொன்னது…

@காயத்ரி
நன்றி

எல் கே சொன்னது…

@அருண்
அது வாரவாரம் வெள்ளிக்கிழமை நடப்பதுதான்

எல் கே சொன்னது…

@பாலா
பார்க்கிறேன்

@பாபு
கஷ்டம்

தேவன் மாயம் சொன்னது…

உண்மைதான்!பகிர்வுக்கு நன்றி!

NaSo சொன்னது…

சாதாரண நாளிலேயே ஒருமுறை சேலத்திலிருந்து சென்னைக்கு 700 ரூபாய் கேட்டார்கள். இன்னும் ஒருமுறை தீபாவளிக்கு முதல் நாள் இரவு சென்னையிலிருந்து ஈரோட்டுக்கு டபுள் டிக்கெட் போடுவேன் என்றார்கள். ஏனென்றால் பஸ் திரும்பி வரும்போது சும்மா தானே வருது அதை ஈடு கட்டனும்னு சொல்றாங்க.

Unknown சொன்னது…

.அநியாயம்ங்க.இதை சாக்கு வச்சு பயங்கர கொள்ளை அடிக்கறாங்க.
ட்ரைன்ல டிக்கெட் கிடைக்காதவங்க வேற வழியில்லாம போய்தான ஆகணும்.இது அவங்களுக்கு வசதியா போச்சு.

Geetha Sambasivam சொன்னது…

ஒரே வழி எதுக்கும் இருக்கட்டும்னு முன்பதிவு செய்து வச்சுக்கறதுதான்னு தோணுது. ஆனால் கான்சல் பண்ணினால் ரெயிலில் ஏதோகொஞ்சம் குறைச்சுட்டு மிச்சப் பணம் கிடைக்கும். பேருந்தில் கிடைக்குமா தெரியலை. வேறே யாருக்கானும் வேணும்னா அந்த டிக்கெட்டைக் கொடுத்துட்டுப் பணம் வாங்கிக்க வேண்டியதுதான். அநியாயக் கொள்ளையா இருக்கே! :((((((((((

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

நல்லா தெரிஞ்சு வச்சிருக்காங்க... எப்போ எப்படியெல்லாம் பணத்த வசூல் பண்ணலாமுன்னு..

எல் கே சொன்னது…

@தேவன்

நன்றி

எல் கே சொன்னது…

@நாகராஜசோழன்
அடக் கொடுமையே

எல் கே சொன்னது…

@ஜிஜி
உண்மைதான்

எல் கே சொன்னது…

@கீதா

மாமி, இந்த மாதிரி சமயத்தில் கேன்சல் செய்ய மாட்டார்கள் செய்தாலும் பணம் கிடைக்காது. இதை புக் பண்ணும் சமயத்தில் சொல்லிவிடுவார்கள். இன்னும் எனக்கு லீவ் கன்பார்ம் ஆக வில்லை. ஆனாலும் புக் பண்ணி இருக்கிறேன்

எல் கே சொன்னது…

@வெறும்பய
ஆமாம்

சைவகொத்துப்பரோட்டா சொன்னது…

பகல் கொள்ளையாவுல இருக்கு.

Ravi kumar Karunanithi சொன்னது…

unmaidhan.. idhu pagal kollai mattu alla. valipparium kooda.
aniyayam panuranga pa. idhai government'm paarthutu summa irukkudhu. so sad

ஸ்ரீராம். சொன்னது…

ரொம்ப அநியாயம். அரசாங்கம் தீபாவளி முடிந்ததும் இதன் மேல் நடவடிக்கை எடுக்க ஆரம்பித்து விடும்.

R.பூபாலன் சொன்னது…

எனக்கு ஒரு டிக்கட் கிடைக்குமா

சுந்தரா சொன்னது…

வருஷாவருஷம் இதேதான் நடக்குது.ஆனா, இதை கவனிச்சு சரிபண்ண சம்பந்தப்பட்ட துறைக்கு முடியல. என்னசொல்ல...தீபாவளி வசூல்!!!

தக்குடு சொன்னது…

தனியார் பஸ் காராளுக்கு பம்பர் தீபாவளிதான் அப்போ!..:(

//தெரிஞ்ச ஒரு பேருந்து ஓட்டுனர் மூலம் நார்மல் ரேட்டுக்கு டிக்கெட் எடுத்து விட்டேன்// அதானே!!..:)

எல் கே சொன்னது…

@சை.கொ.ப

ஆமாம்

எல் கே சொன்னது…

@ரவி
அவர்களுக்கு சூட்கேஸ் போய்டும்

எல் கே சொன்னது…

@ஸ்ரீராம்
உண்மைதான் அண்ணா

எல் கே சொன்னது…

@பூபாலன்
கஷ்டம் நண்பரே

எல் கே சொன்னது…

@சுந்தரா
அவர்களுக்கு சூட்கேஸ் போய்டும்

Thenammai Lakshmanan சொன்னது…

ஆமாம் கார்த்திக் தனியார் பேருந்து கட்டணம் கொள்ளைதான்

dheva சொன்னது…

விழாக்காலங்களில் இப்படி பேருந்து கட்டணங்கள் வசூலிப்பது கண்டிக்கவேண்டிய ஒன்று... அரசு இதை சீர் படுத்தினால் மகிழ்ச்சிதான்...!

மேலும் அரசுப் பேருந்துகள் எல்லாம் இப்பொது நன்றாகத்தானே இயங்குகின்றன பாஸ்...! I am not sure .. now wht's happening, but i hope they did come up with good busses... too....!

ஜெயந்தி சொன்னது…

நாங்க ஒருமுறை கோயம்புத்தூரிலிருந்து 600 ரூபாய் கொடுத்து மினி வேன் கால் வைக்க இடமில்லாமல் கால் முன்னால் சீட்டில் முட்டிக்கொண்டு சிரமப்பட்டு வந்து சேர்ந்தோம். அது பெரிய பண்டிகை நாள்கூட இல்லை. என்ன விசேஷமென்று மரந்துவிட்டது.

Menaga Sathia சொன்னது…

பகல் கொள்ளை...

எல் கே சொன்னது…

@தேனம்மை
என்ன செய்நன? நம் அவசரம்/அவசியம் அவர்களுக்கு சாதகம்

எல் கே சொன்னது…

@தேவா
இல்லை தேவா. அதெல்லாம் அவை வந்தப் புதிதில். இப்பொழுது அவை எந்த இடத்தில பழுதடைந்து நிற்கும் என்றுத் தெரியாது.

எல் கே சொன்னது…

@ஜெயந்தி

எதாவது முஹூர்த்த நாளாக இருக்கலாம்

எல் கே சொன்னது…

@மேனகா
ஆமாம்

Nithu Bala சொன்னது…

enna aniyayama irukku...

எஸ்.கே சொன்னது…

அந்தக் கொடுமையை ஏன் கேட்கிறீங்க! பயங்கரமா கொள்ளை அடிக்கிறாங்க1

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) சொன்னது…

Oh god... Rs.1350 for a bus ticket.... definitely pagal kollai thaan...

எல் கே சொன்னது…

@தக்குடு
ஆமாம்

எல் கே சொன்னது…

@நிது

ஆமாம் என்ன பண்ண

எல் கே சொன்னது…

@எஸ்கே

கொடுமைதான் சார்

எல் கே சொன்னது…

@புவனி

உனக்கென்ன ப்ளைட்ல பறந்து போய்டுவா

vanathy சொன்னது…

1350 is too much. Are you going to your home town or not???

எல் கே சொன்னது…

@வானதி

இப்பொழுதைய நிலவரப்படி போகிறேன்.