Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Gradient Skin

Gradient_Skin

இந்த வலைப்பதிவில் தேடு

பிரபலமான இடுகைகள்

Breaking News

latest

காமென்வெல்த் விளையாட்டு போட்டிகள் - ஒரு பார்வை

ஒரு வழியா காமென்வெல்த் விளையாட்டு போட்டிகள் முடிஞ்சிடிச்சு. ஆரம்பத்தில் இருந்த பிரச்சனைகள் சரி செய்யப்பட்டு மிக அருமையாக நடந்தது . அதில் எந்...

ஒரு வழியா காமென்வெல்த் விளையாட்டு போட்டிகள் முடிஞ்சிடிச்சு. ஆரம்பத்தில் இருந்த பிரச்சனைகள் சரி செய்யப்பட்டு மிக அருமையாக நடந்தது . அதில் எந்தவித சந்தேகமும் இல்லை. ஆனால் , ஒரு சில நிகழ்வுகள் இந்த மாதிரியான போட்டிகளை நடத்த இந்தியா தயாராக உள்ளதா என்ற சந்தேகத்தை எழுப்புகின்றன .அவை என்ன என்பதை பார்ப்போம்.

எந்த ஒரு விளையாட்டுப் போட்டியாய் இருந்தாலும் , நேரில் பார்ப்போரை விட தொலைக்காட்சியில் பார்ப்போர் இன்று அதிகம். அவர்களுக்கு நல்ல ஒளிபரப்பு கிடைத்ததா என்றால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். தூர்தர்ஷனின் அனுபவின்மை நன்றாக வெளிப்பட்டது. பல போட்டிகள் நடந்துகொண்டிருந்த பொழுதே நடுவில் வேறு போட்டிகளுக்கு மாறுவது, சரியான வர்ணிப்பாளர் இல்லாதது போன்றவை நன்றாக தெரிந்தது. தூர்தர்ஷனுக்கு பல சேனல்கள் உள்ளன, அவற்றை சரியாக உபயோகித்து இருக்கலாம்.

அடுத்தது, இன்று ஆன்லைனில் போட்டிகளின் நிலவரத்தை பார்ப்போரும் அதிகம். ஆனால், இந்தப் போட்டிகளுக்கான அதிகாரப் பூர்வ இணையத்தளம், தூங்கி வழிந்தது . முதல் நாள் மதியம் நடைப்பெற்ற போட்டிக்கான முடிவுகள் அடுத்தநாள் மதியமே அங்கு பதியப் பட்டது. மேலும்,ஸ்கோர் நிலவரம் சரியாக அப்டேட் பண்ணப் படவில்லை. உதாரணத்திற்கு ,சமீபத்தில் நடைபெற்ற டேவிஸ் கப் போட்டிகளின் ஸ்கோரை நான் அதன் இணையத் தளத்தில்தான் பார்த்துக் கொண்டிருதேன். ஆனால் காமன்வெல்த் போட்டிகளின் பொழுது அவ்வாறு எந்த ஒரு விளையாட்டுக்கும் பார்க்க இயலவில்லை. ஏனென்றால் அப்படி ஒரு ஏற்பாட்டையே , போட்டி அமைப்பாளர்கள் செய்யவில்லை. இத்தனைக்கும், தகவல் தொழில் நுட்பத்தில் இந்தியா முன்னணியில் உள்ளது .


அடுத்தது, போட்டிகளில் வாலண்டியர்களாக பங்கேற்றியவர்கள் செய்த கூத்துகள். வாலண்டியராக பணியாற்ற விருப்பம் தெரிவித்தப் பல நபர்கள், அதற்குண்டான, சான்றிதல்களை பெற்றுக் கொண்டு ,போட்டிகள் நடக்கும் இடத்தின் அருகே கூட வரவில்லையாம். வந்தவர்களும், விளையாட்டு வீரர்கள் கிளம்பியவுடன் அங்கிருந்து நழுவி விடுவார்களம். அடுத்த நாள் போட்டிகள் நடத்த அரங்கை சரிப்படுத்த எந்த வித உதவியும் செய்யவில்லையாம். அதேப் போல் எங்கு எந்த போட்டி நடக்கிறது, அங்கு எப்படி செல்வது போன்ற எந்த வித விவரமும் அவர்களிடம் இல்லை. நல்லவேளை, அங்கு காவல் பணியில் இருந்த போலீசார் வந்த ரசிகர்களுக்கு உதவி இருக்கின்றனர்.

இதில்,இந்தியா ஒலிம்பிக் போட்டிகள் நடத்த உரிமை கோரப் போகின்றதாம்.


அன்புடன் எல்கே

35 கருத்துகள்

Chitra சொன்னது…

Happy to see you come back with a punch! :-)

Sriakila சொன்னது…

//இதில்,இந்தியா ஒலிம்பிக் போட்டிகள் நடத்த உரிமை கோரப் போகின்றதாம்//

யோசிக்க‌ வேண்டிய‌ விஷ‌ய‌ம். ஆழ‌மான‌ பார்வை.

புவனேஸ்வரி ராமநாதன் சொன்னது…

இந்த காமன்வெல்த் போட்டியின் மூலம் நிறைய பாடங்கள் கற்றுக்கொண்டிருப்பார்கள் நிர்வாகிகள். எல்லாம் நல்லதற்கே.

SathyaSridhar சொன்னது…

Intha CWG naala India vukku sila ketta peyargal koodave oolal peruchaligal ingathaan niraya paer irukaangannum vetta velicham aaiduchu, Oru periya project vanthathunna atha epdi sirappa arogyama seyyanumnu illama epdi ethula panam oolal pannalaamnu yosikkira arasiyal vaatheenga irukkangannu nalla therinjuttoem.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நடந்து முடிந்து விட்டது....ஒருவழியாக! ஆனாலும் இன்னும் அடித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.... நேற்று கூட விளையாட்டு அரங்கத்தின் வெளியே வைத்திருந்த பூ ஜாடிகளை திருடிய ஒரு வழக்கறிஞர் பிடிபட்டிருக்கிறார் பாவம்! - பல கோடிகள் சாப்பிட்ட கல்மாடி ஜாலியாக இருக்கிறார்.....

அருண் பிரசாத் சொன்னது…

organising Commitee யே காசை சுரண்ட நினைக்கும் போது மற்றவர்கள் மட்டும் எப்படி ஒழுங்காக இருப்பார்கள்

ஸ்ரீராம். சொன்னது…

அதோட ஊழல்களை வேற கிளற ஆரம்பிச்சிருக்காங்க இப்போ...!

dheva சொன்னது…

பேசுறது மட்டும் பெரிசா பேசுவாங்க நம்ம நாட்டுல..ஆனா இன்டர் நேஷனல் ஸ்டாண்டர்னா கிலோ என்ன விலைன்னு கேப்பாங்க...

ஆதங்கத்தை அருமையா சொல்லியிருக்கீங்க ...!

ஹுஸைனம்மா சொன்னது…

திறமையாளர்கள் நம்மிடம் இருந்தும், சரியான கட்டமைப்பும், சட்டதிட்டங்களும் இல்லாததால் இப்படி இருக்கின்றோம்!!

எல் கே சொன்னது…

@சித்ரா

நன்றிகள் பல

எல் கே சொன்னது…

@ஸ்ரீஅகிலா

நன்றி

எல் கே சொன்னது…

@புவனேஸ்வரி

எங்க கத்துகிட்டாங்க ? அப்படியேதான் இருக்காங்க.,. சில விஷயங்கள் மாறாது

எல் கே சொன்னது…

@சத்யா
நலம்தானே ? உண்மைதான் என்ன பண்ண ??

எல் கே சொன்னது…

@வெங்கட்
எப்பவும் ஐம்பது ருபாய் திருடுபவன் மாட்டுவான். ஐம்பது கோடி சுத்தியவன் தப்பி விடுவான்

எல் கே சொன்னது…

@அருண்
அது சரி

எல் கே சொன்னது…

@ஸ்ரீராம்

ஆமாம்

எல் கே சொன்னது…

@தேவா
உண்மைதான் தேவா.. நாம் ஆதங்கம் மட்டுமே பட முடியும்

எல் கே சொன்னது…

@ஹுசைனம்மா
சரியா சொன்னீங்க. திறமையை வெளிப் படுத்த தகுந்த தளம் வேண்டும்

Gayathri சொன்னது…

ஹாஹா காமன்வெல்த் போட்டிகளில் மானாம் போனது போராதா?? ஒலிம்பிக் வேறயா?? எங்க பொய் முட்டிக்கர்த்து..

Unknown சொன்னது…

அனைத்தும் ஊழல்கள்..

velji சொன்னது…

தேவையான ஆதங்கம்!

சுசி சொன்னது…

//இதில்,இந்தியா ஒலிம்பிக் போட்டிகள் நடத்த உரிமை கோரப் போகின்றதாம். //

ஹஹாஹா..

செல்வா சொன்னது…

அந்த கொடுமைய எங்க போய் சொல்லுறது ..?

Menaga Sathia சொன்னது…

////இதில்,இந்தியா ஒலிம்பிக் போட்டிகள் நடத்த உரிமை கோரப் போகின்றதாம். //
sema comedy...

எல் கே சொன்னது…

@காயத்ரி
இன்னும் கொஞ்சம் மானம் பாக்கி இருக்கு

எல் கே சொன்னது…

@பாபு
ஆமாம்

எல் கே சொன்னது…

@வேல்ஜி
நன்றி

எல் கே சொன்னது…

@சுசி
:)

எல் கே சொன்னது…

@செல்வா
உங்ககிட்டதான் சொல்ல முடியும்

எல் கே சொன்னது…

@மேனகா
அதே அதே

Anisha Yunus சொன்னது…

//இதில்,இந்தியா ஒலிம்பிக் போட்டிகள் நடத்த உரிமை கோரப் போகின்றதாம். //

எவ்வளவோ பண்ணிட்டோம், இதைப் பண்ண மாட்டோமா? (ஹிஹி)

மீண்டும் பழைய டெம்ப்ளேட் மாற்றியதில் சந்தோஷம். படிப்பதற்கு ஏதுவாய் உள்ளதால் சொன்னேன். நன்றிங்ணா. :)

தெய்வசுகந்தி சொன்னது…

//அந்த கொடுமைய எங்க போய் சொல்லுறது ..? // அதேதான்.

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

ஆசை யாரை விட்டது..!!!!

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) சொன்னது…

Nice summary... you could send this to some newspaper...

சாந்தி மாரியப்பன் சொன்னது…

ஒலிம்பிக்?!!!!! ஹையோ.. ஹையோ :-))))))