Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Gradient Skin

Gradient_Skin

இந்த வலைப்பதிவில் தேடு

பிரபலமான இடுகைகள்

Breaking News

latest

நண்பர்கள்

நண்பர்களுக்கு வணக்கம். கடந்த வாரம் நடந்த சிலப் பிரச்சனைகளால் இந்த தளத்தில் நான் தொடர்ந்து எழுத வில்லை. கவிச்சோலை மட்டும் வந்துக் கொண்டிருந...

நண்பர்களுக்கு வணக்கம். கடந்த வாரம் நடந்த சிலப் பிரச்சனைகளால் இந்த தளத்தில் நான் தொடர்ந்து எழுத வில்லை. கவிச்சோலை மட்டும் வந்துக் கொண்டிருந்தது. இந்த வாரம் அதையும் நிறுத்தி இருந்தேன். இனி தொடர்ந்து எழுத வேண்டாம் என்றும் முடிவு பண்ணி இருந்தேன். காரணம் சொல்லாமல் நிறுத்தியது தவறோ என்று மனதில் பட்டது. அதனால்தான் இந்தப் பதிவை எழுதுகிறேன். இந்தப் பதிவின் காரணமாக சிலரின் நட்பு நின்று போகலாம், சிலருடன் சண்டை வரலாம். அதை பற்றி நான் கவலைப் படும் நிலையில் இல்லை.

நான் கடந்த ஆறு மாதமாகத்தான் அதிகம் எழுதுகிறேன் . பொதுவாக என் மனதில் என்னத் தோன்றுகிறதோ அதை அப்படியே எழுதி விடுவேன். இது எனது பழக்கம். இதில் மட்டுமல்ல எந்த விஷயமாக இருந்தாலும், அது நண்பராக இருந்தாலும், என் மனதில் எது சரி என்றுப் படுகிறதோ அதைத்தான் செய்வேன் சொல்லுவேன். நண்பர் என்பதற்காக நான் அவர்கள் சொல்வது எல்லாம் சரி என்று சொல்ல மாட்டேன். இதனால் நான் இழந்த நட்புகள் அதிகம். அதை பற்றி நான் கவலைப் படுவது இல்லை.

ஆர்குட்டில் ஏற்ப்பட்ட ஒரு சில பிரச்சனைகள் காரணமாக அங்கு நான் செல்வது இல்லை. சிறிது நேரம் கிடைக்கும் பொழுது முகப்புத்தகம்(facebook) செல்வேன். பொதுவாக இந்த மாதிரி சோசியல் நெட்வொர்கிங் பக்கம் செல்வது வாழ்வின் ஓட்டத்தில் சிறிது நேரம் இளைப்பாறுவது போன்றது. ஆனால் , அங்கு நான் என்ன செய்கிறேன் என்ன பேசுகிறேன் யாரிடம் பேசுகிறேன் என்பதை சிலர் பார்த்து அதை தங்கள் நண்பர்களிடம் வேறு மாதிரி பேசுகிறார்கள் என்று எனக்குத் தெரிய வந்த பொழுது மனம் வேதனைகுள்ளானது. அதுவும் அவ்வாறு பேசுவது எனக்கு பழக்கமான நபர்களே என்றபொழுது அதிர்ச்சிகுள்ளானேன்.

இந்தக் காரணத்தால்தான் தொடர்ந்து எழுத வேண்டுமா , இந்த பதிவுலகம், சோசியல் நெட்வொர்கிங் இவையெல்லாம் தேவையா என்ற கேள்வி எழுந்தது. இதைத் தொடர்ந்தே எனது வலைப் பூக்களையும் நீக்கினேன். அந்த சமயத்தில் என் மனதில் எழுந்த கோபம், அதிர்ச்சி போன்றவையே இதற்குக் காரணம். இந்த விஷயங்கள் என்னுடைய நெருங்கிய நண்பர்கள் இருவருக்கு மட்டுமே தெரியும். மற்றவர்களிடம் சொல்லவில்லை.

எல்லோரிடமும் நட்பாக பழக எண்ணுபவன் நான். ஆனால் அதையே தவறாக திரித்து காரணம் கற்பித்துக் கொண்டிருக்கிறார்கள் சிலர். இந்த விஷயத்தை சட்டத்தின் பார்வைக்கு கொண்டு செல்லலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். சைபர் கிரைம் பற்றி அறிந்தவர்களிடம் பேசிக் கொண்டுள்ளேன். மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கலாமா வேண்டாமா என்பதை இன்னும் சில நாட்களில் முடிவு செய்யப் போகிறேன்.

சம்பந்தப் பட்டவர்களின் பெயர்களை நான் இங்கு சொல்லாததற்கு காரணம் ,அவர்கள் இதைப் படித்து திருந்துவார்கள், மீண்டும் இவ்வாறு செய்யமாட்டார்கள் என்ற நம்பிக்கையே.

அன்புடன் எல்கே

57 கருத்துகள்

சுசி சொன்னது…

கார்த்திக்.. என்ன இது.. கடவுளே..

இது தான் எப்போதும் பதிவுலகம் பற்றிய ஒரு பயத்தை குடுக்கிற விஷயம்..

எனக்கு வேற சொல்லத் தெரியலைங்க..

:((((

settaikkaran சொன்னது…

நண்பரே! எனக்கும் இதே சூழல் ஒரு முறை ஏற்பட்டது. உங்களைப் போன்ற நண்பர்களின் உதவி மற்றும் அறிவுரையால் மீண்டும் எழுத ஆரம்பித்தேன். எழுதுங்கள்! மற்றவற்றையும், புறம்பேசுகிறவர்களையும் உதாசீனம் செய்யுங்கள்! இறைவன் துணையிருப்பான்.

Menaga Sathia சொன்னது…

இதுக்கெல்லாம் சோர்ந்து போககூடாது எல்கே!! நீங்கள் பாட்டுக்கு உங்கள் பணியை செய்யுங்கள்,எழுதுங்கள்...

அருண் பிரசாத் சொன்னது…

ஒன்று சொல்வதற்கு இல்லை....


எதையும் யோசித்து செய்யுங்கள்

அருண் பிரசாத் சொன்னது…

இந்த பதிவு எனக்கு பிடிக்கவில்லை

No Vote for you and Negative in Tamilmanam

vanathy சொன்னது…

என்னவோ சொல்றீங்க, எல்கே. யோசித்து செய்யுங்க. பொழுது போக்கு அம்சங்களை விளையாட்டா எடுத்தால் நல்லது. அதை மனதில் போட்டு குழப்பிக் கொள்ளாமல் இருக்கப் பழகினால் நலம். மனசை காயப்படுத்த என்று நிறையப் பேர் இருப்பார்கள். அவர்களை, அவர்களின் வலைப்பூக்களை தவிர்த்து விட்டால் எந்தப் பிரச்சினையும் வராது. நான் பிரச்சினைக்குறிய வலைப்பூக்களை பார்ப்பதே இல்லை என்று கொள்கை வைத்திருக்கிறேன்.

எல் கே சொன்னது…

நண்பர்களுக்கு , நான் கொஞ்சம் தெளிவாக சொல்லவில்லையோ என்று எண்ணுகிறேன். எழுத வேண்டாம் என்று முடிவை உறுதி செய்திருந்தால் இப்படி ஒரு பதிவு வந்திருக்காது,. இது ஒரு விளக்கமே. மேலும் இவ்வாறெல்லாம் நடக்கிறது என்பதை மற்றவர்களும் தெரிந்து கொள்ளவேண்டும் என்பதற்க்காகத்தான் இதை எழுதினேன்

அபி அப்பா சொன்னது…

என்ன இதல்லாம் கார்த்தி! நீங்க ஒரு ஆள் இப்படி கோவிச்சுகிட்டு போயிட்டா எல்லாம் சரியாகிடுமா? என்ன பேச்சு இதல்லாம்? நாலு வருஷம் முன்ன இருந்த மாதிரி பதிவுலகம் இப்ப இல்லை. கூட்டம் அதிகம். அதிகமாக அதிகமாக இப்படி சண்டை எல்லாம் வரத்தான் செய்யும். சமாளிச்சு நின்னு காமிங்க. அதான் திறமை. அதை விட்டுட்டு போகிறேன் என சொல்வதெல்லாம் என்ன பேச்சு?

ஹுஸைனம்மா சொன்னது…

என்ன பிரச்னைன்னே புரியலையே? விளக்கமாச் சொன்னா நாங்களும் பதமா நடந்துப்போம்ல.

மற்றப்டி, எழுதுவது, எழுதாமலிருப்பதும் உங்க விருப்பம்!! எழுதினால் மகிழ்ச்சி.

அமைதி அப்பா சொன்னது…

சம்பந்தப் பட்டவர்களின் பெயர்களை நான் இங்கு சொல்லாததற்கு காரணம் அவர்கள் இதைப் படித்து திருந்துவார்கள், மீண்டும் இவ்வாறு செய்யமாட்டார்கள் என்ற நம்பிக்கையே.//

உங்கள் நம்பிக்கை நிறைவேறும்.
தொடர்ந்து எழுதவும். எதையும் எதிர்பார்க்காமல் உங்களுக்குத் தோன்றுவதை எழுதவும்.

பதிவுலகம் நமக்கு மகிழ்ச்சியைக் கொடுக்க வேண்டுமே தவிர, நமது அமைதியைக் கெடுத்துக் கொள்ளக் கூடாது என்பது எனது எண்ணம்.

சாந்தி மாரியப்பன் சொன்னது…

அபி அப்பாவையும், ஹுஸைனம்மாவையும் வழிமொழியறேன். எழுதறதை தொடர்வது உங்க விருப்பம்... ஆனா, பரிசீலனை செஞ்சா சந்தோஷப்படுவோம்.

பெயரில்லா சொன்னது…

Mrs.Menagasathia said...
//இதுக்கெல்லாம் சோர்ந்து போககூடாது எல்கே!! நீங்கள் பாட்டுக்கு உங்கள் பணியை செய்யுங்கள்,எழுதுங்கள்...//

நானும் இதையே சொல்லிகிறேன் எல்.கே!

Anisha Yunus சொன்னது…

என்னங்ணா எல்லாருடைய வலையிலும் கிட்டத்தட்ட இதே மெஸேஜ்தான். எச்சரிக்கைகளுக்கு நன்றிங்ணா. ஆனால் இப்படி துவண்டு போவது நல்லதல்ல. இதுவும் வாழ்க்கையின் ஒரு படி போலத்தானே சமாளியுங்கள், மறந்து விடுங்கள், மன்னிக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்...நீங்கள் சீனியர், சொல்லி தெரிய வேண்டியதில்லை. இருந்தாலும் மனதில் பட்டதை சொல்கிறேன். நிதானமாக முடிவெடுக்கவும். :)

Chitra சொன்னது…

இதுவும் கடந்து போகும். Be cheerful!

விஷாலி சொன்னது…

என்ன சார் உங்கள போல ஆலலத்தான் என் போன்றவர்கள் எழுத வந்துள்ளோம். உங்களிடம் இருந்து நல்ல பல பதிவுகளை எதிர்பார்க்கும் நட்பு உள்ளம்.
நன்றி

எல் கே சொன்னது…

@சுசி

இது வரை நான் பயந்தது இல்லை. இப்பொழுது மனதில் சின்ன யோசனை வந்துள்ளது

எல் கே சொன்னது…

@சேட்டை

நன்றி நண்பரே

எல் கே சொன்னது…

@மேனகா
நன்றி தொடர்ந்து எழுதுவேன்

எல் கே சொன்னது…

@அருண்
தப்ப புரிஞ்சிகிட்டேன்களே பாஸ்

எல் கே சொன்னது…

@வானதி

உண்மைதான் வானதி.

எல் கே சொன்னது…

@அபி அப்பா
ஏற்க்கனவே நான் விளக்கி விட்டேன்

எல் கே சொன்னது…

@ஹுசைனம்மா

இப்பதான் முகபுத்தகத்துக்கு நுழைஞ்சு இருக்கீங்க. யார் கிட்ட பேசினாலும் ஜாக்கிரதையா இருங்க

எல் கே சொன்னது…

@அமைதி அப்பா
உண்மைதான்..

எல் கே சொன்னது…

@சாரல்

நன் தெளிவா பதிவில் சொல்லாமல் விட்டு விட்டேன். தொடர்ந்து எழுத இருப்பதால் மட்டுமே இதை இங்கு சொன்னேன். உங்களையும் உஷார் படுத்த

எல் கே சொன்னது…

@அன்னு
பொதுவா எதையும் ஜாலிய எடுத்துகிட்டு போய்டுவேன். இந்த முறை முடியவில்லை. மற்றப்படி வேறு ஒன்றும் இல்லை

எல் கே சொன்னது…

@சித்ரா
:))

எல் கே சொன்னது…

@மனசாட்சியே நண்பன்
கண்டிப்பா எழுதறேன் சார்

dheva சொன்னது…

வாழ்க்கையின் பக்கங்களிலும்....பிரபஞ்ச பிரமாண்டத்தின் முன்னாலும் நாமெல்லாம் துரும்புகள் கூட இல்லை...அதை விட...மைக்ரோ லெவல்தான்....

பிரச்சினைகள் என்பவை மாயை....!


எனைக் கேட்டால்......

நிமிர்ந்து நில்...! துணிந்து செல்!

சௌந்தர் சொன்னது…

எந்த விஷயத்தில் தான் பிரச்னை இல்லை. ஏன் சந்தோசமாக இருங்கள்

Asiya Omar சொன்னது…

ஏதோ பொழுது போக்கிற்காகவும்,நல்ல நண்பர்களிடம் பழகும் வாய்ப்பு கிடைக்கிறதே,நிறைய கற்று கொள்ள முடிகிறதே என்று ப்ளாக் வந்தால் இங்கு நடக்கும் போட்டி,பொறாமை மனதிற்கு வருத்தத்தையே தருகிறது.அதன் உச்சகட்டம் தான் வருத்தி சங்கடப்படுத்துவது.இதை நிறைய பார்த்தாச்சு எல்.கே.உங்களுக்கு ஒரு ப்ரேக் தேவைப்பட்டால் எடுத்துக்கொண்டு,திரும்ப எழுத ஆரம்பியுங்க.

பெயரில்லா சொன்னது…

My Piece of advice. Do NOT add any bloggers to your facebook/orkut or any other accounts; no matter how nice they are - just keep them away from those sites. If you want to talk to them, talk via messengers or emails. Do not let them get to access your personal stuff.

Moreover, NEVER exchange photos or phone numbers.

Learn from Narsim's and Punnagai Desam's issues.

Unknown சொன்னது…

தொடர்ந்து எழுதுங்கள் நண்பரே..

Jaleela Kamal சொன்னது…

எல்,கே என்ன ஆச்சு, ஒன்னும் புரியல, ஏன் இப்படி தெரிந்த நண்பர்களே பேச வேண்டும்.
இதற்கெல்லாம் துவண்டு போகலாமா? நீங்கள் எழுதுரது எழுதுங்கல்.
நான் பதிவு போடுவதோடு சரி , நேரமிலாததால் நேரம் கிடைக்கும் போது வந்து முடிந்த வரை ஓவ்வொருத்தருடைய பதிவா பார்த்து பதில் போடுவது.
இது போல் பிரச்சன ஏதும் வருமோன்னு
தான் முகநூல் பக்கமே வருவதில்லை

எல்லோரும் உஷாராக இருப்பது நல்லது,

நல்ல பதிவுகளை போடும் நீங்கள் எல்லாம் மனமுடையக்கூடாது

நீச்சல்காரன் சொன்னது…

கசப்பான நிகழ்வுக்கு எனது வருத்தங்கள்.

Riyas சொன்னது…

எல்.கே நடந்ததை மறந்து தொடர்ந்து எழுதுங்கள்

Gayathri சொன்னது…

anna please konja naal rest eduthukonga.methuva pazhaya lkva vanga..takecare..takerest

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) சொன்னது…

Can I say something? Just ignore...things will get better if you do so... Take care

எல் கே சொன்னது…

@dheva

unmaithaan baas.. nandri

எல் கே சொன்னது…

@சௌந்தர்

ஹ்ம்ம்

எல் கே சொன்னது…

@ஆசியா

நன்றி சகோதரி

எல் கே சொன்னது…

@அனாமிகா

சரியா சொல்லி இருக்காய் அனாமிகா

எல் கே சொன்னது…

@பாபு

நன்றிங்க எழுதுவேன்

எல் கே சொன்னது…

@ஜலீலா

நன்றி சகோ.. சில சமயம் யாரையும் நம்ப முடிவது இல்லை

எல் கே சொன்னது…

@நீச்சல்
:))

எல் கே சொன்னது…

@காயத்ரி

நன்றி காயத்ரி

எல் கே சொன்னது…

@அப்பாவி

ஹ்ம்ம் நன்றி

எல் கே சொன்னது…

@ரியாஸ்

நன்றி

ராம்ஜி_யாஹூ சொன்னது…

cool down

ஸ்ரீராம். சொன்னது…

இந்தப் பதிவை இப்போதுதான் படித்தேன். நல்லவைகளை எடுத்து அல்லாதவைகளை ஒதுக்கி தொடர்ந்து எழுதுங்கள்.

தெய்வசுகந்தி சொன்னது…

//இதுவும் கடந்து போகும். Be cheerful!//

ஹுஸைனம்மா சொன்னது…

// LK said...
@ஹுசைனம்மா
இப்பதான் முகபுத்தகத்துக்கு நுழைஞ்சு இருக்கீங்க. யார் கிட்ட பேசினாலும் ஜாக்கிரதையா இருங்க//

ஃபேஸ்புக் ஐடி மட்டுமே இருக்கிறது; அதில் ஆக்டிவாக நுழையும் எண்ணம் அறவே இல்லை!! :-)))

நிலாமதி சொன்னது…

உள்ளத்தால் நல்லவர்களுக்கு தான் ரொம்பவும் சோதனை வருகிறது .
சோதனைகள் கண்டு வேதனைபடாமல் சாதித்து காட்டுங்கள் நண்பரே.

எல் கே சொன்னது…

@ஸ்ரீராம் அண்ணா

நன்றி அண்ணா

எல் கே சொன்னது…

@சுகந்தி

நன்றி

எல் கே சொன்னது…

@ஹுசைனம்மா

nallathu vara vendaam angu

எல் கே சொன்னது…

@நிலாமதி

நன்றி

அன்புடன் மலிக்கா சொன்னது…

என்னா ஆச்சி சகோ.
ஏன் இப்படி அச்சொ நான் இந்தபக்கம் வந்து நாளானதால் இதைபார்க்கமுடியவில்லை இவ்ளோ நடந்திருக்கா.

பிரச்சனைகளை கண்டு பிண்ணோகி போவது சரியல்ல முன்னோக்கி வாங்க நண்பா.

நாம் நல்லதை நினைத்திருக்கும்போது
பிறரின் குற்றங்கண்களுக்கு நாம் பலியாகிவிடக்கூடாது

எச்சரிக்கை தேவைதான்
அதற்காக துவண்டுவிடவேண்டாம்.

//இப்பதான் முகபுத்தகத்துக்கு நுழைஞ்சு இருக்கீங்க. யார் கிட்ட பேசினாலும் ஜாக்கிரதையா இருங்க..//

அச்சோ இனி கவனமாக இருக்கனும் மிக்க நன்றி சகோ.

மீண்டு வாருங்கள் மீண்டும் வாருங்கள்..