அக்டோபர் 04, 2010

குழு மனப்பான்மை

இப்பொழுதெல்லாம் தனியார் நிறுவனங்களில் குழுவாக சேர்ந்து வேலை செய்வதற்கு அதிக முக்கியத்துவம் தருகிறார்கள். குழுவாக செய்யும் பொழுது எளிதாக இலக்கை அடையலாம் என்பதே அதற்குக் காரணம்.

ஆனால், குழுவாக வேலை செய்வது இங்கே பதிவுலகின் முன்னேற்றத்துக்கு ஒரு பெரிய எதிரியாக இருக்கிறது. தனது நண்பர்களின் பதிவிற்கு சென்று அங்கு ஓட்டு போட்டும், கருத்து தெரிவித்தும் அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் நண்பர்கள் , புதிதாய் நல்ல கருத்துக்களை சொல்லும் பதிவுகளுக்கு ஏன் ஆதரவு தெரிவிப்பது இல்லை ?? தாங்களும் ஒரு நாள் புதிய பதிவராய் ஆதரவு இல்லாமல் இருந்தோம் என்பதை ஏன் மறந்தார்கள்???(இல்லை , வரப்பவே இங்க அவங்களுக்கு ஒரு க்ரூப் இருந்ததா ??)


மொக்கை பதிவுகள், நகைச்சுவை பதிவுகள் தேவைதான், இல்லை என்று சொல்லவில்லை. அதே சமயம் , நல்ல விஷயங்கள் உள்ள பதிவுகளும் தேவை. ஒரே விஷயமே திருப்பி திருப்பி செய்யப் பட்டால் , நாளடைவில் சலித்து விடும் . அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு என்பதை யாரும் மறக்கக் கூடாது.

அடுத்து நான் சொல்ல விரும்புவது , எதாவது ஒரு பதிவிலோ, பின்னூட்டத்திலோ உங்கள் நண்பரை பற்றி எதாவது சொல்லப் பட்டு இருந்தால் முதலில் விஷயம் என்னவென்பதை பாருங்கள். விஷயத்தை அல்லது குறிப்பிட விவகாரத்தை முழுமையாக படிக்காமல் அல்லது புரிந்து கொள்ளாமல் கண்ணை மூடிக்கொண்டு உங்கள் நண்பருக்கு ஆதரவு தெரிவிப்பதை நிறுத்துங்கள்.

கொஞ்சம் விவகாரமான விஷயங்களில், எதிர் பதிவுகள் போடுவதை நிறுத்தினாலே பதிவுலகில் பாதி சண்டைகள் குறைந்து விடும் அல்லது சண்டையே இருக்காது. இரு பதிவர்களுக்கு இடையில் பிரச்சனை என்றால் அவர்களே அதை சரி செய்து கொள்ளுவார்கள். அதை விட்டுவிட்டு பஞ்சாயத்து செய்கிறேன் என்று சொல்லி நடுவில் நுழைந்து பிரச்சனையை பெரிது பண்ணாதீர்கள்.

குழுவாக சேர்ந்து செயல்படுவதால் நன்மைகள் பல உண்டு, மறுக்கவில்லை. அதை நாம் சரியாகப் பயன்படுத்துவோம்.


அன்புடன் எல்கே

54 கருத்துகள்:

Gayathri சொன்னது…

மீ தி பிரஸ்ட் ! ஹாய் !...ரைட் தான்.
ஏன் இப்படி பதிவுலகத்துல சண்டை மண்டை உடையுது?? சண்டைலாம் வேணாம் மக்களே..ஒரு புராவ பறக்க உடுங்கப்பா ...

அருண் பிரசாத் சொன்னது…

@ Gayathri
//மீ தி பிரஸ்ட்//
அய்யோ... இதை போட்டுடீங்களே! LK அண்ணனுக்கு ஒரே விஷயமே திருப்பி திருப்பி செய்யப் பட்டால் , நாளடைவில் சலித்து விடும் ஆச்சே...

போங்க புதுசா எதாவது சொல்லுங்க...

அருண் பிரசாத் சொன்னது…

//புதிதாய் நல்ல கருத்துக்களை சொல்லும் பதிவுகளுக்கு ஏன் ஆதரவு தெரிவிப்பது இல்லை ??//

யாருய்யா அது? LK கவிதைகளுக்கு ஆதரவு தராதது... நீங்க எழுதுங்க LK நாங்க வந்து ஓட்டு + கமெண்ட் போடுறோம்

அருண் பிரசாத் சொன்னது…

//பின்னூட்டத்திலோ உங்கள் நண்பரை பற்றி எதாவது சொல்லப் பட்டு இருந்தால் முதலில் விஷயம் என்னவென்பதை பாருங்கள்.//
step 1:
எல்லாரும் பார்த்துட்டீங்களா

//விஷயத்தை அல்லது குறிப்பிட விவகாரத்தை முழுமையாக படிக்காமல் அல்லது புரிந்து கொள்ளாமல் கண்ணை மூடிக்கொண்டு உங்கள் நண்பருக்கு ஆதரவு தெரிவிப்பதை நிறுத்துங்கள். //
step 2:
புரிஞ்சி கிட்டீங்களா?

step 3:
நானே சொல்லுறேன், ஸ்டார்ட் கும்மி

அருண் பிரசாத் சொன்னது…

@ LK
//கொஞ்சம் விவகாரமான விஷயங்களில், எதிர் பதிவுகள் போடுவதை நிறுத்தினாலே பதிவுலகில் பாதி சண்டைகள் குறைந்து விடும் அல்லது சண்டையே இருக்காது. //

இந்த பதிவு எதிர் பதிவா? இல்லை சும்மா போட்டீங்களா?

இல்ல, ஒரு டவுட்டு அதான் கேட்டேன்

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

@LK

//குழுவாக வேலை செய்வது இங்கே பதிவுலகின் முன்னேற்றத்துக்கு ஒரு பெரிய எதிரியாக இருக்கிறது//

எப்படி?? மத்த பதிவர் நடந்து போற வழில போய் உக்காந்து மறியல் பண்றாங்களா?? இல்லைன அவங்கள் எழுத வேண்டாம் குழுவா போய் மிரட்டராங்களா? அச்சோ எனக்கு புரியவே இல்ல.... ப்ளிஸ் ப்ளிஸ் விளக்குங்க பிரதர்.....

ப.செல்வக்குமார் சொன்னது…

//விஷயத்தை அல்லது குறிப்பிட விவகாரத்தை முழுமையாக படிக்காமல் அல்லது புரிந்து கொள்ளாமல் கண்ணை மூடிக்கொண்டு உங்கள் நண்பருக்கு ஆதரவு தெரிவிப்பதை நிறுத்துங்கள். //

இதனை நானும் வரவேற்கிறேன் .. விஷயம் என்ன என்பதைத் தெரிந்துகொண்டு ஆதரவு தெரிவிப்பதுதான் அவசியம். தனது நண்பர் என்பதற்காக கண் மூடித்தனமாக ஆதரிப்பது அவரது வாழ்க்கைக்கு உதவாது. அதே சமயம் அவரது கருத்துகளை பற்றி குறை கூறும் பொழுது அநாகரீகமாக தெரிவித்திருந்தால் நிச்சயம் எனது நண்பருக்கு ஆதரவு தெரிவிப்பதே எனது முதல் காரியமாக இருக்கும் .. அத விட பதிவுலகம் என்பது நண்பர்களை சம்பாதிப்பதற்கான ஒரு பெரிய ஊடகம் என்பதையும் நினைவில் கொல்ல வேண்டும் .. இங்கே அவரவர்களுக்கு என்று ஒரு பாதை இருக்கின்றது .. அடுத்தவர்களை சொல்லவதை விட எடுத்துக்காட்டாக என்னையே சொல்லலாம் .. " எனக்கு நல்ல விசயங்களை , சீரியசான விசயங்களை எழுதுவது என்பது பிடிக்காத அல்லது தெரியாத ஒன்ன்றாகவே இருக்கிறது .. ஆதலால் நான் மொக்கைப் பதிவுகளை மட்டுமே எழுதுகிறேன் .. அதற்காக நான் நல்ல பதிவுகல்லுக்கு எனது ஆதரவினை அளிக்கத் தவறுவது இல்லை .. அதே சமயம் எதிர்பதிவு போடுவது என்பது அடிக்கடி நிகழ்வதும் அல்ல . பெரும்பாலும் ஒரு பதிவில் இடப்படும் பின்னூட்டங்களை அதிகமானோர் படிக்க இயலாது .. ஆதலால் தங்களது கருத்துக்களை எதிர்பதிவின் வாயிலாக தெரிவிப்பதில் தவறு இருப்பதாக தெரியவில்லை .. அன்புடன் செல்வா..

LK சொன்னது…

@பாண்டியன்

நல்ல பதிவுகளுக்கு ஆதராமல் இருப்பதை சொல்கிறேன்

அருண் பிரசாத் சொன்னது…

//இரு பதிவர்களுக்கு இடையில் பிரச்சனை என்றால் அவர்களே அதை சரி செய்து கொள்ளுவார்கள். அதை விட்டுவிட்டு பஞ்சாயத்து செய்கிறேன் என்று சொல்லி நடுவில் நுழைந்து பிரச்சனையை பெரிது பண்ணாதீர்கள். //

பாவம், சொம்பு தூக்கிட்டு தீர்ப்பு சொல்ல யாராவது வந்தீங்க... உங்களை LK .......

சமாதானபடுத்துவார்

அருண் பிரசாத் சொன்னது…

//அடுத்து நான் சொல்ல விரும்புவது //

நான் எதாவது அரசியல் மாநாட்டுக்கு வந்துட்டேனா?

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

@LK

//நல்ல பதிவுகளுக்கு ஆதராமல் இருப்பதை சொல்கிறேன்//

அதுக்கும் குழுவா இருக்கதுக்கும் என்ன பிரதர் சம்பந்தம்?? ஒரு வேளை குழுவா சேர்ந்து நல்ல பதிவு படிக்காதிங்க திர்மானம் எடுக்கறாங்களா??

அருண் பிரசாத் சொன்னது…

//குழுவாக சேர்ந்து செயல்படுவதால் நன்மைகள் பல உண்டு, மறுக்கவில்லை. அதை நாம் சரியாகப் பயன்படுத்துவோம். //

சரி, LK உங்க குழுவுல சொல்லி நம்ம பக்கம் வந்து ஓட்டு போட சொல்லுங்களேன்...

நானு 2, 3 நல்ல பதிவு போட்டு இருக்கேன்.

ப.செல்வக்குமார் சொன்னது…

//நல்ல பதிவுகளுக்கு ஆதராமல் இருப்பதை சொல்கிறேன்
//

நல்ல பதிவுகளுக்கு ஆதரவு என்றாள் என்ன ..?
vote போடுறோம் , அப்புறம் எங்களுக்கு தெரிஞ்சா கமெண்ட் போடுறோம் ..
மொக்கை பதிவுகளுக்கு ஆதரவு தராங்க அப்படின்னு சொல்லுறீங்க .. எங்க மொக்கை பதிவுக்கு ஆதரவு தராங்க அதுல கமெண்ட்ஸ் தான் அதிகமா இருக்கும் , பதிவுக்கும் கம்மேன்ட்டுக்கும் சம்பந்தமே இருக்காது .. அத பார்த்துட்டு ஆதரவு அப்படின்னு நினைசுக்கறதா ..?
நீங்க sollu றது படி பார்த்தா அங்க கும்மி அடிக்கிறது இல்லை அப்படிங்கிறது மாதிரி தெரியுது .. ?
நாங்க கும்மி அடிச்ச நல்ல பதிவுல வந்து சம்பந்தம் இல்லாம பேசுறானே அப்படின்னு சொல்லுறாங்க .. எங்கள என்னதான் செய்ய சொல்லுறீங்க ...? ஹி ஹி ஹி

LK சொன்னது…

@பாண்டியன்

சொல்ல வந்ததை தெளிவாக புரிந்து கொள்ளுங்கள். குழுவாக சேர்ந்து கும்மி அடிப்பதில் செலவிடும் நேரத்தில் ஒரு நல்ல பதிவிற்கு ஓட்டோ அல்லது கமெண்டோ போடலாம் . இங்கு சொல்லி இருப்பது எனது கருத்துக்கள் மட்டுமே. யாரையும் இப்படித்தான் செய்ய வேண்டும் என்றோ செய்பவர்களுக்கு கண்டனமோ அல்ல. என் ஆதங்கம் மட்டுமே

LK சொன்னது…

@செல்வா
நல்ல பதிவில் போய் என் கும்மி அடிக்கறீங்க. ஒரு ஓட்டு மட்டும் போடலாம்தான ??

ப.செல்வக்குமார் சொன்னது…

//குழுவாக சேர்ந்து கும்மி அடிப்பதில் செலவிடும் நேரத்தில் ஒரு நல்ல பதிவிற்கு ஓட்டோ அல்லது கமெண்டோ போடலாம் . இங்கு சொல்லி இருப்பது எனது கருத்துக்கள் மட்டுமே. //

அப்படின்னா யாரெல்லாம் நல்ல பதிவு எழுதறாங்க அப்படின்னு ஒரு லிஸ்ட் கொடுத்திட்டா நாங்க வந்ததும் அதுல vote பண்ணிட்டு அப்புறம் எங்க வேலையா (கும்மி ) தொடருவோம்ல .. எங்களுக்கும் அந்த பதிவருக்கும் சம்பந்தமே இல்லாம இருக்கும் போது நாங்க எப்படி அவுங்களுக்கு உதவ முடியும் .. அதே மாதிரி நாங்க எல்லா மொக்கை பதிவுகளுக்கும் போறது இல்லையே .? எல்லா மொக்கை பதிவுகளுக்கும் ஆதரவு தரது இல்லையே ..? ஏன்னா எவ்ளோ ப்ளாக் இருக்கு ..? அது எல்லாத்துலயும் போய் ஆதரவு தரமுடியுமா என்ன ..?

LK சொன்னது…

சம்பந்தம் இருந்த மட்டும்தான் ஒரு பதிவுக்கு நீங்க ஆதரவு தருவீங்க?? அதுதான் தப்புன்னு சொல்றேன். ஏன் தெரியாத ஒரு பதிவுக்கு ஓட்டு போட மாட்டீங்க ?? கும்மி அடிக்கற நேரத்துல திரட்டிகளில் பார்த்தால் எத்தனையோ நல்ல பதிவுகள் ஓட்டு இல்லாமல் தூங்குவது தெரியும்.

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

@LK

//சொல்ல வந்ததை தெளிவாக புரிந்து கொள்ளுங்கள். குழுவாக சேர்ந்து கும்மி அடிப்பதில் செலவிடும் நேரத்தில் ஒரு நல்ல பதிவிற்கு ஓட்டோ அல்லது கமெண்டோ போடலாம் .//

என்னா LK சார் இப்படி சொல்லிட்டிங்க? பிடிச்சா போட போராங்க. அது அவங்க இஷ்டம். என் கும்மி அடிக்கிறாங்க கும்மி அடிக்கிறாங்க சொல்லி சண்டை போடறிங்க?? உங்களுக்கு பிடிச்சா ஊருக்கே பிடிக்கனுமா?? உங்க பார்வை வேற மத்தவங்க பார்வை வேற இல்லையா?? கும்மி அடிக்கிறவங்கள தவிற மத்தவங்க எல்லாம் இண்டிலில வர எல்லா நல்ல பதிவும் படிச்சி ஓட்டு & கமெண்ட் போடறாங்களா??

LK சொன்னது…

@பாண்டியன்

நான் ஏற்கனவே தெளிவா சொல்லி இருக்கேன். உங்களை யாரும் வற்புறுத்தவில்லை , . உங்களுக்குப் பிடிக்காட்டி இடத்தை காலி பண்ணுங்க..

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

@LK

//நான் ஏற்கனவே தெளிவா சொல்லி இருக்கேன். உங்களை யாரும் வற்புறுத்தவில்லை , . உங்களுக்குப் பிடிக்காட்டி இடத்தை காலி பண்ணுங்க..//

சாரி LK சார். நீங்க உங்கள அதரிச்சி கமெண்ட் போட்டா மட்டும் தான் சந்தேஷ்படுவிங்க எனக்கு தெரியாது. பதிவுல ஒரு முஸ்கி சேருங்க. எனக்கு ஆதரவு தறுபவர்கள் மட்டும் என் பதிவை படிக்கவும் சொல்லி. அதனால தான் சொல்வாக்கு தெளிவா பதில் சொன்னிங்க போல. கமெண்ட் போட வேண்டாம் ஓட்டு போடலாம் இல்லைனு. செல்வா ஓட்டு போட்டு வாப்பா!!! சார் கேள்வி கேட்ட கோவ படராங்க.

LK சொன்னது…

@பாண்டியன்

கோபத்தில் தவறு செய்கிறீர்கள். தெளிவா படிங்க என்ன சொல்லி இருக்கேன்னு.

// இங்கு சொல்லி இருப்பது எனது கருத்துக்கள் மட்டுமே. யாரையும் இப்படித்தான் செய்ய வேண்டும் என்றோ செய்பவர்களுக்கு கண்டனமோ அல்ல. என் ஆதங்கம் மட்டுமே
///

இப்படி சொன்னப்புறமும் நீங்க
//என் கும்மி அடிக்கிறாங்க கும்மி அடிக்கிறாங்க சொல்லி சண்டை போடறிங்க?? உங்களுக்கு பிடிச்சா ஊருக்கே பிடிக்கனுமா?//

இதை சொன்னா யார இருந்தாலும் கோபம்தான் வரும். மட்டுறுத்தல் நான் வைத்தது சிலர் போடும் அநாகரீக பின்னூட்டங்களை தவிர்க்கவே. இது வரையிலும் எனக்கு எதிராக திட்டி வரும் பின்னூடங்களையும் நான் அனுமதித்து உள்ளேன். நான் சண்டை போடுகிறேன் என்று சொன்ன முதல் நபர் நீங்கள்தான். அதற்கு நன்றி

வெறும்பய சொன்னது…

உண்மை தான்.. பதிவுலகிற்கு புதிதாக வரும் போது அனைவருக்கும் ஒரு நிலை தான்... ஆனால் பத்து பேருக்கு தெரிந்த ஆளாக மாறியவுடன் வந்த பாதையை மறந்து விடுகிறார்கள்...

சுசி சொன்னது…

உள்ளேன் ஐயா..

(அப்புறம் உங்கள நான் ஒரு தொடர் பதிவுக்கு கூப்பிட்டேனே??
எழுதினிங்களா??
இல்லை எழுதினதை நான் படிக்கலையா??)

LK சொன்னது…

@சுசி

மறக்கலியா நீங்க ?? சீக்கிரம் எழுதறேன்

அபி அப்பா சொன்னது…

இருங்க ஒரு ஓட்டு போட்டுட்டு போறேன். என் பஸ்ல,ட்விட்டர்ல, பேஸ்புக்ல லிங் அனுப்பிட்டு வர்ரேன். இப்ப டைம் இல்லை பின்ன வந்து படிக்கிறேன்!

ஆன்லைன்ல நம்ம பிரண்ட்ஸ் எல்லார் கிட்டயும் தட்டிட்டேன் இந்த லிங்கை. அவங்க மீதி கும்மிய பார்த்துப்பாங்க. பதிவை டைம் கிடைக்கும் போது படிச்சுக்கறேன். பை பை சீ யூ!

அபி அப்பா சொன்னது…

என்னது பதிவே இதைப்பத்தி தானா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. அப்ப நான் இதுக்கு முன்னே போட்ட கும்மியை அனானியாக்கிடவும்!

சைவகொத்துப்பரோட்டா சொன்னது…

படித்தேன் கார்த்திக்.

vanathy சொன்னது…

நல்ல பதிவு.

நீச்சல்காரன் சொன்னது…

//விஷயத்தை அல்லது குறிப்பிட விவகாரத்தை முழுமையாக படிக்காமல் அல்லது புரிந்து கொள்ளாமல் கண்ணை மூடிக்கொண்டு உங்கள் நண்பருக்கு ஆதரவு தெரிவிப்பதை நிறுத்துங்கள்//
இந்த விஷயத்தில் கண்ணை மூடிக்கொண்டு உங்களுக்கு ஆதரவு.

LK சொன்னது…

@காயத்ரி

பறக்க விடலாம் g3

LK சொன்னது…

@அருண்
எலேய் என்ன ரத்த பூமில காமெடி பண்ணிக்கிட்டு

LK சொன்னது…

@அபி அப்பா

ஏன் இந்தக் கொலை வெறி

LK சொன்னது…

@நீச்சல்காரன்

நன்றி சார்

LK சொன்னது…

@வாணி

நன்றிங்க

LK சொன்னது…

@சை.கொ. ப

நன்றி அண்ணன்

LK சொன்னது…

@வெறும்பய

நன்றி தம்பி.. ஒரு சிலர் வெளிப்படையாக இதை பேசக் கூட யோசிக்கின்றனர் ... எல்லாம் இரட்டை நாக்குகள் உடையவர்களாய்

வானம்பாடிகள் சொன்னது…

நல்ல விஷயம்தான் எல்.கே. ஆனா ஒரு விஷயம் புரிஞ்சிக்கணும். பின்னூட்டமோ அல்லது ஓட்டோ அல்லது ரெண்டுமோ போடுறவங்கள விட படிப்பவர்கள் அதிகம். மத்தபடி குழுன்னு யாரும் அமைச்சுக்கறதா நான் நினைக்கல. நீங்க வந்து பின்னூட்டம் போட்டா ஆஹா புதுசா யாருன்னு உங்களுக்கு பதிவிருக்கான்னு பார்த்து, நல்லா இருந்தா பாராட்டி, குறையிருந்தா சொல்லி பின்னூட்டம் போடும்போது ஒரு நட்பு ஏற்படுவது இயற்கையே. ஆனா, நீ ஓட்டு போடலை, நானும் போடமாட்டேன், நீ பின்னூட்டம் போடுறதில்லை நானும் போடமாட்டேன்னு இருக்கிறது தவறு. அதை விட, மொய் பின்னூட்டம் :))

LK சொன்னது…

@பாலா சார்

சார் உங்க அளவுக்கு எனக்கு அனுபவம் இல்லை.. என்னுடைய ஆதங்கமே , பல நல்ல பதிவுகளுக்கு சரியான ஆதரவு இல்லை என்பதே... வேறு ஒன்றும் இல்லை

அப்பாவி தங்கமணி சொன்னது…

Well said. Nice post

தக்குடுபாண்டி சொன்னது…

//கொஞ்சம் விவகாரமான விஷயங்களில், எதிர் பதிவுகள் போடுவதை நிறுத்தினாலே பதிவுலகில் பாதி சண்டைகள் குறைந்து விடும் அல்லது சண்டையே இருக்காது//

அதாவது, ஒரு விஷயத்தை செய்யாதீர்கள்!னு பொதுவா சொன்னா, உடனே 'அதை தான் செய்வேன்!'னு நம்பளை சொன்ன மாதிரி முதல் ஆளா ஒரு எதிர் பதிவு & எல்லாரும் இதே மாதிரி செய்ங்க!னு ஒரு டெம்ளேடும் போட்டு சண்டையை பெரிசாக்க கூடாது!னு சொல்றீங்க இல்லையா? நல்ல கருத்து தான்...:) யாருப்பா அங்க? கோபமா இருக்கும் நம்ப LK சாருக்கு ஒரு ஜோடா ஒடச்சு கொண்டு வாங்கப்பா....:)

கண்ணகி சொன்னது…

நல்லா சொன்னீங்க..

பயணமும் எண்ணங்களும் சொன்னது…

நல்ல கருத்தே..

LK சொன்னது…

@பயணமும் எண்ணங்களும்

பின்னூட்டத்தில் பதிவிற்கு சம்பந்தமான கருத்தை மட்டும் சொல்லவும்

கீதா சாம்பசிவம் சொன்னது…

என்ன ஆச்சு?? ரொம்ப நாள் கழிச்சு வந்தா ஜூடு ஆறிப் போயிடுதே! :))))

அருண் பிரசாத் சொன்னது…

ரைட்டு

GEETHA ACHAL சொன்னது…

சரி...சரி...

பெயரில்லா சொன்னது…

இன்றைய டாப் பிரபல தமிழ் blogs களை www.sinhacity.com il வாசியுங்கள்

சுந்தரா சொன்னது…

இது நல்ல பதிவு கார்த்திக் :)

பெயரில்லா சொன்னது…

சரியாக சொன்னீர்கள் நண்பரே..கூட்டணி கட்சிகள் தான் பதிவுலகத்தை ஆட்சி செய்யுது..இருந்தாலும் சுயேச்சையா ஜெயிச்சா அதுக்கு இன்னும் மரியாதை இருக்கும்...

தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது…

நல்ல விஷயம் சொல்லி இருக்கீங்க கார்த்திக்

ஜிஜி சொன்னது…

கருத்து நல்லா இருக்குங்க..
பகிர்வுக்கு நன்றி.

ஸ்ரீராம். சொன்னது…

நல்ல கருத்துதான். ரொம்ப லேட்டா வந்து பார்க்கறேன்.. வானம்பாடிகள் சொல்றதும் சரிதான்.

Matangi Mawley சொன்னது…

romba responsible aa vum, genuine-aavum irunthathu......

பட்டாபட்டி.... சொன்னது…

O.k ஆபிஸர்..