செப்டம்பர் 26, 2010

திவ்யாவின் பக்கம் V

கொஞ்ச நாளா திவ்யாவை பத்தி எழுத முடியலை. புதிய வீட்டில் அவளது குறும்புகள் அதிகரித்து விட்டன. அவள் விளையாட இடம் அதிகம் ஆகி விட்டது. எனவே அவளை சமாளிக்கவே நேரம் சரியாக உள்ளது.

முன்பை விட இப்பொழுது அதிகம் பேசுகிறாள். சில வார்த்தைகள் தெளிவாக வரா விட்டாலும், பல வார்த்தைகள் மிக அழகாக சொல்லுகிறாள். அதில் ஒன்று "அப்பா, டாட்டா போலாமா ???". இது இரவு நான் படுக்க போலாம்னு சொல்றப்ப அவள் என்னிடம் கேட்கும் மறு கேள்வி.

அதே போல், உரிமை எடுத்துகொள்வதும் அதிகம் ஆகி விட்டது. பக்கத்து வீட்டு குழந்தைகள் எதையும் நாங்கள் எடுத்துக் கொள்ளக் கூடாது. அதுவும் குறிப்பாய், அவளது மாமா வேறு குழந்தைகளை தூக்கக் கூடாது.

கிருஷ்ணா ஜெயந்திக்கு அடுத்த நாள், சமையல் மேடையில், வாணலியில் என்னை கொஞ்சம் மிச்சம் இருந்தது. எனது மனைவி வேறு எதோ வேலை செய்து கொண்டிருக்க, திவ்யா சமையலறையில் நுழைந்து, வாணலியை கீழே இழுத்து எண்ணை முழுவது கொட்டியாச்சு.  நான் வீட்டுக்கு வந்தப் பின் "ஏன்டா இப்படி பண்ண ?" கேள்வி கேட்ட ,"கிச்சா தான் பண்ண சொன்னாநு பதில் வருது .

 இவள் பண்ணும் குறும்பிற்கு சில சமயம் கிச்சா(கிருஷ்ணர்) சில சமயம், அவளது மாமா இருவரும்தான் பொறுப்பேற்க வேண்டுமாம். இப்பவே எப்படி யோசிக்கறா  பாருங்க ??

அதே மாதிரி, விளையாடிகிட்டே இருப்ப, திடீர்னு ஓடி வந்து , பாப்பாக்கு முடியலைப்பா , தூக்கிகோப்பா.. இல்லாட்டி பொம்மைக்கு கால் வலிக்குதுப்பா என்னை தூக்கிகோப்பாநு அடம் பிடிப்பாள். எப்படில்லாம் யோசிக்கறா பாருங்க ..

அன்புடன் எல்கே

24 கருத்துகள்:

துளசி கோபால் சொன்னது…

அருமை. குழந்தைகள் உலகமே வேறு!!!!!

அவள் பெரியவளானதும் இதையெல்லாம் படிக்கச் சொல்லி அவள் முகத்தைப் பார்க்கணும். அது.....

நல்ல சேமிப்பு எல்.கே.

சௌந்தர் சொன்னது…

உங்க குழந்தை ஆச்சே குறும்பு அதிகமா தான் இருக்கும்

siva சொன்னது…

meeeeee the 3rd...

siva சொன்னது…

திடீர்னு ஓடி வந்து , பாப்பாக்கு முடியலைப்பா , தூக்கிகோப்பா.. இல்லாட்டி பொம்மைக்கு கால் வலிக்குதுப்பா என்னை தூக்கிகோப்பாநு அடம் பிடிப்பாள். எப்படில்லாம் யோசிக்கறா பாருங்க ..
.....
eppokooda appdithan nanum pannuven..:)))

கீதா சாம்பசிவம் சொன்னது…

வாணலியை கீழே இழுத்து எண்ணை முழுவது கொட்டியாச்சு.//

By God's Grace, எண்ணெய் சூடு இல்லை! நல்லவேளை, கவனமா இருங்க இரண்டு பேருமே!

குழந்தைகள் குறும்பு அழகுதான். எல்லாம் சேமிச்சு வைங்க. அவ கிட்டேயே பின்னாடி கொடுத்துப் படிச்சுப் பார்க்கச் சொல்லலாம்! :)))))))))

asiya omar சொன்னது…

எல்கேவின் பொண்ணாச்சே ! இப்படி தான் இருப்பா.

Gayathri சொன்னது…

கீதா அவங்க சொன்ன மாதிரி சூட இருதுருந்த அந்த என்னை..பயமா இருக்கு..என் பொன்னும் இப்படித்தான் பண்ற..ஏன்தான் கவனமா இருந்தாலும் பசங்க அசிக்குற லூட்டி கண்டிப்பா தொடரும்..

எல்லாமே கியூட் குறும்புகள்

ஹேமா சொன்னது…

எனக்கும் தெரியும் எல்லாம் கிச்சாதான் பண்ணியிருப்பார் !

திவ்யாம்மா கவனமா இருங்க.ஊற்றின எண்ணெய் சூடாக இருந்திருந்தால் !

ஹுஸைனம்மா சொன்னது…

க்யூட்!!

//ஹேமா said...
திவ்யாம்மா கவனமா இருங்க.ஊற்றின எண்ணெய் சூடாக இருந்திருந்தால்! //

ஆமா.. ரொம்பக் கவனம் தேவை!!

சைவகொத்துப்பரோட்டா சொன்னது…

குழந்தைகள் என்ன செய்தாலும் அழகுதான்!!

வெறும்பய சொன்னது…

குட்டி தேவதைகளின் குறும்புகளை பார்த்துக்கொண்டே இருப்பது கூட தனி சுகம்...

அமைதிச்சாரல் சொன்னது…

செம வாலுதான் போலிருக்கு.. கவனமா இருங்கப்பா, எண்ணெய் சூடா இருந்திருந்தாலோ, அதில் வழுக்கி விழுந்திருந்தாலோ என்ன ஆகியிருக்கும்..

தெய்வசுகந்தி சொன்னது…

ரசிக்க கூடிய குறும்புகள்!!

Mrs.Menagasathia சொன்னது…

சோ ஸ்வீட்!!

இந்த காலத்து பிள்ளைகளாச்சே..திவ்யாம்மா கவனம்..நல்லவேளை எண்ணெய் சூடாக இல்லாததால் தப்பித்தோம்...

அன்புடன் பிரசன்னா சொன்னது…

மழலைகளின் குறும்புகள் என்றாலே அது ஒரு தனி சுகம், என்னதான் தொந்தரவு செய்தாலும் அதை ரசித்துக் கொண்டே இருக்கலாம். அதுவும் உங்க திவ்யம்மாவின் புத்திசாலித்தனமான குறும்பு ரொம்பவே ரசிக்க செய்யுது.

அன்னு சொன்னது…

//அருமை. குழந்தைகள் உலகமே வேறு!!!!!

அவள் பெரியவளானதும் இதையெல்லாம் படிக்கச் சொல்லி அவள் முகத்தைப் பார்க்கணும். அது.....//

repeat!
repeat!!
repeat!!!
Once they get old...they will laugh and we will be in pride as usual :)

angelin சொன்னது…

first thank god for the little clever princess.she is absolutely correct .kichha and mama are responsible.just imagine what wouldve happened if the kharai oil was hot.

சுசி சொன்னது…

கியூட்..

அனுபவிச்சு சேர்த்து வச்சுக்கோங்க.

Chitra சொன்னது…

She is sweet!

Balaji saravana சொன்னது…

செம க்யூட் :)

vanathy சொன்னது…

super & very sweet, LK.

ஜோதிஜி சொன்னது…

வெளியுலக கோபங்கள் வருத்தங்கள் ஏமாற்றங்கள் அத்தனையையும் இந்த குழந்தைகள் உலகம் தான் புதிய பாதைக்கு ஒவ்வொரு நாளும் புத்துணர்வுடன் செலுத்திக் கொண்டு இருக்கிறார்கள்.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

திவ்யா பக்கம் அருமை... நானும் எழுத நினைத்து வைத்திருக்கிறேன்.... நேரம் தான் கிடைக்க வில்லை - அவளுடன் விளையாடுவதிலேயே பாதி நேரம் போய் விடுகிறதே... :)

வெங்கட்.

அப்பாவி தங்கமணி சொன்னது…

வெரி கியுட் திவ்யா... அவ சமத்து தான்... இன்னும் கொஞ்ச நாளுல திவ்யா ஒரு ப்ளாக் ஸ்டார்ட் பண்ணி... டாடி பக்கம் மம்மி பக்கம்னு உங்க தொல்லை பத்தி எல்லாம் எழுத போறா பாரு... ஹா ஹா...

//,"கிச்சா தான் பண்ண சொன்னாநு பதில் வருது//
இதான் சூப்பர்... ஹா ஹா ஹா