செப்டம்பர் 14, 2010

சொந்த மண் V

செவ்வாய்பேட்டையின் வணிகப் பகுதிகளை பார்த்தோம். வெல்ல பஜாரின் முடிவில் அமைத்திருப்பது வண்டிப் பேட்டை. முன்பு வெளியூரில் இருந்து வண்டிக் கட்டிக் கொண்டு வணிகம் செய்வ வருவோ தாங்கள் வண்டிகளை நிறுத்தும் இடமாக இருந்தது. இப்பொழுது லாரிகளும், வேன்களும் நிறுத்தும் இடமாக மாறி விட்டது.

இதை தொடர்ந்து அமைந்திருப்பது, ஒரு காலத்தில் ஊர் பெயர் வரக் காரணமாக இருந்த செவ்வாய் சந்தை நடந்த இடம். இப்பொழுது குடோன்களாக மாறி விட்டது. இன்று பெயரளவிலேயே சந்தை நடை பெறுகிறது வேறு ஒரு இடத்தில் வெறும் துணி சந்தை மட்டும் கூடுகிறது. காலத்தின் ஓட்டத்தில் அழிந்த ஒரு நிகழ்வு இது.

சேலம் நகரத்தில் இருந்து உள் நுழையும் எல்லையில் நின்று நகரை காப்பது மாரியம்மன் என்றால், அதன் மறுபுறம் இருந்து காப்பது காளியம்மன். செவ்வாய்பேட்டையில் இருந்து , கொண்டலாம்பட்டி பைபாஸ் சாலை செல்லும் வழியில் காளியம்மன் கோவில் அமைந்துள்ளது . உள்ளே நுழைந்த உடன், இடது புறம் அரச மரத்து விநாயகரும், அதன் பின் புற்று கோவிலும் உள்ளது. அவர்களை வணங்கி விட்டு உள்நுழைந்தால் காளியம்மன் நடுநாயகமாக வீற்று இருக்கிறாள். பொதுவாக பார்ப்போர் அச்சப் படும் வண்ணம் காளியம்மனின் உருவம் இருக்கும். ஆனால் இங்கு சாந்த ஸ்வரூபியாக அம்மன் இருக்கிறாள். அம்மனின் முக லாவண்யத்தைப் பார்க்க கண் கோடி வேண்டும். அம்மனை வணங்கி விட்டு வெளி வந்தால், தன்னை தேடி வருபவர்களை காக்கும் ராமா பக்தன் ஆஞ்சநேயர் குடி கொண்டிருக்கிறார். இந்தக் கோவில் லீபஜார் வணிக சங்கத்தால் நிர்வகிக்கப் படுகிறது

பஜாருக்கும், காளியம்மன் கோவிலுக்கும் இடைப்பட்ட தூரத்தில், மாத கோவிலும், அதன் அருகே பெருமாள் கோவிலும் அமைந்துள்ளது. காளியம்மன் கோவிலின் பின் பக்கம், நான் படித்த வாசவி பள்ளிக்கூடம் உள்ளது. நான் பயிலும் பொழுது மாரியம்மன் கோவில் அருகே இருந்தது. இப்பொழுது அதை விஸ்தரித்து , மேல்நிலைப்பள்ளியாக மாற்றி இங்கே வந்துவிட்டனர். இதுவும் செவ்வாய்பேட்டை வணிகர்களால் நிர்வகிக்கப் படும் ஒன்றாகும்.

செவ்வாய்பேட்டையில் இருந்து சேலம் ரயில் நிலையம் செல்லும் வழியில் அமைத்து இருப்பது லீ பஜார். அனைத்து விதமான உணவு தான்யங்களும் இங்கு மொத்த விலையில் விற்கப் படுகிறது. இது பொதுவாக, குடோன்கள் அமைந்தப் பகுதி. மிகப் பெரிய பரப்பளவில் அமைத்துள்ளது .

இதன் அருகே, இந்தியன் ஆயில் நிறுவனத்தின் டெப்போ இருந்தது. ஆனால் பத்து வருடங்களுக்கு முன்பு லீபஜரில் ஏற்பட்ட தீ விபத்துக்கு பின் அதை இங்கிருந்து மாற்றி சங்ககிரிக்கு மாற்றி விட்டனர். இப்பொழுது அந்த இடம், மொத்த சரக்கு ஏற்றும் தளமாக ரயில்வே உபயோகிக்கப் படுகிறது.

அடுத்தப் பகுதியில் , சேலத்தில் உள்ள பள்ளிகளை பற்றி பார்ப்போம்

டிஸ்கி : என்னிடம் கைவசம் எந்த போட்டோக்களும் இல்லை. கிடைத்தப் பின் தனியாக அதை போடுகிறேன்




அன்புடன் எல்கே

31 கருத்துகள்:

அருண் பிரசாத் சொன்னது…

பல புதிய கோவில்கள்... நான் அறியாத தகவல்... பகிர்வுக்கு நன்றி LK

ப.செல்வக்குமார் சொன்னது…

//என்னிடம் கைவசம் எந்த போட்டோக்களும் இல்லை. கிடைத்தப் பின் தனியாக அதை போடுகிறேன் //

சரி சரி ..!!

Gayathri சொன்னது…

நீங்கள் உங்க செவ்வைபெட்டையை வர்ணிக்கும் விதம் அருமை..நிறைய மாற்றங்கள் வந்துருக்கு போல..

Kousalya சொன்னது…

ஊர் பற்றி தெரிந்து கொண்டேன்...தொடருங்கள்...

siva சொன்னது…

:)

asiya omar சொன்னது…

தொடருங்க சகோ.வாசித்து வருகிறேன்

வெறும்பய சொன்னது…

சேலத்தில் இத்தனை செய்திகளா... காத்திருக்கிறேன் அடுத்த பகுதிக்கு...

அப்பாவி தங்கமணி சொன்னது…

Nice new details of Salem... good post

Chitra சொன்னது…

புதிய தகவல்கள்...... பகிர்வுக்கு நன்றி.... தொடர்ந்து எழுதுங்க....

சுந்தரா சொன்னது…

சொந்த ஊர்ப் பாசம் ஒவ்வொரு பகுதியிலும் வெளிப்படுகிறது.

தொடர்ந்து சொல்லுங்க.

ஹேமா சொன்னது…

தொடருங்கள்...தொடர்கிறேன் கார்த்திக்.

velji சொன்னது…

good sharing!

வடுவூர் குமார் சொன்னது…

நான் ஒன்னாம்ப்பு வரை இங்கு படித்தேன்.

சுசி சொன்னது…

ஃபோட்டோ பத்தி கேக்க நினைக்க.. சொல்லிட்டிங்க..

Mitr Friend - Bhushavali சொன்னது…

Flashback!!!
New info of some more places in Salem. Will try to visit some day!!!
Guess this waterfalls location!!!
While roaming in Manori Beach

LK சொன்னது…

@அருண்
நன்றி பாஸ்

LK சொன்னது…

@செல்வு
நன்றி

LK சொன்னது…

@காயத்ரி
ஆமாம். நெறைய மாற்றங்கள்

LK சொன்னது…

@கௌசல்யா

:))

LK சொன்னது…

@சிவா
:)

LK சொன்னது…

@ஆசியா
நன்றி

LK சொன்னது…

@வெறும்பய
இன்னும் இருக்கு

LK சொன்னது…

@சித்ரா
நன்றிங்க

LK சொன்னது…

@சுந்தரா
அது இல்லாம எப்படி

LK சொன்னது…

@ஹேமா
நன்றிங்க

LK சொன்னது…

@வேல்ஜி
நன்றிங்க

LK சொன்னது…

@குமார்
எங்கே ??

LK சொன்னது…

@சுசி
தெரியும். நான் கேமரா வாங்கியப் பிறகு இன்னும் செல்லவில்லை. அநேகமாக தீபாவளிக்கு செல்வேன் ...

LK சொன்னது…

@தோழி
நன்றி

சே.குமார் சொன்னது…

ஊர் பற்றி தெரிந்து கொண்டேன்...தொடருங்கள்...

கீதா சாம்பசிவம் சொன்னது…

வெல்ல பஜார் பத்திப் படிக்கும்போதே வெல்ல மணம் வருது! :))))))

@வடுவூர், எந்த வருஷம்?? :)))))))))