Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Gradient Skin

Gradient_Skin

இந்த வலைப்பதிவில் தேடு

பிரபலமான இடுகைகள்

Breaking News

latest

தேடலின் தொடர்ச்சி II

எப்படி பற்று அறுத்தல் பிறவாமையின் முக்கிய நிலையோ அதே போல் , நான் என்ற அகந்தையை நீக்கலும் முக்கியமே. அது என்ன நான் ??? அதை எப்படி நீக்குவது...

எப்படி பற்று அறுத்தல் பிறவாமையின் முக்கிய நிலையோ அதே போல் , நான் என்ற அகந்தையை நீக்கலும் முக்கியமே.

அது என்ன நான் ??? அதை எப்படி நீக்குவது ?? நடக்கும் செயல்கள் என்னால்தான் நடக்கின்றன . நான் இல்லாவிடில் இங்கு எதுவும் நடக்க இயலாது. இந்த வெற்றிக்கு நானே காரணம் என்ற எண்ணம் வரக் கூடாது.

இந்த உலகில் நடக்கும் அனைத்திற்கும் காரணம் இறைவனே. அதனால்தான் "அவனின்றி ஓர் அணுவும் அசையாது" என்று சொல்லுவார்கள்.இதற்கு சிறந்த உதாரணம் "ஹனுமான் ". அவர் தனக்கென்று எந்த பலமும் இருப்பதாக என்றும் எண்ணவில்லை. ராமநாமமே பலத்தை தருவதாகவும், அதுவே வெற்றி பெறுவதாகவும் கருதினார். அதுதான் அவரது புகழுக்கு காரணம்.

பாரத யுத்தத்தின் பொழுது கிருஷ்ணர் சொன்ன கீதையிலும் இதைதான் அவர் சொல்லுவார். அதன் சாரம் நான் என்ற அகந்தையை அழிக்க வேண்டும் என்றே அமைந்திருக்கும் (தவறாக இருந்தால் திருத்தவும் ).

இது தொடர்பாக ஒரு சிறிய கதையை பார்ப்போம். மகாபாரதத்தில் வனவாச சமயத்தில், அர்ஜுனன் தீர்த்த யாத்திரை செல்கிறான். அப்பொழுது ராமேஸ்வரம் வருகிறான். அங்கிருந்த ஹனுமாரிடம் " உங்கள் ராமர் சிறந்த வில்லாளி என்றால், அம்பால் பாலத்தை அமைத்திருக்கலாமே " என்று கேலி பேசுகிறான். அதற்கு அவர் "அப்பா! பலம் வாய்ந்த பலர் நடந்து செல்ல வேண்டுமே , அம்பால் அமைத்த பாலம் எப்படி தாங்கும் " என்று பதில் கேள்வி எழுப்புகிறார்.

"ப்பூ ! இதென்ன பிரமாதம். இப்பொழுது பாருங்கள் . நான் நொடியில் அம்பால் பாலம் அமைக்கிறேன். நீங்களே அதில் நடந்து சென்று சோதியுங்கள் என்று சொல்லி கண்ணிமைக்கும் நேரத்தில், அம்புகளால் கோர்த்து பின்னப் பட்ட பாலம் அமைக்கிறான் . ஹனுமாரும் அதில் நடக்கிறேன் என்று முதலில் தனது கட்டை விரலை மட்டுமே வைக்கிறார் . அவ்வளவுதான் , மொத்த பாலமும் நொறுங்கி விழுகிறது கீழே. பாலம் மட்டுமா நொறுங்கியது , அர்ஜுனனின் அகந்தையும் தான்.

நாம் செய்யும் அனைத்தும் அவனால் செய்யப் பட்டதே. அது போலவே அதன் விளைவுகளும் அவனையே சேரும். அது நல்லதோ கேட்டதோ அது அனைத்தும் அவனுக்கே போய் சேரும்.


போற்றுவார் போற்றலும்,தூற்றுவார் துற்றலும் போகட்டும் கண்ணனுக்கே! என்ற வாக்கியத்துக்கு ஏற்ப நாம் செய்யும் கடமைகளின் பலனை எதிர்பார்க்காமல் நமது பணிகளை தொடர வேண்டும். அவர் பாராட்டவில்லையே,,இவர் திட்டுவரோ என்று எண்ணக் கூடாது.

இங்கு மேற்குறிப்பிட்ட மூன்று நிலைகளும் மிகக் கடினமான ஒன்றாகும். அடுத்தப் பகுதியில் இது தொடர்பாக ஒருவர் கேட்ட சில சந்தேகங்களும் விளக்கங்களும்.

பி.கு : இங்கு எழுதப் படும் எதிலாவது தவறுகள் இருந்தால் சொல்லுங்கள். சரி செய்துக் கொள்கிறேன்.


அன்புடன் எல்கே

33 கருத்துகள்

Gayathri சொன்னது…

நீங்கள் காட்டியிருக்கும் உதாரணங்கள் அருமை..கடுமையான நிலைதான் அது..அடைந்துவிட்டால் வேறு ஏதும் தேவையில்லை

settaikkaran சொன்னது…

நான் என்பது ஆணவத்தின் அடையாளமாக இல்லாமல், தன்னம்பிக்கையின் அளவுகோலாக இருக்கும்வரையில் மனிதனுக்குப் பிரச்சினையில்லை. நல்ல பகிர்வு.

எஸ்.கே சொன்னது…

மிக நல்ல பதிவு.

இளந்தென்றல் சொன்னது…

எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே!!!

நல்லா இருக்கு

அருண் பிரசாத் சொன்னது…

என்னமோ ஆகி போச்சு உங்களுக்கு நல்ல நல்ல பதிவா போடுறீங்க. நல்லா இருங்க :)

சுசி சொன்னது…

நல்ல பதிவு எல்கே.

Chitra சொன்னது…

நான் என்ற அகந்தையை நீக்கலும் முக்கியமே.


......"அழிவுக்கு முன்னானது அகந்தை" - என்று நம் முன்னோர்கள் சரியாக சொல்லி இருக்கிறார்களே!

அண்ணாமலை..!! சொன்னது…

தன்னம்பிக்கை வேண்டும்.அதீத நம்பிக்கையை ஆண்டவனிடம் மட்டுமே வைக்கலாம்!
தங்கள் பதிவுக்கு நன்றிகள்!

Sriakila சொன்னது…

விநாயகருக்கு அடுத்து எனக்கு மிகவும் பிடித்த கடவுள் ஹனுமான்.

அக‌ந்தையுட‌ன் இருக்க‌க்கூடாது என்ப‌த‌ற்கு இது ஒரு ந‌ல்ல‌ க‌தை.

velji சொன்னது…

அகந்தை அதிகமானால் தேடல் கூட குறைந்துவிடும்!

நல்ல பதிவு!

Ananthi (அன்புடன் ஆனந்தி) சொன்னது…

///அருண் பிரசாத் said...
என்னமோ ஆகி போச்சு உங்களுக்கு நல்ல நல்ல பதிவா போடுறீங்க. நல்லா இருங்க :) ///

sameeeeee.... :)

NS Manikandan சொன்னது…

இந்த பதிவு எனக்காகவே எழுதினது போல் உள்ளது.அருமை நண்பரே


உங்கள் பார்வை என் புதிய வலை பதிவுக்கு தேவை
http://nsmanikandan.blogspot.com/
- கலக்கல் கலந்தசாமி

தெய்வசுகந்தி சொன்னது…

நல்ல கருத்துக்கள் கார்த்திக்!!!

நீச்சல்காரன் சொன்னது…

உங்கள் தேடலைப் படித்தப் பிறகும் மனதில் நிற்கிறது.

Unknown சொன்னது…

nalla erukku anna.
migavum piditha udarangal.
nalla pagirvirku
nandrigal.

எல் கே சொன்னது…

@காயத்ரி

நன்றிங்க

எல் கே சொன்னது…

@சேட்டை

உண்மைதான் நண்பரே

எல் கே சொன்னது…

@எஸ்கே
நன்றி

எல் கே சொன்னது…

@இளந்தென்றல்
நன்றி

எல் கே சொன்னது…

@வெறும்பய
நன்றி

எல் கே சொன்னது…

@அருண்
அப்படியா சொல்றீங்க. மாத்திடலாம்

எல் கே சொன்னது…

@சுசி
நன்றி

எல் கே சொன்னது…

@ சித்ரா
ஆமாம் சித்ரா

எல் கே சொன்னது…

@அண்ணாமலை
சரியாக சொன்னீர்கள்

எல் கே சொன்னது…

@ஸ்ரீ அகிலா
நன்றிங்க

எல் கே சொன்னது…

@வேல்ஜி
உண்மைதான்

எல் கே சொன்னது…

@ஆனந்தி
மாத்திடறேன்... விட மாட்டீங்களே

எல் கே சொன்னது…

@கந்தசாமி
அப்படியா. கண்டிப்பா வரேன் சார்

எல் கே சொன்னது…

@தெய்வ சுகந்தி
நலமா ? நன்றிங்க

எல் கே சொன்னது…

@நீச்சல்காரன்
நன்றிங்க

எல் கே சொன்னது…

@சிவா
நன்றி தம்பி

Unknown சொன்னது…

ம்ம்ம்ம்

Geetha Sambasivam சொன்னது…

நல்ல உதாரணங்களோடு கூடிய பதிவு. நல்லா இருக்கு. நான் என்பது அழிந்து நான் யார் என்ற தேடல் வந்துவிட்டால்! எல்லாருக்கும் இது வரணும்! உள்ளே உள்ள ஒளியை உணரணும்!