Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Gradient Skin

Gradient_Skin

இந்த வலைப்பதிவில் தேடு

பிரபலமான இடுகைகள்

Breaking News

latest

தேடலின் தொடர்ச்சி I

நம் வாழ்வே பொதுவாக தேடலை மையமாக வைத்துதான் அமைந்துள்ளது. அனைவரும் பொருளை தேடி ஓடிக்கொண்டே இருக்கிறோம் . நீங்கள் நான் யாரும் இதற்கு விதி விலக...

நம் வாழ்வே பொதுவாக தேடலை மையமாக வைத்துதான் அமைந்துள்ளது. அனைவரும் பொருளை தேடி ஓடிக்கொண்டே இருக்கிறோம் . நீங்கள் நான் யாரும் இதற்கு விதி விலக்கில்லை . நம் முன்னோர்களின் வாழ்கையை பார்த்தால் அவர்களிலும் சிலர் பொருளை தேடி ஓடியவர்கள் இருப்பர்கள். ஆனால் நன்கு கற்றுணர்ந்தோர் பொருளை தேடி ஓடவில்லை. போதுமென்ற மனமே போன் செய்யும் என்று இருப்பதை வைத்து திருப்தியாக இருந்தார்கள். அவர்களும் ஒன்றை தேடி ஓடினர். அது எது அல்லது யார் ?? பரம்பொருளை தேடினர், பிறவாமை வேண்டின் என்ன செய்ய வேண்டுமென்று தேடினர். அதனால் செம்மையான வாழ்வு பெற்றனர்.

நம்மிடம் அனைத்து வசதிகளும் இருக்கலாம். ஆனால் சில தருணங்களில் வெறுமையை நீங்கள் உணரக் கூடும். பலரும் அதை ஒதுக்கி விடுகின்றனர். ஒரு சிலரோ அதைப் பற்றி அப்போதைக்கு சிந்திப்பர் பிறகு மறந்து விடுவர். ஒரு சிலரே அந்த வெறுமைக்கு காரணம் தேடி செல்ல முயல்கின்றனர். அந்த வெறுமை எதனால் உண்டாகிறது ? நம்மிடம்தான் அனைத்து வசதிகளும் உள்ளனவே ?? எதனால் இது ??? நாம் தேடுவது ஸ்தூலப் பொருட்களை. நாம் தேட வேண்டியதோ கண்ணுக்குப் புலப்படாமல் இருக்கும் இறைவனையும் , அதனால் கிடைக்கும் பிறவாமையும்.

பிறவாமை வேண்டுமெனின் என்ன செய்யவேண்டும் ? சிறு பாவமும், அறியாமல் கூடப் பண்ணக் கூடாது. இது முதல் படி. அடுத்தது, பற்று என்பதே இருக்கக் கூடாது. எதன் மீதிலும் பற்று இருக்கக் கூடாது. இதற்க்கு ஒரு உதாரணக் கதை ஒன்று சொல்லுவர்.

யமுனையிலே வெள்ளம் கரை புரண்டு ஓடிக் கொண்டிருக்கிறது . ஒரு கரையில் கிருஷ்ணன் ருக்மணியிடம் பிரசாதத்தை கொடுத்து, மறுகரையில் இருக்கும் துர்வாசரிடம் கொடுத்த வர சொல்கிறார். ருக்மணிக்கோ எப்படி வெள்ளத்தை கடந்து அக்கரை செல்வது என்று கவலை . அதை கிருஷ்ணரிடமே கேட்க அதற்கு அவர் , யமுனை கரையில் சென்று "கிருஷ்ணன் நித்ய பிரம்மச்சாரி என்பது உண்மை எனில் எனக்கு வழி விடு" என்று சொல் என்று சொல்கிறார் . ருக்மணிக்கு மீண்டும் குழப்பம், என்னடா இது, நம்மை கல்யாணம் பண்ணிக்கிட்டு இருகார், அதுமட்டும் இல்லாமல் இன்னும் பலர் இருக்காங்க, அப்படி இருக்க இப்படி சொல்றாரே இவர். அவர்கிட்ட திருப்பி கேள்வி கீக முடியுமா ? அதனால் அமைதியாக யமுனை கரைக்கு சென்று கிருஷ்ணர் சொல்லியவாறு சொல்கிறாள். என்ன ஆச்சர்யம் !, யமுனையும் விலகி வழி விடுகிறது.

ஒரு வழியாக அக்கரைக்கு சென்று பிரசாதத்தை துர்வாசரிடம் கொடுக்கிறாள். அவரும் அதை வாங்கி உண்கிறார். இப்பொழுது திரும்பி செல்லவேண்டுமே . துர்வாசரிடம் கிருஷ்ணரிடம் கேட்ட கேள்வியை கேட்க, அவர் அதற்கு "துர்வாசர் நித்ய உபவாசி (உணவு உட்கொள்ளாமல் இருப்பவர்) என்பது உண்மையெனில் வழிவிடு " என்று சொல் என்கிறார். இப்பொழுதும் மறுபேச்சு பேச முடியவில்லை ருக்மணியால். அவர் சொன்ன வண்ணமே செய்ய ,யமுனை மீண்டும் வழி விடுகிறது.

மீண்டும் கிருஷ்ணரிடம் வந்த ருக்மணிக்கு இன்னும் குழப்பம் நீங்கவில்லை. அவன் எல்லாம் அறிந்த பரம் பொருள் அல்லவா ? அவரே விடை அளிக்கிறார் ," நான் பலரை மணந்தாலும் என் ஆத்மா அதில் ஈடுபடுவதில்லை . அதில் நான் பற்று வைப்பது இல்லை. எனவே நான் நித்ய பிரமச்சாரி. அதே போல் அவர் ஒவ்வொரு வேளையிலும் உணவருந்தினாலும், அவரும் அதில் பற்று வைப்பது இல்லை . எனவே அவர் நித்ய உபவாசி ". அப்பொழுதுதான் ருக்மணிக்கு விவரம் புரிந்தது.

இவ்வாறு பற்று அறுத்தல் என்பது பிறவாமைக்கு முக்கிய அடிப்படை செயல்.

தேடல் தொடரும்....

அன்புடன் எல்கே

40 கருத்துகள்

Vidhoosh சொன்னது…

ரொம்ப நாள் கழித்து உங்களது இன்னொரு நல்ல post. :)

அபி அப்பா சொன்னது…

மூணு தபா படிச்சா ஒரு தடவை புரியுது லைட்டா:-)) நல்லா இருக்கு கார்த்தி!

Gayathri சொன்னது…

ரொம்ப நன்னா இருக்கு ப்ரோ..பற்றற்று இருப்பது சற்று கடினம் தான்.ஆனா அப்படி இருந்துட்டா எந்த பிரச்னையும் இல்லையே வாழ்க்கைல

Shanthi Krishnakumar சொன்னது…

Very good post indeed. We search for materialistic things in the world and do not realise God. in Vaishnava dharma, total surrender to HIM and leaving everything to HIM is very important.

புவனேஸ்வரி ராமநாதன் சொன்னது…

நல்லாயிருக்கு.

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

நல்ல கருத்துள்ள பதிவு.... கதையுடன் கூறிய விதம் அருமை...

எல் கே சொன்னது…

@விதூஷ்
நன்றி

எல் கே சொன்னது…

@அபி அப்பா
அந்த அளவுக்கா எழுதி இருக்கேன் ?? நன்றி

எல் கே சொன்னது…

@காயத்ரி

உண்மைதான். அப்படி இருந்துவிட்டால் பிரச்சனை இல்லை

எல் கே சொன்னது…

@ஷாந்தி
வைணவத்தில், அதுதான் முக்கியமான அடிப்படை , சரிதானே ??

எல் கே சொன்னது…

@புவனேஸ்வரி
வாங்க. ரொம்ப நன்றி

எல் கே சொன்னது…

@வெறும்பய
நன்றி தம்பி

அமைதி அப்பா சொன்னது…

நம் முன்னோர்களின் வாழ்கையை பார்த்தால் அவர்களிலும் சிலர் பொருளை தேடி ஓடியவர்கள் இருப்பர்கள். ஆனால் நன்கு கற்றுணர்ந்தோர் பொருளை தேடி ஓடவில்லை.//

நல்லா சொன்னீங்க. நானும் இதே கருத்தை வேறுவகையில் தெரிவித்துள்ளேன்.

http://amaithiappa.blogspot.com/2010/09/blog-post.html

படித்துக் கருத்தைச் சொல்லவும்.

Asiya Omar சொன்னது…

எல்.கே அறிவார்த்தமாக இருக்கு.

Chitra சொன்னது…

வித்தியாசமான இடுகை. தொடர்ந்து எழுதுங்க....

Geetha Sambasivam சொன்னது…

நல்ல இடுகை. வாழ்த்துகள்.

இளந்தென்றல் சொன்னது…

தேடல் நன்றாக உள்ளது.

Ananthi (அன்புடன் ஆனந்தி) சொன்னது…

////போதுமென்ற மனமே போன் செய்யும் என்று இருப்பதை வைத்து திருப்தியாக இருந்தார்கள்////

அது சரி.. போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து தான் கேள்வி பட்டுருக்கேன்..
எப்போ அது போன் எல்லாம் செய்யுது?? :D :D

Nice post.

ஹேமா சொன்னது…

வாசிக்க சுவாரஸ்யமாய் இருந்தாலும் மறுபிறவி என்று ஒன்று இருப்பதில் சந்தேகம்தான் கார்த்திக் !

சாந்தி மாரியப்பன் சொன்னது…

ரொம்ப நல்லாருக்கு..

velji சொன்னது…

do your duty.don't taste the fruits?!

velji சொன்னது…

do your duty.don't taste the fruits?!

சுசி சொன்னது…

நல்ல பதிவு எல்கே.

பற்றும் பாவமும் விடுறதாஆஆஆ..

vanathy சொன்னது…

present, Sir. mm.. continue.

பெயரில்லா சொன்னது…

நல்லா இருக்கு, அடிக்கடி இந்த மாதிரி சின்ன சின்ன புராண நிகழ்வுகளைச் சொல்லுங்க LK!

dheva சொன்னது…

தேடல் சொல்லிக் கொடுக்கும் எல்லா விஷயத்த்தையும்.....

மீண்டும் பிறவாமை வேண்டும் என்ற நோக்கில் நகர்ந்து கொண்டிருக்கும் மானுடத்தில் அகத்தேட்டை அதுவேதானெனிம் அதில் செலுத்த முடியா எண்ணங்கள் கள்ளப் புலனைந்தின் வழியே பரவி சிதறி தானறயா அவலத்தின் ஜம்பங்களில் நடத்தும் நாடகங்களின் உச்சம்வரை புலப்படமால் மடியும் அவலத்தை என் சொல்வேன்...

பிறவாமை....என்பதில் நின்று சொல்லியிருக்கும் கருத்துக்கள் லெளகீகவாதிகளுக்கு புரியும்படி எளிமையாகவே இருந்தாலும் இதுவும் கடினம் என்று சொல்லும் பொழுது ... இன்னும் எத்தனை பிறவிகள் கடக்கவேண்டும் பரம்பொருளே என்று மனமிறைஞ்சுகிறது.....

தெளிவாக தொடரட்டும் தேடல்கள்....!

எல் கே சொன்னது…

@அமைதி அப்பா
அந்த மனம் வந்துவிட்டால் பிரச்சனைகள் இல்லை

எல் கே சொன்னது…

@ஆசியா
நன்றிங்க

@சித்ரா
நன்றிங்க

எல் கே சொன்னது…

@கீதா மாமி
நன்றி

எல் கே சொன்னது…

@இளம்தென்றல்
நன்றி

எல் கே சொன்னது…

@ஆனந்தி
அவ.. எல்லாம் தமிழ் புலவியா இருக்கீங்க ...நன்றி

எல் கே சொன்னது…

@ஹேமா
இதில் பலருக்கு கருது வேறுபாடு உண்டு

எல் கே சொன்னது…

@வேல்ஜி
அப்படியும் சொல்லலாம்

எல் கே சொன்னது…

@சுசி
ஆமா. ஏன் இப்படி பயப் படறீங்க

எல் கே சொன்னது…

@வாணி
நன்றி

எல் கே சொன்னது…

@சாரல்
நன்றி

எல் கே சொன்னது…

@பாலாஜி
கண்டிப்பா எழுதறேன்

எல் கே சொன்னது…

@தேவா
தனி இடுகையே எழுதி விட்டீங்க.. பல ஜென்மங்கள் எடுக்க வேண்டும். ஆனால் ஒவ்வொரு ஜென்மாவிலும் நமது தேடலை தொடர வேண்டும்

பெயரில்லா சொன்னது…

"சிறு பாவமும், அறியாமல் கூடப் பண்ணக் கூடாது. இது முதல் படி. அடுத்தது, பற்று என்பதே இருக்கக் கூடாது. எதன் மீதிலும் பற்று இருக்கக் கூடாது."

ரொம்ப கஷ்டமான விஷயம் தான் ..

நல்லா இருக்கு கார்த்தி உங்க இந்த" தேடல் "

GEETHA ACHAL சொன்னது…

நல்ல கதை...இதுவரை நான் இதனை கேட்டது கிடையாது...இன்னும் எழுதுங்க...பகிர்வுக்கு நன்றி...