Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Gradient Skin

Gradient_Skin

இந்த வலைப்பதிவில் தேடு

பிரபலமான இடுகைகள்

Breaking News

latest

தேடல்

வாழ்வின்  அர்த்தம் என்ன ?? பிறந்தோம் படித்தோம், வளர்ந்தோம், திருமணம் செய்தோம், பிள்ளைகளை பெற்றோம், அவர்களை வளர்த்து அவர்களுக்கு திருமணம் செ...


வாழ்வின்  அர்த்தம் என்ன ?? பிறந்தோம் படித்தோம், வளர்ந்தோம், திருமணம் செய்தோம், பிள்ளைகளை பெற்றோம், அவர்களை வளர்த்து அவர்களுக்கு திருமணம் செய்தோம், பின் இறப்போம் .. இதுவா வாழ்க்கை ?? இதற்கா நாம் பிறப்பெடுத்தோம் ???

"அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது " என்ற தமிழ் பாட்டியின் வாக்கு இதற்கா சொல்லப் பட்டது ?? இப்படி ஒரு வாழ்க்கை வாழத்தான் பிறக்கிறோமா ?? மேலே சொன்னது வாழ்க்கையின் நோக்கம் இல்லையெனில், வேறு ஏது வாழ்வின் நோக்கம் ???  அந்த நோக்கத்தை அடைவது எவ்வாறு ???

இந்து சனாதன தர்மத்தின் ஒரு முக்கியப் பகுதி பிறவாமை. அதாவது மீள் பிறப்பு வேண்டாமை. நாம் செய்யும் பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப , நமது மறு பிறப்பு அமையும் என்பது இந்து மத நம்பிக்கையாளர்களின் கருத்து. முதலில் நான் என்பது யார் அல்லது ஏது ??? நான் என்பது இந்த உடலா ?? கண்டிப்பாக இந்த உடலாக இருக்க இயலாது . ஏன் என்றால், உடலில் இருந்து உயிர் பிரிந்துடன், உடல் எரிக்கப் பட்டோ இல்லை , புதைக்கப் பட்டோ அழிந்த விடுகிறது .

பின் "நான் " என்பது ஏது ?? இந்த உடலினுள் இருக்கும் ஆன்மாதான் அந்த நான். உடலில் இருந்து உயிர் பிரியும் வேளையில் இந்த ஆன்மாவும் அங்கிருந்து நீங்குகிறது. பின் , அந்த பிறப்பில் அது செய்த பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப அடுத்த உடல் கிடைக்கிறது. 

ஆக, அழியக் கூடிய இந்த உடலுக்கு நாம் செய்யும் அலங்காரங்கள்தான் எத்தனை ? இந்த உடலை திருப்தி படுத்த நாம் செய்யும் காரியங்கள்தான் எத்தனை ?? அதே வேளையில் , அழியாத ஆன்மாவை திருப்தி படுத்த என்ன செய்கிறோம் ??  குறைந்தபட்சம் அதற்க்குண்டான முயற்சியாவது எடுக்கிறோமா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும் . 
மீண்டும் மீண்டும், பாவக் காரியங்கள் செய்து சிற்றின்பத்தில் ஈடுபாடு, பாவ மூடைகளை ஏற்றிக் கொண்டே இருக்கிறோம். அழியக் கூடிய உடலுக்கு மென்மேலும் சிருங்காரம் செய்து கொண்டே போகிறோம் . இதன் விளைவு , அடுத்தப் பிறவி. 

பிறவாமை வேண்டின் என்ன செய்ய வேண்டும். அடுத்த பகுதியில் தொடர்வோம். 

டிஸ்கி : இரண்டு நாள் தொடர்ச்சியாகப் பேருந்துப் பயணம். அப்பொழுது எனது மனதில் தோன்றிய தேடல் இது... உங்களுடைய கருத்துகளையும், ஐயங்களையும் கேளுங்கள். முடிந்த வரை நிவர்த்தி செய்ய முயல்கிறேன்.

அன்புடன் எல்கே

4 கருத்துகள்

எஸ்.கே சொன்னது…

உண்மை. வாழ்க்கையில் இறக்கும் முன் (இறக்கும் தறுவாயில்) நாம் இத்தனை நன்மை செய்திருக்கிறோம். இத்தனை பேருக்கு பயனுள்ளவராக இருந்திருக்கிறோம் என எண்ணிப் பார்க்கும் போது ஏதாவது இருக்க வேண்டும். அப்படி நம் வாழ்க்கை இல்லையென்றால் நம் வாழ்க்கை வீண்தான்

பெயரில்லா சொன்னது…

என்னாச்சு பழைய போஸ்ட் எங்கே ?

நல்லா இருக்கு உங்க தேடல் ..பார்ட் 2 க்கு வெய்டிங்

Gayathri சொன்னது…

ஆஹா போஸ்ட காகா தூக்கினு போச்சா

Chitra சொன்னது…

இரண்டு நாள் தொடர்ச்சியாகப் பேருந்துப் பயணம். அப்பொழுது எனது மனதில் தோன்றிய தேடல் இது..


...... பேருந்து பயணம் கஷ்டமாக இருக்கும். இந்த அளவுக்கு, உங்களை தேட வைத்து விட்டதே! ம்ம்ம்ம்......