Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Gradient Skin

Gradient_Skin

இந்த வலைப்பதிவில் தேடு

பிரபலமான இடுகைகள்

Breaking News

latest

வாய்ச் சொல்லில்

இன்றுள்ள மன நிலையில் வேறெதுவும் போடத் தோன்றவில்லை. அதற்கு பதில் இந்தப் பாரதியார் பாடல் பொருத்தமாக இருக்கும் நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் ...

இன்றுள்ள மன நிலையில் வேறெதுவும் போடத் தோன்றவில்லை. அதற்கு பதில் இந்தப் பாரதியார் பாடல் பொருத்தமாக இருக்கும்


நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமு மின்றி,
வஞ்சனை சொல்வா ரடீ! - கிளியே!
வாய்ச் சொல்லில் வீரரடி.

கூட்டத்தில் கூடிநின்று கூவிப் பிதற்ற லன்றி,
நாட்டத்தில் கொள்ளா ரடீ! - கிளியே!
நாளில் மறப்பா ரடீ

சொந்த அரசும்புவிச் சுகங்களும் மாண்பு களும்
அந்தகர்க் குண்டாகு மோ? - கிளியே!
அகலிகளுக் கின்ப முண்டோ ?

கண்கள் இரண்டிருந்தும் காணுந் திறமை யற்ற
பெண்களின் கூட்டமடீ! - கிளியே!
பேசிப் பயனென் னடீ

யந்திர சாலை யென்பார் எங்கள் துணிகளென்பார்,
மந்திரத் தாலே யெங்கும் - கிளியே!
மாங்கனி வீழ்வ துண்டோ !

உப்பென்றும் சீனி என்றும் உள்நாட்டுச் சேலை என்றும்
செப்பித் திரிவா ரடீ! - கிளியே!
செய்வ தறியா ரடீ!

தேவியர் மானம் என்றும் தெய்வத்தின் பக்தி என்றும்
நாவினாற் சொல்வ தல்லால் - கிளியே!
நம்புத லற்றா ரடீ!

மாதரைக் கற்பழித்து வன்கண்மை பிறர் செய்யப்
பேதைகள் போலு யிரைக் - கிளியே
பேணி யிருந்தா ரடீ!

தேவி கோயிலிற் சென்று தீமை பிறர்கள் செய்ய
ஆவி பெரிதென் றெண்ணிக் - கிளியே
அஞ்சிக் கிடந்தா ரடீ!

அச்சமும் பேடி மையும் அடிமைச் சிறு மதியும்
உச்சத்திற் கொண்டா ரடீஸ்ரீ - கிளியே
ஊமைச் சனங்க ளடீ!

ஊக்கமும் உள்வலியும் உண்மையிற் பற்று மில்லா
மாக்களுக் கோர் கணமும் - கிளியே
வாழத் தகுதி யுண்டோ ?

மானம் சிறிதென் றெண்ணி வாழ்வு பெரிதென் றெண்ணும்
ஈனர்க் குலகந் தனில் - கிளியே!
இருக்க நிலைமை யுண்டோ ?

சிந்தையிற் கள்விரும்பிச் சிவசிவ வென்பது போல்
வந்தே மாதர மென்பார்! - கிளியே!
மனத்தி லதனைக் கொள்ளார்

பழமை பழமை யென்று பாவனை பேச லன்றிப்
பழமை இருந்த நிலை! - கிளியே!
பாமர ரேதறி வார்!

நாட்டில் அவமதிப்பும் நாணின்றி இழி செல்வத்
தேட்டில் விருப்புங் கொண்டே! - கிளியே!
சிறுமை யடைவா ரடீ!

சொந்த சகோ தரர்கள் துன்பத்திற் சாதல் கண்டும்
சிந்தை இரங்கா ரடீ! - கிளியே!
செம்மை மறந்தா ரடீ!

பஞ்சத்தும் நோய்க ளிலும் பாரதர் புழுக்கள் போல்
துஞ்சத்தும் கண்ணாற் கண்டும் - கிளியே!
சோம்பிக் கிடப்பா ரடீ!

தாயைக் கொல்லும் பஞ்சத்தைத் தடுக்க முயற்சி யுறார்
வாயைத் திறந்து சும்மா - கிளியே!
வந்தே மாதர மென்பார்!

அன்புடன் எல்கே

16 கருத்துகள்

Gayathri சொன்னது…

முதல் முறை இந்த பாட்ட இப்போத்தான் முழுசா படிக்கிறேன்..அதுக்கே உங்களுக்கு பெரிய நன்றி..

இத படிச்சு எனக்கு முதலில் தோனிய ஒன்று " அட எவ்ளோ உண்மை , எதார்த்தமா சொல்லிட்டு போயிட்டாரே நம்ம பாரதியார்!!"

எவ்ளோ உண்மை ப்ரோ எல்லாமே மற்றவங்களுக்கு சொல்றதொட சரி..செயல் முறன்னா ஒண்ணுமே இல்லை...சில தலைவர்களும் , அதிகரிகளும் மற்றும் இல்லாமல்.நாம் அன்றாடம் சிந்திக்கும் சிலரும் இப்படியே..

ஒன்னும் செய்ய முடியாது..இன்னும் பார்த்தா அவங்கதான் முன்னாடி வராங்க..சரக்க விட வார்த்தை ஜாலமே வெல்கிறது...

உடுங்க போய் ஜாலியா எந்திரன் படம் பாருங்க

ஹேமா சொன்னது…

கார்த்திக்....பாரதி பாடல்கள் எப்போதுமே பிடிக்கும்.அதுசரி உங்களுக்கு என்னாச்சு.மனமோ உடம்போ சரியில்லையா !

அருண் பிரசாத் சொன்னது…

Cool Down
Cool Down
Cool Down

Kousalya Raj சொன்னது…

தீர்ப்பு வந்துவிட்டதா....??

சரியான நேரத்துல பாரதியாரை நினைவுபடுத்தியதுக்கு மகிழ்கிறேன்....!!

//சிந்தையிற் கள்விரும்பிச் சிவசிவ வென்பது போல்
வந்தே மாதர மென்பார்! - கிளியே!
மனத்தி லதனைக் கொள்ளார் //

இந்த வரி எனக்கு பிடிக்கிறது...

:))

Asiya Omar சொன்னது…

பாரதி ஒரு தீர்க்கதரிசின்னு சொல்வாங்க,இதனை படித்தவுடன் எத்துணை உண்மை என்று தெரிகிறது.

Menaga Sathia சொன்னது…

what happened??

சுசி சொன்னது…

இப்போ மனது கொஞ்சமாவது சரியாகி இருக்கா??

//இன்றுள்ள மன நிலையில் வேறெதுவும் போடத் தோன்றவில்லை. அதற்கு பதில் இந்தப் பாரதியார் பாடல் பொருத்தமாக இருக்கும்//

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) சொன்னது…

Lovely lyrics... theerkkatharisi thaan avar

ஸ்ரீராம். சொன்னது…

கப்பலோட்டிய தமிழன் பாடலை இணைத்திருக்கலாமே...

vasu balaji சொன்னது…

ம்ம். படிக்கும்போதே மனதில் சீர்காழியின் கம்பீரக் குரல் ஒலிக்கிறது.

தெய்வசுகந்தி சொன்னது…

எனக்குப்பிடித்த பாடல்!! என்ன ஆச்சு?
இப்போ சரியாயிட்டீங்களா!!

Ananthi (அன்புடன் ஆனந்தி) சொன்னது…

enna aachunga karthik??

vanathy சொன்னது…

பாரதியார் பாடல்கள் அருமையா இருக்கும். என்ன ஆச்சு, கார்த்தி ? இப்பெல்லாம் அடிக்கடி புரியாத மாதிரி பதிவுகள் போடுகிறீர்கள்.

சைவகொத்துப்பரோட்டா சொன்னது…

என்ன விஷயம் என்று புரியவில்லையே.

எல் கே சொன்னது…

நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள். இதப் பதிவுக்கும் தீர்ப்புக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எனவே அதை பற்றி இங்கே கருது இட வேண்டாம். ஏற்கனவே வந்த இரு பின்னூட்டங்களையும் நீக்குகிறேன்

Anisha Yunus சொன்னது…

பரவாயில்லை கார்த்திண்ணா,
தீர்ப்பு வெளியாகும் நாளாய் இருந்ததால் அவ்வாறு எண்ணிக்கொண்டேன். புறம் / அகம் சுகமடைய வாழ்த்துக்கள். :)