செப்டம்பர் 25, 2010

உங்கள் பதிவு பிரபலம் ஆகணுமா

உங்கள் பதிவு பிரபலம் ஆகணுமா ... இது ரொம்ப சிம்பிள் . கீழ்க்கண்ட மாதிரி பதிவுகளை போடுங்க ஒரே வாரத்தில நீங்க பிரபலம்..

முதலில் புர்சிகர எழுத்துக்கள் எழுதணும். அதாவது எல்லோரும் எதை செய்யறாங்களோ அது தப்பு அதுக்கு பதிலா இதை பண்ணுங்கனு (அது எதுவா இருந்தாலும் சரி) அப்படின்னு எழுதணும். அப்படி எழுதினா அதுதான் புர்சிகர எழுத்து ..

அடுத்து பதிவுலகில் யாரவது ஒரு ரெண்டு பேர் மேல (அவங்க ஆணாக இருக்க வேண்டியது மிக அவசியம் ) குற்றசாட்டு வச்சி ஒரு பதிவு போடுங்க. (குற்றசாட்டு உண்மையா இருக்கனுமாங்கறது முக்கியம் இல்லை ). அதுல மேல சொன்ன மாதிரி சில புர்சிகர சிந்தனைகளை தூவிடுங்க.

அப்புறம், ரஜினி பத்தி தப்பா எழுதியே ஆகணும். ரஜினியை எதிர்க்காம நீங்க புர்சியாலரா ஆக முடியாது.

அமரிக்க ஏகாதி"பத்திய" குழம்பு வைத்து சாப்பாடு போட்னும்

ஆளும் கட்சியை எவன் ஆண்டாலும் திட்டனும்

அவன் குரூப்பிலே எவன் திருந்தினாலும் அவனை போலின்னு சொல்லனும் அது யாரா இருந்தாலும்...

உங்க மனைவியைக் கூட டோலர்னு கூப்பிடனும்...

இரைச்சல் இசையை அடச்சீ, தவில் நாதஸ்வரத்தை கேக்கக் கூடாது ...

படிக்காம பிச்சை எடுத்து பழகனும், குழந்தைகளையும் அதிலே பழக்கனும்

பேரக்ஸ் டப்பாவில் உண்டியல் செஞ்சு பார்ப்பதை கைத்தொழிலா வச்சுக்கனும்

பெண்பால் ஆண்பால் வித்யாசம் இல்லாம மொழிக்கொலை செய்யனும்

அமரிக்கா போனவன் எல்லாம் அயோக்கியன் என அமரிக்காவில் இருப்பவனை விட்டே பிரைன் வாஷ் செஞ்சு எழுத வைக்கணும் ...

தன் மூஞ்சிய கண்ணாடில பார்க்காமலேயே பஞ்சாயத்து பண்ண ஆசைப்படனும்

எவன் முன்னேறினாலும் வயித்துல அடிச்சுகிட்டு ஒப்பாரி வைக்கனும்.

அடுத்தவன் குடி கெடுக்கனும். அவனுக்கு குழந்தை இருந்தா கூட பொண்டாட்டிய பிரிச்சுடனும்.

ஒரு முதலாளிக்கிட்ட வேலைப் பார்த்துக்கிட்டே அவரை திட்டி எழுதணும்.

கண்ட கண்ட பேர்ல (ஆச்சர்யக் குறி ,%குறி இப்படிலாம் ) ஐடி ஸ்டார்ட் பண்ணி கள்ள ஓட்டு போட தெரியனும்.

தலைமறைவு வாழ்க்கை மட்டுமே வாழ்க்கைனு நினைக்க தெரியனும்.

ஆண்கள் என்ன எழுதினாலும் அது ஆணாதிக்கம்னு பேசத் தெரியனும்..

இதெல்லாம் பண்ணிட்ட நீங்க பிரபல புர்ச்சி பதிவர் ஆய்டலாம்.. என்ன நீங்க பிரபலமாக ரெடி ஆயாச்சா ??


அன்புடன் எல்கே

54 கருத்துகள்:

முகிலன் சொன்னது…

:)))))

அபி அப்பா சொன்னது…

கார்த்தி! என்னய்யா இது எந்திரன் பார்ப்பேன்னு விட்ஜெட் போட்டு வச்சிருக்கே:-)) ஆனா ஒன்னு மட்டும் நிச்சயம். எந்திரனை புறக்கனிக்க சொல்லுறவங்க பார்த்த பின்னே தான் நீர் பார்க்க போறன்னு மட்டும் நல்லா தெரியுது. இதோ தமிழ்நாடு முழுக்க பத்து நிமிஷத்துல 1 வாரத்துக்கான டிக்கெட் அம்பேல் ஆகிடுச்சு......வெவ்வெவ்வே இப்ப என்ன செய்வே????

Chitra சொன்னது…

என்ன ஆச்சு?

அபி அப்பா சொன்னது…

ஆக இப்படித்தான் பிரபல்யம் ஆகனும்னா அதுக்கு நான் பஞ்சு மிட்டாய் வித்து பிழைச்சுப்பேன்!

நீச்சல்காரன் சொன்னது…

//என்ன நீங்க பிரபலமாக ரெடி ஆயாச்சா ??//
பிரபலம் அப்படினா என்ன அஆபிசர் ?

அபி அப்பா சொன்னது…

இப்படி எங்க கம்பனிய அவமான படுத்தினா மான நஷ்ட வழக்கு போடுவோம்

இப்படிக்கு
பேரக்ஸ் கும்பனியார்

LK சொன்னது…

@தினேஷ்
:))

ஸ்ரீராம். சொன்னது…

என்ன ஆச்சு? ஐடியாக்கள் பலமா இருக்கு...

LK சொன்னது…

@அபி அப்பா

அதுவேணா சரி. இப்பதான் நியூஸ் வந்துச்சி. நார்மல் விலையில்தான் டிக்கெட் விக்கறாங்களாம் .. பதிவு எழுத முடியாதே இப்ப

LK சொன்னது…

@சித்ரா
புர்ச்சி பண்ணலாம்னு முடிவு பண்ணிட்டேன்

LK சொன்னது…

@அபி அப்பா

அப்பக் கூட , அதுல வர லாபத்தை டொலர்கள் கூட பகிரனும். இல்லாட்ட்டி நீங்கள் முதலாளி ஆய்டுவீங்க

@

LK சொன்னது…

நீச்சல்

:))

@அபி அப்பா
முதலாளித்துவம் ஒழிக

Balaji saravana சொன்னது…

ரைட்டு ஒரு முடிவோட தான் கிளம்பியிருக்கீங்க போல :)
நடத்துங்க நடத்துங்க.. எங்க ஓட்டு எப்பவும் போல உங்களுக்குத் தான்...

asiya omar சொன்னது…

அட இப்படி கூட யோசிக்க ஆரம்பிச்சாச்சா?ட்ரை பண்றேன்.

Jaleela Kamal சொன்னது…

நல்லா தேனே இருந்தீக.
திடீருன்னு பீதி கிளப்புறீங்க.

பயந்து போனேன். சரி ரைட்டு

கீதா சாம்பசிவம் சொன்னது…

?????????????????????????????s

siva சொன்னது…

:)

சௌந்தர் சொன்னது…

நல்லா இருக்கு உங்க ஐடியா ஆனா கொஞ்சம் கோபம் இருக்கே

LK சொன்னது…

@பாலாஜி

ஆமாம் ஒரு முடிவோடதான் இருக்கோம்

LK சொன்னது…

@ஆசியா

அபப்டியா.. பார்த்து விபரீதம் ஆய்டும்

LK சொன்னது…

@ஜலீலா
என்ன பண்ண. இத புர்ச்சி மோகம் ஆட்டுது

LK சொன்னது…

@கீதா மாமி
:)))

LK சொன்னது…

@சிவா
:)

LK சொன்னது…

@சௌந்தர்
கொஞ்சம் இல்லை. நெறைய இருக்கு

LK சொன்னது…

@அனானி

நாங்க எது பண்ணினாலும் சொந்தப் பெயரில் பண்ணற தைரியம் இருக்கு..

வானம்பாடிகள் சொன்னது…

நீங்க ஆயாச்சு. மைனஸ் விழுந்தாச்சே:))

LK சொன்னது…

@பாலா சார்

அதை பத்தி நான் கவலை படறது இல்லை. கண்டுபிடிக்க முடியாதின்னு ஒரு அரை லூஸ் அனானிய வந்து வாந்தி எடுத்துச்சு . அது யாருன்னு தெரிஞ்சிடுச்சு

சைவகொத்துப்பரோட்டா சொன்னது…

ரைட்டு :))

ஜெய்லானி சொன்னது…

ஏன் நல்லாதானே போய்கிட்டிருக்கு...???????????????????????????????????????

ப.செல்வக்குமார் சொன்னது…

///அமரிக்க ஏகாதி"பத்திய" குழம்பு வைத்து சாப்பாடு போட்னும்//

பொறியல் , கூட்டு இதெல்லாம் வேண்டாமா ..?

ப.செல்வக்குமார் சொன்னது…

//இதெல்லாம் பண்ணிட்ட நீங்க பிரபல புர்ச்சி பதிவர் ஆய்டலாம்.. என்ன நீங்க பிரபலமாக ரெடி ஆயாச்சா ??//

எனக்கு வேண்டாம்க ,, நான் மொக்கைப் பதிவராவே இருந்துக்கிறேன் ,,,!!

Gayathri சொன்னது…

என்னங்க ஆச்சு உங்களுக்கு?
என் பதிவு எந்த நிலையில் இருக்குன்னே எனக்கு உண்ணும் தெரியல. இதுல ஒன்னே ஒண்ணுதான் நான் பண்ணிண்டு இருக்கேன்..அத கொடா மொழி கொலைன்னு சொல்ல முடியாது..தமிழ என் தமிழா கச்டமைஸ் பண்ணிட்டேன்னு வச்சுக்கலாம்...

DrPKandaswamyPhD சொன்னது…

பிரபல பதிவர் ஆனா பிரதமர் பதவி கொடுப்பாங்களாமே, நெஜமா?

dheva சொன்னது…

சரி பாஸ்....! இரும்பு அடிக்கிற இடத்தில் என்னை மாதிரி ஈ க்கு என்ன வேலை.....?

படிச்சுட்டேன்....ஆனா என்னா சொல்றதுன்னு தெரியல...!

சாமானியர்களுக்கு எப்பவுமே...அரசியல் விளங்குறது இல்லைனு சொல்லிட்டு...காராசாரமா இருக்குற உங்க பதிவை லைட்டா டேஸ்ட் பண்ணிட்டு கிளம்புறேன்...!

அப்போ வர்ட்டா....!

நிலாமதி சொன்னது…

புர்சிகர எழுத்து ..haa haa

சேட்டைக்காரன் சொன்னது…

டண்டாணா டர்றா...டணக்கு டக்குண டர்றா
கார்த்தி பிரபலமாயிட்டாருங்கோ.....மைனஸ் ஓட்டு போட்ட புண்ணியவானுங்களுக்கு ஒரு ’ஓ’ போடுங்க கார்த்தி....!

அமைதிச்சாரல் சொன்னது…

என்ன ஆச்சு???????

இப்ப நீங்களும் பிரபல புர்ச்சிப்பதிவர் ஆயிட்டீங்க.. மைனஸ் குத்தியிருக்காங்களே......

virutcham சொன்னது…

//அப்புறம், ரஜினி பத்தி தப்பா எழுதியே ஆகணும். ரஜினியை எதிர்க்காம நீங்க புர்சியாலரா ஆக முடியாது. //

அப்படியா? அப்படி எதுவும் இருக்கறா மாதிரி தெரியலையே. இருந்திருந்தா இதெல்லாம்

http://wp.me/p12Xc3-98 காலத்தில் மடிந்த ரஜினி படங்கள்

http://wp.me/p12Xc3-Sz ஆண்மையை அடையாளப்படுத்தும் ரஜினி, விஜய்

பிரபலம் ஆகி இருக்கணுமே.

Ananthi சொன்னது…

Aahaaaa :-)))

kavisiva சொன்னது…

ஏன் இப்படி?! நல்லாத்தானே போய்கிட்டு இருந்திச்சு!

vinothamanavan சொன்னது…

ungalidamirunthu ippadi oru padhiva edhirpaarkave illa...enakku sathyamaa pidikkala..i am sorry

anbudan
vinoth

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

....>>>கண்ட கண்ட பேர்ல (ஆச்சர்யக் குறி ,%குறி இப்படிலாம் ) ஐடி ஸ்டார்ட் பண்ணி கள்ள ஓட்டு போட தெரியனும்.>>>

oo,இப்படிக்கூட நடக்குதா?

அன்புடன் பிரசன்னா சொன்னது…

நல்லா தான் பதிவு போடுறீங்க, பாவம் புதுசா வரவங்க உங்க அறிவுரைய கேட்டு அடி வாங்க போறாங்க. :P

அன்னு சொன்னது…

கார்த்திண்ணா....ஏனிந்த கோபம்? யார் மேல்? சந்தோஷத்தை மட்டுமே படிச்சிட்டிருந்த உங்க வலைப்பூவிலும் இப்படி ஒரு கொந்தளிப்பா..என்ன சொல்றதுன்னு தெரியலை!!

ஹேமா சொன்னது…

கார்த்திக்...ஏன் பொழுதே போகலயா !

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

(:

மணி (ஆயிரத்தில் ஒருவன்) சொன்னது…

யோவ் வயித்தெரிச்சல கிளப்பாதே மொக்க பதிவராக வரவே தாவு தீருது.இதுல பிரபலம் வேறயா....

siva சொன்னது…

எனக்கு வேண்டாம்க ,, நான் மொக்கைப் பதிவராவே இருந்துக்கிறேன் ,,,!!

no no neenga romba nalla padhivar...

LK ANNEY evara eppadiyavathu pirabala pathivar akkidanum.

அன்புடன் மலிக்கா சொன்னது…

ஆகா.
ஒரு சிங்கம் உருமாறி வருதே!
என்ன செய்ய கார்த்தி சிலதுகளுக்கு இதுவே பொலப்பாகிவிட்டதுபோல

அந்த பொலப்பு நமக்கு வேணாமுங்கோ.இப்படியெல்லாமா பொலப்பு நடத்துறாக:} நடத்தட்டும் நடத்தட்டும்

சே.குமார் சொன்னது…

என்ன ஆச்சு? ஐடியாக்கள் பலமா இருக்கு...

vanathy சொன்னது…

எல்கே, என்ன ஆச்சு? ஒண்ணுமே புரியலை உலகத்திலே....

அப்பாவி தங்கமணி சொன்னது…

ஆணியே புடுங்க வேண்டாம்... புரியலையா... நான் பிரபலமே ஆக வேண்டாம்... மீ எஸ்கேப்... ஹா ஹா ஹா... நல்ல காமெடி தான் போ...

இப்படி எல்லாம் போட்டு தாக்கினா அப்புறம் உனக்கு "கட் அண்ட் ரைட் கார்த்தி" னு பட்ட பேரு வெச்சுடுவோம்... சொல்லிட்டேன்... ஹா ஹா ஹா

Ananthi சொன்னது…

///ஆணியே புடுங்க வேண்டாம்... புரியலையா... நான் பிரபலமே ஆக வேண்டாம்... மீ எஸ்கேப்... ஹா ஹா ஹா... நல்ல காமெடி தான் போ... ////

ha ha ha... super bhuvanaa ;-))

Repeatttttttttt :-))))

மங்களூர் சிவா சொன்னது…

haa haa
:))))))))))))))))))))))))