செப்டம்பர் 23, 2010

மரணத்தின் நிழல் I


சக்ரவர்த்தி , சேலத்தின் வெற்றிகரமான பல தொழிலதிபர்களில் ஒருவர். ஐம்பதை தாண்டியிருந்தாலும் நாற்பதே சொல்ல வைக்கும் தோற்றம். நேற்றுவரை பலரால் வியந்துப் பார்க்கப்பட்டவர், இன்று இல்லை. ஆம், அதிகாலையில் அவர் உயிரிழந்தார். அவர் பார்த்து பார்த்து கட்டிய வீட்டின்  ஹாலில் அவரது உயிரற்ற உடல் மாலைகளின் நடுவே .

அவர் காலடியில் அமர்ந்திருக்கும் ஜீவா ,அவரது நம்பிக்கைக்குரிய உதவியாளர் . அவருடனே இருபது வருடங்களாக அவரது வளர்ச்சிக்கு உறுதுணையாய் இருந்தவர். அழுது சிவந்த கண்களுடன் வருபவர்களிடம் பேசிக் கொண்டு அடுத்தக் கட்ட காரியங்களுக்கு வேலைகளை பார்த்துக் கொண்டிருப்பது அவரது தூரத்து உறவினரின் மகன் ரமேஷ் . இவர்களைத் தவிர அந்த வீட்டில் பல வருடங்களாய் இருக்கும் வீட்டு வேலைக்காரர் முனுசாமி. ஆம், அவர் திருமணம் செய்துக் கொள்ளவில்லை. தொழிலில் கவனம் செலுத்திய அவர் ஏனோ குடும்பம் வேண்டும் என எண்ணவில்லை. காலம் கடந்தப் பின் ,ரமேஷை அழைத்து வைத்துக் கொண்டார். 

நல்ல உடல் நலத்துடன் இருந்த அவரது திடீர் மரணம், பலருக்கும் அதிர்ச்சியாகவே  இருந்தது. பல பெரிய இடத்து திடீர் மரணங்களைப் போல் இதிலும் சிலர் முணுமுணுத்தாலும் பகிரங்கமாக பேச தயங்கினர்.  

நேரம் கடக்க, அவரது உடலை எடுக்க வேண்டிய நேரம் நெருங்க , உள்ளே நுழைந்தார் அவரது தம்பி ராஜா. அவரது வருகை அங்கே வியப்பு கலந்த அமைதியை ஏற்படுத்தியது. மனதில் ஏனோ தோன்றிய கலக்கத்தை புறக்கணித்து அவரை நெருங்கிய ரமேஷ் நடந்ததை அவருக்கு கூறினான். 

அவன் கூறியதை காதில் வாங்கியப் படி அவரது கைகள் அலைபேசியில் எண்களை அழுத்தி அழைத்தார். அழைப்பு உயிர் பெற்றவுடன் 

"இன்ஸ்பெக்டர், நான் ராஜா பேசறேன். கொஞ்சம் என் அண்ணன் வீடு வரைக்கும் வர முடியுமா,  ??"

"......"

"என் அண்ணன் சாவில் எனக்கு சந்தேகம் இருக்கு . இன்ஸ்பெக்டர் வந்து பார்த்து சொல்ற வரைக்கும் அவர் உடம்பை எடுக்கக் கூடாது ".

வந்திருந்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். 

- நிழல் தொடரும்அன்புடன் எல்கே
 

54 கருத்துகள்:

Chitra சொன்னது…

Good suspense!

Sriakila சொன்னது…

ஐயோ பாவம்! என்று நினைத்துக் கொண்டிருக்கும்போதே சஸ்பென்ஸ் வைத்து விட்டீர்களே..

சீக்கிரமே தொடருங்கள்!

வெங்கட் நாகராஜ் சொன்னது…

சஸ்பென்ஸ் - திரில்லர். - பகிர்வுக்கு நன்றி. தொடருங்கள்.

வெங்கட்.

dheva சொன்னது…

க்ரைம் தொடர்...........வித் சஸ்பென்ஸ்.....


திக். திக்..திக்... வெயிட்டிங் பாஸ்!

Kousalya சொன்னது…

மறுபடி ஒரு திரில்லிங் தொடரா...??! அடுத்து என்ன... படிக்க ஆவலாய் இருக்கிறேன்.....

//நிழல் தொடரும்//

நிஜம் தொடரட்டும்....

:)))

Gayathri சொன்னது…

ithu bongattam ivlo seekram suspensaa?? chellathu chellathu

அருண் பிரசாத் சொன்னது…

//ithu bongattam ivlo seekram suspensaa?? chellathu chellathu//

repeatuuu...

sakthi சொன்னது…

தொடர் கதையா குட்

எழுதுங்க வாழ்த்துக்கள்!!!

ப.செல்வக்குமார் சொன்னது…

//வந்திருந்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.//

நல்லாவே கிளப்புறீங்க , பீதிய ..!!
நல்லா இருக்கு .. தொடருங்க ..!!

asiya omar சொன்னது…

அட திரும்ப ஒரு தொடரா,உங்க கதை தான் திரில்லா இருக்குமே,வழ்த்துக்கள்.சவால் கதை போட்டியில் கலந்து கொள்ளூங்களேன் சகோ.

ers சொன்னது…

உங்கள் படைப்புக்களை இங்கேயும் இணைக்கலாம்
தமிழ்
ஆங்கிலம்

siva சொன்னது…

Engaium suspensssaaaa...

romba nalla erukku anna..

na etho unmai sambavamnu ninchu padika arambithen..

eruthiyila parthal..etho thodarkathai pola erukku..

soon next post..
waiting

சுசி சொன்னது…

//வந்திருந்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.//

நானும்.. புவனா தொடருக்கு போட்டியா??

LK சொன்னது…

@சித்ரா
நன்றி

LK சொன்னது…

@ஸ்ரீ அகிலா
தொடர்கிறேன்

LK சொன்னது…

@வெங்கட்
வருகைக்கு நன்றி

LK சொன்னது…

@தேவா
நன்றி பாஸ்

LK சொன்னது…

@கௌசல்யா
ஆமாம் . நிஜங்கள் நிழலாய் தொடரும்

LK சொன்னது…

@காயத்ரி
ஏன் முதலில் அப்படி வைக்க கூடாதுன்னு சட்டம் இருக்கா

LK சொன்னது…

@அருண்
உனக்கும் அதே பதில்தான்

LK சொன்னது…

@சக்தி
நன்றிங்க

LK சொன்னது…

@செல்வா
நன்றி

LK சொன்னது…

@ஆசியா
நமக்கு கட்டுப்பாடு பிடிக்காது., அதான் கலந்துக்கலை

LK சொன்னது…

@சிவா
வேற எங்க சஸ்பென்ஸ் ??

LK சொன்னது…

@சுசி
இட்லி மாமிகிட்ட நான் போட்டி போட முடியுமா

சே.குமார் சொன்னது…

Arambamey Amarkkalam...

Kiram storya...

Kalakkunga...

சௌந்தர் சொன்னது…

நீங்களும் திரில்லர் தொடரா சரி சரி சீக்கிரம் அடுத்த பதிவை தொடருங்கள்

Balaji saravana சொன்னது…

திக் திக்.. தொடரும் மர்மங்கள் :)

கோவை2தில்லி சொன்னது…

திரில்லாக இருக்கிறது. சீக்கிரம் தொடருங்கள்.

LK சொன்னது…

@சௌந்தர்
நாம எப்பவுமே த்ரில்லர்தான்

LK சொன்னது…

@ குமார்
நன்றி

LK சொன்னது…

@கோவை
நன்றிங்க

LK சொன்னது…

@பாலாஜி

நன்றி

Mrs.Menagasathia சொன்னது…

க்ரைம் தொடரா?? சூப்பர்ர்..தொடருங்கள்!!

ஹுஸைனம்மா சொன்னது…

நடத்துங்க நடத்துங்க.. திகிலாத்தான் இருக்கு. ஆனா நம்ம அப்பாவி தங்ஸ் அளவுக்கு இழுத்து சஸ்பென்ஸ் வச்சுடாதீங்க!! :-))

vanathy சொன்னது…

சூப்பர். சீக்கிரம் அடுத்த பாகம் போடுங்கோ.

அமைதிச்சாரல் சொன்னது…

நல்ல ஆரம்பம்.. தொடருங்கள்!!

அப்பாவி தங்கமணி சொன்னது…

//LK said...
@சுசி - இட்லி மாமிகிட்ட நான் போட்டி போட முடியுமா//

இதுக்கு நீ என்னை நேரடியாவே திட்டி இருக்கலாம்...(Just kidding... ஹா ஹா ஹா)

அப்பாவி தங்கமணி சொன்னது…

ஆரம்பமே சூப்பர் சஸ்பென்ஸ்... சொத்துக்காக ஏதோ சதியோ... சீக்கரம் நெக்ஸ்ட் பார்ட் போடு... என்னை போல லேட் பண்ணாம...

LK சொன்னது…

@மேனகா

ஆமாம்

LK சொன்னது…

@ஹுசைனம்மா

இல்லை இல்லை அவ்வளவு இழுக்க எனக்குத் தெரியாது .. நன்றி

LK சொன்னது…

@வாணி
நன்றி


@சாரல்

நன்றி

LK சொன்னது…

@அப்பாவி

ஹிஹி.. பொறுத்திருந்து பார்

கீதா சாம்பசிவம் சொன்னது…

அட??? இதுக்குக் கொடுத்த பின்னூட்டமும் மாயமாய் மறைஞ்சு போச்சா?? திகிலா இருக்கே! :))))

அடுத்த திகில் தொடர் ஆரம்பமா?? இதான் நான் கொடுத்த முதல் பின்னூட்டம்! :)))))

Priya சொன்னது…

திரில்லரா... குட், தொடருங்கள்!

தெய்வசுகந்தி சொன்னது…

நல்ல சஸ்பென்ஸ்! சீக்கிரம் தொடருங்கள்!!!

ஜிஜி சொன்னது…

க்ரைம் தொடர் கதை அருமையாக இருக்கிறது.தொடருங்கள்!பகிர்வுக்கு நன்றி.

LK சொன்னது…

@கீதா மாமி
ஆம்..

LK சொன்னது…

@ப்ரியா

நன்றிங்க

LK சொன்னது…

@ஜிஜி

நன்றி

@தெய்வசுகந்தி

நன்றி

goma சொன்னது…

திகில் பகீர் திடுக் திடுக்.....

goma சொன்னது…

ஆரம்பமே அசத்துதே

ஜெய்லானி சொன்னது…

http://blogintamil.blogspot.com/2010/09/blog-post_23.html

ஸ்ரீராம். சொன்னது…

மறுபடி தொடர்? ஒரு குறிப்பிட்ட கிழமையில் என்று தொடரலாமே கார்த்திக்? தொடருங்கள். படிக்க ஆவலாக உள்ளேன்.