Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Gradient Skin

Gradient_Skin

இந்த வலைப்பதிவில் தேடு

பிரபலமான இடுகைகள்

Breaking News

latest

காமன்வெல்த் போட்டிகள்

1930 ஆம் வருடம் தொடங்கப் பட்ட இந்த போட்டி ஒவ்வொரு நான்கு வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறுகிறது. ஒரு காலத்தில் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்...

1930 ஆம் வருடம் தொடங்கப் பட்ட இந்த போட்டி ஒவ்வொரு நான்கு வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறுகிறது. ஒரு காலத்தில் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்த நாடுகள் மட்டுமே இதில் பங்கு பெறுகின்றன என்பது முக்கியமாக நாம் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் ஆகும்.

அதவாது, இதை காலனி ஆதிக்கத்தை நினைவு கூறுவதாக உள்ளது . சரிதானே நான் சொல்வது ?? ஒலிம்பிக்கை விட இதில் இந்தியா அதிகம் மெடல்கள் பெறும் என்பதே ஒரே லாபம். இதை தவிர வேறு ஒன்றும் உருப்படியாக இல்லை. சரி இந்த முறை இந்தியாவில் நடைப் பெறப் போகிறது இந்தப் போட்டிகள். இது சம்பந்தமா எனக்கு சில கேள்விகள் ...

1 இந்தியாவில் வேறு எந்த நகரமும் இல்லையா போட்டிகளை நடத்த? ஏற்கனவே போக்குவரத்து நெரிசலினால் டெல்லி திணறுகிறது என்பது ஒரு பக்கம் இருக்க, அங்கு புது மைதானங்களை கட்டவும் இடம் அதிகம் இல்லை என்பது முக்கிய விஷயம். இதை ஏன் மும்பை, பெங்களூரு ,சென்னை அல்லது ஹைதராபாத்தில் நடத்தக் கூடாது ?? இவை அனைத்துமே நல்ல உட்கட்டமைப்புகள் கொண்ட நகரமாகும்.

2 போட்டி நடத்த அனுமதி கிடைத்து பல வருடங்கள் ஆகிறது. அப்படி இருக்க இன்னும் ஏன் இவர்களால் மைதானங்களை கட்டி முடிக்க இயலவில்லை ?? விலைவாசி உயரும் என்பதும், ஆரம்பத்தில் குறிப்பிட செலவை விட அதிகம் ஆகும் என்பதும் அனைவருக்கும் தெரிந்த விஷயம் அப்படி இருக்க முடியவில்லை என்றால் போட்டி நடத்த ஒத்துக் கொண்டிருக்கக் கூடாது . இப்பொழுது இந்தியாவின் மானம் பறக்கிறது .. இனி சர்வதேசப் போட்டிகளை இந்தியாவில் நடத்த அனுமதி கிடைக்குமா என்பதே கேள்வி குறிதான்.

3 எதற்க்கெடுத்தாலும் கிரிக்கெட்டுடன் ஒப்பிட்டு, கிரிக்கெட் மற்ற விளையாட்டுகளை வளர விடவில்லை என்று சொல்லும் இந்த விளையாட்டு வாரியம் ஏன் கட்டமைப்புகளை உருவாக்குவதில் கிரிக்கெட் வாரியத்துடன் ஒப்பிடவில்லை ?? அடுத்த வருட உலகக் கோப்பைக்கு பெருவாரியான மைதானங்கள் தயார் நிலையில் உள்ளன. ஆனால் , காமன்வெல்த் போட்டிகளுக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், மீடியாவில் வரும் செய்திகள் உற்சாகம் தரும் நிலையில் இல்லை.

4 இந்தியாவில் உள்ள பல வீரர்களுக்கு எந்த மருந்துப் பொருட்கள் தடை செய்யப் பட்டவை எவை அனுமதிக்கப் பட்டவை என்ற விவரமே இல்லை. அதை செய்ய வேண்டிய விளையாட்டு அமைப்புகளோ தூங்கிக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் தடை செய்யப் பட்ட வீரரை மட்டும் மீடியா தாக்குவது தவறு. முதலில் விளையாட்டு வாரியங்களுக்கு அதைப் பற்றிய விவரம் தெரிய வேண்டும்.

ஏன் விளையாட்டு வாரியங்களுக்கு சுய அதிகாரம் அளிக்கக் கூடாது ?? அரசாங்கத்தையே ஒவ்வொரு தேவைகளுக்கும் எதிர் பார்க்க வேண்டி இருப்பதால் பல பிரச்சனைகள் . இந்தியா விளையாட்டுத் துறையில் முன்னேற வேண்டுமெனில், சம்பந்தப் பட்ட அமைப்புகளுக்கு அரசாங்கக் கட்டுப்பாடு விலக வேண்டும், அவற்றின் பொறுப்புகளில் அரசியல் கட்சியில் உள்ள யாரும் இருக்கக் கூடாது .

சரியா ??


அன்புடன் எல்கே

49 கருத்துகள்

Chitra சொன்னது…

உங்கள் ஆதங்கம் புரிகிறது..... பொறுப்பில் இருப்பவர்களுக்கும் இப்படி புரிந்தால், பிரச்சனைகள் ஏது?

புவனேஸ்வரி ராமநாதன் சொன்னது…

விளையாட்டு வாரியப்பதவிய தக்கவச்சிக்கவே நேரம் சரியா இருக்குறவங்களுக்கு தடை செய்யப்பட மருந்துகள் பற்றி விளக்க நேரம் எங்கே கிடைக்கப் போகுது? முதல்ல விளையாட்டு வாரியப்பதவிகளுக்கு குறிப்பிட்ட காலவரம்பு நிச்சயிக்கணும். அப்பத்தான் ஓரளவாவது நல்லது செய்து நல்ல பெயர் வாங்க முயற்சி செய்வாங்க.

NS Manikandan சொன்னது…

நோ பீலிங்க்ஸ்..எப்படியும் 2012ல உலகம் அழிஞ்சுடுமாம்.அதுவரை எதோ பண்ணிட்டு போகட்டும் உடுங்க

'பரிவை' சே.குமார் சொன்னது…

உங்கள் ஆதங்கம் சரிதான். நாம கவலைப்பட்டு என்னாகப் போகுது? பொறுப்பில் இருக்கும் புத்திசாலிகளுக்குப் புரிய வேண்டும் அல்லவா?

பெயரில்லா சொன்னது…

மும்பைல போட்டி இருந்தா பாதுகாப்பு பெரிய பிரச்சனை. இந்திய அரசு விளையாட்டு வீரர்களுக்கு மட்டும் பாதுகாப்பு உத்திரவாதம் குடுத்திருக்கு. அதனால் மற்றவர்கள் எல்லாருக்கும் ஆஸ்திரேலியா ட்ராவல் வார்னிங் குடுத்திருக்கு. அவசரகதியில் ஸ்டேடியம் கட்டறாங்களாம். இடிஞ்சுவிழாம இருக்கணுமேன்னுதான் பயம்மா இருக்கு. (டெல்லி கடைசி நிமிஷத்தில தயாரா இல்லைன்னு சொல்லிட்டா மெல்பர்னுக்குதான் போட்டி திரும்ப வரப்போகுதாம்)

தக்குடு சொன்னது…

//இந்தியாவில் உள்ள பல வீரர்களுக்கு எந்த மருந்துப் பொருட்கள் தடை செய்யப் பட்டவை எவை அனுமதிக்கப் பட்டவை என்ற விவரமே இல்லை//

இதை பத்தி விவரமா நீங்க ஒரு பதிவு போடுங்க பேசாம....;P

Geetha Sambasivam சொன்னது…

இதை ஏன் மும்பை, பெங்களூரு ,சென்னை அல்லது ஹைதராபாத்தில் நடத்தக் கூடாது ?? இவை அனைத்துமே நல்ல உட்கட்டமைப்புகள் கொண்ட நகரமாகும்//

மும்பையும் ஹைதராபாத்தும், பெண்களூரும் சரி, சென்னையிலே என்ன உள்கட்டமைப்பு இருக்கு?? கடுமையாக ஆக்ஷேபிக்கிறேன். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
மற்றபடி சரியான நேரத்தில் வந்த அவசியமான பதிவு என்பதில் சந்தேகம் இல்லை. :D

அருண் பிரசாத் சொன்னது…

கிரிக்கெட் விளையாட்டுக்கு இருக்கும் ஆர்வம் மற்ற விளையாட்டுகளுக்கு இல்லாதது யார் தவறு. வாரியம் அந்த விளையாட்டை வளர்க்கவில்லை என்றுதானே அர்த்தம்

சேவாக் இன்று ஒரு பேட்டி தந்தார் “யானை தெருவில் போனால் நாய்கள் குறைக்கத்தான் செய்யும்” ஏனோ இது நினைவுக்கு வந்து விட்டது

Asiya Omar சொன்னது…

இதுவும் சரிதான்.

செல்வா சொன்னது…

// எதற்க்கெடுத்தாலும் கிரிக்கெட்டுடன் ஒப்பிட்டு, கிரிக்கெட் மற்ற விளையாட்டுகளை வளர விடவில்லை என்று சொல்லும் இந்த விளையாட்டு வாரியம் ஏன் கட்டமைப்புகளை உருவாக்குவதில் கிரிக்கெட் வாரியத்துடன் ஒப்பிடவில்லை ?? //

அதுதான பிரச்சினையே ..?!? என்னத்த சொல்ல ..?!?

பெயரில்லா சொன்னது…

நீங்க கேட்ட எல்லா கேள்விகளும் மிகவும் சரியானவ தான் இதுக்கு யார் பதில் சொல்லுவாங்க?

இந்தியா விளையாட்டுத் துறையில் முன்னேற வேண்டுமெனில், சம்பந்தப் பட்ட அமைப்புகளுக்கு அரசாங்கக் கட்டுப்பாடு விலக வேண்டும், அவற்றின் பொறுப்புகளில் அரசியல் கட்சியில் உள்ள யாரும் இருக்கக் கூடாது .

சரியா ??

சரி தான்

எல் கே சொன்னது…

@சித்ரா
புரியவில்லையே ?? என்ன செய்ய

எல் கே சொன்னது…

@புவனேஸ்வரி
இந்தத் தேர்தலே கூடாதுன்னு சொல்றேன். விளையாட்டு வாரியத்துக்கு தகுதியான முன்னாள் வீரர்களை நியமிக்க வேண்டும்.

எல் கே சொன்னது…

@கலந்தசாமி
ஏன் இந்தக் கொலை வெறி ?

எல் கே சொன்னது…

@குந்தவை
நோ சொகம்ஸ்

எல் கே சொன்னது…

@குமார்
அது சரி

எல் கே சொன்னது…

@அம்மிணி
சரி விடுங்க. மற்ற நகரங்கள் என்ன ஆச்சு ??

எல் கே சொன்னது…

@தக்குடு
எனக்கு அந்த அளவுக்கு விவரம் தெரியாது தம்பி

எல் கே சொன்னது…

@கீதா
ஏன் ஏன் இல்லை. அம்பதூர்ல இல்லை அதுக்காக சென்னைய குறை சொல்லக் கூடாது

எல் கே சொன்னது…

@அருண்
சரியா சொன்னீங்க

எல் கே சொன்னது…

@ஆசியா
நன்றி

எல் கே சொன்னது…

@செல்வா
ஒன்னும் சொல்றதுக்கு இல்லை

எல் கே சொன்னது…

@சந்தியா
நன்றி தோழி

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

இதுக்கே கவலைப்பட்டா எப்படி... இன்னும் எவ்வளவோ இருக்கு...கூல்...

சுசி சொன்னது…

சரின்னுதான் தோணுது எல்கே.

சௌந்தர் சொன்னது…

உங்கள் கோபம் எல்லாம் சரி என்ன செய்றது (:

Unknown சொன்னது…

:(

Gayathri சொன்னது…

நான் மொதல்ல போட்ட பின்னூட்டத்தை காகா தூக்கி போனதால்..


உங்க கவலை நியாயமானதுதான் ப்ரோ..
எப்படியும் உலகம் 2012 ல அழியபோகுது..கவலைய விடுங்க

ஹேமா சொன்னது…

ஆதங்கமான பதிவு.சம்பந்தப் பட்டவர்கள் இதை யோசிக்கவேணுமே கார்த்திக் !

ம.தி.சுதா சொன்னது…

ஏதோ நாமள் புலம்பீட்டு இருக்க வெண்டியது தான் ஒண்ணுமே நடக்காது...

Priya சொன்னது…

ஆதங்கம் நியாய‌மானதே.

Menaga Sathia சொன்னது…

//இதுக்கே கவலைப்பட்டா எப்படி... இன்னும் எவ்வளவோ இருக்கு...கூல்... //repeat...

சாந்தி மாரியப்பன் சொன்னது…

நியாயமான கேள்விகள்தான். மும்பையைப்பொறுத்தவரை, இது தீவிரவாதிகள் பிக்னிக் வந்துபோற இடமா இருக்குது. இப்பக்கூட லால்பாக் கண்பதி பந்தல்கிட்ட ரெண்டுபேரை பார்த்து, வழக்கம்போல விட்டுட்டு தேடிக்கிட்டிருக்காங்க...

போடற பாமை மொத்தமா மும்பைமேல போட்டுடுங்கப்பான்னு கத்தணும் போல இருந்தாலும்,.. இதையும் தாண்டி வருவோமில்ல. இப்படிப்பட்ட பாதுகாப்பு காரணங்கள் இருப்பதால்தான் காமன்வெல்த் மும்பைக்கு அன்வெல்த்தியா இருக்குது :-))

தெய்வசுகந்தி சொன்னது…

நியாயமான கேள்விதாங்க! பதில் சொல்லத்தான் யாரும் இல்லை! :(

Anisha Yunus சொன்னது…

//இந்தியாவில் உள்ள பல வீரர்களுக்கு எந்த மருந்துப் பொருட்கள் தடை செய்யப் பட்டவை எவை அனுமதிக்கப் பட்டவை என்ற விவரமே இல்லை. அதை செய்ய வேண்டிய விளையாட்டு அமைப்புகளோ தூங்கிக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் தடை செய்யப் பட்ட வீரரை மட்டும் மீடியா தாக்குவது தவறு. முதலில் விளையாட்டு வாரியங்களுக்கு அதைப் பற்றிய விவரம் தெரிய வேண்டும். //

தேவையான பதிவு. தேவையான கருத்துங்ணா...இன்னும் நம்மில் பல பேருக்கு எப்படி தயாராகணும் என்பதே தெரியாது என்பதும் நிதர்சனமான உண்மை. நல்ல கோச்சா இருந்தாதேன் அந்த பிள்ளைகளுக்கு இலவசமா தெரிய அவ்ரும். இல்லைன்னா திறமை இருந்தும் கை தூக்கி விட ஆளில்லாமலே பல வீரர்கள் நிதம் தொலைஞ்சு போயிடறாங்க!! அரசு இதையெல்லாம் கவனிக்குமா என்பது பெரிய சந்தேகம்!!

எல் கே சொன்னது…

@வெறும்பய
இப்படி இருந்து இருந்துதான் வீணா போய்ட்டோம்

எல் கே சொன்னது…

@சுசி
நன்றிங்க

எல் கே சொன்னது…

@சௌந்தர்
அதுதான் கேக்கறேன்

எல் கே சொன்னது…

@சிவா
?

எல் கே சொன்னது…

@காயத்ரி
நீயுமா

எல் கே சொன்னது…

@ஹேமா
யோசிக்க மாட்டேங்கறாங்க

எல் கே சொன்னது…

@சுதா
ஹ்ம்ம்

எல் கே சொன்னது…

@ப்ரியா
நன்றி

எல் கே சொன்னது…

@மேனகா
நன்றி

எல் கே சொன்னது…

@சாரல்
சரி விடுங்க மத்த நகரம் இருக்கே

எல் கே சொன்னது…

@தெய்வ சுகந்தி
நன்றிங்க

எல் கே சொன்னது…

@அனு
ரொம்ப நாள் கழிச்சு வரீங்க.. நன்றி

GEETHA ACHAL சொன்னது…

ஒன்னும் சொல்றதுக்கு இல்ல..நம்ம நாட்டினை பற்றி நம்மளே சொல்லிக்க கூடாது என்றாலும் நடப்பதினை பார்த்து பார்க்கமல் இருப்பது கஷ்டம் தான்...

Thenammai Lakshmanan சொன்னது…

இந்தியாவில் உள்ள பல வீரர்களுக்கு எந்த மருந்துப் பொருட்கள் தடை செய்யப் பட்டவை எவை அனுமதிக்கப் பட்டவை என்ற விவரமே இல்லை. அதை செய்ய வேண்டிய விளையாட்டு அமைப்புகளோ தூங்கிக் கொண்டிருக்கின்றன//

மிக சரியா சொன்னீங்க கார்த்திக்