Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Gradient Skin

Gradient_Skin

இந்த வலைப்பதிவில் தேடு

பிரபலமான இடுகைகள்

Breaking News

latest

சொந்த மண் IV

செவ்வாய் பேட்டை , நான் பிறந்து வளர்ந்த இடம். குறுகலான தெருக்களும், ஓட்டு வீடுகளும் நிறைந்து, பழமைக்கு சாட்சியாய் இருக்கிறது. அடுக்கு மாடி வீ...

செவ்வாய் பேட்டை , நான் பிறந்து வளர்ந்த இடம். குறுகலான தெருக்களும், ஓட்டு வீடுகளும் நிறைந்து, பழமைக்கு சாட்சியாய் இருக்கிறது. அடுக்கு மாடி வீடுகள் இன்னும் அதிகம் வரவில்லை. செவ்வாய் பேட்டை முழுவதுமே கடை வீதிதான். இதுவும், அருகே இருக்கும், லீ பஜாரும் , தமிழகத்தின் புகழ் பெற்ற மொத்த வியாபார இடங்களாகும்.
முக்கிய உணவுப் பொருட்களான பருப்பு, அரிசி போன்றவை மொத்த வியாபர அடிப்படையில் நடக்கும். இதனால் ஆலைகளில் இருந்து சரக்கை கொண்டு வரும் லாரிகளும், இங்கிருந்து விற்பனை ஆகி செல்கின்ற பொருட்களை ஏற்றி செல்கின்ற லாரிகளுமாய் வீதிகள் எப்பொழுதும் வண்டிகளால் நிறைந்திருக்கும் .குறிப்பாய், செவ்வாய் மற்றும் சனிக் கிழமைகளில் வீதிகளில் நடக்கக் கூட இடம் இருக்காது. முழுவதும் லாரி மற்றும் மாட்டு வண்டிகளால் ஆக்கிரமிக்கப் பட்டிருக்கும். 

சேலம் நகரத்தில் இருந்து வரும் பொழுது , முதலில் நீங்கள் பாத்திரக் கடைகள் மற்றும் வெள்ளி கடைகளை தாண்டித்தான் செவ்வாய் பேட்டைக்கு வர இயலும். இங்குத் தயாராகும் வெள்ளி கொலுசுகள் அகில இந்திய அளவில் புகழ் பெற்றவை. தமிழகத்தின் பல்வேறு பகுதிக்கும் இங்குத் தயாராகும் கொலுசுகள் விற்பனைக்கு அனுப்பப் படுகின்றன.  அடுத்த முறை கொலுசு வாங்கும் பொழுது செவ்வாய் பேட்டை உங்களுக்கு கண்டிப்பாக நினைவிற்கு வரும். 

வெள்ளி கடைகளை தாண்டினால், கடை வீதி ஆரம்பம். கடை வீதியில் இருந்து திரும்பும் இடத்தில் செவ்வாய் பேட்டை மாரியம்மன் கோவில் இருக்கிறது. ஆடி மாத பண்டிகையின் பொழுது கோவில் களை கட்டும். சேலத்தில் அமைந்திருக்கும் ஒவ்வொரு மாரியம்மனும் ஒரு சில விஷயங்களுக்கு புகழ் பெற்றவை. செவ்வாய் பேட்டை அம்மன் அலங்காரத்துக்கு புகழ் பெற்ற கோவில். வியாபாரிகள் அதிகம் இருக்கும் இடத்தின் காரணமாகவோ என்னவோ, அம்மன் நகைகளின் நடுவே ஜொலிப்பாள். பொதுவாக, மாரியம்மன் என்றால் முகம் மட்டும் தெரியும் வண்ணமே அமைக்கப் பட்டிருக்கும் மூலவர் சிலை. ஆனால் இங்கு அம்மன் பீடத்தின் மேல் ஒரு காலை மடக்கி, மறு காலை தொங்கவிட்டு அமர்ந்திருப்பாள். கோவிலுக்கு உள்ளே கூட நுழைய வேண்டாம், வீதியில் இருந்து பார்த்தாலே அம்மனின் முகம் நன்கு தெரியும்.

அம்மனை தரிசித்து மேலே சென்றால், முதலில் நீங்கள் பார்ப்பது , பருப்பு பஜார், அதன் பின், அரிசி பஜார் பின் வெல்ல பஜார்.

 இவ்வளவு முக்கியமான இடமாக இருந்தாலும், இங்கு வந்து  செல்ல பேருந்து இல்லை என்பதுதான் வேதனையான விஷயம். புதிய பேருந்து நிலையம் செல்ல வேண்டும் என்றால், இங்கிருந்து முதலில், செவ்வாய் பேட்டை சரக்கு ரயில் நிலையத்தை கடந்து சென்று சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து நான்கு ரோடு சென்று அங்கிருந்து மற்றொரு பேருந்து பிடிக்க வேண்டும். நான் பிறப்பதற்கு முன்பிருந்த நிலை என்று மாறுமோ தெரியவில்லை. 
புதிதாய் , சேலத்தில் இருந்து செவ்வாய் பேட்டை வழியாக சென்னைக்கு ரயில் பாதை வந்த பொழுது, சென்னை செல்ல இனி பிரச்சனை இல்லை என்று நினைத்தோம். ஆனால், இப்பொழுது அந்த சந்தோசம் இல்லை. அந்த ட்ரெயின் செவ்வாய்  பேட்டையில் நிற்பது இல்லை. 

இந்த விஷயத்தில் அரசாங்கமும், மாநகராட்சியும் செவ்வைப் பேட்டை ஒதுக்குவது ஏன் என்று புரியவில்லை. ஒரு நாளுக்கு பல கோடிகள் கை மாறும் இடம் இது. அதன் மூலம், அரசாங்கத்திற்கு வருவாய் அதிகம் கிடைக்கும். அப்படி இருந்தும் இந்த நிலை. 

செவ்வாய் பேட்டை அடுத்தப் பகுதியிலும் தொடரும்.....

அன்புடன் எல்கே

3 கருத்துகள்

பெயரில்லா சொன்னது…

ஒ கார்த்தி அருமையா வர்ணனை ...மாரியம்மன் கோவில் நான் இங்கே இருந்தே பார்த்த மாதிரி ஒரு பீலிங் ..சொந்த ஊரு பத்தி இவ்ளோ அருமையா வர்ணிக்கற ஒரே ஆள் நீங்களா தான் இருக்கும்.

ஊறில் இருக்கறவங்க எல்லோரும் சேர்ந்து அரசாங்கத்துக்கு ஒரு கடிதம் எழுதினா ட்ரெயின் செவ்வாய பேட்டை ல நிற்பதுக்கு எதா நடபடிக்கை எடுக்க பெடலாம் இல்லையா ..

Gayathri சொன்னது…

என்ன ஆச்சு ப்ரோ..எல்லா பதிவும் திரும்பா வந்திருக்கு...பழசு எங்கே

geetha santhanam சொன்னது…

மாரியம்மனை அழகாக வர்ணித்திருக்கிறீர்கள். ஒரு ஃபோட்டோ போட்டிருக்கலாமே.--கீதா