ஆகஸ்ட் 17, 2010

திவ்யாவின் பக்கம் IV

திவ்யா ஒரு சில புதிய வார்த்தைகளை கற்றுக் கொண்டு இருக்கிறாள் .கடந்த வாரம், உறவினர் வீட்டிற்க்கு சென்றோம். அப்பொழுது அங்கு இருந்த சாமி படத்தை பார்த்த அவள், கீழே விழுந்து நமஸ்காரம் பண்ணிவிட்டு, இரு கைகளையும் கூப்பிக் கொண்டு "எல்லோரும் ஷேமமாய் இருக்கணும் " என்றாள். இந்த வார்த்தை நாங்கள் சொல்லி தந்தது இல்லை. ஊருக்கு சென்ற பொழுது என் அம்மாவிடம் கற்றாலோ   இல்லை என் மனைவியின் அம்மாவிடம் இருந்து கற்றாலோ தெரியவில்லை.

ஏற்க்கனவே திவ்யா மூன்றை விரும்புவதை பற்றி சொல்லி இருந்தேன். இப்பொழுது அது இன்னும் அதிகம் ஆகி விட்டது. தண்ணீர் கொடுத்தால், மூணு டம்ப்ளர் கொடு என்கிறாள். ஆனால் இரண்டு டம்ப்ளர் கொடுத்தல் அமைதி ஆகி விடுகிறாள். இது ஏனென்று புரியவில்லை. உங்கள் யாருக்காவது புரிந்தால் சொல்லுங்களேன் .

என் மனைவியிடம்  ராமாயணம் பயின்று வருகிறாள். அதில் வரும் நபர்களை சரியாக சொல்லும் அளவிற்கு கற்றுக் கொண்டு இருக்கிறாள். அவளுக்கு இஷ்ட தெய்வம் ராமரும், ஆஞ்சநேயரும்தான். கொசுக் கொடித்தால் கூட "ராமா, கொசு கடிக்குது , சீக்கிரம் வா " என்று சொல்கிறாள்.

அதேபோல், கிருஷ்ணரை நண்பனாகத்தான் நினைக்கிறாள். உனக்கு குறும்பு பண்ண யார் சொல்லி தந்தார்கள் என்று கேட்டால் "கிச்சா" சொல்லித் தந்தான். இதுதான் அவளின் பதில் . அதே போல், கிருஷ்ணர் படம் அருகில் சென்று, சீக்கிரம் போய் சாப்பிடு, இல்லாட்டி அம்மா திட்டுவா , இது என் மனைவி அவளை திட்டிய பொழுது நடந்தது.

வர வர வீட்டில் சமாளிக்க இயலவில்லை. அவ்வளவு குறும்புகள். என் மனைவி , சைக்கிள் ஓட்டலாம் வா என்றாள், வேண்டாம், அப்பா வந்து கத்து தருவா என்று பதில் வருகிறது. நான் மாலையில் வீட்டிற்கு சென்றால் என்ன நடந்து இருக்கும் என்று சொல்ல வேண்டுமா ???

மீண்டும் திவ்யாவின் பக்கத்தில் விரைவில் சந்திப்போம்

அன்புடன் எல்கே

60 கருத்துகள்:

துளசி கோபால் சொன்னது…

ச்சோ........... ச்வீட்.

இதெல்லாம் மனசுலே பொக்கிஷமாய் வச்சுக்குங்க. பின்னாளில் நினைத்தாலே இனிக்கும் தருணங்கள் இவை.

Balaji saravana சொன்னது…

நிமிடங்கள் பறக்கும் குழந்தையின் குறும்புகளில்!
ஒவ்வொரு நொடியையும் சந்தோசமா ஆக்கிருவாங்க அவங்க..
நைஸ் LK ..

அமைதிச்சாரல் சொன்னது…

பொக்கிஷங்கள்...

சௌந்தர் சொன்னது…

எங்க வீட்டிலும் ஒரு பையன் இருக்கிறான் 11 மாதம் ஆகிறது ஒரே ஒரு தடவை தான் சாமி என்று சொல்லி கொடுத்தார்கள் எந்த இடத்தில் சாமி பார்த்தாலும் கை கூப்பி வணங்குவான்

சௌந்தர் சொன்னது…

நீங்க ராமார் அணிலுக்கு முதுகில் மூன்று கொடு போட்டதை பற்றி சொல்லி கொடுத்து இருப்பிர்கள் அதனால் இருக்கலம்

வானம்பாடிகள் சொன்னது…

cute:)

அமுதா கிருஷ்ணா சொன்னது…

என் தம்பி மகன் விஷால் எதற்கு எடுத்தாலும் 5 தான்.5 நாள் லீவு,5 பேரு வரோம், 5 தோசை, 5 சப்பாத்தி என்று 5 தான்...

பெயரில்லா சொன்னது…

திவ்யா குட்டி ரொம்ப ஸ்வீட் இல்லே ...வீடியோ எடுத்து வெச்சிடு கார்த்தி எப்போது வேணாலும் பார்த்து மகிழலாமே அதான் ..இல்லேனா வாய்ஸ் ரெகார்ட் பண்ணி வெச்சிடு இதும் ஒரு பொக்கிஷம் தானே

அருண் பிரசாத் சொன்னது…

ஆம், வீடியோ எடுத்து வையுங்கள். உங்கள் மகள் 20 வயதாகும் போது பார்த்தால் சந்தோஷமாக இருக்கும்

ஜெய்லானி சொன்னது…

:-))

ப.செல்வக்குமார் சொன்னது…

///வர வர வீட்டில் சமாளிக்க இயலவில்லை. அவ்வளவு குறும்புகள். ///
குழந்தைகள் என்றாள் குறும்பு இல்லாமலா ..?
அடுத்த பதிவிற்கு காத்திருக்கிறேன் ..!!

siva சொன்னது…

papavum ennai polavey samathu..

enaku 12idle,12 thosai,12 sapthaipothum..

அடுத்த பதிவிற்கு காத்திருக்கிறேன் ..!!!

leaveuku oruku varapa nanum papavoda vanthu vilyadren..

tata...

siva சொன்னது…

ச்சோ........... ச்வீட்.---
ச்சோ........... nice
ச்சோ........... nice
ச்சோ........... nice
ச்சோ........... nice
ச்சோ........... nice
--thiviya papa and this padivu..

சுசி சொன்னது…

ரசிக்கும்படியான குறும்புகள்..

திவ்யா குட்டிக்கு சுத்தி போடுங்க.

பெயரில்லா சொன்னது…

க்யூட்

மா.குருபரன் சொன்னது…

ரசிக்கும்..குறும்பு....

சூப்பருங்க...

Mrs.Menagasathia சொன்னது…

so...sweet chellam..

vanathy சொன்னது…

very sweet! Enjoy!

Gayathri சொன்னது…

வெரி கியூட்...

கீதா சாம்பசிவம் சொன்னது…

ஆமாம், எல்லாரும் சொல்லி இருக்கிறாப்போல் வீடியோ எடுக்க முடிஞ்சாக் கூட நல்லது. உங்க பெற்றோரோ, அவங்க பெற்றோரோ பக்கத்திலே இல்லைனா போட்டுக் காட்டலாம்.

கீதா சாம்பசிவம் சொன்னது…

grrrrrrrrr username, password keta arambichuduthe?? :P

பத்மநாபன் சொன்னது…

//எல்லோரும் ஷேமமாய் இருக்கணும் " // அற்புதம்.. திவ்யா ஸோ பாஸிட்டிவ்.
இப்படித்தான் இருக்கணும்.

3 டம்ளர் கேட்டால் 3 டம்ளர் கொடுக்கவேண்டியது தானே.குழந்தை அட்ஜஸ்ட் பண்ணிக்குது..அப்பாக்கு தான் கணக்கு தெரியலைன்னு.

என்றும் அன்புடன் உங்கள் ராஜா சொன்னது…

Too good LK

தெய்வசுகந்தி சொன்னது…

soooooooooooo cute!!!!!!! Enjoy!!

GEETHA ACHAL சொன்னது…

குழந்தைகள் என்றாலே குறும்பு தானே...எப்பவாது குழந்தை போட்டோ போடலாம் அல்லவா...

LK சொன்னது…

@துளசி டீச்சர்

ஆமாம். இவை பாதுகாக்கப் படவேன்டியவே .. நன்றி டீச்சர்

LK சொன்னது…

@பாலாஜி சரவணா
உண்மைதான்.. எனது கஷ்டங்களை மறக்கடிப்பவள் அவளே.

LK சொன்னது…

@சாரல்

நன்றிங்க

LK சொன்னது…

@சௌந்தர்
இருக்கலாம் தம்பி. அதனால் கூட.

LK சொன்னது…

@பாலா
நன்றி சார்.

LK சொன்னது…

@அமுதா
ஆஹா. இவளை விட பெரிய ஆளா இருப்பார் போல இருக்கே ...

LK சொன்னது…

@சந்தியா
முடிந்தவரை எடுத்துக் கொண்டுள்ளேன்

LK சொன்னது…

@அருண்

ம்ம். நல்ல யோசனைதான்

LK சொன்னது…

@ஜெய்
இதுக்கு என்ன அர்த்தம் தல ??

LK சொன்னது…

@selvaa
கொஞ்சம் லேட் ஆகும்

LK சொன்னது…

@சிவா
ஏன் இப்படி ?? உங்கள் வருகையை எதிர் பார்க்கிறேன்

LK சொன்னது…

@சுசி
கண்டிப்பா சுசி

LK சொன்னது…

@அம்மிணி
நன்றி. அப்பாவ மாதிரியே அவளும் .

LK சொன்னது…

@குருபரன்
முதல் வருகைக்கு நன்றி நண்பரே

LK சொன்னது…

@மேனகா
நன்றிங்க

LK சொன்னது…

@வாணி
நன்றி வாணி

LK சொன்னது…

@காயத்ரி

நன்றி

LK சொன்னது…

@கீதா மாமி
ஒரு சில வீடியோ இருக்கு

LK சொன்னது…

@பத்மநாபன்

ஏன் இந்தக் கொலை வெறி ??

LK சொன்னது…

@ராஜா
நன்றி தலைவா

LK சொன்னது…

@சுகந்தி
நன்றிங்க

harini சொன்னது…

Soo sweet .Romba nallairukku
endrum manathil nirpavai

Chitra சொன்னது…

cute girl!

புன்னகை தேசம். சொன்னது…

Lk இது உங்க பெண்ணோட பக்கமா?..

அருமை..

குழந்தைகள் பற்றி நினைப்பது பேசுவதே ஒரு சுகம்தான்..

தினமும் கொஞ்சினாலும் அலுப்பதேயில்லையே .. திருப்தியடைய முடியாத ஒன்று குழந்தைகளின் மேலுள்ள பாசம்..

siva சொன்னது…

50.....

hey fifty...

வெங்கட் நாகராஜ் சொன்னது…

குட்டிச் செல்லத்தின் ஒவ்வொரு அசைவும் அழகு. பகிர்வுக்கு நன்றி.

வெங்கட்.

கோமதி அரசு சொன்னது…

திவ்யாவின் தெய்வ பக்தி சிலிர்க்க வைக்கிறது.

ஒவ்வொரு நொடியையும் பதிவு செய்யுங்கள்.

திவ்யாவிற்கு வாழ்த்துக்கள்.

LK சொன்னது…

@ஹரிணி
நன்றி

LK சொன்னது…

@சித்ரா
நன்றி

LK சொன்னது…

@புன்னகை தேசம்

ஆமாம். உண்மைதான்

LK சொன்னது…

@வெங்கட்

நன்றி

@கோமதி

நன்றிமா. அதற்கு என் மனைவிக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். அவளுடைய வளர்ப்பு அவ்வாறு

Matangi Mawley சொன்னது…

:D hee...he! time porathey theriyaathu illa!? very sweet!

Sriakila சொன்னது…

nice post. so sweet, Divya!

சே.குமார் சொன்னது…

திவ்யாவின் பக்கம் படிக்கத் திகட்டவில்லை.
இது எல்லாம் மனசுக்குப் பொக்கிஷமாய்..!

அப்பாவி தங்கமணி சொன்னது…

Cute திவ்யா.. கிச்சா நெறைய பிள்ளைகளுக்கு நண்பன் தான் போல இருக்கு... எனக்கும் தான்... (இப்பவும்... என்னோட profile போட்டோ பாத்தாலே தெரியுமே... ). Post more dhivya lootis...nice to hear