Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Gradient Skin

Gradient_Skin

இந்த வலைப்பதிவில் தேடு

பிரபலமான இடுகைகள்

Breaking News

latest

சொந்த மண் II

இதன் முதல் பகுதியை  படிக்க சொந்த மண் I முன் குறிப்பு : என் கவிதைகளுக்கென புதிய வலைப்பூ துவங்கி உள்ளேன். இனி எனது கவிதைகளைப் படிக்க நீங்...

இதன் முதல் பகுதியை  படிக்க சொந்த மண் I


முன் குறிப்பு :

என் கவிதைகளுக்கென புதிய வலைப்பூ துவங்கி உள்ளேன். இனி எனது கவிதைகளைப் படிக்க நீங்கள் வரவேண்டியது  கவிசோலைக்கு.

முதலில் சேலத்தை பற்றி  பல வருடங்களாக இருந்து வரும் விஷயத்தை பார்ப்போம். சேலம் என்றாலே பலருக்கும் மாம்பழம்தான் நினைவுக்கு வரும். சேலம் மாம்பழம் என்றே சொல்லுவார்கள் . ஆனால், அது தவறு. கிருஷ்ணகிரி, தர்மபுரி சேலத்துடன் இணைந்து இருந்த பொழுது இந்த புகழ் சேலத்துக்கு கிடைத்தது. பின் அவை பிரிந்த பின்னும் இது பிரியவில்லை.

எனவே இனி சேலத்துகாரர்களை மாம்பழம் கேட்க வேண்டாம் ..  சேலத்தை பற்றி தொடருவோம் ..
 

தங்கும் வசதி :

சேலம் சென்று இறங்கியவுடன் முதலில் நாம் இளைப்பாற இடம் வேண்டும் . ரயில்வே ஸ்டேசன் அருகில் நல்ல ஹோட்டல் இல்லை. அங்கிருந்து  ஐந்து ரோடு , புதிய பேருந்து நிலையம் வந்து விட்டால் நல்ல தரமான பல ஹோட்டல்கள் உள்ளன. உங்கள் வசதி விருப்பத்திற்கு ஏற்ப தேர்வு செய்துக் கொள்ளலாம்.  நல்ல தரமான உணவகங்கள் உள்ளதால் சாப்பாட்டை பற்றிய கவலை வேண்டாம்.

நகரத்திற்குள் எங்கு செல்வதாய் இருந்தாலும், நகரப் பேருந்துகளை உபயோகிப்பது நல்லது. இங்கு ஆட்டோ கட்டணம் மிக அதிகம். நகரத்திற்குள் எந்தப் பகுதிக்கு செல்லவும் பேருந்துகள் எந்த நேரத்திலும் எளிதில் கிடைக்கும்.


ராஜகணபதி கோவில்

சேலத்தில் முதலில் பார்க்க வேண்டிய கோவில் , பிள்ளையாரின் கோவில். சேலம் டவுன் பகுதியில், மார்க்கெட் அருகே உள்ளது. பிள்ளையார் சந்நிதி மட்டும்தான் உள்ளது. சேலத்தில் பிரபலமான கோவில்களில் இதுவும் ஒன்று. பண்டிகை தினங்களில் அதிகாலையிலேயே கோவிலில் கூட்டம் கூடி விடும். முக்கிய தினங்களில் சந்தன காப்பு அலங்காரம் செய்வர்.

டவுன் நகரப் பேருந்து நிலையத்தில் இருந்து பத்து நிமிட நடையில் உள்ளது இந்தக் கோவில். கடை வீதியும், மார்க்கெட்டும் சந்திக்கும் இடத்தில் இது அமைந்துள்ளது. கண்டிப்பாக பார்க்க  வேண்டிய விநாயகர் இவர்.

கடை வீதி :

நகரப் பேருந்து நிலையத்தை மையமாக வைத்தே , சேலத்தின் முக்கிய கடை வீதிகள் அமைந்துள்ளன. துணிகள் வாங்க முதல் அக்ராஹாரம் என்று சொல்லப்படும் வீதிக்கு செல்லவேண்டும், நகை வாங்க வேண்டுமா , அப்படியே அந்த வீதிக்கு பின்புறம் அமைந்துள்ள சின்னக் கடை வீதி வந்தால் போதும். நகைகள் வாங்கி விடலாம். சேலம் வெள்ளி கொலுசு அகில இந்திய அளவில் புகழ் பெற்றது.

கடைவீதி அருகே காய்கறி மார்க்கெட்டும், மற்றொரு புறம் பூ மற்றும் பழ மார்க்கெட்டும் அமைந்துள்ளதால், நாள் முழுவதும் எப்பொழுதும் இந்தப் பகுதியில் மக்கள் நெரிசல் அதிகமாக இருக்கும் .

கோட்டை மாரியம்மன்

நகரப் பேருந்து நிலையத்தை ஒட்டியே அமைந்துள்ள கோவில். மிக சக்தி வாய்ந்த அம்மன் என்று மக்களால் நம்பப்படும் இந்த அம்மன், சுற்றி இருக்கும் எட்டு ஊர் மாரியம்மன் கோவில்களின் தலைமை பீடம்(இதை பற்றி பின்னால் பார்ப்போம் )  போன்றது. முகம் மட்டும் பார்க்கும் அளவில், மிகத் தாழ்வாக இருக்கும் கருவறை. ஆடி மாதப் பண்டிகை சமயம், பல மணி நேரம் வரிசையில் நின்று வழிப் படவேண்டி இருக்கும். இப்பொழுது ஆடி பண்டிகை நடந்து வருகிறது. இன்று சேலத்தில் தேர்த் திருவிழா.  மிக கோலாகலமாக இருக்கும். ஆடி மாதப்  பண்டிகையும் , தேர்த் திருவிழாவும் சேலம் மக்களால் மிகவும் எதிர்ப்பார்க்கப் படும்  ஒன்றாகும்.

 சேலம் நகர வளர்ச்சி பேருந்து நிலையத்தை ஒட்டி அமைந்ததோ என்று எண்ணும் அளவுக்கு பேருந்து நிலையத்தை ஒட்டியப் பகுதிகளின் வளர்ச்சி உள்ளது .  இருபது வருடத்திற்கு முன்பு வரை வெளியூர் செல்லும் பேருந்துகளும் நகரப் பேருந்து நிலையத்தில் இருந்தே கிளம்பின. அப்பொழுது நகரம் அதை சுற்றியே வளர்ந்தது,.

இப்பொழுது நகரத்தின் வளர்ச்சி புதியப் பேருந்து நிலையம் பகுதியை சுற்றியே அமைந்துள்ளது.

புதியப் பேருந்து நிலையம் எவ்வாறு திறக்கப் பட்டது என்பதே ஒரு கதை என்று என் தந்தை கூறுவார்கள். பேருந்து நிலையம் கட்டி முடிக்கப் பட்டு, திறந்து வைக்கப் பட்ட பின்னும், எந்த தனியார் பேருந்து நிறுவனத்தினரும் இங்கிருந்து பேருந்துகளை இயக்கவில்லை, கோர்ட்டுக்கு சென்று இடைக்கால தடை வாங்கிய வண்ணம் இருந்தனர். இந்நிலையில், எதோ ஒரு பண்டிகை சமயம், மூன்று நான்கு நாட்கள் கோர்ட் விடுமுறை. அப்பொழுது இருந்த மாவட்ட ஆட்சியர், இரவோடு இரவாக, அரசுப் பேருந்துகளை, புதிய பேருந்து நிலையத்திற்கு மாற்றினார். புதிய பேருந்து நிலையத்திற்கு வராத தனியார் பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப் படும் என்று கூறி உள்ளார். வேறு வழி இல்லாத தனியார் பேருந்துகளும் புதிய பேருந்து நிலையத்திற்கே மாறின என்று கூறுவார்கள். இது எந்த அளவிற்கு உண்மை என்று எனக்குத் தெரியாது . இது செவி வழி செய்தியே .



டிஸ்கி : நான் சேலத்திற்கு சென்று ஒரு வருடத்திற்கு மேல் ஆகி விட்டது. எனவே சில விஷயங்கள் மாறி இருக்கலாம். அவ்வாறு மாறி இருந்தால் சொல்லுங்கள் திருத்திக் கொள்கிறேன்.



அன்புடன் எல்கே

57 கருத்துகள்

Kousalya Raj சொன்னது…

//அது தவறு. கிருஷ்ணகிரி, தர்மபுரி சேலத்துடன் இணைந்து இருந்த பொழுது இந்த புகழ் சேலத்துக்கு கிடைத்தது. பின் அவை பிரிந்த பின்னும் இது பிரியவில்லை.

எனவே இனி சேலத்துகாரர்களை மாம்பழம் கேட்க வேண்டாம் ..//

சரி . இனி கேட்கவில்லை.

இந்த பதிவை படித்தால் மட்டும் போதும். கண்ணை மூடி கொண்டு சேலம் சுற்றி வரலாம் என்று நினைக்கிறேன். நல்ல பகிர்வு.

:))

yeskha சொன்னது…

வாழ்க சேலம், வளர்க சேலம்....

(இரண்டிரண்டு செகண்டு இடைவெளி விட்டு படிக்கவும், வாழ்க-வை அழுத்தமாக உச்சரிக்கவும்)

சேலம்

வாழ்க......

சேலம்

வாழ்க......

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

சேலம் பற்றி அருமையாக கூறியிருக்கிறீர்கள்...

இதுவரை சேலம் வந்ததில்லை... இன்மேல் வருவதாக இருந்தால் இந்த விசயங்கள் நிச்சயமாக உதவும் என நினைக்கிறேன்...

Unknown சொன்னது…

சேலத்துக்கு இரண்டு தடவை மட்டும் போயிருக்கிறேன்... இன்றொரு முறை போகும்போது உங்கள் நினைவு வந்துவிடும் ...

Unknown சொன்னது…

சேலத்துக்கு இரண்டு தடவை மட்டும் போயிருக்கிறேன்... இன்றொரு முறை போகும்போது உங்கள் நினைவு வந்துவிடும் ...

பெயரில்லா சொன்னது…

நிறைய தகவல்கள் LK.
நல்ல பதிவு.
அடுத்த பதிவுக்கு வெய்டிங்..

அருண் பிரசாத் சொன்னது…

நிறைய தகவல்கள், நல்ல பகிர்வு

இன்னும் நிறைய எதிர்பார்க்கிறேன்

vasu balaji சொன்னது…

சென்ற வருடம் போயிருந்தேன். ஸ்கந்தகிரி பரவசமான ஓர் அனுபவம். பகிர்வுக்கு நன்றி எல்.கே

yeskha சொன்னது…

ரொம்ப நாட்களாகவே சேலம் பற்றி பதிவு போட வேண்டும் என்று ஆசை.. நம்ம ஊருதான. பாத்துக்கலாம்னு விட்டுட்டேன். இப்ப என்னடான்னா நீங்க ஆரம்பிச்சுட்டீங்க. இப்படியே விட்டால் எப்படி? நானும் சும்மா இருக்கப்போறதில்லை. கவுண்ட் டவுன் ஸ்டார்ட்ஸ். ரெண்டு நாள் டயம் குடுங்க பாஸ்... ஆரம்பிச்சுடலாம் தொடர் பதிவை...

சௌந்தர் சொன்னது…

சேலம் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது புதிய தகவல்...

பெயரில்லா சொன்னது…

சேலம் பத்தி அழகா சொல்லிடீங்க ..அம்மன் கோவில் பத்தி கேட்டவுடன் பார்கனம் போல இருக்கு ..எப்போவாவது போனாலும் தங்கறதுக்கு தான் உங்க வீடு இருக்கே அப்புறம் என்ன கவலை இல்லே ?

மங்குனி அமைச்சர் சொன்னது…

சேலம் ரொம்ப நல்ல ஊரு சார் , அப்படியே ஏற்காடு பத்தியும் ஒரு பதிவு போடுங்க , எனக்கு ரொம்ப புடிச்ச இடம் நிறைய வாட்டி போயிருக்கேன்

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நல்லதொரு பகிர்வுக்கு நன்றி நண்பரே.

வெங்கட்.

ஸ்ரீராம். சொன்னது…

தெரிந்து கொண்டேன்... இவ்வளவு இடைவெளி விட்டு தொடர்ந்தால் எப்படி..!

சாந்தி மாரியப்பன் சொன்னது…

நிறைய புதுத்தகவல்கள்... நன்றி பகிர்வுக்கு.

பத்மநாபன் சொன்னது…

சேலம்... தகவல்கள் அருமை..

//சேலத்திற்கு சென்று ஒரு வருடத்திற்கு மேல் ஆகி விட்டது// அப்ப கோவைக்கு பைபாஸ் ரோட்டிலா :)

செல்வா சொன்னது…

//டிஸ்கி : நான் சேலத்திற்கு சென்று ஒரு வருடத்திற்கு மேல் ஆகி விட்டது. எனவே சில விஷயங்கள் மாறி இருக்கலாம். அவ்வாறு மாறி இருந்தால் சொல்லுங்கள் திருத்திக் கொள்கிறேன்.
///
எனக்கும் தெரியாதுங்க .. நான் இருக்கறது கோபில..

எல் கே சொன்னது…

@கௌசல்யா

கண்ணை மூடிகிட்டு போனா எங்கய்வாது முட்டிக வேண்டியதுதான்.. கண்ணை திறந்து செல்லவும் :))

எல் கே சொன்னது…

@எஸ்கா

நன்றி

@வெறும்பய
ஒரு முறை சென்று வாருங்கள்

எல் கே சொன்னது…

@செந்தில்

நன்றி பாஸ்

எல் கே சொன்னது…

@பாலாஜி சரவணன்
கூடிய சீக்கிரம் போடறேன்

எல் கே சொன்னது…

@அருண்

இன்னும் எவ்வளவு வேண்டும்

எல் கே சொன்னது…

@பாலா

உண்மைதான் சார். அங்கு ஒரு அமைதி நிலவும். வருகைக்கு நன்றி சார்

எல் கே சொன்னது…

@எஸ்கா
இதுக்குதான் முந்திக்கனும்.. நீங்களும் எழுதுங்க

எல் கே சொன்னது…

@சௌந்தர்
நன்றி தம்பி

எல் கே சொன்னது…

@சந்தியா
வாங்க எப்ப வேணாலும் நீங்க வரலாம்

எல் கே சொன்னது…

@மங்குனி
சேலம் பத்தி சொல்லிடு ஏற்காடை விட்ட பசங்க மன்னிக்க மாட்டங்க

எல் கே சொன்னது…

@வெங்கட்
நன்றி நண்பரே

எல் கே சொன்னது…

@ஸ்ரீராம் அண்ணா
என்ன பண்ண ? நடுவில் கொஞ்சம் ஆணி

எல் கே சொன்னது…

@சாரல்
நன்றிங்க

எல் கே சொன்னது…

@பத்மநாபன்

அவ்வ். ஏன் இப்படி ??? கோவைக்கு சென்றும் ஒரு வருடம் ஆகிறது. தீபாவளிக்கு சென்றது. பிறகு செல்லவில்லை... நம்மக்கு ஆபிசில் லீவ் கிடையாது

எல் கே சொன்னது…

@செல்வா
தெரிஞ்சா சொல்லுங்க

சுசி சொன்னது…

சேலத்துக்கு ஒரு தடவை வந்திருக்கேன்.. சுத்திப் பாக்க முடியல..
இனிமே வந்தா பாக்கலாம்.

நல்ல பகிர்வு.

தெய்வசுகந்தி சொன்னது…

நல்ல தகவல்கள்!!!!!!!

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) சொன்னது…

//கிருஷ்ணகிரி, தர்மபுரி சேலத்துடன் இணைந்து இருந்த பொழுது இந்த புகழ் சேலத்துக்கு கிடைத்தது. பின் அவை பிரிந்த பின்னும் இது பிரியவில்லை//
ஓ.... விசயம் அப்படியா... இது புது விசயம் எனக்கு...ஒகே...

நெறைய புது மேட்டர் தெரிஞ்சுகிட்டேன்... தேங்க்ஸ்... தொடர்ந்து எழுதவும்...

எல் கே சொன்னது…

@சுசி

கண்டிப்பா வாங்க சேலத்துக்கு

எல் கே சொன்னது…

@தெய்வ சுகந்தி
நன்றிங்க

எல் கே சொன்னது…

@அப்பாவி

அப்படிதான் விஷயம்

Asiya Omar சொன்னது…

உபயோகமான பதிவு.இனி சேலம்னால் எல்.கே.நினைவு வந்துவிடும்.

Geetha Sambasivam சொன்னது…

இன்னும் பார்த்ததே இல்லை சேலத்தை. சேலம் கைத்தறி மிகவும் பிரபலம், அதைப் பத்தியும் சொல்லுங்க. ஒரு முறை சேலத்தை வைத்துக் கல்கியில் இந்திரா செளந்தர ராஜன் தொடர் ஒண்ணு எழுதி இருந்தார். அதில் அதிகம் கைத்தறித் தொழிலாளர்களைச் சுற்றியே கதை பின்னப் பட்டிருந்த நினைவு.

சீமான்கனி சொன்னது…

நான் ஈரோடு போகும்போது வழியெல்லாம் சேலத்தின் அழகை ரசித்ததுண்டு உங்கள் பகிர்வு இன்னும் ரசிக்கதூண்டுது நன்றி எல் கே...

Unknown சொன்னது…

அடுத்த பதிவுல நம்ம பிரம்மாண்டமான ரோடுகளை பத்தி, ஸ்டீல் பிளான்ட் பத்தி, சுற்றியுள்ள கோவில்கள் பத்தி, முக்கியமா தியேட்டர்கள் பத்தி, ஏற்காடு பத்தி எழுதுமாறு கேட்டுக்கொள்கிறேன் தோழரே.

sridhar
saudi.

jothi சொன்னது…

nalla pakirvu, useful tips about SELAM.

எல் கே சொன்னது…

@கீதா மாமி
உண்மைதான். எழுதுகிறேன்

எல் கே சொன்னது…

@ஆசியா
நன்றி சகோ

எல் கே சொன்னது…

@ஸ்ரீதர்

கண்டிப்பா ஏற்காட்டுக்கு தனி இடுகை உண்டு

எல் கே சொன்னது…

@ஜோதி

நன்றி நண்பரே

dheva சொன்னது…

சேலம் பற்றிய ஒரு ஐடியா கிடைத்து இருக்கிறது.

அவரவர் சொந்த ஊர் பற்றி எல்லோரும் எழுதினால் எல்லா ஊர்களைப் பற்றிய அறிவு கிடைக்கும்.

மாம்பழ தகவலுக்கு நன்றி...! சொந்த ஊருக்கு ஒரு வருசமா போகலையா........?????? சீக்கிரமே போகக்கூடிய சூழ் நிலை உருவாக பிரார்த்திகிறேன்..!

Unknown சொன்னது…

48,நல்ல பகிர்வு.

Unknown சொன்னது…

49,வாழ்க LK......

Unknown சொன்னது…

50,அடுத்த பதிவுக்கு வெய்டிங்..

HAPPY INDIPENDANCE DAY.

ஹுஸைனம்மா சொன்னது…

சொந்த மண் என்றதும், கிராமம், தெருக்கள், வயல்வெளி, கோவில் திருவிழா, கெடாவெட்டு என்று எதிர்பார்த்து வந்தா, ஒரு நகரத்தையும் அழகா விவரிச்சுருக்கீங்க. :-)))

சேலம்னாலே எனக்கு அங்க தண்ணீர்த் தட்டுப்பாடுதான் ஞாபகம் வரும். இப்ப எப்படி?

'பரிவை' சே.குமார் சொன்னது…

சேலம் பற்றி அருமையாக கூறியிருக்கிறீர்கள்...

எல் கே சொன்னது…

@தேவா
நல்ல யோசனை பேசாம தொடர் பதிவா மாத்திரலாமா ???

பார்ப்போம் பாஸ் ...

எல் கே சொன்னது…

@சிவா

நன்றி

எல் கே சொன்னது…

@ஹுசைனம்மா
இன்னும் மாறவில்லை :(..
கிடாவெட்டு வரும் பின்னாடி.

எல்லா ஊர்களும் அழகானவையே :)

எல் கே சொன்னது…

@குமார்
நன்றி